என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.
எதற்காக குழந்தைகள் அழுதுக்கொண்டே இருக்கின்றன என்று தெரியாமல் பெற்றோர்கள் விழிபிதுங்கி விடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் அழுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவை குறித்து தற்போது விளக்கமாக காண்போம்..
* குழந்தைகள் முக்கியமாக பசியால் அழும். ஆனால் அவை பசிக்குத் தான் அழுகின்றன என்பதை அறிய, வாயில் விரலை வைத்தால், அந்த விரலை சப்ப ஆரம்பிக்கும். அவ்வாறு செய்தால். அவை பசிக்கு அழுகின்றன என்று அர்த்தம்.
* குழந்தைகள் ஈரப்பதம் அதிகரிக்கும் போது அழுகையை தொடங்கும். குழந்தைகள் இரவில் தூங்கும்போது, சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டால் அதன்மூலம் ஏற்படும் ஈரப்பதத்தின் காரணமாக அழும்.
* குழந்தைகள் நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அழுதால், அதற்கு தூக்கம் தேவைப்படுவதாக அர்த்தம். எனவே குழந்தையை மெதுவாக தூக்கி தோளில் தட்டி தூங்க வைக்க வேண்டும். மேலும், சில குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டு அழும். அதற்கும் தூக்கத்திற்காக தான் குழந்தைகள் அழுகின்றது என்று அர்த்தம்.
* குழந்தைகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும். அவ்வாறு இருக்கையில், குழந்தைகள் வேறு எதாவது புதிய இடங்களுக்கு சென்றால் அழும். குழந்தைகள் எப்போதுமே தங்கள் அசௌகரியத்தை அழுகை மூலமே வெளிப்படுத்தும்.
* குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.
* குழந்தைகள் சாப்பிடும்போது, வயிற்றுக்குள் காற்று புகுந்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் சாப்பிட்டு முடித்தவுடன் முதுகில் தட்ட வேண்டும். அப்போது வயிற்றில் இருக்கும் காற்று ஏப்பமாக வெளியேறும். இவ்வாறு தட்டாமல் இருப்பதாலும் குழந்தைகள் அழும்.
* சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது குழந்தைகள் வெளிப்படுத்தும்.
* குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும்.
* குழந்தைகள் அழுவதற்கு இது தான் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தை அழகாக இருப்பதற்காக அதிக டிசைன்கள் நிறைந்த உடைகளை அணிவிப்பார்கள். இதனால் குழந்தைகள் அசௌகரியத்தால் அழும்.
* குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.
இந்த 10 முக்கிய காரணங்களுக்கு குழந்தைகள் அழும். இது தவிர வேறு சில காரணங்களும் குழந்தைகள் அழுவதற்கு காரணமாக உள்ளது. இந்த காரணங்களை கண்டுபிடித்துவிட்டால், குழந்தையின் அழுகைகளை எளிதில் நிறுத்தி விடலாம்.

ஆரோக்கியமான சுய அறிவு மற்றும் நல்லிணக்கம், ஆரோக்கியமான உரையாடல் மற்றும் புரிதல், ஆரோக்கியமான மனநிலை மற்றும் வாழ்க்கை முறைகளை உருவாக்க பாலியல் கல்வி அவசியம் என்று உளவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா கூறியதாவது:-
“பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாக்கின்றதா அல்லது குழந்தைகளை வன்முறைக்கு உட்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
ஏனென்றால், பிறந்த நிமிடம் முதல் 18 வயதுக்கு உட்பட்ட எல்லோரையுமே குழந்தை என்று சட்டம் சொல்கிறது. வன்முறை என்பதற்கான வரைமுறையும் சரியாக இல்லை.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றால் விருப்பமின்றி திணிக்கப்படும் உறவு, விருப்பத்தோடு ஆனால் விளைவுகள் தெரியாமல் நடந்த பாலுறவு, முற்றிலும் விருப்பத்தோடு செய்யப்படுகின்ற உறவு ஆகிய எல்லாவற்றையும் சட்டம் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கிறது.
