என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு வேர்க்கடலை உருண்டை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வேர்க்கடலை உருண்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 1 கப்
    வெல்லத் தூள் - 1 கப்
    ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து, தோல் நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கெட்டிப்பாகு காய்ச்சுங்கள்.

    பாகு பதம் வந்தவுடன் வேர்க்கடலையைக் கொட்டிக் கிளறுங்கள். நன்றாகக் கலந்ததும் வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள்.

    கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு வேர்கடலை கலவை சற்று சூடாக இருக்கும் போதோ சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். நன்றாக ஆறிய பின்னர் காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொள்ளுவில் துவையல், சட்னி, சுண்டல், குழம்பு செய்து இருப்பீங்க. இன்று கொள்ளுவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய கொள்ளு பருப்பு - 1 கப்,
    வெங்காயம் - 4,
    பச்சை மிளகாய் - 2, உப்பு,
    எண்ணெய் - தேவைக்கு,
    பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முளைகட்டிய கொள்ளுவை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.

    பிரைந்த மாவை சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் சாக்லேட் சுவையில் உள்ளவற்றை விரும்பி சாப்பிடுவர். அதிலும் சாக்லெட் மில்க் ஷேக் என்றால் சொல்லவா வேண்டும். இன்று சாக்லெட் மில்க் ஷேக்கை எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 1 கப்
    சாக்லேட் சிரப் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - 2 டீஸ்பூன்
    வென்னிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்



    செய்முறை:

    முதலில் மிக்ஸி/பிளெண்டரில் பால், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் வென்னிலா ஐஸ்க்ரீமை சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பருகவும்.

    சுவையான சாக்லேட் மில்க் ஷேக் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓட்ஸில் கஞ்சி, பொங்கல், கூழ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஓட்ஸை வைத்து சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    பால் - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    கேசரி கலர் - சிறிது
    ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
    பாதாம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தேவையான அளவு



    செய்முறை :

    பாதாமை கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும்.

    முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.

    பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும்.

    பின்னர் அதில் சர்க்கரை மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும்.

    மீண்டும் அதில் 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, கைவிடாமல் கிளறி விடவும்.

    இப்போது வறுத்த முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சேர்க்கவும்.

    அடுத்து அதில் பாதாம், ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும்.

    கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சூப்பரான கமகம ஓட்ஸ் கேசரி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் குழம்பு. இன்று இந்த சிக்கன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    தேங்காய் (துருவியது) - 1 கப்
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 6
    பச்சை மிளகாய் - 6
    தேங்காய் எண்ணெய்
    சின்ன வெங்காயம் -1
    பெரிய வெங்காயம் -1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
    வெந்தயத்தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள்- ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்னவெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய் துருவலை போட்டு வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும். கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைத்து கொள்ளவும்.

    அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

    இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.

    பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும். இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும்.

    பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும். இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும்.

    பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலா விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

    சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    இப்போது சுவையான மணக்கும் சிக்கன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கூனி இறால் (Baby Prawns / Kooni) - 1 கப்
    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பூண்டு - 6 பல்
    ப.மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை  அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

    பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும்.

    சூப்பரான கூனி இறால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலர் காரசாரமாக சாப்பிட விரும்புவார்கள். இன்று சிக்கனில், மிளகு சேர்த்து காரசாரமான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சிக்கன் - அரை  கிலோ
    மிளகு - 1 ஸ்பூன்
    மிளகுத் தூள் - 3  ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    காய்ந்த மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

    சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

    கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு, 2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதில் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளிந்து கடாயை மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    காரசாரமான சிக்கன் மிளகு வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2
    புதினா - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிது
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    பாசுமதி அரிசி - 1 1/2 கப்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 3
    ஏலக்காய் - 4
    பட்டை - 1
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க பின்னர் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, வதக்கவும்.

    அடுத்து அதில் அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு, 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, இறக்க வேண்டும்.

    பின்பு விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் சிக்கன் சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    வெங்காயம் - 1
    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    சிக்கனை சுத்தம் செய்து சிறிது வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன் உதிர்த்து வைத்த சிக்கன், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, சிக்கன் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    சிக்கன் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா ரெடி!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு  - 2,
    வெங்காயம்  - ஒன்று,
    பச்சை மிளகாய்  - ஒன்று,
    புதினா இலைகள்  - சிறிதளவு,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு  - தேவையான அளவு



    செய்முறை:

    ப.மிளகாய், புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை மாவுடன் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாக பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுவே ஸ்டப்பிங்.

    மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டப்பிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும்.

    இந்த மாவை சற்று கனமான பராத்தாக்களாக தேய்க்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த பராத்தாக்களை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மாம்பழத்தை வைத்து குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    குங்குமப்பூ - சிறிய சிட்டிகை
    சோளமாவு - சிறிதளவு
    ஏலக்காய் துள் - சிறிய சிட்டிகை
    பால்கோவா - 1/4 கப்
    சர்க்கரை - 150 கிராம்
    துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி - 1/2 கப்
    பால்- 1 லிட்டர்
    மில்க் மைட் - 100 மில்லி
    மாம்பழ விழுது - 1 கப்
    மாம்பழ துண்டுகள் - 1 கப்



    செய்முறை :

    சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பால் பாதியாக சுண்டியதும் சக்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து இதனுடன் மில்க் மைட் மற்றும் பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்.

    நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வந்ததும் மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து காய்ச்சவும்.

    பின் அதில் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ சேர்க்கவும். சிறிது நேரத்துக்கு பிறகு பேஸ்ட் போன்ற பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கரைத்த சோளமாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    இறுதியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து இறக்கவும்.

    இது சற்று ஆறிய பிறகு குல்ஃபி கோப்பைகளில் ஊற்றி 8 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    குளுகுளு மாம்பழ குல்ஃபி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொச்சையில் சுண்டல், கூட்டு, குழம்பு செய்து இருப்பீங்க. ஆனால் இன்று மொச்சையை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மொச்சை - கால் கிலோ
    உளுந்து - 100 கிராம்
    கடலைப்பருப்பு - 100 கிராம்
    நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
    பூண்டு - 4 பல்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மொச்சை, உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து நன்றாக ஊறியதும் அவற்றுடன் ப.மிளகாய், பூண்டு, மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவுடன் வெங்காயத்தை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

    சூப்பரான மொச்சை வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×