என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
தேவையான பொருட்கள் :
எள் - 1 கப்,
பொடித்த வெல்லம் - ¾ கப்,
நீர் - ¼ கப்,
ஏலப்பொடி- 1 டீஸ்பூன்.
செய்முறை:
வெள்ளை அல்லது கருப்பு எள்ளை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி களைந்து வடிகட்டி ஈரம் காய்ந்ததும் வெறும் வாணலியில் போட்டு படபடவென வெடிக்கும் வரை காத்திருந்து (கருகிவிடாமல்) எடுத்து தட்டில் கொட்டவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும்.
ஏலப்பொடி சேர்த்து பாகில் 1 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
பாகு நன்கு காய்ந்ததும், எள்ளில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டி காம்பால் கிளறி கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

இப்போது சூப்பரான எள்ளுருண்டை தயார்.
இதையும் படிக்கலாம்...முட்டைகோஸ் - கேரட் சாலட்
பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்டிய பால் - 3/4 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
நறுக்கிய பாதாம் பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
செய்முறை
குங்குமப்பூவை 2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும்.
உடனே பாலையும் அதனுடன் சேர்த்து 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
ஏலக்காய் பொடி, குங்குமப்பூ பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும்.
நன்றாக கிளறி அதை ஒரு பெளலில் மாற்றிக் கொள்ளவும்.
இப்பொழுது நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.
கொஞ்சம் குளிர விட்டு பரிமாறவும்.

சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர் ரெடி.
இதையும் படிக்கலாம்...உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சாதம் கஞ்சி சூப்
நாண், சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த காலிபிளவர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1
தேங்காய் துருவல் - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை
செய்முறை:
காலிபிளவரை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.
மிக்சியில் தேங்காய் துருவல், சோம்பை போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பெருஞ்சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் காலிஃப்வரை போட்டு வதக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து அரைத்த தேங்காய் விழுதை போட்டு கிளற வேண்டும்.
பின்னர் போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான காலிஃப்ளவர் குருமா ரெடி.
இதையும் படிக்கலாம்...நார்ச்சத்து நிறைந்த சிவப்பரிசி ரொட்டி
தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த அவித்த முட்டை மிளகு பிரட்டல். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருள்கள்
முட்டை - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருஞ்சீரகம் - சிறிதளவு
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை
முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டை வெந்தவுடன் ஓட்டை நீக்கி விட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்.
மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் முட்டையை போட்டு 2 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது நேரம் வைத்து மசாலா முட்டையில் நன்றாக சேர்ந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி.
இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக கொடுக்கலாம். அல்லது சான்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.

தித்திக்கும் இனிப்பு பலகாரங்களை வீட்டில் தயார் செய்து சுவைக்கலாம். இன்று சூப்பரான கோவா ஜாமூனை 30 நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - முக்கால் கிலோ
மைதா - முக்கால் கப்
நெய் - கால் கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - அரை லிட்டர்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து வந்ததும் சிறு தீயில் வைத்து அடியில் பிடிக்காமல் கிளறவும்.
பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை கிளறவும். பின்னர் இறக்கி ஆறவைத்து அதில் மைதா, நெய் சேர்த்து லேசாக பிசையவும்.
அதைத்தொடர்ந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து பாகு பதத்துக்கு காய்ச்சிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
பின்னர் பொரித்த உருண்டைகளை காய்ச்சிய பாகுவில் ஊற வைத்து ருசிக்கலாம்.

இப்போது சுவையான தித்திக்கும் கோவா ஜாமூன் ரெடி.
இதையும் படிக்கலாம்...கொண்டைக்கடலை மாதுளை சாலட்
சேமியாவில் கிச்சடி, பாயாசம், உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சேமியா, சிக்கன் சேர்த்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - கால் கிலோ
சிக்கன் - கால் கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை- சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தயிர் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்
தாளிக்க
கிராம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய், சோம்பு
செய்முறை:
சேமியாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய், எண்ணெய் சமமான அளவில் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் முந்திரி, வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு போஸ்ட் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைசாறு, தயிர் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் சிக்கனை போட்டு வதக்கவும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சோமியாவை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு தம் போடவும்.
20 நிமிடம் மிதமான தீயில் வைத்து பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சேமியா சிக்கன் பிரியாணி ரெடி.
இதையும் படிக்கலாம்...கோதுமை மாவு கருப்பட்டி தோசை
கோதுமை ரவையில் உப்புமா, கிச்சடி, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று கோதுமை ரவையில் சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய்த் தூள் 1/2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - சிறிதளவு
காய்ந்த திராட்சை - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை
குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் கோதுமை ரவையை சேர்த்து வறுக்கவும்.
ரவை நன்றாக வறுபட்டதும் பால் ஊற்றவும்.
அடுத்து தண்ணீர் கலந்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து சர்க்கரை சேர்த்து கிளறி, அடுத்து கேசரி பவுடர் கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்.
இறுதியில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும முந்திரி, திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் கலக்கவும்.
இப்போது சுவையான கோதுமை ரவா கேசரி ரெடி.