வளர் இளம் வயது, துள்ளல்-மகிழ்ச்சி-வேகம் மற்றும் பதற்றம் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ளது.
மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள், போன்கள் அலை அலையாய் தந்து கொண்டிருக்கின்ற பாலியலை ஒட்டிய படங்கள் மற்றும் செய்திகள், அதனால் உருவாகும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவை அந்தப் பருவத்தின் தேடலை குறிப்பாக பாலியல் தேடலை அதிகரிக்கிறது.
நட்பு வட்டம், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரின் நல்ல ஆரோக்கியமான கட்டுப்பாடுகளும், அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் பெறுபவர்கள் எந்த பிரச்சினைகளில் இருந்தும் எளிதாக வெளியில் வந்து விடுகிறார்கள். மற்றவர்கள் ஈடு செய்ய இயலாத இழப்பை சந்திக்கிறார்கள்.
வளர்இளம் பருவத்தில் உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பாலியல் உணர்வால் உந்தப்பட்டு பாலுறவில் ஈடுபடும் 16 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் நிலைமை என்ன?. உடலுறவின் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணின் நிலை என்ன? அந்த ஆண் சிறையில், பெண் பாதுகாப்பு இல்லத்தில். குழந்தையோ, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டால் (தத்துக் கொடுக்க உரிமை பெற்ற ஒரு இல்லத்தில்) தத்து குழந்தையாய் எங்கோ வளரும் நிலை.
குழந்தை குப்பை தொட்டியில் போடப்பட்டால், பிச்சை எடுக்கும் நிலையோ ஊனமுறும் நிலையோ அல்லது கல்லறை செல்லும் நிலையோ ஏற்படக்கூடும். அத்தகைய பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு வரும்போது பாலியல் வன்கொடுமையை கண்டிப்பாக டாக்டர்கள், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தகுதி பெற்ற டாக்டரிடம் செல்லாமல், கருக்கலைப்பில் ஈடுபடுவதால் அத்தகைய பெண்கள் இறந்து போகவும் நேரிடுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவிற்கு உள்ளாகும் பெண்களுக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஒரு குழந்தையை கருவில் இருக்கும் போது எப்படி உருவாக்க வேண்டும்? பிறந்தபின் எப்படி வளர்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பிறந்து விட்டதே என்பதற்காக எப்படியாவது வளர்ப்பது என்பது, நல்லதோர் வீணையை நலம் கெட புழுதியில் எறியும் செயல்தான்.
எதிர்கால தலைமுறை எதையும் சாதிக்கும் தலைமுறையாக வளராது என்பது சமுதாயத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்பு.
வளர் இளம் பருவ காதல், பள்ளி-கல்லூரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொடர் கதையாகவே இருக்கிறது.
இதிலிருந்து வளர் இளம் பருவத்தினர் விடுதலை பெற வேண்டும் என்றால் வயதுக்கு ஏற்ற வயதுக்குப் பொருத்தமான பாலியல் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
குடும்பம், சமூகம், ஊடகம் ஆகியவை பருவம் அடைதல் என்பதற்கான பொருளை அறிவியல் சார்ந்த காரணங்களோடு சொல்லித்தர வேண்டும். பாலியல் ஆர்வக்கோளாறில் ஈடுபடுகின்ற சிறுவர்-சிறுமிகளின் செயல்கள் அவர்களது குடும்பத்தையும் அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், உறவினர்களையும் நண்பர்களையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
அவர்களது பிரச்சினை குறித்து தங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு பேராசிரியர்களும், ஆசிரியர் களும்,பெற்றோர்களும் தங்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
