என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சப்பாத்தி, நாண், தோசை, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல் மேக்கர் - 1 கப்
    பெ.வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் நீரை வடிகட்டி மீல் மேக்கரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

    ஓரளவு வெந்ததும் மீல் மேக்கர், தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    ருசியான மீல் மேக்கர் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட்டில் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ், போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 4
    மிளகாய் - 3
    துவரம் பருப்பு - அரை கப்
    இஞ்சி துருவல் - சிறிதளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    பீட்ரூட், மிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    பின்னர் அதனுடன் இஞ்சி, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அதேபோல் பீட்ரூட்டையும் அரைத்துக்கொள்ளவும்.

    பின்னர் இந்த கலவையுடன் தேங்காய் துருவல், அரிசி மாவு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து போண்டா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கைப்பிடி அளவு உருட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான பீட்ரூட் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இறால் பெப்பர் ஃபிரை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    குடைமிளகாய் - 1
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு...

    இறால் - 20
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை போட்டு 1 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதே வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இறாலையும் போட்டு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கரம் மசாலா சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவவும்.

    இறால் பெப்பர் ஃபிரை ரெடி.

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட பிரெட் மெதுவடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
    ரவை - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் மெதுவடை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குஜராத்தில் இந்த பட்ரா ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலம். இன்று இந்த ஸ்நாக்ஸை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
    கடுகு - சிறிது,
    எள் - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
    சேப்பங்கிழங்கு இலை - 5 மீடியம் சைஸ்.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    இலைகளை நன்கு கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும்.

    சப்பாத்திக்கல்லின் மேல் ஒரு இலையை எடுத்து தலைகீழாக வைத்து அதன் மேல் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும். பிறகு மற்றொரு இலையை அதன் மேல் அதேபோல தலைகீழாக வைத்து மீண்டும் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும்.

    இப்படியாக அனைத்து இலைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ரோல் செய்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரோல் செய்து வைத்துள்ள பாட்ராக்களை வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஆறியதும் வட்டமாக கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பிறகு எள்ளு சேர்த்து வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள பத்ராக்களை சேர்த்து சிறிது பிரவுன் கலர் ஆனதும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பட்ரா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட்டில் பொரியல், கூட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட்டில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 1,
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

    நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.

    சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாம்பே காஜா ஸ்வீட்டை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாம்பே காஜா ஸ்வீட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 300 கிராம்
    சர்க்கரை - 750 கிராம்
    கார்ன் மாவு (சோள மாவு) - 3 டேபிள் ஸ்பூன்
    ஆரஞ்சு கலர் - 1/4 டீஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1/2 லிட்டர் (பொரிக்க)
    டேபிள் சால்ட் - ஒரு சிட்டிகை.



    சர்க்கரை பாகு வைக்க :

    பாம்பே காஜாவிற்கு இரண்டு கம்பி பதம் பாகு நீர்க்க இருக்க வேண்டும். சர்க்கரை முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விடவும்.

    பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்கவும். பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.

    செய்முறை :


    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கார்ன் மாவு நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மெல்லியதாக இட்டு கொள்ள வேண்டும்.

    கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவி கொள்ளவும். பின் அப்பளங்களை மெல்லியதாக சுருட்டிக் கொள்ளவும் (ரோல்). ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (பாம்பே காஜாவின் அளவு துண்டுகளின் அளவை பொருத்தது ).

    வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ளவும் (முக்கோணமாக).

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கோணங்களை எண்ணெயில் (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் ) போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்து எடுத்த பாம்பே காஜாக்களை தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 2
    கேரட் - 2
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    காலிஃப்ளவர் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 கப்
    பட்டை - 1 அங்குலம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை  :

    அரிசியை கழுவி, 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயத்தை நீளமாக, நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸை சமமான துண்களாக வெட்டிக்கொள்ளவும்.

    காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்கவும்.

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை  போனவுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து லேசாக கிளறவும். நன்றாக வதக்கினால் கலர் மாறிவிடும் எனவே வதக்கவேண்டாம்.

    இதனுடன் அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

    மூடி போட்டு விசில் போடாமல் அடுப்பை வேகமாக எரிய விடவும். தண்ணீர் கொதித்து வரும் போது லேசாக திறந்து உப்பு போட்டு கலக்கவும்.

    பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    10 நிமிடம் கழித்து மூடியை திறக்கவும்.

    சுவையான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    சாதம் உடையாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி, புதினா இலைகளை தூவி அலங்கரிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    மீல்மேக்கர் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    பிரிஞ்சி இலை - சிறிது,
    புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

    வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்,
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் -2,  
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பிரெட் ஸ்லைஸ் - 2,
    முந்திரித் துண்டுகள் - 6,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.

    கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை அவியல். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    உப்பு - சிறிது
    தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு  - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிது

    மசாலாவிற்கு...

    தேங்காய் துருவல் - அரை கப்
    வெங்காயம் - 1
    காய்ந்த மிளகாய் - 1
    மிளகு - 1 தேக்கரண்டி
    பூண்டு - 6 பல்



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

    மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான முட்டை அவியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 3 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 2 மேசைக் கரண்டி
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 5 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

    வெண்ணெயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

    பிசைந்த மாவின் மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.

    முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை அச்சில் போட்டுக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் மாவை முறுக்குகளாக பிழியந்து பொன்னிரமாக எடுக்கவும்.

    சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×