என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கவுரவக் கொலைகள் என்பவை இந்திய சமூகத்திற்கு மாபெரும் களங்கமாகும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும்.
காதலுக்கு மரியாதை இல்லை, அரங்கேறும் ஆணவப் படுகொலைகள்..
Honour Killing, Women Safety, Violence Against Women, ஆணவப் படுகொலைகள், பெண்கள் பாதுகாப்பு,
கவுரவக் கொலைகள் என்பவை இந்திய சமூகத்திற்கு மாபெரும் களங்கமாகும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும்.
கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடந்த 5 ஆணவப் படுகொலைகள் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளன. ‘கவுரவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?’ என தானாக முன்வந்து வழக்குப்பதிந்து விடை கேட்டுள்ளது சென்னை ஐகோர்ட்டு.
ஜூன் 25 தொடங்கி ஜூலை 5-ந் தேதிக்குள்ளான 10 நாட்களில் 5 கவுரவக் கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம், ‘கவுரவக் கொலைகளை முன்கூட்டியே தடுக்க, இவை அதிகமாக நடக்கும் மாவட்டங்களை கண்டறிய ஒவ்வொரு மாநில உள்துறை செயலாளர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் போலீசாரும், மாவட்ட கலெக்டரும் கலப்பு சாதி திருமண ஜோடிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியதா?. அதுகுறித்த தகவல்களை கோர்ட்டில் ஒப்படையுங்கள். கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை இல்லையா?’ என்று கேட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூரின் சமத்துவபுரமான பெரியார் நகர் சோலைராஜ், பல்லாகுளம் பேச்சியம்மாளை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். இரண்டு மாதம் கடந்த நிலையில் பேச்சியம்மாள் கர்ப்பமடைந்தார். இதை கேள்வியுற்ற பேச்சியம்மாளின் தந்தை அழகர் இரவோடு இரவாக தூங்கிக்கொண்டு இருந்த ஜோடியை வீடு தேடி சென்று வெட்டிக்கொன்றது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த இருவருமே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்தில் வருகிறவர்கள் என்றாலும், வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற்குரியது. ஆக, சாதிகளின் படி நிலையில் ஒரு படி தங்களை உயர்வாக கருதக் கூடிய பிரிவினர் தங்களுக்கு கீழ்நிலையில் இருப்பவர்களாக கருதப்படுகிறவர்களிடம் எந்த விதமான திருமண உறவையும் வைக்க விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல, அதை கவுரவ குறைவாக கருதுகிறார்கள் என்பது தான், தொடர்ந்து நடைபெற்று வரும் கவுரவக் கொலைகள் உணர்த்தும் உண்மையாகும்.
‘இதை எப்படி கவுரவக்கொலை என்று பெயரிட்டு அழைக்கிறீர்கள்? இது காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அல்லவா?’ என்று நமது சுப்ரீம் கோர்ட்டு கேட்டது. ஆகவே, தமிழ் சூழலில் இதுபோன்ற கொலைகளை ஆணவக்கொலை என்ற பெயரிலேயே குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக சாதி ஆதிக்கம் என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேர் விட்டு கிளை பரப்பியுள்ள நிலையில் நவீன சட்டங்கள், மாறிவரும் வாழ்வியல் பார்வைகள்...., சாதி உணர்வையும், அதன் தீவிரத்தையும் ஓரளவிற்கே மட்டுப்படுத்தியுள்ளது.
1990 வரை தமிழக காவல்துறை பதிவுகளில் கவுரவக் கொலை என்ற பதிவை அனேகமாக பார்க்க முடியாது. ஆனால், அப்போதும் கவுரவக் கொலைகள் இல்லாமல் இல்லை. அந்த காலகட்டத்திற்கு முன்பெல்லாம் அப்படி நடக்கும் கொலைகள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதை பேசவே பயந்த காலமாக இருந்த நிலை மாறி, இன்று அவை விவாதத்திற்கு மட்டுமின்றி, அரசும், நீதிமன்றமும் இதை மிகக்கடுமையாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.
இது ஏதோ இந்தியாவில் மட்டும் என்றில்லை. உலகம் முழுமையும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஐ.நா. சபை 2000-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 20 ஆயிரம் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. அதில் 20 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன.
கவுரவக்கொலைகள் நடப்பதற்கான காரணங்கள்
தங்கள் விருப்பப்படி தான் பிள்ளைகள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பு சிதைவடைவதால்... அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியாமல்...