“காதலிலும் போரிலும் எல்லாமே சரிதான்” என்று அலங்காரமாக எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் தேவையற்ற மற்றும் திணிக்கப்பட்ட பாலியல் உறவு, கல்வி கற்கின்ற அடிப்படை உரிமையை காணாமல்போகச் செய்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் கல்வி மூலம் பெறுகின்ற அறிவு, பண்பாடு, வேலைவாய்ப்பு. பொருளாதார சுதந்திரம், தனித்துவமாக இயங்கும் வாய்ப்பு, அறிவும் திறமையும் வாய்ந்த அடுத்த தலைமுறையை உருவாக்குகின்ற சக்தி ஆகியவற்றை இழக்கிறார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பாலியல் கல்வி என்பது இனப்பெருக்கம் அல்லது பாலியல், பிரச்சினைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி கற்பிப்பது மட்டுமல்ல. ஆரோக்கியமான மகிழ்ச்சியான பாதுகாப்பான உடலுறவு மற்றும் இனப்பெருக்க வாழ்க்கைக்கு இளைஞர்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆரோக்கியமான சுய அறிவு மற்றும் நல்லிணக்கம், ஆரோக்கியமான உரையாடல் மற்றும் புரிதல், ஆரோக்கியமான மனநிலை மற்றும் வாழ்க்கை முறைகளை உருவாக்க பாலியல் கல்வி அவசியம் என்று உளவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தை திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, “குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது இச்சட்டத்தின்படி. 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தில் பல்வேறு இடைவெளிகள் உள்ளன. இந்தச் சட்டம் மூன்று வகையான திருமணங்களைக் குறிக்கிறது (voidable, void and void ab initio).
இச்சட்டத்தின் பிரிவு 3-ன்படி, இந்த சட்டம் இயற்றப்படும் முன்போ அல்லது பின்போ, 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் ஆகியிருந்தால், திருமணத்தின் போது குழந்தையாக இருப்பவர் விருப்பத்தின் பேரில் அவர் சேர்ந்து வாழ விரும்பினால் தவிர்க்க முடியாது (Voidable). இல்லையென்றால் பதினெட்டு வயது நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்குள் அக்குழந்தை மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்து திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கச் செய்யலாம்.
பிரிவு 12-ன்படி, குழந்தைத் திருமணத்திற்காக சட்டபூர்வமான பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து செல்லப்பட்டால் அல்லது வஞ்சகமாக ஏமாற்றி, கட்டாயப்படுத்தித் திருமணம் செய்தால் அல்லது திருமணத்திற்காக விற்கப்பட்டால் அல்லது திருமணம் என்ற பெயரில் கடத்தப்படுதல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டால் அந்தத் திருமணம் செல்லாது. (Void). பிரிவு 14- ன்படி, குழந்தைத் திருமணத்திற்கு நீதிமன்றத்தில் பிரிவு 13- ன்படி இடைக்கால அல்லது இறுதித் தடை பெறப்பட்டு, அந்தத் தடைக்கு மாறாக குழந்தைத் திருமணம் நடைபெற்றால் அத்திருமணம் செல்லாது. (Void ab initio).
இச்சட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு 326 வழக்குகளும் (தமிழ்நாடு - 55 , கர்நாடகா - 51, மேற்கு வங்கம் - 41 , அசாம் - 23, ஆந்திரா மற்றும் தெலங்கானா தலா - 19 உட்பட), 2017 ஆம் ஆண்டு 395 வழக்குகளும் ( கர்நாடகா - 65, அசாம் - 58 தமிழ்நாடு - 55 தெலங்கானா - 25 மேற்கு வங்கம் - 49 உட்பட), 2018 ஆம் ஆண்டு 501 ( அசாம் - 88, கர்நாடகா - 73 மேற்கு வங்கம் - 70 தமிழ்நாடு - 67 பிஹார் - 35 உட்பட) வழக்குகளும் பதிவாகியுள்ளன. (ஆதாரம்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்).
நடைபெறும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை பதிவான வழக்குகளுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. பெரும்பாலான வழக்குகள் பதியப்படாமல் இருக்கின்றன. ஆகவே, இந்தச் சட்டம் முழுமையாக குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யவில்லை.
மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தில் (Protection of Children from Sexual Offences Act – POCSO Act 2012), 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், அவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அது குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைக் கொடுத்தது. இத்தீர்ப்பின்படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375- ன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், மனைவியாக இருந்தாலும் பாலுறவு கொள்வது குற்றமென்று கூறியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ல் கொடுக்கப்பட்ட விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களுக்கு ஏற்ப குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை.

பெற்றோர், அவர்கள் நினைக்கும் வரனுக்குத் திருமணம் செய்ய, குழந்தைத் திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
உலகெங்கிலும் குழந்தைத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக இன்றளவும் இருந்து வருகிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது. இதைக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகக் கருத வேண்டியிருக்கிறது. இருபாலினத்தவரும் - ஆண் மற்றும் பெண் குழந்தைகள், குழந்தைத் திருமணத்தால் பாதிப்படைகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடிக் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயதிற்கு முன் திருமணம் நடைபெற்று வந்தது. தற்போது குறைந்து ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடைபெறுகிறது.
உலக அளவில், எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS -4), குழந்தைத் திருமணத்திற்கான முக்கியக் காரணிகளை ஆராய்ந்து பார்த்தால், கல்விக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைப் புள்ளிவிவரம் காட்டுகிறது.
பெரும்பாலும் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் அதிகமாக உள்ளது. 15 - 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஏழைக் குடும்பப் பின்னணியிலுள்ள குழந்தைகளுக்கு 16.6 சதவீதம்; நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு 12.7 சதவீதம்; பணக்காரக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு 5.4 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக பெண் குழந்தைகள் சுமையாக / பாரமாகக் கருதப்படுகிறார்கள்; பாரம்பரியமாக, பெண் குழந்தைகளை விரைவாகத் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது; குறைவான வயதில் திருமணம் செய்தால் குறைவான வரதட்சணை கொடுத்தால் போதும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.
பெண் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு வேறு வழியில்லை; பேச்சை மீற மாட்டார்கள்; குழந்தைத் திருமணத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு சமூக, பொருளாதார ரீதியாக மற்றும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற பெற்றோர் நம்புவது; தாயோ அல்லது தந்தையோ இல்லாத பெண் குழந்தைகளைப் பாரமரிப்பதிலுள்ள சிரமங்கள்; குழந்தைத் திருமணத்தின் பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வின்மை; ஜோதிடம், ஜாதகம் போன்றவற்றிலுள்ள நம்பிக்கை; சொந்தம் / சொத்து விட்டுப் போகக் கூடாது என்ற எண்ணம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பார்கள்.
Attention Deficient Hyperactive Disorder என்னும் ஏடிஎச்டி என்பது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு அல்லது கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடு எனலாம். இது அவதானக் குறைவு மற்றும் அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பெரும் நிலையைக் கொண்ட சிறுவயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு மண்டலம் சார்ந்த ஓர் உளவியல் குறைபாடாகும்.
சிறுவயதினர் மட்டுமன்றி பெரியவர்களுக்கும் ஏற்படும் என்றாலும் அதிகம் குழந்தைகளுக்குதான் வரக்கூடும். குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். சில குழந்தைகள் சுற்றித் திரிந்து விளையாடும். சிலக் குழந்தைகளோ அம்மாவிடம் மட்டுமே பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். இன்னும் சில குழந்தைகளோ தன் வயதொத்த குழந்தைகளோடு மட்டுமே விளையாடும்.
இவர்களைத் தாண்டி சில குழந்தைகள் எப்போதும் கால்களில் சக்கரம் கட்டியது போல் ஓயாமல் ஓடியாடி திரிந்துகொண்டிருக்கும். அவர்களது கவனம் எதிலும் இல்லாமல், விடாமல் பேசிக்கொண்டும், துறுதுறுவென்றும் சுற்றித் திரிவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைத்தான் ஏடிஎச்டி உள்ள குழந்தைகள் என்கிறோம்.
