என் மலர்
சமையல்
குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
ஸ்டார் ஃப்ரூட் - 2,
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை,
கருப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.
செய்முறை
ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும்.
மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால் இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும்.
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும்.
லாலிபாப் குச்சியில் முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும்.
விரும்பினால் கருப்பு திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம்.

அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைக்காயில் சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள
வாழைக்காய் - 2
வெங்காயம் -1.
இஞ்சி - 1 அங்குலம்
தேங்காய் துருவ - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - 5
பச்சைமிளகாய் - 1
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும்.
மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும்.
தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.
தேவையான பொருட்கள் :
வரமிளகாய் - 5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
புளி - சிறிது,
பூண்டு - 5 பல்
உப்பு- 1 /2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
கறிவேப்பிலை, அரைத்த துவையலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதாரண அரிசியை விட கருப்பு அரிசி உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட், புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது. இதயத்திற்கும் நல்லது.
தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி (பிளாக் ரைஸ்) - 1 கப்
பச்சை பட்டாணி - 14 கப்
நறுக்கிய கேரட் - கால் கப்
நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
பெ.வெங்காயம் - 1
சீரகம் - அரை டீஸ்பூன்
கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
4 கப் தண்ணீரில் அரிசியை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறுங்கள்.
பின்னர் வெங்காயம், பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அரிசியையும், அதனை ஊற வைத்த தண்ணீரையும் ஊற்றி வேக வைக்கவும்.
8 விசில் வரும் வரையோ அல்லது 45 நிமிடங்களோ வேகவைத்து சாப்பிடலாம்.
சாதாரண அரிசியை விட இந்த கருப்பு அரிசி உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட், புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது. இதயத்திற்கும் நல்லது. கருப்பு அரிசிக்கு ‘ஆன்டி கேன்சர்’ என்ற பெயரும் உண்டு. முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை சாப்பிட்டார்கள். குறிப்பாக, சீனாவில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும் என்ற சட்டமும் இருந்தது.
கவுனி அரிசி (பிளாக் ரைஸ்) - 1 கப்
பச்சை பட்டாணி - 14 கப்
நறுக்கிய கேரட் - கால் கப்
நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
பெ.வெங்காயம் - 1
சீரகம் - அரை டீஸ்பூன்
கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
4 கப் தண்ணீரில் அரிசியை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறுங்கள்.
பின்னர் வெங்காயம், பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அரிசியையும், அதனை ஊற வைத்த தண்ணீரையும் ஊற்றி வேக வைக்கவும்.
8 விசில் வரும் வரையோ அல்லது 45 நிமிடங்களோ வேகவைத்து சாப்பிடலாம்.
சாதாரண அரிசியை விட இந்த கருப்பு அரிசி உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட், புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது. இதயத்திற்கும் நல்லது. கருப்பு அரிசிக்கு ‘ஆன்டி கேன்சர்’ என்ற பெயரும் உண்டு. முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை சாப்பிட்டார்கள். குறிப்பாக, சீனாவில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும் என்ற சட்டமும் இருந்தது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்
டீ தூள் - சிறிதளவு
தண்ணீர் - 350 மி.லி.
வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
பசும் பால் - 40 மி.லி.
செய்முறை:
பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
100 மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.
மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஆரோக்கிய பலன்: மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது. மாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது. இந்த மருதம் பட்டை டீயை இரண்டரை மாதம் பருகலாம். பின்னர் சில காலம் இடைவெளி விட்டு தொடர்ச்சியாக பருகலாம். ஆண்டு முழுவதும் பருகக்கூடாது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெள்ளரிக்காயில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. அப்படிப்பட்ட வெள்ளரிக்காயில் சுவையாக கூட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:
வெள்ளரிக்காய் - 2
கடலைப்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 3 பல்
இஞ்சித்துருவல் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் வெள்ளரிக்காயில் தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் போன்றவற்றையும் நறுக்கி கொள்ளவும்.
கடலை பருப்பை ஒரு 45 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பிறகு பூண்டு, இஞ்சித்துருவலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சிறிது நேரம் பிறகு வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து கலக்கவும்.
வெள்ளரிக்காய், ஊற வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை காத்திருங்கள்.

