என் மலர்
குழந்தை பராமரிப்பு
எள்ளுருண்டை காலை உணவாக இருந்தால், தேர்வுக்குமுன் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கலாம் என்று கூறப்படும் கருத்தை அறிவியலும் ஆமோதிக்கிறது.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் நன்றாக படித்திருந்தாலும், சரியாக தேர்வு எழுதுவது கடினம்.
சிலருக்கு தேர்வு எழுதும்போது கைவிரல்கள் இழுத்துக்கொள்ளுதல், கண் இருட்டுதல் போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, உடலில் திறன் குறைவதுதான். இதனால் மாணவர்களின் முயற்சிக்கு முழு பலன் கிடைக்காமல் போய்விடும். இப்படி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனச்சோர்வு இல்லாமல், படித்தது மறக்காமல், ஆரோக்கியமான திட மனதுடன் தேர்வுக்காலம் முடியும்வரை இருக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கேட்கலாம்.
தேர்வுக்கூடத்துக்கு சாப்பிடாமல் செல்வது பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை உணராமல் போனால் தேர்வு எழுதும்போது கவனமின்மை, மனச்சோர்வு, விரைவாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படலாம். காலை உணவு எடுத்துக்கொள்வது கட்டாயம். பிரேக் பாஸ்ட் இன் த கிளாஸ்ரூம் என்ற திட்டம் அமெரிக்க மாகாணங்கள், சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதே, இதற்கு நல்ல அத்தாட்சி.
அதிலும் காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம். தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை, கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே.
அதிக உடல் உழைப்பு தேவைப்படும் டென்னிஸ் போன்ற போட்டிகளில் பங்கேற்பவர்கள், இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். இப்படி சர்வதேச விளையாட்டு வீரர்களின் உணவாகத் திகழும் வாழைப்பழம், தமிழ்நாட்டில் உள்ள பொதிகைமலையை தாயகமாகக்கொண்டது. குறைந்த அளவு இனிப்புச்சுவை கொண்ட மாவுப்பொருட்கள் மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த பச்சைப்பயறு கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும்.
சங்க கால பாடல்களில் போரில் வெற்றி பெற்ற போர் வீரர்கள் நாடு திரும்பும்போது, தம்முடன் எடுத்துச் சென்ற எள், கொள்ளு ஆகிய விதைகளை எதிரி நாட்டில் விதைத்துவிட்டு திரும்பிய நிகழ்வு பதிவாகியுள்ளது. இதேபோல முதல் உலகப்போருக்குச் சென்ற வீரர்கள் எள்ளை உடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எனவே மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையை எள் கொண்டிருப்பதே இதற்கு முதன்மை காரணம். எள்ளுருண்டை காலை உணவாக இருந்தால், தேர்வுக்குமுன் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கலாம் என்று கூறப்படும் கருத்தை அறிவியலும் ஆமோதிக்கிறது.

இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர். அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம்.
இரத்தம் நம் உடலின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஆன்டிபாடிகளை கொண்டுச்செல்லவும், உடலின் வெப்பநிலையை சரியான விகிதத்தில் பராமரித்து, தேவையில்லாத கழிவுகளை சிறுநீரகம், கல்லீரலுக்கு எடுத்துச்சென்று, உடலை சுத்தம் செய்கிறது. அதனால்தான் நம் உடலின் எடையில் 7% இரத்தத்தினால் ஆனது. இரத்தத்தில் 45% சிவப்பு இரத்த அணுக்கள் நிறைந்து இருக்கிறது. மேற்கூறிய முக்கியமான வேலைகளை செய்ய, இரத்தத்தில் தேவையான சிவப்பு இரத்த அணுக்கள் குறையும் பொழுதோ அல்லது ஆக்சிஜனை எடுத்துச் செல்ல போதுமென்ற அளவு ஹீமோகுளோபின் இல்லாத பொழுதோ ஏற்படும் நிலை அனீமியா/இரத்த சோகை எனப்படுகிறது.
