என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இட்லி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பொடி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பொடி இட்லி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 10 (சதுரங்களாக நறுக்கவும்),
    எண்ணெய் - தேவையான அளவு

    பொடி செய்ய:

    கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறுப்பு எள் - தலா ஒரு கப்,
    காய்ந்த மிளகாய் - 15, உப்பு,
    பெருங்காயத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெறும் வாணலியில் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்சியில் பவுடராக பொடிக்கவும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

    வாழை இலையில் கட்டி செல்லலாம். இரண்டு நாட்கள் வரை கெடாது.

    குறிப்பு: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த இட்லி இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - இரண்டு
    கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.

    குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.

    ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

    சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத மட்டன் - 600 கிராம்
    வெங்காயம் - 3
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 4
    இலவங்க பட்டை - 1
    மிளகு - 7
    இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    முந்திரி பேஸ்ட் - 1/4 கப்
    கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
    கிரீம் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதோடு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு 1 நிமிடம் தொடர்ந்து வதக்கவும்.

    அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து, தீயை அதிகப்படுத்தி 5 நிமிடம் கிளறி வேகவிடவும்.

    பின்னர் அதில் மல்லிப் பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மறுபடியும் 5 நிமிடம் வேக விடவும்.

    அடுத்து அதில் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் தீயின் அளவை குறைத்து, மட்டனை தட்டை வைத்து மூடி, மட்டன் வேகும் வரை வேக விடவும்.

    பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் கரம் மசாலா பொடியை போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் கிரீமை சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

    இப்போது சுவையான சாஹி மட்டன் குருமா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பட்டர் மட்டன் சப்பாத்தி, பூரி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று பட்டர் மட்டன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - அரை கிலோ
    தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 3
    வெங்காயம் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மல்லி இலை - சிறிது
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    சில்லி பவுடர் - அரைஸ்பூன்
    கரம் மசாலா - அரைஸ்பூன்
    பட்டர் - 3 டீஸ்பூன்
    பழுத்த மிளகாய் - 4
    ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மட்டனில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, அரைஸ்பூன் சில்லி பவுடர், தயிர், தேவைக்கு உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பாதி பாதியாக பிரித்து வைக்கவும்.

    குக்கரில் ஊறிய மட்டனோடு பாதி வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து 5 விசில் போட்டு வேக வைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பாதியாக பிரித்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, பழுத்த மிளகாயை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை வேக வைத்த மட்டனில் சேர்க்கவும்.

    மட்டனும் கிரேவியுமாக சேர்ந்து கொதி வரும்.

    கடைசியாக 2 ஸ்பூன் பட்டர், ஃப்ரெஷ் கிரீம், கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சுவையான பட்டர் மட்டன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் இலை அடை மிகவும் பிரபலம். இன்று பேரீச்சம் பழம் சேர்த்து தித்திப்பான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு- கால் கிலோ,
    மைதா மாவு, - கால் கிலோ,
    பால் - அரை லிட்டர்,
    பால் பவுடர் - கால் கப்,
    பேரீச்சம்பழம் - ஒரு கப்,
    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    பொடித்த வெல்லம் - ஒன்றரை கப்,
    முந்திரி - 20,
    ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.



    செய்முறை:

    பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.

    சதுரமாக நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், குல்ஃபி, என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழ குல்ஃபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழ விழுது (தோல் நீக்கி அரைத்தது) - 1 கப்
    மாம்பழ துண்டுகள் - 1 கப்
    பால் - 1 லிட்டர்
    மில்க் மைட் - 100 மில்லி
    சர்க்கரை - 150 கிராம்
    துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி - 1/2 கப்
    ஏலக்காய் துள் - சிறிய சிட்டிகை
    பால்கோவா - 1/4 கப் (தேவைபட்டால்)
    குங்குமப்பூ - சிறிய சிட்டிகை
    சோளமாவு - சிறிதளவு



    செய்முறை :

    சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

    பால் பாதியாக சுண்டியதும் சக்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து இதனுடன் மில்க் மைட் மற்றும் பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்..

    நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வந்ததும் மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து காய்ச்சவும்.

    பின் அதில் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ சேர்க்கவும்.

    சிறிது நேரத்துக்கு பிறகு பேஸ்ட் போன்ற பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கரைத்த சோளமாவை சேர்த்து கிளறவும்.

    இறுதியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து இறக்கவும்.

    இதை சற்று நேரம் ஆற வைத்து குல்ஃபி கோப்பைகளில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    குளுகுளு மாம்பழ குல்ஃபி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான கேரளா ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்,
    மைதா - ஒன்றரை கப்,
    வெல்லம் - 1 கப்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    ஏலக்காய் - 4,  
    நெய் - அரை டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 2 கப்,
    உப்பு - சிட்டிகை.