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
நெய் - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
முந்திரி, திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை
கம்பை நான்கு, ஐந்து மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து அதை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் இரண்டு மூன்று முறை அரைத்து அதை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளலாம். அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் வடிகட்டி வைத்திருக்கும் பாலை ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அது திரண்டு வரும்.
அந்த நேரத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நாட்டுச் சர்க்கரை சேர்ந்தவுடன் மறுபடியும் இளக ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கைவிடாமல் கிளற வேண்டும்.
அது கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டியாகும் பொழுது அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த திராட்சை, முந்திரியையும் போட்டுக் கிளறி இறக்கவும்.

அல்வாவானது வாணலியில் ஒட்டாமல் நன்றாகச் சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
சூப்பரான கம்பு அல்வா ரெடி.
கம்பை அதிக நேரம் நன்கு ஊறவைத்து அரைத்தால் அதிலிருந்து பால் அதிகமாகக் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம்...10 நிமிடத்தில் செய்யலாம் சூப்பரான சட்னி
அசைவப் பிரியர்களுக்கு மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மட்டன் கீமா சமோசா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
மட்டன் கீமா - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 1/2 டீஸ்பூன்
புதினா இலைகள் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மைதா மாவு - 300 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
தயிர் - 1 டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாவை கொட்டி அதில் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
அடுத்ததாக கரம் மசாலா, தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் அடுப்பை நிறுத்தி கலவையை ஆற விடவும்.
இப்போது மாவை சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் சிறிதளவு கீமா மசாலாவை வைத்து முனைகளில் தண்ணீர் தொட்டுத் தடவி மூடி அழுத்திவிடுங்கள். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

இதையும் படிக்கலாம்...உடல் எடையை குறைக்க உதவும் கினுவா வெஜிடபிள் சாலட்
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய சமோசா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 3 கப்
அவல் - 3 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை- 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைத மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்காளை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.
இதையும் படிக்கலாம்...கருப்பு உளுந்து இட்லி பொடி
பன்னீரை அதிகமாக வறுப்பதோ அல்லது பொரிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும். பன்னீரில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவும்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 250 கிராம்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
ஆலில் ஆயில் - - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூம்
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
குடை மிளகாய் - 2 சதுரமாக நறுக்கியது
வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கியது
தக்காளி - 1 சதுரமாக நறுக்கியது
மூங்கில் குச்சி - தேவையான அளவு
செய்முறை
பன்னீரை சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை சதுர வடிவில் நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆலில் ஆயில் (Olive oil), எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு கடலை மாவு சேர்த்து, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை 1/2 மணி நேரம் மூடி ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து சிறிய மூங்கில் குச்சிகளை கொண்டு சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக குத்தி தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பன்னீர் குத்தி வைத்த குச்சிகளை அடுக்கி வைத்து சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா தயார்.
இதையும் படிக்கலாம்....இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாதம்
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன், சீஸ் வைத்து அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
முட்டை - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 1
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
கார்ன் பிளேக்ஸ் - 1 கப்
சோள மாவு - 1/2 கப்
சீஸ் - தேவைக்கு
பால் - 3 டேபிள் ஸ்பூன்
ரொட்டி - 1 துண்டு
உப்பு - ருசிக்கு
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை, மஞ்சள் கருவை தனித்தனியே எடுத்துக் கொள்ளவும்.
மிக்சியில், சிக்கன், மிளகாய் துாள், முட்டையின் மஞ்சள் கரு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, உருக்கிய வெண்ணெய், ரொட்டித் துண்டு சேர்த்து, அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு கையில் லேசாக எண்ணெய் தடவி, கொண்டு சிக்கன் மசாலாவில் சிறிய உருண்டையாக எடுத்து நடுவில் சீஸ் துண்டு வைத்து, சிறு உருண்டைகளாகப் பிடித்து, சோள மாவு, முட்டையின் வெள்ளைக் கரு, பொடித்த கார்ன் பிளேக்ஸ் இவற்றில் வரிசையாக தோய்த்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

உள்ளே சீஸ் இருப்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த ருசியான சிற்றுண்டி இதுவாகும்.
இதையும் படிக்கலாம்...அரிசி மாவு தேங்காய் ரொட்டி