என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் கீமா வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - அரை கிலோ (கொத்திய கறி)
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் விழுது - அரை தேக்கரண்டி
    இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
    பட்டை - சிறிது
    தயிர் - முக்கால் கப்
    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
    பாசுமதி அரிசி - 3 கப்
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 4
    பிரியாணி இலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    கொத்திய சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

    சுத்தம் செய்த சிக்கனில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது 1 மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டு தாளித்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    அதன் பின்பு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும்.

    பின்பு சிறிது கரம் மசாலா, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    அதனுடன் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.

    வெந்தவுடன் இறக்கி, சிறிது நெய் விட்டுக் பரிமாறவும்..

    சூப்பரான சிக்கன் கீமா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு குளுகுளு மாம்பழ பிர்ணி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
    பச்சரிசி - கைப்பிடியளவு,
    சர்க்கரை - அரை கப்,
    மாம்பழக் கூழ் - ஒரு கப்,
    தோல் சீவி, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு,
    உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, நெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைசாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி தீயை மிதமாக வைத்து நடு நடுவே கிளறி காய்ச்சவும்.

    பால் பாதியாக சுண்டிய பிறகு அரைத்த அரிசி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரைந்ததும் கிளறி இறக்கவும்.

    ஆறியதும் மாம்பழக்கூழ், மாம்பழத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

    மேலே பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும்.

    இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

    சூப்பரான மாம்பழ பிர்ணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டனுடன், கீரையை சேர்த்து செய்யும் மட்டன் கீமா சாக் ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 750 கிராம்
    பசலைக்கீரை - 3 கட்டு
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    மிளகுத் தூள் - 1
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீமாவை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    கழுவிய கீமாவில் எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் மல்லி தூள் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகுத் தூள், சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஊற வைத்துள்ள மட்டன் கீமாவை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

    எப்போது மட்டனில் இருந்து தண்ணீர் வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அரைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    அடுத்து அதில் பசலைக்கீரையை சேர்த்து பிரட்டி, பின் உப்பு தூவி குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

    கீமா மற்றும் கீரையானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூவி நன்கு பிரட்டி இறக்கினால், கீமா சாக் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெறும் புதினா சாதம் செய்யாமல் அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்து சாதம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்,
    கொண்டைக்கடலை - ½ கப்,
    தக்காளி - 1
    வெங்காயம் - 1,
    பிரிஞ்சி இலை - 1,
    ப.மிளகாய் - 5
    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்,
    தனியா தூள் - கால் டீஸ்பூன்,
    புதினா இலைகள் - 1 கைப்பிடி,
    எலுமிச்சைச் சாறு - ½ டீஸ்பூன்,
    எண்ணெய், நெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    கொண்டைக்கடலை, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.

    அரிசி அரை வேக்காடு வெந்தவுடன் அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும்.

    கடைசியாக சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் சொதி தோசை, இட்லி, இடியாப்பம், சாதம், சாப்பத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த மட்டன் சொதி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 6
    தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) - 2 கப்
    தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) - 1 கப்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பட்டை - 10 கிராம்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டன், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும்.

    வெளியில் எடுத்த மட்டனை கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

    தனியே மற்றொரு கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

    பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும்.

    லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).

    சூப்பரான மட்டன் சொதி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு எடுக்கவும்),
    பச்சைப் பட்டாணி - ஒரு கப்,
    தக்காளி -  1,
    வெங்காயம் -  1,
    பச்சை மிளகாய்,
    தேங்காய் துண்டுகள் - தலா 2,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியாத்தூள்,
    இஞ்சி-பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    காலிஃப்ளவரை தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து தனியாக வைக்கவும்

    தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய், சீரகத்தை மிக்சியில் போட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.

    கடைசியில் தேங்காய் - சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.

