என் மலர்tooltip icon

    சமையல்

    வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும், முகம் அழகு பெரும். அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 2 கப்
    வாழை இலை - தேவையான அளவு

    செய்முறை

    வாழை இலையை நன்றாக கழுவி வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இட்லி தட்டின் குழிகளின் எண்ணிக்கைக்கு இணையாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    வழக்கம் போல இட்லி துணிக்கு பதிலாக வெட்டி வைத்த வாழை இலையை வைத்து மாவு ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான வாழை இலை இட்லி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
    தேவையான பொருட்கள்

    பெரிய வெங்காயம் - 2
    நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    ஓமம் - 1 சிட்டிகை
    சீரகம் - 1 டீ ஸ்பூன்
    சோம்பு - 1 டீ ஸ்பூன்
    கறிவேப்பிலை  -சிறிது
    உப்பு - 1 சிட்டிகை
    சூரிய காந்தி எண்ணெய்  - 200 மிலி.,

    செய்முறை

    வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

    அதோடு, முட்டைகோஸ், சிறிது உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.

    சிறிது நேரம் கழித்து அதில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு மற்றும் சூடான எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து, மிருதுவாக பிசையவும்.

    வெங்காயம், முட்டை கோஸ் கலவையில், ஈரப்பதம் இல்லை என்றால், சிறிது தண்ணீர் விட்டு, கெட்டியாக பிசையவும்.

    வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், சிறிது சிறிதாக கிள்ளி போட்டு, மிதமான தீயில், பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

    தக்காளி சாஸ், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
    தேவையான பொருட்கள் :

    தனியா - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 8,
    பூண்டு - 5 பல்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை :

    வாணலியை சூடாக்கி தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

    அடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

    ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.

    சூப்பரான சத்தான தனியா துவையல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கற்பூரவள்ளி டீ, கற்பூரவள்ளி கசாயம் என குடித்திருப்பீர்கள். ஆனால் இன்று வித்தியாசமான சத்தான சுவையில் கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கற்பூரவள்ளி இலைகள் - 10
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
    மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்
    பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும்.

    நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

    அவ்வளவுதான் பஜ்ஜியை எடுத்துவிடுங்கள்.

    இப்போது சூப்பரான கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்க சோற்றுக்கற்றாழையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோற்றுக்கற்றாழையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சோற்றுக் கற்றாழை - 3
    நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
    வெந்தயம் - 1/4 ஸ்பூன்
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    சிறியவெங்காயம் - 10
    வேர்க்கடலை - 1 ஸ்பூன்
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - கால் கப்
    குழம்பு மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தக்காளி - ஒன்று
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    சோற்றுக்கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளலாம்

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    தேங்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் எடுத்து கொள்ளவும் அதை சேர்த்து நன்றாக வதக்கவும்

    வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

    குழம்பு நன்றாக கொதித்து வரும்போது நறுக்கிய சோற்றுக் கற்றாழையை சேர்த்துக் கொள்ளலாம்

    குழம்பு நன்றாக கொதிக்கும்போது தேங்காய் விழுதை சேர்க்கவும்.

    பத்து நிமிடம் குழம்பு மூடி வைக்கவும் இப்போது குழம்பு நன்றாக கெட்டியாகவும் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடலாம்.

    இப்போது மிகவும் சுவையான சோற்றுக்கற்றாழை குழம்பு தயாராகிவிட்டது

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடைகளில், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் கடலைப்பருப்பு மசாலா வறுவல் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ். வீட்டிலேயே சுலபமான முறையில் கடலைப் பருப்பு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    முதலில் உங்களுக்கு எந்த அளவிற்கு கடலைப்பருப்பு வேண்டுமோ, அதை எடுத்து, இரண்டு முறை தண்ணீரில் கழுவி, அதன் பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி நான்கிலிருந்து, ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் பரவலாக போட்டு, ஃபேன் காற்றில் ஈரத்தன்மை போகும் அளவிற்கு காயவைத்தால் போதும். கடலைப்பருப்பில், சுத்தமாக ஈரப்பதம் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தால் மேலே ஒரு காட்டன் துணியை போட்டு, நன்றாக துடைத்து எடுத்துவிடுங்கள். சீக்கிரமே காய்ந்துவிடும்.

    அதன் பின்பு, கடாயில் எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக கடலைப்பருப்பை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். முதலில் கடலைப்பருப்பை எண்ணெயில் போட்டதும் சடசட வென்று, பொரிய ஆரம்பிக்கும்போது, பபுள்ஸ் வர ஆரம்பிக்கும். அதன்பின்பு கடலைப்பருப்பு சிவக்க, சிவக்க பபுல்ஸ் அடங்கி, சிடசிடப்பு அடங்கும்.

