என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    எள்ளை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளை வைத்து இன்று சத்தான சுவையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    வெள்ளை ( அல்லது ) கருப்பு எள் - 4 கப்
    கருப்பட்டி அல்லது வெல்லம்  - 2 கப்
    ஏலக்காய் - 6
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்.

    எள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் வறுத்த எள்ளுவை போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
     
    ஒரு வாணலியில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இடைவிடாது கிளறி பாகு காய்ச்ச வேண்டும்.

    பின்பு இந்த பாகில் வறுத்த பொடித்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி விடவும்.

    ஆறியதும் துண்டுகளாக போட்டு சுவைக்கவும்.

    சூப்பரான எள்ளு பர்ஃபி ரெடி.

    எள் பர்ஃபியை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும், எள் பர்ஃபியை தொடர்ந்து சாப்பிடுவதால் போக்க முடியும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வஞ்சிர மீன் - 250 கிராம்
    சோளமாவு - 2 ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
    எலுமிச்சை பழம் - பாதி
    மிளகு பொடி - 1 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அல்வா செய்யும் போது சர்க்கரை, வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் அருமையாக இருக்கும். இன்று கருப்பட்டி சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,
    கருப்பட்டி - 175 கிராம்,
    முந்திரி - 30 கிராம்,
    திராட்சை - 30 கிராம்,
    பாதாம் - 20 கிராம்,
    பிஸ்தா - 20  கிராம்,
    நெய் - 100 கிராம்,
    தண்ணீர் - 200 மி.லி.,
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு  வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை  நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கிரில்டு டோஃபு அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    டோஃபு - 250 கிராம்,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு விழுது - 1 டீஸ்பூன்,
    கடலை மாவு - 1/4 கப்,
    மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்,
    தயிர் - 1/2 கப்,
    கையில் கசக்கிய ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
    காஷ்மீர் மிளகாய்த்தூள் - தேவைக்கு,
    கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிது,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    டோஃபுவை பெரிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து இறக்கி ஆறவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் டோஃபு, கடலை மாவு கலவை, வெண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, டோஃபு உடையாமல் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

    பின்பு கிரில் தவாவை மிதமாக சூடு செய்து டோஃபுவை அதில் போட்டு தேவையான வெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்து சாட் மசாலா தூவி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கிரில்டு டோஃபு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலா ஜாமூன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் காலா ஜாமூனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இனிப்பில்லாத கோவா -  1/4 கிலோ,
    சர்க்கரை - 750 கிராம்,
    மைதா - 60 கிராம்,
    ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
    ஏலக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்,
    ஜாதிக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :
     
    சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க  வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.

    வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

    சூப்பரான காலா ஜாமூன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழை மரத்தில் காய், பூ, தண்டு, இலை என்று தலை முதல் அடிவரை பயன்படாத பொருளே இல்லை எனலாம். இன்று வாழைப்பூவை பயன்படுத்தி பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - ஒன்று (சிறியது)
    சீரகசம்பா அரிசி - 2 கப்
    பட்டை, கிராம்பு - 5
    ஏலக்காய் - 2
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பெரிய வெங்காயம், தக்காளி - 3
    பச்சைமிளகாய் - 3
    இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
    ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    புதினா, கொத்தமல்லித்தழை இலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    நெய் - 4 டீஸ்பூன்
    எலுமிச்சைப்பழம் - பாதி
    தயிர் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க தேவையானவை :

    சின்ன வெங்காயம் - 200 கிராம்,
    முந்திரி - 10,
    கசகசா - ஒன்றரை டீஸ்பூன்,
    சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
    புதினா - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியா வைத்து கொள்ளவும்.

    சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.

    இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.

    இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.

    சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும்.

    சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அவல் - 3/4 கப்
    பொட்டுக்கடலை - 1/4 கப்
    சர்க்கரை - 1/4 கப்
    ஏலக்காய் - 1
    நெய் - 1/4 கப்
    முந்திரி - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    சிவப்பு அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும்.

    பொட்டுக்கடலையை 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து, ஆற வைக்கவும்.

    அவல், பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

    அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த அவல் மாவை சேர்த்து 5 நிமிடன் கிளறவும்.

    சற்று சூடு ஆறியதும் சுத்தமான கைகளால் லட்டாக உருட்டி எடுத்து ஒரு டப்பாவில் வைக்கவும்.

    இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    சூப்பரான சிவப்பு அவல் லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீன் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா?. சூப்பராக இருக்கும். இன்று மீன் முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் முட்டை - 200 கிராம்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கடுகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட் பேடாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோயா (khoya) - 1 கப்
    கோக்கோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
    சக்கரை - 1/4 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
    பாதாம் - 20
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி


     
    செய்முறை :

    10 பாதாமை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    10 பாதாமை துருவிக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும்.

    எல்லாம் கலந்து நன்கு இளகும். இப்பொழுது, வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்கள் ஒட்டாமல் கெட்டியாகி கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

    இந்த சாக்லேட் கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாக பிரித்து சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி,  சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும். பேக்கிங்  ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம்.

    சூப்பரான சாக்லேட் பேடா ரெடி.

    குறிப்புகள்

    தீயை எப்பொழுதும் மிதமாக வைக்கவேண்டும். முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும். ஓரிரு நாட்களில் சாப்பிட்டு விட வேண்டும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    குழந்தைகளுக்கு தேங்காய் பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த தேங்காய் பிஸ்கெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 1/4 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    வெண்ணெய் - 100 கிராம்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1/2 கப்



    செய்முறை :

    மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து கொள்ளவும்.

    அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, அதில் தேங்காய் துருவலை வைக்கவும்.

    Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.

    வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    வெண்ணெய், சர்க்கரை கலவை கிரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

    பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும். (அழுத்திப் பிசையவேண்டாம்).
    தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறி விடவும்.

    இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி, உதிரியாகவும் இருக்கும்
     
    பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ, கன சதுரமாகவோ செய்துக்கலாம்.

    எல்லா பிஸ்கட்டுகளையும் செய்து அடுக்கிய பிறகு பேக்கிங் ட்ரேயை 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.

    Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.

    பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake  செய்யவும்.
     
    பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும். oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும்.

    சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

    காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.  

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள் :

    சப்பாத்தி - 5
    முட்டை - 4
    கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1  
    பெ.வெங்காயம் - 3  
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

    அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

    ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான டோஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவிற்கு...


    மைதா - அரை கப்,
    ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவைக்கு.

    பூரணத்திற்கு...

    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    கடலை மாவு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்  தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3  பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×