என் மலர்

  கிச்சன் கில்லாடிகள்

  கோதுமை ரவா கேசரி
  X
  கோதுமை ரவா கேசரி

  தித்திப்பான கோதுமை ரவா கேசரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோதுமை ரவையில் உப்புமா, கிச்சடி, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று கோதுமை ரவையில் சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்

  கோதுமை ரவை - 1 கப்
  பால் - 2 கப்
  தண்ணீர் - 2 கப்
  சர்க்கரை - 1 கப்
  ஏலக்காய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  நெய் - தேவையான அளவு
  முந்திரி பருப்பு - சிறிதளவு
  காய்ந்த திராட்சை - சிறிதளவு
  கேசரி பவுடர் - சிறிதளவு

  செய்முறை

  குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் கோதுமை ரவையை சேர்த்து வறுக்கவும்.

  ரவை நன்றாக வறுபட்டதும் பால் ஊற்றவும்.

  அடுத்து தண்ணீர் கலந்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.

  விசில் போனவுடன் குக்கரை திறந்து சர்க்கரை சேர்த்து கிளறி, அடுத்து கேசரி பவுடர் கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்.

  இறுதியில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும முந்திரி, திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் கலக்கவும்.

  இப்போது சுவையான கோதுமை ரவா கேசரி ரெடி.
  Next Story
  ×