இது ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் வரக்கூடும் என்றாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரக்கூடியது. அதாவது, 10 ஆண் குழந்தைகளுக்கு 1 பெண் குழந்தை வீதம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
இதன் அறிகுறிகளை 3 - 4 வயதில் பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும், மற்றவர்களும் எளிதில் அதாவது வெளிப்படையாக கண்டறியலாம் என்றாலும் 1 1/2 வயதில் கூட சில குழந்தைகளிடம் இதன் அறிகுறிகளை சுலபமாக அடையாளம் காணலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஏடிஎச்டி 1 வயது முதல் 7 வயது வரை எந்த வயதிலும் வரக்கூடும். இது கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் என்றாலும் நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது யாவரும் கவனத்தில் நிறுத்தவேண்டிய ஒன்று.
அறிகுறிகள்
1.ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு காரணமின்றி சுற்றித் திரிவார்கள்.
2.ஒரு விளையாட்டுப் பொருளில் அல்லது ஒரு விளையாட்டில் அதிகபட்சம் 2 - 3 நிமிடங்கள் கூட கவனம், நேரம் செலுத்த மாட்டார்கள். ஆனால், அதுவே அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால் அதை விளையாடி முடிக்கும் வரை அவர்கள் கவனம் முழுதும் அதில் இருக்கும்.
3. தூக்கம் சிறிது நேரம் தான் இருக்கும். பெரும்பாலும் தாமதமாக தூங்கி சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.
4. எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.
5. ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உணவு உண்ணும் போது, வீட்டு பாடம் படிக்கும் போது.
6. அவர்கள் அதீத ஆற்றலோடு இயங்குவதால், தினசரி வேலைகளான குளிக்க வைப்பது, சரியான நேரத்தில் பள்ளிக்கு கிளப்புவது என அனைத்தும் சிரமமான ஒன்று.
7. ஏதேனும் ஒரு வேலை கொடுத்து செய்யச் சொன்னால், அதை முடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, ஓர் அறையில் இருக்கும் பொருளை மற்றொரு அறையில் இருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னால், அதை புரிந்து அவர்கள் செய்வார்கள். எனினும் அதற்குள் எக்கச்சக்கமான கவனச்சிதறல்கள் இருக்கும். ஆகையால் 1 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைக்குப் பல நிமிடங்களை வீணடிப்பார்கள்.
8. Play school, Montessori போன்றவை விளையாட்டு முறை கல்விதான் எனினும் இவர்கள் கவனமும், உட்கார்ந்து இருக்கும் நேரமும் குறைவுதான்.
9.Story time, snack time, colouring time போன்ற நேரங்களில் தன் இருக்கையில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து ஓடுவது, பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்கள் வேலையை செய்ய விடாமல் கவனம் சிதறச் செய்வது.
10.வரிசையில் நிற்கும்போது ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரிவது.
11.யாரிடமும் பேசாமல், உடன் சேர்ந்து விளையாடாமல், பாடம் நடத்தும்போது கவனிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
* சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும் போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.
* வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும் போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
* டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.
* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
* குழந்தை வளர்ப்பான் ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவது போல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
* குழந்தை அழும் போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.
* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.
உடன் பிறந்த சகோதரிகளுக்குள் சண்டையும், போட்டித்தன்மையும் அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான். ஒருவர் சரி என்று சொல்லும் கருத்தை, இன்னொரு சகோதரி தவறு என்று கூறுவார். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொள்ளும் பெற்றோர்கள், அந்த போட்டித்தன்மையை போக்குவதற்கான டிப்ஸ் இங்கே…
1) இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்:
பெற்றோருடன் நேரம் செலவிடாததன் காரணமாகவும் சகோதரிகளிடையே போட்டித்தன்மை உண்டாகலாம். எனவே பெற்றோர் எவ்வளவு வேலை இருந்தாலும், தங்கள் பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவிட வேண்டும். இதனால், அவர்களின் மன நிலையையும் அறிந்துகொள்ள முடியும்; போட்டி தன்மையையும் குறைக்க முடியும்.