பொதுவாக, இரத்தசோகை, குறைந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தான் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். துரதிஷ்டவசமாக இது உண்மையல்ல. இங்கே உங்களுக்காக சில பொதுவான இரத்த சோகைக்கான ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிரிய தன்மை
பொதுவாக ரோஜா நிற கன்னங்களையுடைய குழந்தைகளுக்கு வெளிரிய, மஞ்சள் அல்லது சாம்பல் நிற தோல் மற்றும் கண்களும், இளஞ்சிவப்பு நிறமற்ற உதடுகளும், நகங்களும் இருந்தால் அக்குழந்தைகள் இரத்த சோகையால பாதிக்கப்பட்டிருக்கலாம். கண்களின் வெள்ளைப் பகுதியில் லேசான நீல நிற சுவடு இருப்பது மற்றொரு அறிகுரியாகும். இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இந்த மாற்றங்கள் மெதுவாகத்தான் தெரிய தொடங்கும் என்பதால், அதற்கான மற்ற அறிகுறிகளையும் காண்போம்.
நிலையான உடல் சோர்வு
இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர். அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம். கடினமான, உடல் உழைப்பு தேவைப்படும் எந்த வேலையையும் அவர்களால் செய்யவோ, ஓடி ஆடி விளையாடவோ முடியாது. சாதரணமாக படியேறுவதைக்கூட அவர்கள் மிகவும் சிரமமாக உணர்வார்கள்.
மாறான உணவு ஆசை
இயற்கையாகவே நம் உடலில் எதவாது சத்து குறைபாடு ஏற்பட்டால் அந்த குறைப்பாட்டை சரி செய்யும் விதமாக அது சம்பந்தப்பட்ட உணவுக்காக அடங்காத ஆசை ஏற்படும். அதனால் தான் குழந்தைகள் வினோதமாக களிமண், தூசி, சோளமாவு, ஐஸ் போன்றவைகளை உண்ண அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றனர். இது உடலில் ஏற்பட்டுள்ள இரும்புச்சத்து குறைபாட்டினால் கூட இருக்கலாம். இம்மாதிரி உணர்வை ஆங்கிலத்தில் ‘பிகா’ என்று கூறுகின்றனர்.
தாமதமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
தாமதமான வளர்ச்சி, நடத்தையில் பிரச்சினைகளான கவனக் குறைவு, குறையும் மோட்டார் திறன்கள், சமூக தொடர்பின்மை போன்றவை இரத்த சோகை சம்பந்தப்பட்டவை ஆகும். இவையனைத்தும் சேர்ந்து குறைந்த ஆற்றல் நிலை, மற்றும் கற்பதில் பிரச்சினை ஆகியவற்றிற்கும் இட்டுச் செல்லும்.
குணமடைவதில் தாமதம்
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காயங்கள், பழுதடைந்த திசுக்கள் குணமாக தாமதமாகும். உடல்நலக் குறைவு அடிக்கடி உண்டாகும். சிவப்பு இரத்த அணுக்களால் ஆன்டிபாடிகளை எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்படும். காயங்கள் குணமடைய தாமதமாகி, நாட்கணக்கில் காயங்களுடன் இருக்க வைக்கிறது.
மற்ற அறிகுறிகள்
இரத்தசோகையுடைய குழந்தைகளிடம் காணப்படும் மற்ற அறிகுறிகள் நாக்கில் வீக்கம், புண், எரிச்சல், தீராத தலைவலி, விரிவான மண்ணீரல்(ஸ்ப்லீன்), மஞ்சட்காமாலை நோய் மற்றும் தேநீர்- நிற சிறு நீர் போன்றவை ஆகும்.

தற்போது குழந்தைகளை இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு சேர்க்கும்போது குழந்தைகளை எங்கு சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றனர்.
பெற்றோர்கள் அனைவரும் தற்போது தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது... எந்த வயதில் சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருப்பார்கள். உளவியல்ரீதியாக குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற பள்ளியில் சேர்த்தால் மட்டுமே அவர்களது அறிவுத் திறனும், மனதிடமும் நன்றாக இருக்கும் என விளக்குகிறார் உளவியல் நிபுணர்.
