search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கம்பு அல்வா
    X
    கம்பு அல்வா

    சத்தான சுவையான கம்பு அல்வா

    கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    முந்திரி, திராட்சை - சிறிதளவு
    ஏலக்காய் பொடி - சிறிதளவு

    செய்முறை

    கம்பை நான்கு, ஐந்து மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து அதை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் இரண்டு மூன்று முறை அரைத்து அதை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளலாம். அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் வடிகட்டி வைத்திருக்கும் பாலை ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அது திரண்டு வரும்.

    அந்த நேரத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நாட்டுச் சர்க்கரை சேர்ந்தவுடன் மறுபடியும் இளக ஆரம்பிக்கும்.

    இந்த நேரத்தில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கைவிடாமல் கிளற வேண்டும்.

    அது கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டியாகும் பொழுது அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த திராட்சை, முந்திரியையும் போட்டுக் கிளறி இறக்கவும்.

    அல்வாவானது வாணலியில் ஒட்டாமல் நன்றாகச் சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

    சூப்பரான கம்பு அல்வா ரெடி.

    கம்பை அதிக நேரம் நன்கு ஊறவைத்து அரைத்தால் அதிலிருந்து பால் அதிகமாகக் கிடைக்கும்.

    Next Story
    ×