search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சூப்பரான மட்டன் கீமா சமோசா
    X
    சூப்பரான மட்டன் கீமா சமோசா

    சூப்பரான மட்டன் கீமா சமோசா

    அசைவப் பிரியர்களுக்கு மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மட்டன் கீமா சமோசா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் கீமா - அரை கிலோ
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா பொடி - 1 1/2 டீஸ்பூன்
    புதினா இலைகள் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    உப்பு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    மைதா மாவு - 300 கிராம்
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயம் - 1
    தயிர் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதாவை கொட்டி அதில் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

    அடுத்ததாக கரம் மசாலா, தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் அடுப்பை நிறுத்தி கலவையை ஆற விடவும்.

    இப்போது மாவை சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் சிறிதளவு கீமா மசாலாவை வைத்து முனைகளில் தண்ணீர் தொட்டுத் தடவி மூடி அழுத்திவிடுங்கள். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் கீமா சமோசா ரெடி.

    Next Story
    ×