‘பொதுவாக பெற்றோர்களுக்கு இந்தப் பதற்றம் குழந்தை பிறந்த 6 மாதம் முதல் 1 வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது. ஆனால், குழந்தையை 4 வயதில்தான் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை எங்கு விட்டுச் செல்வது, யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற குழப்பத்தில்தான் மிகவும் தடுமாறுகிறார்கள்.
அதனாலேயே அக்கம்பக்கத்தினர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மிகச் சிறிய வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. தற்போது குழந்தைகளை இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு சேர்க்கும்போது குழந்தைகளை எங்கு சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றனர்.
உதாரணமாக டே கேர், ப்ளே ஸ்கூல், கிண்டர்கார்டன் என சேர்த்து விடுவது நல்லதுதான். ஆனால், சேர்ப்பதற்கு முன் அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
பள்ளியில் சேர்க்கும் முன் நம் குழந்தையிடம் நாம் பார்க்க வேண்டியது, குழந்தைகள் உங்களை விட்டு தனியாக இருப்பார்களா, தங்களை சுத்தம் செய்து கொள்கிறார்களா அல்லது பிறரிடம் தங்களை சுத்தம் செய்யச் சொல்கிறார்களா, கழிப்பிடம் போகவேண்டும் என சொல்லத் தெரிகிறதா, மற்ற குழந்தைகளுடன் ஒன்றிணைந்து விளையாட முடியுமா, குழந்தைகளுக்கு அந்தந்த வயதிற்கேற்ப உடல் வளர்ச்சி இருக்கிறதா, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பள்ளியில் நாம் பார்க்க வேண்டியவை என்னவெனில், நம் குழந்தைகள் அந்தப் பள்ளியில் சந்தோஷத்துடனும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக வகுப்பு அறை அவர்களுக்குப் பிடித்த மாதிரியும், விளையாடும் இடம் அவர்களுக்குப் பிடித்ததாகவும் இருக்க வேண்டும்.
அங்கு கற்றுத்தரும் விதம், குழந்தைகளை ஊக்குவிப்பதாகவும், கற்பனை திறனை வளர்ப்பதாகவும் அதனுடன் சேர்ந்து படிப்பு ரீதியாகவும் அறிமுகப்படுத்த வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் தொலைவு அருகில் இருக்க வேண்டும். நிறைய மாணவர்கள் இருக்கக் கூடாது. உதாரணமாக 20 முதல் 25 பேர் வரையிலான மாணவர்கள்தான் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் குழந்தைகள் அடுத்தடுத்து வகுப்பிற்குச் செல்ல தயாராக இருப்பார்கள்.
இவ்வாறு அமைந்த ப்ளே ஸ்கூல் செல்வதன் மூலமாக குழந்தைகள் தங்கள் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்கின்றனர். படிப்பதிலும், விட்டுக்கொடுப்பதிலும், சமுதாயத்தில் ஒன்றிணைவதிலும், பேசுவதிலும், விளையாட்டிலும், நம்பிக்கையாகவும், கலைகளிலும், கதைசொல்லல் என வளர்ச்சியடைகின்றனர்.
இவ்வாறு அமையாதபோது குழந்தைகள் பள்ளி என்றாலே மிகவும் பயப்படுகின்றனர். அழுகை, கோபம், பிடிவாதம் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு பள்ளி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆதலால் அவர்களுக்கு தகுந்த முறையில் உதவுவது பெற்றோர்களின் கடமை.”

தற்போது பெரியோர் மட்டுமல்ல சிறியவர்களும் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். சிறுவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
சிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி என்று யோசிக்கிறீர்கள் தானே! ஆம். இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இது நிஜம்தான் நாம் கடைபிடிக்கும் வாழ்வுமுறை இதற்கு முதன்மையான காரணம். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.
சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.
முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.
முதுகு வலி தீர்க்க வழிகள்:
சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.
எல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.
அமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.
எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.
விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.
தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.
முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வழியை குறைக்கவும் உதவும்.
உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.

குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டால் அதற்கான தொழில்நுட்பங்களை கொண்ட பிரத்யேக கேமராக்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது நல்லது.