2) ஒப்பிடுதல் வேண்டாம்:
பெற்றோர் தங்கள் மகள்கள் படிப்பிலும், போட்டியிலும், விளையாட்டிலும் ஏதேனும் தவறு செய்தால் ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இளைய மகள் தவறு செய்தால், “பெரியவளைப் பார்த்து கற்றுக்கொள்; அதே மாதிரி சரியாக செய்யவேண்டும்” என்று கூறுவார்கள். இது இளைய மகள் மனதில் போட்டித் தன்மையை அதிகரிக்கும். “என்னை விட, அவளைத்தான் உங்களுக்கு பிடிக்கும்” என்ற எண்ணம் சிறுவயதில் இருந்து அவள் மனதில் வளர ஆரம்பித்து விடும். எனவே இருவரில் யார் தவறு செய்தாலும் ஒப்பிட்டுப் பேசாமல், “நீ சிறப்பாக செய்தாய்; இன்னும் முயற்சி செய்தால் நன்றாக செய்யலாம்” என்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
3) தனித்தன்மையை பாராட்டுங்கள்:
“நீங்கள் இருவருமே எங்களுக்கு ஒன்றுதான்” என்று வார்த்தைகளால் கூறாமல், அவர்கள் இருவரின் தனித்தன்மையை பாராட்டுங்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருக்கும் என்று கூற முடியாது. உதாரணத்திற்கு, மூத்த மகளுக்கு இசையில் திறமை இருக்கும். அதேபோல், இளைய மகள் வரைவதில் திறமை கொண்டிருக்கலாம். அவர்கள் இருவரின் தனித்திறமையை பாராட்டி, அவ்வப்போது சிறிய பரிசுகளும் வழங்குங்கள். இதன் மூலம், இருவருமே சமமாக நடத்தப்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் ஏற்படும்.
4) எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்கள்:
சகோதரிகள் சண்டையிடுவது ஏதேனும் காரணத்திற்காக இருக்கலாம். பெற்றோர்கள் அந்த காரணத்தை விசாரிக்காமல் இருவருக்கும் தண்டனை கொடுப்பதும் அல்லது ஒரு மகளிடம் மட்டும் காரணத்தைக் கேட்டு இன்னொருவருக்கு தண்டனை கொடுப்பதும் இருவரிடையே இடைவெளியை ஏற்படுத்தும். போட்டித் தன்மையையும் அதிகரிக்கும். அதனால், இருவரின் எண்ணங்களுக்கும் சமமாக மதிப்பு கொடுக்க வேண்டும்.
5) செல்லமான கட்டுப்பாடுகள்:
சரியோ, தவறோ பெற்றோர்கள் என்ன கூறுகிறார்களோ? அதுதான் குழந்தைகள் மனதில் பதிந்து வளரும். பெற்றோர்கள் தங்கள் மகள்களிடம் “ஆரோக்கியமான போட்டித்தன்மை இருக்கலாம். ஆனால், பொறாமை இருக்கக்கூடாது” என்று சிறுவயது முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். விளையாட்டான கேலிகளும், இன்னொரு சகோதரியின் மனதில் அதிகமான காயத்தை ஏற்படுத்தும் என்பதை இருவருக்கும் புரிய வைத்து, சில கட்டுப்பாடுகளை செல்லமாக விதிக்கலாம்.
சகோதரிகளிடம் போட்டி தன்மை இருப்பது இயல்பானதே; அது ஆரோக்கியமானதாக இருப்பது நல்லது. எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாட்டின் பால் அல்லது சோயா பால் போன்றவை குழந்தைகளுக்கு செரிமானமாவது மிகவும் சிரமமான ஒன்றாகும். மேலும் இந்த பால்களில் உள்ள புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி சில குழந்தைகளுக்கு லேக்டோஸ் அலர்ஜி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். எனவே நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். அல்லது தாய்ப்பாலை பாட்டிலில் கொடுக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது. திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.
தேன் என்பது பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது. அதே போல மற்ற திரவ இனிப்புகளும் கூட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. திரவ இனிப்புகள், மாப்பிள் சிரப் போன்றவையும் ஒரே மாதிரியான பிரச்சனையை தான் குழந்தைக்கு தருகின்றன.
