என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    தோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரைக் கிலோ
    தயிர் - 2 தேக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    எள் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2
    முந்திரி - 6,
    பட்டை - சிறு துண்டு
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 8
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பூண்டு - 10
    எண்ணெய் - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    நட்சத்திர மொக்கு - ஒன்று



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.

    கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும்.

    வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர‌ மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

    வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும்.

    நன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும்.

    சுவையான‌ எள்ளு மட்டன் கிரேவி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனை விட நாட்டுக்கோழியில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    சீரக சம்பா அரிசி - 1 கிலோ
    பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 8
    புதினா - 1 சிறிய கட்டு
    கொத்தமல்லி - 1 சிறிய கட்டு
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
    முந்திரி - 5
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3
    சோம்பு - 1 ஸ்பூன்
    இஞ்சி - 2 அங்குலம்
    பூண்டு - 15 பல்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கடலை எண்ணெய் - 150 மில்லி



    செய்முறை :

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய், சின்ன வெங்காயம், 3 பச்சை மிளகாய், முந்திரி, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

    குக்கரில் 100 மில்லி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த நாட்டு கோழி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    200 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விடவும். நாட்டுக்கோழி வேக சற்று நேரம் எடுக்கும்.

    குக்கர் விசில் அடங்கியதும் திறந்து 1 பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதி வந்ததும் ஊறிய அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கிளறி 2 விசில் மட்டும் விடவும். விசில் அடங்கியதும் அரிசி உடையாமல் கிளறி இறக்கி தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி பிரியாணி தயார்!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தானது, சுவையானது இந்த சப்போட்டா மில்க் ஷேக். இன்று இந்த மில்க் ஷேக் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ச்சிய பால் - 2 கப்,
    நன்கு பழுத்த சப்போட்டா - 4,
    பாதாம்பருப்பு - 10,
    ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
    சர்க்கரை - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    கொதிக்கும் வெந்நீரில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்கி கொள்ளவும்.

    சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதையை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெட்டிய சப்போட்டா பழத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸியில் போடுங்கள்.

    அதனுடன் ஊற வைத்த பாதாம், ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    நன்றாக நுரைக்க அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தை பிறந்து தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படும் பெண்களுக்கு இந்த பால்சுறா குழம்பை செய்து கொடுத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் சுறா - 250 கிராம்
    தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
    புளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை)
    பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
    சீரகம் - 2 டீஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
    சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்)
    காய்ந்த மிளகாய் - ஒன்று  
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.

    பூண்டைத் தட்டிக்கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

    தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.

    நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தயிர் சாதம், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த செட்டிநாடு அவித்த முட்டை பிரை சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
    புதினா -   சிறிதளவு
    மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

    அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

    பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

    முட்டையில் மசாலா ஏறியவுடன அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வடு மாங்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு மாங்காய்கள் - ஒரு கிலோ
    மிளகாய்ப்பொடி - 50 கிராம்
    கடுகு பொடி - 25 கிராம்
    நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    மாங்காய் காம்களை நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.

    இந்த வடு மாங்காயில் நல்லெண்ணெய் போட்டு பிரட்டி, கடுகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மேலாக பரவலாகப் போட்டு காற்று போகாமல் மூடி வைக்கவும்.

    தினமும் ஒருமுறை குலுக்கி விடவும். நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.

    10 நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம்.

    சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மட்டன் லிவரை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் மட்டன் லிவரில் டிக்கா செய்து டூத்பிக்கில் வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் ஈரல் - 200 கிராம்,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    தக்காளி - 2
    இஞ்சி - 20 கிராம்,
    பச்சை மிளகாய் - 1,
    குடை மிளகாய் - 1,
    சோம்பு - ¼ டீஸ்பூன்,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்,
    தனியாத்தூள் - ½ டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு.
    டூத்பிக் (Tooth pick) - தேவைப்படும் எண்ணிக்கையில்.



    செய்முறை :

    மட்டன் ஈரலில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி (விதையை எடுத்து விட்டு), குடை மிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கழுவிய மட்டன் ஈரலில் சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.

    1 வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த மட்டன் ஈரலை சேர்த்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். சுருள வதங்கியவுடன் இறக்கி விடவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சதுர வடிவில் கட் செய்த தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து இரண்டு பக்கமும் லேசாக வேக விடவும்.

    டூத்பிக் குச்சியில் ஒரு தக்காளி துண்டு, லிவர், வெங்காயத்துண்டு, குடை மிளகாய் துண்டு என்ற முறையில் சொருகி வைத்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் லிவர் டிக்கா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
    எண்ணெய் - 200 மில்லிகிராம்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    காய்ந்த மிளகாய் - 150 கிராம்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    தண்ணீர் - 150 மில்லி
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும்.

    தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.

    அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.

    சூப்பரான உப்புக்கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை, மாங்காய், வடுமாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அசைவ பிரியர்களுக்கு விருப்பமான இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இறால் - கால் கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 200 கிராம்
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி

    றுத்து பொடிக்க

    கடுகு - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்



    செய்முறை

    இறாலை சுத்தமாக கழுவி கொள்ளவும்.

    நன்றாக கழுவிய இறாலில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்து ஆற வைக்கவும்.

    இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் கிளறி விடவும்.

    பின்பு அதில் வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

    கடைசியாக அதன் மேல் வறுத்து பொடித்த பொடியை போட்டு நன்றாக கிளறி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

    பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகப்படுத்தலாம். உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

    சூப்பரான இறால் ஊறுகாய் ரெடி.
     
    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இனிப்பு போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான கார போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 10
    உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 10
    மைதா மாவு - 2 கப்
    பச்சை மிளகாய் - 2
    கடுகு - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லியிலை - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்யை தனித்தனியா கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சை மிளகாய், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு வதக்கி அதனுடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள், பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.

    மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைந்து கொள்வதுபோல் பிசைந்து கொள்ளவும்.

    மாவில் இருந்து ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மீண்டும் கைகளால் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு போளி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜவ்வரிசி, பருப்பு, சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டியான பால் - அரை லிட்டர்,
    இளநீர் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப்,
    தேங்காய் பால் - ஒரு கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    முந்திரி - 10,
    நெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    சிறிதளவு இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும்.

    மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.

    குறிப்பு: புத்துணர்ச்சி தரும். உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக பொரி உருண்டையை கடைகளில் தான வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டிலேயே பொரி உருண்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 500 கிராம்
    வெல்லம் - 1 கப்
    ஏலக்காய் - 2
    தண்ணீர் - 1/2 கப்



    செய்முறை :

    அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும், வெல்லத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 5-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    வெல்லப் பாகு தயாராகிவிட்டதா என்பதை பார்க்க, ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு துளி வெல்லப் பாகுவை விடும் போது, பாகுவானது பந்து போன்று மிதக்க ஆரம்பித்தால், பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

    அப்படி பாகு தயாராகிவிட்டால், ஏலக்காய் மற்றும் பொரியை பாகுவுடன் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2-3 நிமிடம் கிளறினால், பொரியானது பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்திருக்கும்.

    பின்பு பாத்திரத்தை இறக்கி, கலவை குளிர வைக்க வேண்டும். மேலும் கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளை நீரில் நனைத்து, பின் கலவையை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிரை வைத்தால், பொரி உருண்டை ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×