குழந்தை பிறந்ததும் செல்போனில் புகைப்படம் எடுப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். குழந்தையுடன் செல்பி எடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். பச்சிளம் குழந்தையின் முகத்தை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பதுதான் நல்லது.
சிலர் அதிக ரெஷல்யூஷன் கொண்ட கேமராக்களை பயன்படுத்தி போட்டோ எடுக்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே போய் போட்டோஷூட் நடத்தவும் திட்டமிடுகிறார்கள். குழந்தை பிறக்கும் சமயத்தில் தந்தையோ, நெருங்கிய உறவினர்களோ வெளியூரில் இருக்கும் பட்சத்தில் குழந்தையை போட்டோ எடுத்து அனுப்புகிறார்கள். சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை பெறுவதற்கும் முயற்சிக்கிறார்கள்.
கேமராவில் இருந்து வெளிப்படும் பிரகாசமான பிளாஷ்கள் குழந்தையின் கண்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில் அவ்வளவு வெளிச்சம் அதில் வெளிப்படுவது இல்லை. அறையின் உள் பகுதியில் சூழ்ந்திருக்கும் இருள் காரணமாக பிரகாசமாக தெரிகிறது.
பிறந்த குழதைகள் பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கும். இருப்பினும், முதல் இரண்டு வாரங்களில், இருண்ட அறையில் திடீரென ஒளி வீசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பகல் பொழுதில் வெளியில் பிரகாசிக்கும் சூரிய ஒளியை விட கேமரா பிளாஷ் அதிக பிரகாசமானதும் கிடையாது. எனவே பச்சிளம் குழந்தையின் முகத்தை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பதுதான் நல்லது. அதே வேளையில் காலை வேளையில் பிரகாசிக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரம் குழந்தையின் உடலை காண்பிக்கலாம்.
குழந்தையின் அருகில் இருந்தபடி மற்றவர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதும் நல்லதல்ல. குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டால் அதற்கான தொழில்நுட்பங்களை கொண்ட பிரத்யேக கேமராக்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது நல்லது.

சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குள் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியாகக் கண்டறிந்து சிந்தனையைத் தூண்டிவிடும்போது, அந்தத் திறமை மிளிர்ந்து ‘ஸ்மார்ட்’ குழந்தைகளாக ஜொலிப்பார்கள். அதற்கான வழிகள் இங்கே…
எதிர்பார்ப்பை தவிர்த்தல்:
ஒரு செயலைச் செய்யும்போது, எப்படி செய்தால் முடிவு சிறப்பாக அமையும் என யோசிக்கக் கற்றுத் தர வேண்டும். இதனால் சவாலான விஷயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சிந்திக்கும் திறன் தூண்டப்படும். சிறு வயதில் இதுபோன்று செயல்பட வைப்பதால், எதிர்காலத்தில் குழந்தைகளால் எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முயற்சி செய்யும்போது, எந்த வகையான முடிவு வந்தாலும் அதைப் பற்றி விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ள பழக்க வேண்டும்.
படிக்க அனுமதியுங்கள்:
குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவதைவிட, அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபட வையுங்கள். இதில், முக்கியமான ஒன்று குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை அதிகரிப்பது. சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.
பாடப்புத்தகம் மட்டுமின்றி, பிற அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்க வைப்பது சிந்தனையை தூண்டிவிட சிறந்த வழி.
ஆரோக்கியமான சூழல்:
சுற்றிலும் பலவித பிரச்சினைகள் உள்ள சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, மன அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்த்து அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தருவது முக்கியம். இதற்கு பெற்றோர், பிள்ளைகளுடன் இணக்கமாக இருக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
மூளைக்கு பயிற்சி அளியுங்கள்:
இன்றைய சூழலில், இறுக்கமான மனநிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் உள்ளது. இதைத் தவிர்க்க அவ்வப்போது உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் தேவைப்படுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை, அதிக சிரமம் கொடுக்காத வகையிலான பயிற்சிகள், உடல் வலிமைக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் அவசியமாகிறது. மூளைக்குப் பயிற்சி அளிக்கும்போது, சமூகம் சார்ந்த திறமை வளர்ந்து, சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். கற்பனைத் திறனும், யோசிக்கும் திறனும் குழந்தைகளிடம் இயற்கையாகவே வளரும்.
