என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த சாலட்டில் நார்ச்சத்து, விட்டமின், தாதுக்கள், பொட்டாசியம் நிறைந்துள்ளன. இந்த சாலட் சாப்பிட்டால் உடல் பலவீனமாகாது. அதுபோல் உடல் எடையும் குறையும்.
    தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ் - ½ கப்
    வெள்ளரி - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 2
    குடைமிளகாய் சிறியது - 1
    முந்திரி - 15
    இந்துப்பு - சிறிதளவு
    மிளகுத் தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு - 2

    வெயிட் லாஸ் சாலட்

    செய்முறை :

    முட்டைகோஸ், வெள்ளரி, கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் விரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து, அதில் இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக அரைத்த முந்திரி பேஷ்டை சாலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் பரிமாறவும்.

    அவ்வளவுதான் சுவையான வெயிட் லாஸ் சாலட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி வகைகளிலேயே மிகவும் சத்துள்ளது கருப்பு கவுனி அரிசியாகும். இன்று கவுனி அரிசியில் சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
    கருப்பட்டி - 1 கப்
    தேங்காய்ப்பால் -  1 கப்
    நெய் - தேவையான அளவு
    முந்திரி - 10

    கவுனி அரிசி அல்வா

    செய்முறை


    கருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6-7 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    பின் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியைப் போட்டு கரைந்தபின் வடிகட்டி வைக்கவேண்டும்.

    பின் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு துண்டுகளாக நறுக்கிய முந்திரியைப் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

    பின் அதே கடாயில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி நன்கு கொதித்தபின் அதில் கரைத்து வைத்த கவுனி அரிசி கலவையை ஊற்றி குறைந்த தீயில் கட்டியில்லாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.

    கலவை கெட்டியாகும் போது 1 டேபிள்ஸ்பூன் (இடையிடையே நெய் விட வேண்டும்) நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.

    அல்வா பதம் வந்ததும் எடுத்து வைத்த முந்திரியைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.

    ஆரோக்கியமான சூடான சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.

    வறுத்த முந்திரி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    செல்லரோஜா

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கம்பு சேர்த்து சத்தான சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு  - 2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    ப.மிளகாய் - 2
    சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    கம்பு ஊத்தப்பம்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு மாவுடன் நீர் கலந்து, தோசை மாவு பக்குவத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.

    ருசிக்கு தகுந்த உப்பு சேர்க்கவும்.

    ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சிறிதளவு உப்புடன் கலந்து வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிய பின், கம்பு மாவு கலவையை தடித்த தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    தோசை மீது தாராளமாக வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், குடை மிளகாய் கலவையை தூவி வேக வைக்கவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வேக வைக்கவும்.

    சூப்பரான கம்பு ஊத்தப்பம் ரெடி.

    சூடாக சாம்பாருடன் பரிமாறலாம்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இந்துமதி
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சூப்பரான கால்மி கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் லெக் பீஸ் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃபிரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    கால்மி கபாப்

    செய்முறை :

    சிக்கன் லெக் பீஸை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் தயிர் எடுத்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் தொட்டு எடுத்து 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு 10 -12 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    அருமையான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கும். அவர்களுக்கு கீரையை இந்த வகையில் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கீரை - 1 கட்டு
    இட்லி அரிசி - 2 கப்
    துவரம் பருப்பு - அரை கப்
    தேங்காய் துருவல் - கால் கப்
    காய்ந்த மிளகாய் - 5
    சீரகம் - கால் ஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
    மோர் மிளகாய் - 5
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கீரை உப்புமா

    செய்முறை:

    கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    இட்லி அரிசி, துவரம்பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.

    பின்பு இட்லி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் போன்றவற்றை மிக்சியில் கொட்டி லேசாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும்.

    இட்லி ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் உதிர்த்த இட்லி கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான கீரை உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட், தேங்காய், வெல்லம், ஏலக்காய், பாதாம் மற்றும் நட்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பான ரெசிபியை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவு தயாரிக்க:

    மைதா - 2 கப்
    நெய் - 1/4 கப்
    தண்ணீர் - 1/2 கப்

    ஸ்டஃப் செய்ய:


    டார்க் சாக்லேட் - 1 கப்
    உலர்ந்த தேங்காய் - 1/4 கப்
    ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
    பாதாம் - 1/2 கப்
    வெல்லம் - 1 மேஜைக்கரண்டி

    சாக்லேட் குஜியா

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும்.

