என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பிணிகளுக்கு வரும் எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும்.
    கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்  ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

    நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

    கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

    இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

    முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

    அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

    மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.



    பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

    இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

    கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

    கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

    அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.
    கர்ப்ப காலத்தில் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற அறிகுறிகளை சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
    தலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். எல்லாம் எல்லாருக்கும் வர வேண்டும் என்றில்லை. அப்படிப் பிரச்னைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற  உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.



    கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

    கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

    சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.
    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
    பெண்களுக்கு என்று இறைவன் ஸ்பெஷலாக கொடுத்த வரம்தான்… தாய்ப்பால். குழந்தை பிறந்த அக்கணமே ஒரு பெண்ணின் மார்பகத்தில் சுரக்கக்கூடியது இது.

    சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

    இன்னும் சில நேரங்களில், சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும்.

    ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது?

    பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

    சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

    அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

    மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.

    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.
    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

    ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

    சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?

    பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான் சிசேரியன் முறை பிரசவம் என்கிறார்கள்.

    பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவானால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. பொதுவாக பின்வரும் சூழல்களில் தான் சிசேரியன் செய்யப்படுகிறது.

    பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக்கும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சிசேரியன் அவசியப்படும். பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும்.

    ஆனால், முழுவதும் விரிவதற்கு முன்பு விரிவடைவது நின்றுவிடும். இதற்காக ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களால் முழுமையாக செர்விக்ஸை விரிக்க இயலாது. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே பிரசவிக்க முடியாது.

    வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாது. பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும்.

    பிரசவ வலியின்போது எந்த நேரத்திலும், பிரச்சினைகள் உருவாகி குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால் நோர்மல் பிரசவத்தை இதற்கு மேல் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறி. அதனால், உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.

    சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.

    பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.
    உடல் எடையை குறைக்க, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்…’என்று, சில "டீன் ஏஜ்’ பெண்கள், வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
    உடல் மெலிய வேண்டுமென்பதற்காக, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, தற்போது ஒரு பேஷன் போல் பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றவர்கள் கூட, "நான் டயட்டில் இருக்கிறேன்…’ என சொல்வதும், உடல் எடை, சற்று அதிகமாகி விட்டாலே, "அய்யய்யோ என் அழகே கெட்டு விட்டது…’ என்று அழும் பெண்களும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் உண்டு.

    அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது. மேலும், மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம். உயரத்துக்கு பொருத்தம் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்தால் மட்டுமே, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு முன், டாக்டரை சந்தித்து, உடல் குண்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். நிபுணத்துவம் பெற்ற ஒருவரது ஆலோசனையின் பேரில், உணவுக் கட்டுப்பாட்டை துவக்க வேண்டும்.

    ஒருவரது உடல் குண்டாக இருக்கிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். இதனை, உணவுக் கட்டுபாடு மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால், பரம்பரை ரீதியாக உடல் குண்டாக இருப்பவர்கள், மெலிவது எளிதான காரியம் அல்ல. தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பிகளில், நோய் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான உடல்வாகு பெற வேண்டும் என்று, உணவின் பெரும் பகுதியை வெட்டி, குறைத்து விடக் கூடாது.



    அதுபோல, திடீரென்று உடலை அதிகமாக வருத்தும் உடற்பயிற்சியை துவங்கி விடக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதாலும், கலோரி குறைந்த உணவை சாப்பிடுவதாலும், உடல் எடையை குறைய வைக்கலாம். மூன்று வேளை ஆகாரத்தை என்ன காரணம் கொண்டும் குறைத்து விடக் கூடாது. சத்து நிறைந்த உணவு, காலை நேரத்துக்கு மிகவும் தேவை.

    உணவுக் கட்டுப்பாடு என்றாலே, முழுமையாக உணவை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். அதே நேரம் பால், மீன், முட்டை போன்றவைகளை உணவில் சேர்க்காதவர்கள், விட்டமின், தாது சத்துகள் நிறைந்த காய்கறி, பழ வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாப்பிடும் உணவு, சமச்சீர் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், விட்டமின், மினரல் சத்துகள், போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாலட், பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் ஆக்காமல், அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

    மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவ தற்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும். இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர்பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.
    செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
    மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

    செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள்.

    ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

    டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

    முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.

    ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.
    40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


    ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும்.

    இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம். சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது.

    இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும்.

    சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வருபவர்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50 வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும்.

    பால், தயிர் உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.
    அளவுக்கதிகமான இரத்தப்போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்தில், பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம்.
    ‘பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது ‘டியுபி’ எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை பின்னணியாக இருக்கலாம்…

    மாதவிலக்கான முதல் 2 வாரங்களில் பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.

    அடுத்து தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக் கூடிய ‘புரோலேக்டின்’ ஹார்மோன் அதிகமானாலும், ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு.

    கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்சனையை சரியாக்கி, ரத்தப் போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தா, ‘மெரீனா’ என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள செலுத்தலாம்.

    இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி. சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம். கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர ‘பலூன் தெர்மல் அப்லேஷன்’னு ஒரு சிகிச்சையும் இருக்கு.

    கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன் விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும். அடுத்து ‘ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம்…’ இந்த சிகிச்சையில் கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை, பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம்.

    மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும். அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல, பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த 3 நாட்கள், அவதியில்லாமக் கழியும்…
    மினரல்களும் வைட்டமின்களும் பெண்களின் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றன.
    மினரல்களும் வைட்டமின்களும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றன. இதில் குறைபாடு ஏற்படும்போது பல நோய்கள் உண்டாகின்றன. சிலருக்கு சிறுவயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படவும் இதுதான் காரணம்.

    பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

    காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.

    உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

    கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.

    உடலில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக தானாக நினைத்துக்கொண்டு சிலர், மருத்துவரின் ஆலோசனையில்லாமல், அதிகளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். அது மிகவும் தவறானது.
    உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

    சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம் தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.

    செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.

    அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.




    இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

    இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.

    சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.

    தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது
    ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சினைமுட்டைகளை பத்திரப்படுத்தி மாதந்தோறும் வெளியிடும் முக்கியமான வேலையைச் செய்கிற சினைப்பை மெனோபாஸூக்கு பிறகே ஓவ்வெடுக்க ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத் தன்மை போன்றவற்றை உண்டாக்குவதோடு மெனோபாஸ் வந்துவிட்ட மாதிரியான அறிகுறிகளையும் காட்டுமாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப்பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமா இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்.. கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடு ப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவாலயும் சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.

    மாதவிலக்கு மாசம் தவறி வர்றது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாததுனு இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள் அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.

    எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும்.ரத்தத்துள அதோட அ ளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்துள உள்ள ஈஸ் ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.

    பெரும்பாலும் மலட்டுத்தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கிறப்பதான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகள்லேர்ந்து மீளலாம். அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கரு த்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை.

    அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம். சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும். 
    மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒவ்வொரு பெண்ணும் பருவ வயதை எட்டியதும தங்கள் மார்பை தாங்களே சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கட்டிகள் தென்பட்டாலே அது மார்பகப்புற்றுநோயோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பலரும் அவசரப்பட்டு மனதையும், உடலையும் வருத்திக்கொள்கிறார்கள்.

    மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். பொதுவாக பருவ வயது பெண்களின் மார்பக திசுக்கள் சற்று அடர்த்தியுடன் காணப்படும். எனவே இதில் எக்ஸ்ரே கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் வெறும் வெள்ளையாக படம் வந்து விடவும் வாய்ப்பு உண்டு.

    அப்படி தெளிவான முடிவு கிடைக்காமல் போய் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போவது தான் சிக்கல். எனவே தான் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவது சரியான முடியாக இருக்காது.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதே மார்பக நீர்க்கட்டிகளை கண்டறியவும் மிகச்சிறந்த பரிசோதனை. கைகளுக்கு தட்டுப்படாமல் அவை சென்டிமீட்டருக்கும் குறைவாக உள்ள நுண்ணிய கட்டிகளையும் இது காட்டிச் கொடுத்து விடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மேமோகிராம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டெஸ்ட் இணைந்தே மேற்கொள்ளப்படுகிறது.

    கட்டிகள் கண்டறியப்பட்டு அதன் தன்மைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும், நீர்க்கட்டி இருந்தால் பெரும்பாலும் அதாவது 90 சதவிகிதம் பயப்படத் தேவையில்லை. இவ்வகை பாதிப்புகள் மார்பகத்தில் வருவது வெகு இயல்பானது. பெண்களுக்கு ஏற்படும் உடற்கூறு வளர்ச்சி மாற்றத்தால் உண்டாகும் சாதாரண நிகழ்வு. மிக இளம் வயதிலேயே சிலருக்கு நரை முடி வந்து விடுகிறது. தலை வழுக்கை ஆகிவிடுகிறது. இதை எப்படி நார்மல் என்று ஏற்றுகொள்கிறோமோ அதைப் போன்று தான் நீர்க்கட்டியும்.



    35 முதல் 55 வயது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இவை வரும் சாத்தியக்கூறு அதிகம். ஊசி வாயிலாக அந்த நீரை உறிஞ்சி எடுப்பதே எளிய சிகிச்சை. வெகு எளிதாக விரைவாக அதாவது ஒரிரு நிமிடங்களுக்குள் பாதிப்பில் இருந்து குணப்படுத்திவிடலாம்.

    சிலருக்கு மார்பகத்துக்குள் வெவ்வேறு இடங்களில் அடிக்கடி நீர்க்கட்கள் உருவாகும். இதற்கும் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. சரியாக கணிக்கத் தெரிந்த மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளாமலேயே அவ்வப்போது ஊசி வாயிலாக நீரை அகற்றி விடுவார்கள். எடுத்த நீரை பரிசோதனைக்கு அனுப்பக்கூட அவசியமில்லை.

    ஆனால் ஒரே இடத்திலேயே திரும்பத் திரும்ப கட்டி உண்டானால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். நீர்க்கட்டியில் இருந்து உறிஞ்சி எடுப்பப்படும் நீர் மஞ்சள், பச்சை என பலவித நிறங்களில் காணப்படலாம். அதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது. ரத்தமாக வந்தால் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

    சில நேரம் நீர்க்கட்டிக்கு உட்புறத்தில் சதைக்கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை செய்து நீக்க நேரிடும். ஆனால் பாதிப்போடு வரும் பெண்ணில் நூரில் ஒருவருக்கே இத்தகைய நிலை ஏற்படும். 
    ×