நேர்நிலையான குழுவை உருவாக்குங்கள்:
குழந்தைகளிடம் நாம் எந்த வகையான சிந்தனையை உருவாக்குகிறோமோ, அதன்படித்தான் எதிர்காலம் அமையும். ஆரம்பம் முதலே நல்ல சிந்தனையை உருவாக்கத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். நல்லவற்றைச் சிந்திக்கும் நட்புக் குழுவை உருவாக்க வேண்டும்.
ஸ்மார்ட்டாக மாறுங்கள்:
குழந்தைகள் வளரும்போது, பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதை கிரகித்து, அதன்படியே அவர்களின் செயல்பாடுகளும் அமையும். பெற்றோரின் அத்தனை நடவடிக்கையும் குழந்தைகளின் மனதில் பதியும். எனவே, உங்கள் சிந்தனையையும், செயலையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும். அப்போதுதான், குழந்தைகளும் அதற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். எதையும் குழந்தைகளிடம் கட்டளையாக இடாமல், நீங்களே முன்னுதாரணமாக நடந்து கொண்டால் குழந்தைகளும் எளிதாக அதைப் பின்பற்றுவார்கள்.

எந்த நட்பிலும் ஆரம்ப நிலையிலேயே இருவருக்குள்ளும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது சிறந்தது. அதிலும் இருபாலருக்கு இடையேயான நட்பாக இருந்தால், எல்லைமீறாமல் தொடர்வது சிறந்தது.
இருபது வயதில், நமக்குக் கிடைக்கும் நல்ல நட்பு வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். எனவே, இந்த நட்பைத் தேர்ந்தெடுப்பதில் சற்றுக் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்காக சில டிப்ஸ்:
நம்பகத்தன்மை:
ஆரம்ப காலத்தில் நமக்குக் கிடைக்கும் நட்பில், இந்த நம்பகத்தன்மையை எதிர்பார்க்கத் தேவையில்லை. அதுவே, இருபதுகளில் அமையும் நட்பு என்றால், இருவருக்குள்ளும் நம்பகத்தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த நட்பு உங்களின் இறுதிக்காலம் வரை கூட நீடிக்கலாம். அப்படி இருக்கும் நட்பில், பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதுபோன்று நண்பர்களிடம் கூறுபவை, மூன்றாம் நபருக்குச் செல்லாமல், ரகசியம் காக்கப்படுவது அவசியம். எனவே, எதிலும் நம்பிக்கையான நட்பை அமைத்துக்கொள்வது அவசியம்.
நல்வழிப்படுத்தும் நட்பு:
20 வயது என்பது நல்லது, கெட்டதைச் சரியாக ஆராய முடியாத கட்டம். பிரச்சினைக்கான தீர்வைத் தேடும் பருவம். இதில், யார் நமக்குச் சாதகமாகவும், ஆதரவாகவும் பேசினாலும் அவர்களிடம் மனம் சாயும். அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் தேர்வு செய்யும் நட்பு, குழப்பமடைந்த மனதை நல்வழிப்படுத்தும் நட்பாக இருக்க வேண்டும். அதை விடுத்து, தவறான பாதையில் கொண்டு சென்றால், எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடும். எனவே, நட்பைத் தேர்வு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
எல்லை மீறாமல் இருத்தல்:
எந்த நட்பிலும் ஆரம்ப நிலையிலேயே இருவருக்குள்ளும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது சிறந்தது. அதிலும் இருபாலருக்கு இடையேயான நட்பாக இருந்தால், எல்லைமீறாமல் தொடர்வது சிறந்தது.
பழமையைக் கைவிடாதீர்கள்:
சிலருக்கு, பள்ளிப் பருவத்தில் தொடங்கிய நட்பு 20-களிலும் தொடரக்கூடும். புதிய நட்பு அமையும்போது, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான விஷயம். அதற்காக, பழைய நட்பை எக்காரணம் கொண்டும் ஒதுக்காதீர்கள். சிறு வயது நட்பு என்பது, சரியாக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றிய பல நிறை-குறைகள் அந்த நட்புக்குத் தெரிந்திருக்கும். புதிய நட்பினால், நமக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் கூட, பழைய நட்பினால் தீர்வு காண முடியும். எனவே இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம்.
