search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கீரை உப்புமா
    X
    கீரை உப்புமா

    சத்தான சுவையான கீரை உப்புமா

    குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கும். அவர்களுக்கு கீரையை இந்த வகையில் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கீரை - 1 கட்டு
    இட்லி அரிசி - 2 கப்
    துவரம் பருப்பு - அரை கப்
    தேங்காய் துருவல் - கால் கப்
    காய்ந்த மிளகாய் - 5
    சீரகம் - கால் ஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
    மோர் மிளகாய் - 5
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கீரை உப்புமா

    செய்முறை:

    கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    இட்லி அரிசி, துவரம்பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.

    பின்பு இட்லி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் போன்றவற்றை மிக்சியில் கொட்டி லேசாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும்.

    இட்லி ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் உதிர்த்த இட்லி கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான கீரை உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×