என் மலர்tooltip icon

    சமையல்

    சூடான சாதம், தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய காராமணி - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 100 கிராம்
    சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    முளைகட்டிய காராமணி குழம்பு

    செய்முறை:

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    புளியை கரைத்துகொள்ளவும்.

    வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி. அதில் உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    காராமணி நன்றாக வெந்ததும் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான முளைகட்டிய காராமணி குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் கம்பு உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு ரவையை வைத்து சூப்பரான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு ரவை - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    வரமிளகாய் - 2
    இஞ்சி - சிறிது
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு
    கேரட் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    கம்பு

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    பின் அதில் பொருங்காயத்தூளை தூவி வரமிளகாயை கிள்ளிப் போட்டு இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.

    அடுத்து அதில் வெங்காயம், கேரட் துருவல் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் கேரட் துருவல் நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் கொதித்ததும் அதில் கம்பு ரவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.

    பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல் தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கிவிட வேண்டும்.

    இப்போது சுவையான கம்பு ரவை உப்புமா ரெடி!!!

    இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - கால் கிலோ
    ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 2 கப்
    ஏலக்காய் - 2
    டூட்டி ப்ரூட்டி - கால் கப்
    பால் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய்
    உப்பு

    தேங்காய் பன்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் விடவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு சேர்த்து கலந்து, ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.

    இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் தேங்காய்த்துருவல், அரை கப் சர்க்கரை, ஏலக்காய், டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பின்னர் இரண்டு மடங்கு பெரியதாக ஆன மாவை இரண்டு சிறிய மற்றும் பெரிய பங்காக பிரித்துக் கொள்ளவும்.

    பிறகு, பேக்கிங் ஷீட் மீது சிறிய உருண்டையை வைத்து பெரியதாக விரித்து அதன் மீது தேங்காய் கலவை வைத்து மீண்டும் அதன் மீது விரித்த மாவை வைத்து ஓரங்களில் அழுத்திவிடவும். அதன்மீது பாலை தொட்டு தடவவும்.

    ஓவனை 150 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்து இதனை வைத்து சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்து வி வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    சுவையான தேங்காய் பன் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் ஒரு கோப்பை ஓட்ஸ் கஞ்சி குடிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். இன்று ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1/2 கப்
    கோதுமை ரவை - 1/4 கப்
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    பால் - 1 1/2 கப்
    உப்பு - சிறிதளவு

    ஓட்ஸ் கோதுமை ரவை கஞ்சி

    செய்முறை:

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.

    பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

    பின்பு அதில் பால் உப்பு, மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    விசிலானது போனதும், அதனை ஒரு பௌலில் ஊற்றி பருகவும்.  

    சூப்பரான ஓட்ஸ் - கோதுமை ரவை கஞ்சி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்நாடகா சமையலின் ருசி என்றுமே அலாதிதான். இன்று கர்நாடகா ஸ்பெஷல் மத்தூர் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    மைதா மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    துருவிய தேங்காய் - கால் கப்,
    வேர்க்கடலை, வெள்ளை எள் - சிறிதளவு,
    மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மத்தூர் வடை

    செய்முறை:  

    ரவை, மைதா, அரிசி மாவு மூன்றினையும் துருவிய தேங்காயுடன் கலந்து கொள்ளவும்.

    கலவையில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய், வெள்ளை எள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஆட

    கலந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொன்றையும் தட்டையைப் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஞ்சி மிகவும் நல்லது. இன்று சத்தான சுவையான இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புத்தம் புது அரிசி - ஒரு கப்
    நெய் - சிறிதளவு
    தேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    உப்பு - ஒரு சிட்டிகை.

    கஞ்சி

    செய்முறை:

    அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்.

    இதை சூட்டுடன் இருக்கு போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓமம் ஜீரண சக்தி தரும். வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாரம் ஒருமுறை இந்த குழப்பை வைத்து சாப்பிடலாம். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓமம் - 1 டீஸ்பூன்,
    புளி -  எலுமிச்சைப் பழ அளவு,
    சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
    கடுகு, கடலைபருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    ஓமம்

    செய்முறை:

    புளியை கரைத்து கொள்ளவும்.

    ஓமத்தை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் கைகளால் நன்றாக பொடித்து கொள்ளவும்.

    மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.

    இதில் கரைந்த புளி கரைத்து ஊற்றி... உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சத்தான ஓமக் குழம்பு ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராகி அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராகி அவல் வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ராகி அவல் - 1 கப்
    தூளாக்கிய வெல்லம் - 1 கப்
    முந்திரி பருப்பு - 5 (நறுக்கிக்கொள்ளவும்)
    தேங்காய் துருவல் - கால் கப்
    ஏலக்காய் - 3 (தூளாக்கவும்)

    ராகி அவல் புட்டு

    செய்முறை:

    ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

    பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

    அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அவை மீது முந்திரி பருப்பை தூவி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொச்சை காரக்குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மொச்சை வைத்து சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர் மொச்சை - 100 கிராம்,
    சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    துவரம்பருப்பு - 100 கிராம்,
    புளி -  எலுமிச்சைப் பழ அளவு,
    தேங்காய்த் துருவல் - சிறிய கப்,
    கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மொச்சை சாம்பார்

    செய்முறை:

    மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.

    துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.

    இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.

    சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

    கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

    சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெரரெட் தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சத்து நிறைந்த வரகு அரிசி சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிறுபயறு - 1 கப்
    வரகு - அரை கப்
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 3.

    அலங்கரிக்க :

    பெரிய வெங்காயம்,
    கொத்தமல்லித் தழை

    வரகு அரிசி வெங்காய பெசரெட்

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பயறு, வரகு அரிசி இரண்டையும் நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    பின்பு சிறிது உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து அதனை சுற்றி வெங்காயம், கொத்த மல்லித் தழை தூவவும். ஒருபுறம் வெந்ததும் மெதுவாக திருப்பி போட்டு வேகவைக்கவும்.

    இதோ சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வரகு அரிசி வெங்காய பெசரெட் தயாராகிவிட்டது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பிரைடு காளான் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 250 கிராம்
    மைதா மாவு - கால் கப்
    அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்
    வெங்காயம், தக்காளி - தலா 2  
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
    தக்காளி கெட்சப் - ஒரு டீஸ்பூன்
    சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    பிரைடு காளான் மசாலா

    செய்முறை

    காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.

    காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.

    அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும்.

    வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான பிரைடு காளான் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் இந்த செலரி சட்னி ஆரோக்கியமானது.இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    செலரி கீரை - அரை கட்டு,
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    பூண்டுப் பல் - 2,
    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,
    பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செலரி சட்னி

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பூண்டு, செலரி, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும்.

    சத்தான செலரி சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×