என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஆந்திரா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்)
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    மசாலாவிற்கு…

    வெங்காயம் - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தனியா - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வர மிளகாய் - 4
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

    பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

    வறுத்த மீனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் பொரித்த கறிவேப்பிலையை போட்டு பரிமாறவும்.

    இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதத்துடன் பிசைந்தும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் ஏற்றது இந்த கத்தரிக்காய் துவையல். இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய கத்தரிக்காய் - 1
    உளுத்தம் பருப்பு -  2 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 3
    புளி - நெல்லிக்காய் அளவு
    பெருங்காயம் - சிறு துண்டு
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பெரிய முழு கத்தரிக்காயில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து தோல் கருகும் வரை சுடவும்.

    எண்ணெயில் பெருங்காயம், உளுந்து, மிளகு, மிளகாய் வற்றலை வறுக்கவும்.

    சுட்ட கத்தரிக்காய் நன்றாக ஆறியதும் தோலை உரித்துக்கொள்ளவும்.

    மிக்ஸியில் வறுத்த சாமான்களுடன், புளி, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.

    கடைசியில் சுட்ட கத்தரி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். நைசாக அரைக்க கூடாது.

    சூப்பரான கத்தரிக்காய் துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கிராமத்து ஸ்டைலில் நண்டு மசாலா செய்தால் அருமையாக இருக்கும். இன்று நண்டு மசாலா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1
    ஏலக்காய் - 4
    சோம்பு - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1/2 கப்
    சோம்பு - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - 5



    செய்முறை :

    நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம்,  தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் துருவிய தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்..

    பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.

    அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.

    நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம்.

    பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி புதினா சட்னி அருமையாக இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2,
    புதினா - கால் கப்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க

    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயை சூடாக்கி... புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக போட்டு வதக்கவும்.

    வதக்கிய பொருட்கள் ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.

    சூப்பரான தக்காளி புதினா சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சென்னாவில் (வெள்ளை கொண்டைக்கடலை) மசாலா, சுண்டல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சென்னாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சென்னா வெள்ளை(வெள்ளை கொண்டைக்கடலை)  - 150 கிராம்
    வெங்காயம்  பெரியது - 1
    தக்காளி - 2
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 6 பல்
    உப்பு - தேவைக்கு
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகாய்த்துள் - 1 ஸ்பூன்
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 ஸ்பூன்
    தயிர் - 1 குழிக்கரண்டி
    புதினா இலை - சிறிது
    பாசுமதி அரிசி - 200 கிராம்

    தாளிக்க

    பட்டை,
    லவங்கம்,
    ஏலக்காய்,
    பிரியாணி இலை,
    முந்திரி,
    நெய் - 1 ஸ்பூன்,
    எண்ணைய் - தேவைக்கு



    செய்முறை :

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

    வெள்ளை சென்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும்.

    விழுது நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தயிர் சேர்க்கவும்.

    அடுத்து அதில் புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து கிளறி, இறுதியில் சாதம் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சென்னா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவை, சேமியா சேர்த்து கிச்சடி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடியை எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருள்கள் :

    ரவை - ஒரு கப்
    சேமியா - 2 கப்
    சின்ன வெங்காயம் - 20 கிராம்
    பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி
    கேரட் - 1 (சிறியது)
    இஞ்சி - ஒரு சிறு துண்டு
    பூண்டு - 2 பற்கள்
    பச்சை மிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு
    உளுந்து
    கடலைப் பருப்பு
    சீரகம்
    முந்திரி
    பெருங்காயம்
    கிராம்பு - 1
    பிரிஞ்சி இலை - 1
    கறிவேப்பிலை



    செய்முறை :

    பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.

    ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் ரவை, சோமியாவை தனித்தனியாக போட்டு சூடு வர வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கிவிட்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டே கால் பங்கு  என தண்ணீர் விட்டு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

    கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும். அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான ரவை சேமியா காய்கறி கிச்சடி ரெடி.

    சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி அல்லது டீயை சூடான வடையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று காய்கறிகளை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப்,
    கடலைப்பருப்பு - 1 சிறிய கப்,
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    பச்சைமிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
    மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவம்.

    பருப்புகளை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    பாத்திரத்தில் அரைத்த மாவு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்கறிகள் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான ஸ்பெஷல் காய்கறி வடை ரெடி.

    சாம்பார், சட்னியுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து அருமையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் கால் - கிலோ
    முட்டை - 3
    வடித்த சாதம்/பாசுமதி சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து  கொள்ளவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள், மீதமுள்ள [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    அடுத்து அதில் சாதத்தை சேர்த்து கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

    சூப்பரான இறால் முட்டை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டைகோஸ் பருப்பு கூட்டை சாதத்திற்கும், சாப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்று இந்த கூட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - 1 கப்
    வெங்காயம் - 3
    தக்காளி - 2
    துருவிய தேங்காய் - 1/2 கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பாசிப்பருப்பு - 1/2 கப்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    வெங்காயம் - சிறிது
    கடுகு - 1/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.

    மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் விட்டு [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்தூள்
    சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    பருப்பானது பாதி அளவு வெந்தவுடன் அதில் நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், தக்காளி, அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூடி போட்டு வேக வைக்கவும். அனைத்தும் நன்றாக வெந்தவுடன் அதனை இறக்கி வைக்கவும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி தாளித்து, அந்த முட்டைகோஸ் பருப்புக் கலவையில் கொட்டவும்.

    இப்போது அருமையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு தயார்!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெங்காலி ஆலு மசாலாவை தோசை, பூரி, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று பெங்காலி ஆலு மசாலா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    ஏலக்காய், பட்டை - தலா ஒன்று,
    தனியா - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 6,
    வெங்காயம், தக்காளி - தலா 2,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - 3 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், பொடித்த பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்…

    கடைசியாக பொரித்த உருளைக்கிழங்கை போட்டு தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.

    சூப்பரான பெங்காலி ஆலு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள இறால் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இறால் - 1/4 கிலோ
    வெங்காயம் - 2 (பெரியது).
    இஞ்சி, பூண்டு விழுது  - 2 டீஸ்பூன்
    சோம்பு - ஒரு தேக்கரண்டி.
    சீரகம் - ஒரு தேக்கரண்டி.
    தக்காளி - 2 பழம்.
    தேங்காய் - கால் மூடி (துருவியது).
    உப்பு - 1 தேக்கரண்டி.
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
    எண்ணெய் - 2 தேக்கரண்டி.
    கறிவேப்பிலை - ஒரு கையளவு.
    வத்தல் மிளகாய் - 20 (பெரியது)



    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோல், ஓடு நீக்கி இறாலை நன்கு சுத்தம் செய்து [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

    தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு, சீரகத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இறாலை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.

    இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிப் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.  

    சூப்பரான இறால் வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முருங்கைக்காய் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முருங்கைக்காய் - 5
    பூண்டு - 5 பற்கள்
    பெரிய வெங்காயம் - 1
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1/4 கப்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    பட்டை - 1/2 இன்ச்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்பு பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முருங்கைக்காய், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

    முருங்கைகாயானது நன்கு வெந்த பின், அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் மசாலா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×