பெற்றோரின் கருத்துகள்:
சிறு வயதில் இருந்து நம்மிடம் பழகும் நண்பர்களைப் பற்றி, முழுமையாக நம் பெற்றோருக்குத் தெரியும். நட்பில் உள்ள நன்மைகள், ஆபத்துகள் எது என்பதை நம்மால் தெளிவாகக் கணிக்க முடியாது. அதுவே, பெற்றோர்களால் கட்டாயம் கணிக்க முடியும். எனவே, நண்பர்களைத் தேர்வு செய்யும்போது, பெற்றோரின் கருத்துகளைக் கேட்பது அவசியம். அதில் அவர்கள் கூறும் நிறை, குறைகளைச் சரியாக புரிந்து கொண்டு, நட்பை வளர்த்தால் அதை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும்.

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
கோவிட்-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நான்காவது அலை குறித்த பீதி மக்கள் மத்தியில் பரவி வருகிறது. பெற்றோருக்கு உள்ள முக்கிய கவலை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தான்.
பெரியவர்களைப் போல் அல்லாமல், கோவிட்-19 க்கு எதிரான செயற்கை நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.மேலும் நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
டெல்லி சுகாதாரத் துறையின் சமீபத்திய தில்லி பேரிடர் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உடன் நடத்திய கூட்டத்தில் தேசிய தலைநகரில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமைக்ரான் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. உங்கள் குழந்தைகள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு சிறந்த, மேம்படுத்தப்பட்ட, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாஸ்க் அணிந்து செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு, மாஸ்க் மட்டுமே வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்கான ஒரே நம்பிக்கை. அது நன்றாக பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்.
2. வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் ஒரு பொறுப்புள்ள பெற்றோராக ஒருவர் செய்யக்கூடியது அவசரத் தேவைகளுக்குத் தயாராக வேண்டும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த சந்தேகம் ஏற்பட்டால், தொற்று ஏற்பட்டிருக்குமே என நினைத்தால், முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யவும்.
3. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உடலை விட பாதுகாப்பானது எதுவும் இல்லை. அதை அடைய, பல அத்தியாசிய வைட்டமின்களை, நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கிய ஊனவை கொடுங்கள். வீட்டில் சமைத்த சத்தான உணவு அவர்களை தொற்றில் இருந்து காக்கும்.
4. உங்கள் குழந்தை அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களையும், குறிப்பாக வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை வழங்குவதன் மூலம் ஒமைக்ரானில் இருந்து முழுமையாக பாதுகாக்கலாம்.
5. ஒரு முழுமையான பரிசோதனை மூலம் உங்கள் குழந்தையிடம் உள்ள ஆரோக்கிய குறைபாடு அறிந்து கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் தடுப்பதற்கும் உங்கள் குழந்தையின் உடலைத் தயார்படுத்துவது எளிதாக இருக்கும்.
6. காய்ச்சல் உட்பட அனைத்து வழக்கமான தடுப்பூசிகளை மறக்காமல் போடுவது மிக அவசியம். ஒமைக்ரான் உடலில் காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே வழக்கமான தடுப்பூசிகள் வைரஸை எதிர்த்துப் போராட உங்கள் குழந்தையின் உடலை பலப்படுத்தலாம்.
