search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காலிஃப்ளவர் குருமா
    X
    காலிஃப்ளவர் குருமா

    சப்பாத்திக்கு அருமையான காலிஃப்ளவர் குருமா

    நாண், சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த காலிபிளவர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காலிஃப்ளவர்  - 1
    தேங்காய் துருவல் - கால் கப்
    பெரிய வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
    பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஏலக்காய், கிராம்பு, பட்டை

    செய்முறை:

    காலிபிளவரை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், சோம்பை போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பெருஞ்சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் காலிஃப்வரை போட்டு வதக்க வேண்டும்.

    அதைத்தொடர்ந்து அரைத்த தேங்காய் விழுதை போட்டு கிளற வேண்டும்.

    பின்னர் போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான காலிஃப்ளவர் குருமா ரெடி.

    Next Story
    ×