என் மலர்

  நீங்கள் தேடியது "monogram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா.
  மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா. இவரது தலைமையிலான குழுவினர் வடிவமைத்த அந்த அதிசய பிராவை 250 பெண்களை அணியவைத்து பரிசோதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது, இந்த பிரா மூலம் தொடக்க நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளித்து குணப்படுத்திவிட்டார்கள்.

  ஐந்து வருடங்களுக்கு முன்பு சீமாவின் காதுகளில் விழுந்த உரைதான், அவரை உறக்கமில்லாத அளவுக்கு சிந்திக்கவைத்து இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்திருக்கிறது. அந்த உரை புற்றுநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் சதீசனால், கேரளாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.

  அவர், ‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒன்றரை லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தொடக்கத்திலே கண்டறியும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்தான் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?’ என்று எலக்ட்ரானிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்வி, அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் சீமாவை ஆழமாக சிந்திக்கவைத்திருக்கிறது.

  எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டு பிடிப்பை உருவாக்கி, அதன் மூலம் மார்பக புற்றுநோயை முதலிலே எப்படி கண்டறியலாம்? என்று சிந்தித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு அதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டார். மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை உருவாக்கி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார்கள். இதை முனைவர் சீமா பணிபுரியும் சீமெட் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.

  “இ்ந்த பிராவில் சென்சர் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெண்கள் அணியும்போது அதிலுள்ள சாக்கெட் மூலமாக கம்ப்யூட்டருக்கு படங்கள் கிடைக்கும். அதைவைத்து, அவரது மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடலாம்” என்று முனைவர் சீமா சொல்கிறார். அதற்காக இவருக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.

  அவரிடம் சில கேள்விகள்:

  எப்படி இந்த பிரா மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது?

  புற்றுநோய் பாதித்த திசுக்கள் பரவும்போது உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் தோன்றும். அதனை கண்டறிவதற்காக ஒரு மில்லி மீட்டர் நீளமும், ஒரு மில்லி மீட்டர் அகலமும், ஒன்றரை மில்லி மீட்டர் கனமும் கொண்ட சென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வடிவமைத்து காட்டன் துணியில் உருவான பிராவுக்குள்வைத்து தைத்திருக்கிறோம். அவைகள் மூலமான தகவல்கள் கம்ப்யூட்டர் வழியாக படங் களாக சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலே மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதில் கதிர்வீச்சு பற்றிய எந்த பயமும் இல்லை.

  மெக்சிகோவில் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு முன்பே இருந்ததாக கூறப்படுகிறதே?

  அடிப்படையில் அதில் இருந்து இது மாறுபட்டது. இது பெண்களின் மார்பகங்களின் சீதோஷ்ணநிலையை அளவிடுகிறது. அதன் ரிசல்ட் ஒரு படமாக கிடைக்கும். புற்றுநோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் பரிசோதனையை நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செய்வதில்லை. இதை பத்து, பதினைந்து வயது சிறுமிகளுக்குகூட தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இந்த பரிசோதனையில் அந்த பெண்களின் தனிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த தயக்கமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். இந்த பிராவை அணிந்துகொண்டு அதற்கு மேல் விருப்பப்பட்ட உடையை வழக்கம்போல் உடுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஐம்பது ரூபாயில்கூட மிக எளிதாக இந்த சோதனையை நடத்திவிடலாம்.

  இந்த புற்றுநோய் பிராவுக்கான ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள தனிப்பட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

  சமூகத்திற்கு ஏதாவது நல்லகாரியம் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு வந்தது. அதனால் உடனே அதை பயன்படுத்திக்கொண்டேன். எங்கள் அமைப்பு பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது. அதனால் மக்களுக்கு நன்மைபயக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறோம். பொதுமக்களுக்கு பலன் தரும் பல பொருட்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் ஒன்று விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் எமர்ஜென்சி லாம்ப். ஒரு நிமிடத்திலே அதில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில் மின்சார வசதி இல்லாத ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அது மக்களுக்கு பெரும் பலன் தரும். சூரிய சக்தி மூலமும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இப்போது இது போன்ற எமர்ஜென்சி லாம்ப்களை தைவான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

  புற்றுநோய் கண்டறியும் பிரா வடிவமைப்பில் உங்கள் பணி எவ்வாறு அமைந்திருந்தது?

  அதற்கான பரிசோதனைக்கூடத்தில் 24 மணி நேரமும் பிராவின் சீதோஷ்ண நிலையை கண் காணித்தோம். அப்போதெல்லாம் முழுநேரமும் பரிசோதனைக்கூடத்தில்தான் இருந்தேன். ஆராய்ச்சிப் பணிகள் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூற முடியாது. விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைபார்த்தோம். இந்த துறையை சார்ந்த மாணவிகளும் எங்களோடு சேர்ந்து பணியாற்றினார்கள்.

  இந்த பிராவை வடிவமைத்ததும் நான்தான் அதை அணிந்து பரிசோதித்து பார்த்தேன். அதன்பின்பு என்னோடு பணிபுரிபவர்களும் அதை அணிந்துகொள்ள முன்வந்தனர். அடுத்து மலபார் கேன்சர் சென்டரில் உள்ளவர் களோடு பேசி, அவர்கள் மூலமும் பரிசோதனை செய்தோம். 250 பேர்களுக்கு பயன்படுத்தியதில் இ்ந்திராவுக்கு புற்றுநோய்க்கான தொடக்க அறிகுறி இருந்தது இந்த பிரா மூலம் கண்டறியப்பட்டது. தொடக்கத்திலே கண்டுபிடிக்க முடிந்ததால் அவருக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப் படுத்த முடிந்தது. ஒருவரையாவது காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.
  பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியப்  பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். காரணம் சரியான விழிப்புணர்வின்மை மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமை. மருத்துவமனைக்கு வருபவர்களில் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையில் வருகின்றனர்.

  * மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
  * மார்பக அமைப்பில் மாற்றம்
  * மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
  * மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
  * மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
  * மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.

  தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன. மரபணு(DNA) அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பல்கிப் பெருகுவதுதான் கட்டியாக (tumor) மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.

  சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.

  ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத் தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும் பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.

  உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை(hemotherapy), கதிரியக்க சிகிச்சை(radiotherapy) ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும் தன்னம்பிக்கையும். மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும். 
  ×