    மொத்தமாக சிடசிடப்பு அடங்கிய பின்பு, கடலைப்பருப்பு மொத்தமும் எண்ணெயின் மேல் மிதக்க ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் கடலைப்பருப்பை எண்ணெயிலிருந்து எடுத்து, ஒரு வடிகட்டியில் போட்டு எண்ணெயை நன்றாக வடிய வைத்து விடவேண்டும். கடலைப்பருப்பை சிவப்பு நிறமாக சிவக்க வைக்க வேண்டாம். எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்த உடனே, எடுத்து விட்டால் நல்ல சுவை கிடைக்கும்.

    இறுதியாக கடலைப்பருப்பை, பொரித்த அதே எண்ணெயில், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். 4 பல் பூண்டை நைத்து, அதே எண்ணெயில் போட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    இப்போது வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்போடு, வறுத்த கறிவேப்பிலை, வறுத்தெடுத்த பூண்டு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தனி மிளகாய் தூள், சேர்த்து நன்றாக கலக்கி, நன்றாக ஆற வைத்த பின்பு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தீர்கள் என்றால் 5 நாட்கள் வரைக்கும் கூட வைத்து சாப்பிடலாம்.
    குழந்தைகளுக்கு தினமும் பழங்களை சாப்பிட கொடுப்பது உடலுக்கும் நல்லது. பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள்.
    தேவையான பொருட்கள்

    ஆப்பிள் - 1
    பேரீச்சம் பழம் - 4
    பால் - 1 டம்ளர்
    தேன் - தேவையான அளவு
    பட்டை பொடி - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பேரீச்சம் பழத்தை விதையை நீக்கி கொள்ளவும்

    மிக்சியில் ஆப்பிள், பேரீச்சம் பழத்தை போட்டு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பட்டைத்தூள், பால் சேர்த்து மேலும் அரைக்கவும்,

    கண்ணாடி கப்பில் துருவிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு அதன் பின் பழச்சாறையும் பாலும் தேவையான அளவு தேன் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சத்தான மிகவும் சுவையான ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி வாங்க நெய் சாதம் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    பாசுமதி அரிசி - 2 கப்
    முந்திரி - 10
    சீரகம் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பட்டை -2
    கிராம்பு - 2
    நெய் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

    பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.

    கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடும் பொழுது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம். அவரைக்காய், வெந்தய கீரை கூட்டை சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    அவரைக்காய் -1 கப்
    பாசி பருப்பு - 1/2 கப்
    வெந்தயக்கீரை - 1/2 கப்
    உப்பு -தேவையான அளவு
    தேங்காய் -சிறிதளவு
    சீரகம் -1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் -3
    பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்

    செய்முறை :

    கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அவரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கூட்டுக்கு தேவையான தண்ணீர் விட்டு பாசிப்பருப்பு மற்றும் அவரைக்காயை சேர்த்து வேக வைக்கவும்.

    மிக்சியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அவரை மற்றும் பருப்பு வெந்தவுடன் அரைத்து வைத்த விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

    கடைசியில் நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    வெந்தய கீரை வேக பாத்திரத்தில் இருக்கும் சூடே போதுமானது.

    இப்போது அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான மிளகு பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருள்கள் :

    முட்டை - 2     
    மிளகு - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி       
                   
    செய்முறை :

    முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.

    முட்டை  ஆறியவுடன் ஓட்டை நீக்கி விட்டு துருவியில் வைத்து  துருவிக் கொள்ளவும்.           
               
    அடுப்பில்  கடாயை  வைத்து  எண்ணெய்  ஊற்றி  சூடானதும்  மிளகுத் தூள், உப்பு  போட்டு ஒரு  நிமிடம் கிளறவும்.

    பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி.

    இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷாக கொடுக்கலாம். அல்லது சான்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
    தேவையான பொருள்கள் :

    வெண்டைக்காய் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு         
                               
    அரைக்க :

    தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
    தக்காளி -1
    பச்சை மிளகாய் - 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)
    சீரகம் - 2 மேஜைக்கரண்டி
    சின்ன வெங்காயம்  - 3          
                            
    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 3
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    கறிவேப்பில்லை - சிறிது

    செய்முறை :

    வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி  வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும்  வரை வதக்கவும்.          

    பின்னர்  அரைத்த  விழுதை சேர்த்து 1 கப் தண்ணீர்  ஊற்றி கொதிக்க விடவும்.       
         
    தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.

    வெண்டைக்காய்  பச்சடி ரெடி.


    பாகற்காயில் ஊறுகாய் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிஞ்சு பாகற்காய் - கால் கிலோ
    தக்காளி, எலுமிச்சம்பழம் - தலா ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
    கடுகு, பெருங்காயத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    பாகற்காயை கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும்.

    தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.

    எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

    வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.

    இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால்… பாகற்காய் ஊறுகாய் தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×