என் மலர்

  நீங்கள் தேடியது "Couples Happy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
  தாம்பத்தியம் ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

  மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்ச்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.  

  நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

  ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

  இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
  மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

  செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள்.

  ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

  டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

  முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.

  ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

  சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம் தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.

  செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.

  அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.
  இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

  இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.

  சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.

  தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.
  நமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.

  தினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.

  தினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

  கட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று..! இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

  நமது மனசுக்கு பிடித்த ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் ஏரளமான வகையில் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக ஆக்சிடாக்சின், டோபோமின் போன்ற ஹார்மோன்கள் சந்தோஷத்தை தர கூடிய ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்களின் செயல்திறனும் சீராக இருக்கிறது.

  கட்டிப்பிடிப்பதால் உடளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம் குறைதல் தான். தினமும் கட்டிபிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது. மேலும், இதயம் சார்ந்த நோய்களும் தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

  கட்டிப்பிடிக்கும் பலர் இதை உணர தவறுகின்றனர். கட்டிப்பிடிக்கும் போது நமது துணையின் இதய சத்தத்தை கேட்டால் நமது உடலுக்கு மகிழ்ச்சியை தருமாம். அத்துடன் நமது இதய செயல்திறனையும் சீராக வைக்கும்.  சில தம்பதியர் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கட்டிபிடித்தல் புதுவித யுக்தியாக உதவும். கட்டிப்பிடிப்பதால் ஹார்மோன்கள் தாம்பத்திய உணர்வை அதிகரித்து இனிமையான தம்பத்தியத்தை ஏற்படுத்தும்.

  கட்டிபிடித்தலில் பலவித வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பெரும்பாலும் பிடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதில் ஆண்களுக்கு பிடித்தமானதை விட பெண்களுக்கு பிடித்தமானதே பல வகையில் உள்ளதாம்.

  உங்கள் துணையை முழுவதுமாக கட்டிபிடித்து கொண்டால் அதுவே ஹனிமூன் கட்டிப்பிடி என்று அர்த்தம். இது தூங்கும் நிலையில் இருக்கும் போது முழுமையாக கட்டிப்பிடிப்பதை குறிக்கிறது.

  பெண்கள் பலருக்கு இந்த வகை கட்டிபிடித்தலை பிடிக்கும். உங்களது காதலியை பின்னிருந்தது கட்டிப்பிடித்தால் அவருக்கு உங்கள் மீது அதிக காதல் உண்டாகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  ஒருவர் மடியில் தூங்கி கொண்டே காட்டுப்பிடிக்கும் வகையை பெரும்பாலும் அதிக ரொமான்டிக் கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். பூங்கா, கடற்கரை போன்ற இடத்தில் இது போன்ற கட்டிபிடிக்கும் வகையை உங்களால் பெரிதும் பார்க்க இயலும்.

  பலருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த வகை கட்டிபிடித்தலை செய்வார்கள். ஆதாவது, ஒரு காலை தனது துணையின் மேல் போட்டு கொண்டு தூங்குவார்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

  யாராக இருந்தாலும் கட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்தாக தான் செயல்படுகிறது. தினமும் கட்டிபிடித்தால் மேற்சொன்ன நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். எனவே, அதிக காதலுடனும் அன்புடனும் உங்கள் இணையை கட்டிப்பிடித்து வாழுங்கள் நண்பர்களே..! 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
  வாழ்வின் ஒரு அங்கம் தான் உடலுறவு. பெரும்பாலும் பெண்கள் கணவரிடம் அன்பு மற்றும் பாசத்தையே எதிர்பார்ப்பார்கள். பகலில் எந்த நெருக்கமும் இல்லாமல் இருந்து விட்டு இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அவர்கள் உடலுறவிற்கு ஒத்துழைத்தாலும், அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. என்ன செய்தாலும் எந்த உணர்வும் இன்றி இருப்பார்கள்.

  பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...

  அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள். தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.

  குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களாகவே இருந்தாலும், ஆணுறை அணிய செய்து உடலுறவு கொள்ள சொல்வார்கள். அந்தரங்க உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்று கூறுபவர்களும் உண்டு.  நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.

  அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.

  இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.
  திருமணம் எனும் பந்தத்தில் இருமனம் இணைத்து உருவாக்கப்படும் பயணம் தான் நாம் வாழ்கை. ஒருவரின் மீது ஒருவர் அக்கறை செலுத்துவது, அன்பு செலுத்துவது என அனைத்தையும் இந்த உறவில் மிகவும் சாதாரணமான ஒன்று. முற்காலத்தில் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட இருந்தது. ஆனால் வேறு எந்த உறவோ அல்லது நட்போ அப்படி உடன்கட்டை ஏறவில்லை. இதிலிருந்தே கணவன் மனைவியின் அன்பின் இலக்கணம் அனைவர்க்கும் புரிய வைக்கும்.

  ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

  திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் - மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.  கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது அல்லது ஊட்டிவிடுவது.

  வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிப்பது.

  காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று கேட்பதில் தொடங்கி, மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.

  டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக் மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும். ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள் பெண்கள். 
  ×