குழந்தைகளுக்கு ஒரே ஒரு கிராம் உப்பு என்பது ஒரு நாளைக்கு போதுமானதாக உள்ளது. உங்களது தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான உப்பு இருக்கிறது. எனவே உப்பு கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளுக்கு ஆபத்தை கொடுத்து விட்டாதீர்கள்.
பாதாம், முந்திரி என ஒட்டுமொத்த நட்ஸ் வகைகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இவை அலர்ஜியை உண்டாக்க கூடியதாகும். இவை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை கூட குழந்தைகளுக்கு கொடுக்கும். எனவே எக்காரணத்தை கொண்டும் இது போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அனைத்து குழந்தைகளுக்குமே சாக்லேட் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதில் மட்டுமல்ல பால் பொருட்களும் குழந்தைகளுக்கு சேராது. எனவே இவற்றை கொடுப்பதை குழந்தை வளரும் வரை நிறுத்தி வைக்கலாம்
முட்டை காலையில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. ஆனால் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? இந்த வைரசுக்கான அறிகுறிகள் என்ன என்பதையும், இதற்கான சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ளலாம்..
கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்று அழைக்கப்படும் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த தக்காளி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? இந்த வைரசுக்கான அறிகுறிகள் என்ன என்பதையும், இதற்கான சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ளலாம்..
தக்காளி காய்ச்சல் என்பது கேரளாவில் அதிகம் காணப்படும் அறியப்படாத காய்ச்சலாகும். இருப்பினும், இந்த நோய் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலால் வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
அறிகுறிகள்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், உடலில் கிட்டத்தட்ட தக்காளி அளவு சொறி வெளியேறும். தோலில் எரியும் உணர்வு ஏற்படலாம். நீரிழப்பு அறிகுறிகள் நாக்கில் உலர்ந்த வாயுடன் சேர்ந்து தோன்றும்.
மேலும்
* அதிக காய்ச்சல்
* உடல் வலி
* மூட்டுகளில் வீக்கம்
* சோர்வு
* தக்காளி வடிவில் சொறி
* கைகளின் நிறமாற்றம்
* முழங்கால்களின் நிறமாற்றம்
இது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை
* குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
* தொற்று நோய் உள்ளவர்களிடம் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும்.
* நோயாளிக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தூய்மையை பராமரிப்பது முக்கியம்.
* பல சமயங்களில் காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும் என்பதால் சரியான ஓய்வு தேவை.

இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.
இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை மேற்கூறிய அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் இதில் ஏதாவது ஒன்று காணப்பட்டால் கூட கண்டிப்பாக அக்குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் கூட்டிச்சென்று, இரத்தசோகை இருப்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கண்டுப்பிடித்தல் அவசியம்.
இரத்தசோகை பல காரணங்களால் உண்டாவதால், அந்நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் அதற்கான பரிசோதனை முறையை பரிந்துரை செய்வார். முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, இரத்த ஸ்மியர் பரிசோதனை, இரும்புச்சத்து பரிசோதனை, ஹீமோக்ளோபின் எலக்ட்ரோப்ஹோரெசிஸ், எலும்பு மஜ்ஜை ஆஸ்பிரேஷன் மற்றும் திசு பரிசோதனை போன்றவைகளால் இந்த நோயை கண்டறிய முடியும்.
இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காயங்கள், பழுதடைந்த திசுக்கள் குணமாக தாமதமாகும். உடல்நலக் குறைவு அடிக்கடி உண்டாகும். சிவப்பு இரத்த அணுக்களால் ஆன்டிபாடிகளை எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்படும். காயங்கள் குணமடைய தாமதமாகி, நாட்கணக்கில் காயங்களுடன் இருக்க வைக்கிறது.
இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர். அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம்.

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம்.
பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம்.
முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல் குழந்தையைப் பற்றிய பேச்சும் வருமாறு பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு குழந்தைகளுக்கும் ஏதேனும் வாங்கி வந்தால் அதை முதல் குழந்தையிடமே கொடுத்து நீ எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கும் கொடுத்து விடு எனக்கூறி முதல் குழந்தையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம்.
இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சணை பெரிதாகும் போது எப்போதும் சிறிய குழந்தைக்கு மட்டும் பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு இருவருக்கும் பொதுவாகப் பேசலாம் அல்லது நடுநிலைமை வகித்து ஒருவரையும் திட்டாமல் இருக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் முதல் குழந்தையின் மீதான கவனம் குறையவில்லை என்பதை பெற்றோர் உணர்த்தி விடலாம்.
இவ்வாறு பெற்றோர்களால் சமமாக நடத்தப்படும் குழந்தைகளிடையே சகோதரப் பாசம் அதிகரித்து நல்லுறவு நீடிக்கும். உடன் பிறந்தோரிடம் நிலவும் இந்நல்லுறவு இரு குழந்தைகளின் மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணைநிற்கும். அன்பு, பாசம் ஆகியவற்றின் ஆதாரமாக அமையும். விளையாட்டு, நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவும்.

கணினி, லேப்டாப், செல்போன் திரை முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து பாடங்களை கவனித்தபோது பலரும் சரியான உடல் தோரணையை பின்பற்றவில்லை.
கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தலால் அறிமுகமான ஆன்லைன் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கியபடி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு சென்று பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் கல்வி முறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு அசவுகரியங்களை எதிர்கொள்ள வைத்தது. டீன் ஏஜ் வயது மாணவர்களை விட குழந்தைகள்தான் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டார்கள் என்பது கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்கும் ‘பீரியாட்ரிக் ஆர்த்தோபயாட்ரிக்’ எனப்படும் எலும்பியல் நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதி கரித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளின் போது தவறான தோரணையில் அமர்ந்திருந்ததுதான் அதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கணினி, லேப்டாப், செல்போன் திரை முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து பாடங்களை கவனித்தபோது பலரும் சரியான உடல் தோரணையை பின்பற்றவில்லை. அதனால் கழுத்துவலி, முதுகுவலி பிரச்சினையை எதிர்கொண்டார்கள். அதுவே எலும்பியல் நோய்க்கு காரணமாக அமைந்துவிட்டது.
இதுகுறித்து பஞ்சாப்பை சேர்ந்த பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஹுபாங் அகர்வால் கூறுகையில், ‘‘ஆன்லைன் வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் எலும்பியல் நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதி கரித்துள்ளது.
இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் அதிக எடை கொண்டவர்கள். தவறான உடல் தோரணையில் உட்கார்ந்தது, எத்தகைய உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தது போன்றவையும் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டன. பல குழந்தைகள் கழுத்து, முதுகெலும்பு பகுதிகளில் வலியை உணர்ந்துள்ளனர்’’ என்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் சூரிய ஒளி உடலில் படாமல் வீடுகளில் முடங்கி கிடந்ததும் மற்றொரு காரணம் என்கிறார், டெல்லியை சேர்ந்த டாக்டர் ரஸ்தோகி.
‘‘கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொள்வது, சூரிய ஒளி உடலில் படும்படி சிறிது நேரம் செலவிடுவது, கை, கால்களை நீட்டி மடக்கும் எளிய பயிற்சிகளை மேற்கொள்வது, சரியான தோரணையில் அமர்வதற்கு ஏதுவான நாற்காலியை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பொருந்தும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் கட்டாயம் இடம் பெறவும் வேண்டும். ஓரிடத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்தால் ஒரு நிமிடமாவது நிமிர்ந்து நிற்க வேண்டும். அது ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதை உறுதி செய்ய உதவும். தசைகளை பராமரிக்கவும் துணை புரியும்.
குழந்தைகளுக்கு முதுகு மற்றும் கழுத்து பிரச்சினைகள் ஏற்பட்டால் பெற்றோர் அலட்சியம் கொள்ளக்கூடாது. எலும்பியல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்’’ என்றும் சொல்கிறார்.