    சூப்பரான காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சிக்கன் சால்னா கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் மிகவும் பிரசித்தம். இந்த சால்னாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1 பெரியது
    தக்காளி - 1 பெரியது
    பச்சை - மிளகாய் 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 மேஜைகரண்டி
    சிக்கன் - 500 கிராம்
    சிக்கன் தோல் - 200 கிராம்
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    மசாலா அரைக்க

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    டால்டா - 1 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச்
    இலவங்கம் - 3
    மிளகு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 5 பற்கள்
    வெங்காயம் - 2 பெரியது
    தக்காளி - 4 பெரியது
    தேங்காய் துருவல் - 1 கப்
    கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 10
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து  வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை, லவங்கம், அன்னசிபூ, மிளகு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கரம்மசாலா தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதில் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கி கலவையை குளிர வைத்து பிறகு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் டால்டா ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும், பச்சைமிளகாய் மற்றும் மஞ்சள்தூளை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு அதில் சிக்கன், சிக்கன் தோல் போட்டு நன்றாக வதக்கவும், அதில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்பொழுது அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்.

    அதில் இருந்து எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை சால்னாவை நன்றாக கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்கவும்.

    சூப்பரான சிக்கன் சால்னா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுகொள்ள தக்காளி கார சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 3,
    பெரிய வெங்காயம் - 1,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    தனியா - 1 டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்,
    இஞ்சி - 1/4 இன்ச்,
    பூண்டு - 5 பல்,
    பட்டை - சிறிது,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் - 2,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    கசகசா - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்த்துருவல் போட்டு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பைக் கொதிக்க விடவேண்டும்

    குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாடை போய் திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.

    இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன், சிக்கன் சூப், வெஜிடபிள் சூப் குடித்து இருப்பீங்க. இன்று மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் இல்லாத சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள்
    இஞ்சி - ஒரு செ.மீ
    பூண்டு - 4 பல்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பட்டை - ஒரு சிறிய துண்டு
    அன்னாசிப்பூ - ஒன்று
    ஏலக்காய் - ஒன்று
    மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி
    வெங்காயத்தாள் (Spring onions) - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் மூன்றையும் இடித்து வெள்ளை துணியில் முடிந்து வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் துணியில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஆகியவற்றை சேர்க்கவும். நீர் கொதிக்க தொடங்கும் போது, மீனை சேர்க்கவும்.

    அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.

    கடைசியாக வெங்காயத்தாள் சேர்க்கவும்.

    சுவையான மீன் சூப் தயார்.

    இதனை சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது டயட்டில் இருப்பவர்கள் அப்படியே அருந்தலாம். காரமில்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 150 கிராம்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    புளி தண்ணீர் - கால் கப்

    தாளிக்க

    எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயத்தின் நிறம் மாறியவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். (விரும்பினால் தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்)

    அடுத்து அதில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தூளின் வாசம் குறைந்து வெண்டைக்காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த பரோட்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 3/4 கப்
    மைதா மாவு - 1/4 கப்
    உப்பு, எண்ணெய் - சிறிது

    ஸ்டஃப் செய்ய :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    முட்டை - 1
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு கலந்து தேவையான நீர் விட்டு எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி பாதி வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சிக்கன், உப்பு போட்டு மூடி வேக விடவும். (தேவைப்பட்டால் நீர் சேர்க்கலாம். ஆனால் நீர் அதிகம் சேரக்கூடாது.)

    சிக்கன் முழுவதும் வெந்ததும் கடைசியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விடவும். முட்டை வெந்ததும் எடுத்து வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை சின்னதாக தேய்த்து அதில் இந்த கலவை வைத்து மூடி மீண்டும் பராத்தாவாக தேய்க்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பராத்தாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான ஸ்டஃப்டு சிக்கன் பரோட்டா தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - ஒரு கப்
    முட்டை - 3
    வெங்காயம் - ஒன்று
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க:

    தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
    சீரகம் - கால் தேக்கரண்டி



    செய்முறை :

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கீரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

    வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×