என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ராஜஸ்தான் உணவுகளில் மால்புவா இனிப்பு மிகவும் பிரபலம். இன்று இந்த மால்புவாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    ரவை/ சூஜி - 1 கப்
    துருவிய பன்னீர் - 1/2 கப்
    சர்க்கரை - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    எண்ணெய்
    பருப்புகள் - 1/2 தேக்கரண்டி
    பெருஞ்சீரகம் - 1 டீக்கரண்டி
    ஏலக்காய் தூள் - 1 டீக்கரண்டி



    செய்முறை :

    பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் சர்க்கரைப் பாகினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த மாவு வறண்ட பதத்தில் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த இந்த மாவை 4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.

    அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.

    சூப்பரான மால்புவா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 10
    எலுமிச்சம்பழம் - 5
    வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 1/4 கோப்பை
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.

    நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும்.

    தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

    சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலையில் இந்த தேங்காய் பால் பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - அரை கப்
    உளுந்து - அரை கப்,
    தேங்காய் - ஒன்று,
    பால் - ஒரு டம்ளர்,
    ஏலக்காய் - சிறிதளவு
    சர்க்கரை - கால் கப்



    செய்முறை

    உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

    தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

    அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

    நல்ல பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

    குழந்தைகள் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கில் பல்வேறு சுவையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று நுங்கை வைத்து புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்கு - 10,
    பால் - ஒரு கப்,
    வெனிலா எசன்ஸ் - சிறிதளவு,
    சைனா கிராஸ் - 1 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு.



    செய்முறை:

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஆறவைக்கவும்.

    சைனா கிராஸை கால் கப் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.

    பாலுடன் வெனிலா எசன்ஸ், சர்க்கரை, சைனா கிராஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    சர்க்கரை கரைந்த பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

    சிறிய கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

    பிறகு ஒரு தட்டில் கிண்ணத்தை கவிழ்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - கால் கப்
    பூண்டு - 5 பல்
    மிளகு - 2 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சீரகம் - 1 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

    பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.

    அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

    மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.

    இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்த சிக்கனில், எத்தனை வகையான உணவுகளை வேண்டுமானாலும் தயார் செய்யலாம். சிக்கன் வடை செய்வது குறித்து இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கீமா - 200 கிராம்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பிரட் தூள் -150 கிராம்
    முட்டை - 1
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமாவை போட்டு அதனுடன் கரம் மசாலா தூள், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு பிளேட்டில் பிரட் தூளையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் முக்கி பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் கீமா வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா மாநிலத்தில் சக்கர உப்பேறி மிகவுல் பிரபலம். இன்று இந்த சக்கர உப்பேறியை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரங்காய் - 3,
    வெல்லம் பொடித்தது - 2 கப்,
    சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்,
    ஏலக்காய்ப்பொடி - அரை டீஸ்பூன்,
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
    நெய் - கால் கப்.



    செய்முறை :

    நேந்திரங்காய்களை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, நறுக்கிய துண்டுகளை பொரித்தெடுங்கள்.

    வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளவும்.

    வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கெட்டிப் பாகு ஆனதும் (பாகு பூத்து வரும்போது), பொரித்து வைத்த நேந்திரங்காய் துண்டுகள், ஏலக்காய்க்காய், சுக்குதூள், நெய் ஆகியவற்றை பாகில் கொட்டி, நன்கு கிளறி இறக்குங்கள்.

    வத்தல் உதிர், உதிராக வந்துவிடும். (நேந்திரங்காயை வேகவைத்தும் இதை செய்வார்கள். இதன் செய்முறை கேரளாவில் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது).

    சூப்பரான கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்க ரோஸ்மில்க் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நுங்கு சேர்த்து ரோஸ்மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் நுங்குச் சுளைகள் - 3,
    சர்க்கரை - 3 டீஸ்பூன்,
    ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்,
    பால் - முக்கால் கப்,
    சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூன்,
    நெய் - அரை டீஸ்பூன்.



    செய்முறை:

    நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும்.

    காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

    கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கிவி ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி பழம் - 4
    பைனாப்பிள் ஜூஸ் - 2 கப்
    சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    3 கிவி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு கூழாக்கி கொள்ளவும்.

    1 கிவி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அரைத்த கிவி பழ விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பைனாப்பிள் ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    திக்கான பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

    நன்றாக ஆறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கிவி பழத்துண்டுகளை போட்டு நன்றாக கலந்து சிறிய கப்புகளில் ஊற்றி குளிர் சாதன பெட்டியில் 5 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கிவி ஐஸ்கிரீம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை மங்கும் நேரத்தில், நல்ல சூடான, டீ அல்லது காபியுடன் மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட தோன்றினால் பேபிகார்ன் பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்:

    பேபிகார்ன் - 10
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 2 கப்
    அரிசி மாவு - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி!!!

    இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து சப்ஜி செய்து சாதம், சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி செய்முறை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 4
    பீன்ஸ் - 10
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பீன்ஸை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    அடுத்து அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    இறுதியில் அதில் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    பச்சைமிளகாய் - 8
    இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 ஸ்பூன்
    பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி - தலா 1
    கொத்தமல்லி - கால் கப்
    வெங்காயம் - 5
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கொத்தமல்லி - ஒரு கொத்து



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

    பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைக்கவும்.

    5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பூரிக்கு அருமையான முட்டை குருமா ரெடி.

    குறிப்பு - கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×