7. குழந்தைகளில் ஒமைக்ரான் தொற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த கருவி வைரஸ் தொற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து அவர்களுக்கு கற்பிப்பதே. சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைககளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கவும்.மாஸ்குகளின் சரியான பயன்பாடு, சமூக விலகல், சானிடைசர்கள் மற்றும் கிருமிநாசினிகளின் பயன்பாடு ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தங்களது மகனோ அல்லது மகளோ செல்போனைக் கையாளும் போது எந்தவிதமான பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது என்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களின் கையில் இருப்பது செல்போனும், அதனுடன் இணைந்திருக்கும் இணையமும் என்றாகி விட்டது. இந்தநிலையில் ஆக்க சக்தியாக உருவாக்கப்பட்ட இணையம் பல இளைஞர்களுக்கு அழிவு சக்தியாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
‘கொரோனா தொற்றின் பக்க விளைவுகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அத்தகைய ஒரு விளைவாக கல்வியுடன் செல்போனும் இணைந்து விட்டது என்று சொல்லலாம். செல்போனைப் பார்க்காதே கெட்டுப் போவாய் என்று எச்சரித்த பல பெற்றோர் வேறு வழியில்லாமல் குழந்தைகளின் கையில் செல்போனைக் கொடுக்க வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கி விட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் பல பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு சாதனமாக செல்போன்கள் தொடர்கிறது.
இந்தநிலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக இருப்பது பாலியல் ரீதியான விளம்பரங்களாகும். பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன்கள் ஏற்படுத்தும் மாற்றத்தால் சற்று தடுமாற்றமான மன நிலை இருப்பது இயல்பானதுதான். ஆனால் அவ்வாறு தடுமாறும் மாணவர்களை தடம் மாற வைப்பதில் இணையத்தின் பங்கு பெருமளவு உள்ளது.
குறிப்பாக பாலியல் ரீதியான பாப் அப் விளம்பரங்கள் இளைஞர்களைத் தடுமாற வைக்கிறது. திரைப்படம் தொடர்பாகவோ, பாடம் சம்பந்தமாகவோ தெரிந்து கொள்ள இளைஞர்கள் ஒரு இணையதளத்துக்குள் செல்லும்போது திடீரென்று ஆபாச வாசகங்களுடன் அல்லது ஆபாச படங்களுடன் ஆபாச இணையதளம் குறித்த விளம்பரம் ஒன்று உள்ளே நுழைகிறது.
இது இளைஞர்களின் மனதை சலனப்படுத்துகிறது. சபலத்தால் அந்த வலைத்தளத்துக்குள் நுழையும் இளைஞர்கள் அதற்குள் இருந்து மீண்டு வர முடியாத பாலியல் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இதுவே பல பாலியல் குற்றங்களுக்கு அடித்தளமாகவும் அமைந்து விடுகிறது. இன்று இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது பல போக்சோ வழக்குகள் பதிவாகி வருவது வேதனையான உண்மையாகும்.
தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய கடமை அனைத்து தரப்புக்கும் உள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது பெற்றோரின் கடமையாகும். தங்களது மகனோ அல்லது மகளோ செல்போனைக் கையாளும் போது எந்தவிதமான பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான புரிதல்களையும், நட்பான பகிர்தலையும் பெற்றோர் தர வேண்டும்.
அத்துடன் ஆபாச இணையதளங்களை முழுவதுமாக முடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக சைபர் கிரைம் போலீசார் மூலம் முழுமையாக கண்காணித்து பாலியல் ரீதியான பாப் அப் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு பாலியல் குற்றவாளியாகவோ, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவோ மாறும் அவலத்தைத் தடுக்க அரசு இணையத்தை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியமாகும்'.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி சில உணவுக்கு வெப்பம் அல்லது குளிர்ச்சி தன்மை உ ள்ளது. மேலும் கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். இந்த உணவுகள் வெப்பநிலையை சீராக்கி நீரிழப்பு உண்டாகாமல் தடுக்கிறது. அப்படியான உணவு பட்டியலை இப்போது பார்க்கலாம்.
தர்பூசணி
பெரியவர்களை போன்றே சிறியவர்களுக்கும் இது சிறந்த உணவு. 92% நீர்ச்சத்து கொண்டவை. இதில் வைட்டமின் எ, பி காம்ப்ளக்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன. இது நச்சுகள் மற்றும் லைகோபீன் அகற்ற உதவுகின்றன.