    செய்முறை :

    வெல்லத்தைத் தூளாக்கி, சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    மைதா மாவில் உப்பை சேர்த்து, பூரி மாவுபோல் கலந்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் ரவையைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, வெல்லக் கரைசல் எல்லாவற்றையும் சேர்த்து, மாவு கெட்டி ஆகும்வரை கிளறவும். அதுவே தானாக பந்துபோல் சுருண்டு வந்துவிடும். இதை நன்றாக ஆறவைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் மைதாமாவை சிறிது எடுத்து மெலிதாக பரப்பி, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி, கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, வட்டமாகத் தட்டி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ளவைகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான சொஜ்ஜி அப்பம் ரெடி.

    குழந்தைகளின் ஃபேவரிட் இந்த அப்பம்!

    இந்த அப்பம் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பொன்னிறமாக எடுத்தால் சுவை நன்றாக இருக்கும். செந்நிறமாக மாறவிட வேண்டாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபி தான் சிக்கன் லாலிபாப். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் விங்ஸ் - 1/2 கிலோ (தோல் நீக்கப்பட்டது)
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு...


    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    வினிகர் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    மாவிற்கு...

    மைதா - 6 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 6 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
    வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    முட்டை - 1
    அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
    ஆரஞ்சு நிற கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கன் விங்ஸை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சிக்கன் விங்ஸை எடுத்து, அதனை கத்தியால் கீறி, அதன் நடுலே உள்ள ஒல்லியான எலும்பை நீக்கிவிட்டு, நல்ல தடிமனான எலும்பின் ஒரு பக்கமாக, சதைப்பற்றைக் கொண்டு வர வேண்டும். இதுப்போன்று அனைத்து சிக்கன் விங்ஸையும் செய்து கொள்ள வேண்டும்.

    சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு கெட்டியான மாவாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    சிக்கனானது 2 மணிநேரம் நன்கு ஊறியப் பின்னர், ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வொரு சிக்கன் துண்டையும் பிசைந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உளுந்து வடை, பருப்பு வடை என்று சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் அரிசி மாவில் வடை செய்தால் சூப்பராக இருக்கும். இன்று அரிசி மாவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - 1 கப்
    தேங்காய் - அரை மூடி
    பச்சை மிளகாய் - 4
    சின்ன வெங்காயம் -10
    தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து, இடியாப்ப மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

    தேங்காயை துருவிக்கொள்ளுங்கள்.

    பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் அரைப் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த கலவையை அரிசி மாவு கலவையில் சேர்த்து, உப்பு வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை வட்டவடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    மாவில் தண்ணீர் அதிகமானால் எண்ணெய் காலியாகி விடும்…  கவனம்!

    சூப்பரான அரிசி வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறை நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது முட்டை சப்பாத்தி ரோல் செய்து எடுத்து சென்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - 2
    முட்டை - 3
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 2 ஸ்பூன்
    சப்பாத்தி - 4
    லெமன் ஜூஸ் - தேவையான அளவு
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - கொஞ்சம்
    உப்பு - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.

    முட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் சிறிது முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்து பரிமாறவும். இவ்வாறு அனைத்து சப்பாத்தியிலும் செய்யவும்.

    சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மட்டன் கீமாவை வைத்து மொமோஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மொமோஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா அல்லது கோதுமை மாவு - 1 1/2 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு…


    மட்டன் கீமா - 250 கிராம்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்



    செய்முறை :

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் மைதா அல்லது கோதுமை, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வேக வைத்த கீமாவை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, பின் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி நன்கு தண்ணீர் வற்ற கிளறி விட்டு, இறக்கி வைக்க வேண்டும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு உருண்டை மாவை எடுத்து சிறு பூரி அளவில் தேய்த்து, நடுவே கீமா கலவையை சிறிது வைத்து, கூம்பு போன்று பிடித்து வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    இட்லி தட்டில் எண்ணெயை தடவி, அதன் மேல் செய்து வைத்துள்ள மொமோஸ்களை வைக்க வேண்டும். இறுதியில் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூப்பரான மட்டன் கீமா மொமோஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேசர் லஸ்ஸியை குட்டீஸ் விரும்பி சுவைப்பார்கள். இந்த லஸ்ஸியில் புரதச்சத்து, கால்சியமும் நிறைந்துள்ளது. இன்று இந்த லஸ்ஸி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டித் தயிர் - ஒரு கப்,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    காய்ச்சி ஆற வைத்த பால் - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    பிஸ்தா, பாதாம் துருவல் - தலா 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து கண்ணாடி டம்பளரில் ஊற்றவும்.

    மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    குறிப்பு: குட்டீஸ் விரும்பி சுவைப்பார்கள். புரதச்சத்தும் கால்சியமும் நிறைந்தது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×