கடைசியில் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு தயார்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கத்தரிக்காயில் குழம்பு, பொரியல், வறுவல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான். கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.. அப்புறம் அசந்து போய்டுவிங்க..
தேவையான பொருள்கள்:
பெரிய கத்தரிக்காய் - 1
தேங்காய் துருவல் -1 கப்
து. பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு -2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
முதலில் கத்தரிக்காயில் எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி தோலை உரித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், து. பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பிறகு மிக்சியில் துருவிய தேங்காய், கத்தரிக்காய் மற்றும் வறுத்து வைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடைசியில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து அரைத்த துவையலில் சேர்த்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்..
இதனை இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்...
பெரிய கத்தரிக்காய் - 1
தேங்காய் துருவல் -1 கப்
து. பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு -2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
முதலில் கத்தரிக்காயில் எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி தோலை உரித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், து. பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பிறகு மிக்சியில் துருவிய தேங்காய், கத்தரிக்காய் மற்றும் வறுத்து வைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடைசியில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து அரைத்த துவையலில் சேர்த்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்..
இதனை இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் சாப்பிட அருமையா இருக்கும் இந்த கொழுக்கட்டை பாயாசம். பால் கொழுக்கட்டை போல் இருக்கும் இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
காய்ச்சிய பால் - 2 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
உலர் பழங்கள் - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கு
செய்முறை:
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டு அரைத்துக்கொள்ளவும்.
அதுபோல் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும்.
பாகு பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
பிறகு கடலைப்பருப்பை சேர்த்து கிளறவும்.
அதைத்தொடர்ந்து காய்ச்சிய பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
பின்னர் வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் அரிசி மாவை கொட்டி கிளறி வேகவிட்டு இறக்கவும்.
பின்னர் மாவு கலவையை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்.
அதனை வெல்லப்பாகு, கடலைப்பருப்பு கலவையில் சேர்த்து கலக்கவும்.
அதில் உலர் பழங்களை தூவி பாயசமாக பருகலாம்.

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள் நீக்கிய மீன் - 4 துண்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
சாம்பார் வெங்காயம் - 6 (நறுக்கவும்)
பட்டை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
ஏலக்காய் - 3
வெங்காயத்தாள், பிரியாணி இலை - சிறிதளவு
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய், பட்டை ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகள், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
மீன் துண்டுகள் நன்கு வெந்ததும் பிரியாணி இலை, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

சுவையான மீன் சூப் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விதம் விதமாக சமைத்து தரச்சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்றே வித்தியாசமாக பாஸ்தா பாயாசம் செய்து கொடுக்கலாம். குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற விழாக்களின் போது அவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா அல்லது மக்ரோனி - முக்கால் கப்
பால் - 2 கப்
வெல்லப்பாகு - அரை கப்
ஏலக்காய் - 2
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் உலர் திராட்சை - தேவை
பச்சரிசி மாவு (வறுத்தது) - 1 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
அடிகனமான அகன்ற பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் பாஸ்தாவை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
பின்பு மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி முந்திரி உலர் திராட்டை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த முந்திரி, உலர்திராட்டைகளை வடிகட்டி எடுத்துவிட்டு அந்த பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கவும்.
பால் சுண்ட ஆரம்பிக்கும் வேளையில் அரிசி மாவை கட்டியில்லாமல் கரைத்து பாலில் சேர்த்து கிளறவும். கலவை நன்றாக கொதித்து வரும்போது நசுக்கிய ஏலக்காயை சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வெல்லப்பாகை சேர்த்து கலக்கவும்.

அருமையான பாஸ்தா பாயாசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
தேவையான பொருட்கள் :
சுரைக்காய் - ¼ கிலோ
புதினா - சிறிதளவு
இளநீர் - 200 மி.லி
செய்முறை:
சுரைக்காயின் மேற்பரப்பு தோலை முழுவதுமாக நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் புதினா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் இளநீர் சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
தேவையெனில் இந்து உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கிய பலன்:
சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
குறிப்பு:
இது குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டது. சளி பிடித்திருந்தால் இதை பருகக்கூடாது. கர்ப்பிணிகள் குறைந்த அளவிலே பருகவேண்டும்.
டெல்லியில் மிகவும் பிரபலமான பழைய சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட். இன்று குல்லே கி சாட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு - 2
கொண்டைக்கடலை - 1 / 4 கப்
கல் உப்பு - தேவைக்கேற்ப
பிளாக் சாட் மசாலா - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
மாதுளை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து இரண்டாக வெட்டி நடுவில் குழி போல் செய்து கொள்ளவும்.
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸ் செய்து கொள்ளவும்
இந்த மசாலாவை உருளைக்கிழங்கின் நடுவில் வைத்து சாப்பிடுங்கள்.

இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.