    டார்க் சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.

    சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.

    அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.

    அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

    சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கார்ன், சீஸ் சேர்த்து செய்யும் சாண்ட்விச் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை பிரெட் - 6
    ஸ்வீட் கார்ன் - 1 கப்
    துருவிய சீஸ் - கால் கப்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    பச்சைமிளகாய் - 2
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
    கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    கார்ன் சீஸ் சாண்ட்விச்

    செய்முறை

    ஸ்வீட் கார்ன் வேக வைத்து கொள்ளவும்.

    பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஸ்வீட் கார்னை போட்டு அதனுடன் கொத்தமல்லி, கரம்மசாலா தூள், பச்சை மிளகாய், துருவிய சீஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கோதுமை பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, நடுவில் கார்ன் கலவையை வைத்து, தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

    சூடாக சாஸுடன் பறிமாறவும்.

    சூப்பரான கார்ன் சீஸ் சாண்ட்விச் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,
    உருளைக்கிழங்கு (பெரியது) - 2,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    பட்டை - 1,
    சோம்பு - கால் டீஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 6 பல்,
    ரஸ்க் தூள் - 4 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - தேவையான அளவு.

    முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி, தோல் நீக்கி விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கள்.

    மிளகு, சீரகம், பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டை மிக்சியில் போட்டு மசாலா தயாரித்துக்கொள்ளுங்கள்.

    இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, நன்றாக வேகவிடுங்கள்.

    ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் முக்கி, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கின்றன.
    தேவையான பொருட்கள் :

    புளிக்காத தயிர் - 2 கப்,
    பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10,
    முந்திரி - 8,
    மாதுளை முத்துக்கள் - கால் கப்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - சிறிது

    பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி

    செய்முறை:

    தயிரை நன்கு வடிகட்டுங்கள்.

    முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.

    சில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.

    சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கார்த்திகை தீபத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரபலம். இன்று இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பச்சரிசி - முக்கால் கிலோ
    கருப்பட்டி - அரை கிலோ
    ஏலக்காய் - 8
    தேங்காய் - ஒரு மூடி துருவியது
    பனை ஓலை - தேவையான அளவு

    பனை ஓலை கொழுக்கட்டை

    செய்முறை:

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
     
    பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாயை காயவைத்து துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும்.
     
    கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும்.

    பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும். ஓலையை அரை அடி நீளத்திற்கு நறுக்கி கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து ஒரு ஓலையில் நடுவில் வைத்து மற்றொரு ஓலையால் மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    செய்து வைத்தவைகளை இட்டித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 

    அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தாது உப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினி கீரையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காசினி கீரை - 2 கப்,
    பச்சை மிளகாய் - 5
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    பூண்டு, வெங்காயம் - தலா ஒன்று,
    உப்பு - தேவையான அளவு,
    தேங்காய் விழுது - 3 ஸ்பூன்

    தாளிப்பதற்கு

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி,
    எண்ணெய் - சிறிதளவு.

    காசினி கீரை சட்னி

    செய்முறை :

    மிளகாய், வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, பூண்டையும் தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    காசினி கீரையை அம்மியில் நன்றாக அரைத்துக் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கீரை கொதி நிலைக்கு வந்த பின்னர், பூண்டு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை அதில் போட வேண்டும்.

    சிறிது நேரம் கழித்து, தேங்காய் விழுதை கீரையில் கொட்டி, நன்றாக கிளற வேண்டும்.

    கடைசியாக தாளிக்கும் பொருட்களுடன், கறிவேப்பிலையும் போட்டு தாளித்து, அதை கீரையுடன் சேர்க்க கிளறி இறக்க வேண்டும்.

    இப்போது காசினி கீரை சட்னி தயார் ஆகிவிடும்.

    இதை இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் சாப்ஸ். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

     வெண்டைக்காய் சாப்ஸ்

    செய்முறை:

    வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி உலர வைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கொட்டி கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையுடன் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு புரட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய் கலவையை உதிரியாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சாப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×