வெள்ளரிக்காய்
இதுவும் 90% நீர்ச்சத்து கொண்டவை. இது டையூரிடிக் என்பதால் வெள்ளரிகள் உடலில் இருந்து ந்ச்சுக்களை வெளியேற்றுகிறது. இதில் வைடமின் பி,ஃப்ளவனாய்டுகள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்க செய்கிறது. குழந்தைக்கு வெள்ளரிக்காய் ஆறு மாதங்களுக்கு பி றகு கொடுக்கலாம். சில குழந்தைக்கு வாயுத்தொல்லை உண்டாகலாம் என்றால் 8 மாதத்துக்கு பிறகு வெள்ளரிகளை எடுக்கலாம்.
இளநீர்
குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள், கோடைகாலத்துக்கு ஏற்ற பானம் என்று வரும் போது இளநீர் முக்கியமானது. இது எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ளது.நீரிழப்பை தடுக்கும். கோடையில் உடலுக்கு ஊட்டமளிக்கிறது.இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது வெப்பநிலை ஒழுங்குமுறையை ஊக்குவிக்கிறது. இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கிறது. ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு இளநீர் எளிதில் ஜீரணமாகும். இதில் லாரிக் அமிலம் தாய்ப்பாலை போன்றது.
ஆரஞ்சு
பால் தவிர மற்ற கால்சியம் ஆதாரங்கள் சூடான நாட்களை குளிர்ச்சியாக்க சிறந்த வழி. இது 80% தண்ணிர் கொண்டவை. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. வெப்பத்தை குறைக்கிறது.பொட்டாசியம் நிறைந்த இது உடல் இழக்கும் ஊட்டச்சத்தை திரும்ப அளிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, கால்சியம் நார்ச்சத்து மற்றும் 100க்கும் மேற்பட்ட பைடோநியூட்ரியண்ட்கள் உள்ளன.
6 மாதங்களுக்கு மேலான குழந்தைக்கு ஆரஞ்சு எதிராக அறிவுறுத்தவில்லை என்றாலும் மருத்துவர்கள் 10 மாதங்கள் வரை காத்திருக்க பரிந்துரைக்கின்றனர். சிட்ரஸ் பழம் அதிக சிட்ரிக் அமிலம் என்பதால் வயிற்று உபாதையை உண்டாக்க வாய்ப்புண்டு. நாள் ஒன்றுக்கு 3 - 4அவுன்ஸ் வரை கொடுக்கலாம்.
தக்காளி
இது 95% நீர்ச்சத்துகொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ கொண்டது., இதில் உள்ள லைகோபீன் அதிக செறிவு கொண்டது. இது தொல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியாகும்.
10 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தக்காளி கொடுக்கலாம். அதற்கு முன்பு இது வயிற்று வலியை உண்டாக்கலாம். இதை சமைத்தோ அல்லது மற உணவுகளில் கலந்தோ பயன்படுத்தலாம்.

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.
பச்சிளம் குழநதைக்கு தாய்ப்பால் கொடுப்பது அதன் ஆரோக்கியத்திற்க பல்வேறு வகைகளில் நன்மைகள் பயக்கும்.
குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறையும். ஒவ்வாமை பிரச்சனையும் எட்டிப்பார்க்காது
உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. டைப்-1, டைப்-2, நீரிழிவு நோயும் குழந்தையை நெருங்காது.
காதுகாளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இரைப்பை குடல் அழற்சி பாதிப்பும் ஏற்படாது.
மூளையின் வளர்ச்சி சீராக நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும்.
போலியோ, டெட்டனஸ் டிப்தீரியா மற்றும் ஹீமோபிலஸ் இன்ப்ளூபய்ஸா போன்ற தடுப்பூசியின் செயல் பாட்டுக்கு தாய்ப்பால் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது.
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.
தாய்ப்பால் தவறாமல் கொடுப்பது அவசியமானது. அது அறிவாற்றல் வளர்ச்சி செயல்திறனுடன் தொடர்புடையது.
நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் குழந்தை அவதிப்படும் வாய்ப்பு குறைவு.

குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தையின் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும். குழந்தை தவழும் பழக்கமானது குழந்தைக்கு தானாக வரும் பழக்கமே தவிர எவராலும் வரவைப்பது இல்லை. பொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் தவழும் காலங்களில் மிகவும் துருதுரு என இருப்பார்கள்.
அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.
எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்து சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள். எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.
குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.
உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.