சமூக அடுக்கில் கீழ் நிலையில் இருக்கும் சாதியுடன் மன உறவு வைக்கும்போது கவுரவம் பாதிக்கப்படுவதாக எழும் மனஉளைச்சல்கள்.
பெற்றோர்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பிள்ளைகள் துரோகம் இழைத்துவிட்டார்கள் எனக்கருதுவது.
சொந்த சாதியில் உள்ளவர்களின் ஏச்சுக்கும், ஏளனத்திற்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற மன அழுத்தம்.
சுயசாதிப் பற்றும், குறுகிய பார்வையும் புதிய உறவுகளை ஏற்க மறுப்பது.
பாலினக் கவர்ச்சிக்கு ஆளாகி தவறான துணையை தன் பிள்ளை தேர்ந்தெடுத்துவிட்டதாக பெற்றோருக்கு உண்டாகும் ஆத்திரம்.

கவனம் பெற்ற கவுரவக் கொலைகள்
2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முருகன், கண்ணகி இருவரும் காதலித்த காரணத்தால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
2012-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி இளவரசனின் பெற்றோர்களால் முழுமனதாக ஏற்கப்பட்ட நிலையில், திவ்யாவின் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டது. முடிவில் திவ்யா இளவரசனிடம் இருந்து பிரிக்கப்பட்டார். இளவரசன் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
2015-ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூபதிபுரம் கிராமத்தை சேர்ந்த விமலாதேவி பெற்றோரால் கொல்லப்பட்டார். ஆனால், தற்கொலை என போலீஸ் ஆதரவுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், விமலாதேவியை காதலித்த திலீப்குமார் இது தற்கொலையல்ல, கொலை என கோர்ட்டுக்கு சென்று நிரூபித்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் போலீசார் கவுரவக் கொலைகளுக்கு துணை போகக்கூடாது என கண்டித்ததோடு இதுபோன்ற சாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிப்பிரிவையே தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார். ஆனால், இதுவரை அதற்கான தனிச்சட்டம் ஏன் ஏற்படுத்தப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
2015-ம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற இளைஞர் காதலித்த காரணத்தால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் துணிச்சலாக களம் இறங்கி விசாரித்த போலீஸ் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவும் உயிர் இழக்க நேரிட்டது.
2016-ல் திருச்செங்கோடு சந்தோஷ், சுமதியை காதலித்ததை சுமதியின் பெற்றோர்கள் ஏற்ற நிலையில், சந்தோஷின் பெற்றோர் ஏற்கவில்லை. பிறகு ஏற்றுக்கொள்வதாக சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தனர். வங்கி மேலாளரான மகன் வெளியூர் சென்ற நிலையில், மருமகள் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டனர். இதனால் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் சந்தோஷின் பெற்றோர்.
நாமக்கல் வாழ்வந்தி கிராமத்தின் ஐஸ்வர்யா தான் பார்த்த மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் மகளை எரித்து கொலை செய்தார் தந்தை தங்கராஜ். இவர் தற்போது சிறையில் உள்ளார்.
2016-ல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை காதலித்தார். இதனை விரும்பாத கவுசல்யாவின் தந்தை சங்கரை நடுவீதியில் வைத்து வெட்டிக் கொன்றார். இந்த வழக்கில் கவுசல்யாவின் குடும்பத்தில் ஆறு பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 192 சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஆறு சம்பவங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான ஆணவப் படுகொலைகள் கவனப்படுவதேயில்லை. அதாவது பத்தில் ஒன்று தான் கவனம் பெறுகின்றன என சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர்.
தமிழகத்தை விட, வட இந்தியாவில் சாதி ஆணவக்கொலைகள் அதிகம்.
2018-ல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூவர் அடங்கிய அமர்வு கவுரவக் கொலை தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் தொடுத்த வழக்கில், கவுரவக் கொலைகள் என்பவை இந்திய சமூகத்திற்கு மாபெரும் களங்கமாகும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும். சாதி கலப்பு மணம் புரிந்த இளம் ஜோடிகள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட கலெக்டரையோ, போலீசையோ அணுகும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்து அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 6,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா - சிறிதளவு,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை) :
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கசகசா 2 - டீஸ்பூன்,
முந்திரி - 6,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு:
தனியா, துவரம் பருப்பு தலா - 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 4,
கொப்பரை தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் 1 டீஸ்பூன்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.
இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள்.

செய்முறை:
பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள 2 வகைகளை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.
இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள்.
சுவையான ஸ்பெஷல் தக்காளி சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் நாற்றத்தை சரிசெய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.
பழங்காலம் முதலே நம் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானவை பூண்டு மற்றும் வெங்காயம். இந்த இரண்டு பொருட்களும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை, அதிக அளவு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இவை எவ்வளவுதான் ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் அவற்றை பச்சையாக உண்டால், வாயில் நாற்றம் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுடன் பேசும்போது அது அவர்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் நாற்றத்தை சரிசெய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆய்வுகளின்படி பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சில வேதிப்பொருட்கள்தான் வாயில் நாற்றத்தை உண்டாக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவற்றில் உள்ள அல்லிசின், மெதில் சல்பைட் மற்றும் சிஸ்டைன் சல்பாக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். மெதில் சல்பைட் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும்போது வெளியேறுகிறது. இவற்றை சாப்பிடும்போது இதில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்து வாய் நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் நாற்றத்தை பாலானது சரிசெய்யும் என்று கூறுகிறார்கள். சாப்பிட்டு முடித்த பின் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை உடனடியாக குறைக்கும். சாப்பிட்டு முடிப்பதற்கும், பால் குடிப்பதற்கும் இடையில் குறைந்தது 15 முதல் 20 நிமிடம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.
பல் மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆப்பிளில் உள்ள இயற்கை என்சைம்கள், பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சல்பரின் வீரியத்தை குறைக்கும். இதனால் உங்களுக்கு கிடைப்பது துர்நாற்றமில்லாத நறுமண வாசனையாகும். எனவே சாப்பிட்டு முடித்தபின் ஒரு ஆப்பிளோ அல்லது ஆப்பிள் ஜூசோ குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாசனையை போக்க இதுதான் மிகவும் எளிமையான அதே சமயம் உபயோகமான வழி ஆகும். வெதுவெதுப்பான நீரை, உணவு சாப்பிட்டப்பின் குடிப்பது உங்கள் வாயை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதுடன் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டி பாக்டீரியால் பண்புகள் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி ஆகும். இது பூண்டு மற்றும் வெங்காயத்தினால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை விரட்டுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எலுமிச்சை சாறுடன் சூடான நீரை அதில் கலந்து 3 முதல் 4 முறை வாய் கொப்பளிக்கவும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டும்.

குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை எந்த உணவுகளை கொடுக்க வேண்டும், எந்த உணவுகளை கொடுக்கக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
குழந்தைக்கு உணவூட்ட விரும்புவோர் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது. அதன் பிறகு வேண்டுமானால் உணவில் மாட்டுப்பாலை சேர்த்து கொள்ளலாம். எருமை பால் வேண்டவே வேண்டாம். முட்டை சேர்த்து கொள்ளலாம். கோதுமை பண்டங்களை தரலாம்.
ஒன்பது முதல் 12 மாத குழந்தைக்கு பட்டாணி, பீன்ஸ், பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம். குழந்தைக்கான உணவை மூன்று வேளையும் தரலாம்.
குழந்தைக்கு 2 வயது ஆகும்வரை எந்தவிதமான கொட்டைகளையம் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. முழு தானியங்களை ஐந்து வயதுவரை கொடுக்கக்கூடாது. தேனை ஒரு ஆண்டு நிறையும் முன்பு தர கூடாது. வேகவைத்த முட்டை மற்றும் கோதுமை பொருட்களை ஆறு மாதம் வரை தர கூடாது. பால், சிறு தானியங்கள் போன்றவற்றை குழந்தைக்கு ஐந்து மாதம் முடியும் முன்பு தர கூடாது. குழந்தைக்கு ஆஸ்துமா, எக்சிமா போன்றவை இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை மீன், கோதுமை, மாட்டுப்பால் போன்றவற்றை தராமல் தவிர்க்க வேண்டும்.
குழந்தைக்கு உப்பு போட்டு தரவேண்டும், சர்க்கரைபோட்டு உணவூட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை கேட்காதீர்கள். குழந்தைக்கு சத்தான உணவுதான் தேவையே தவிர ருசியான உணவு தேவையில்லை.
குழந்தை திட உணவை சில சமயம் எடுக்காது. பொதுவாக பசியாக இருந்தால் திட உணவு அதை உடனே திருப்தி படுத்தாது. இதனால் பாலைத்தான் விரும்பும். சில உணவை விரும்பாவிட்டாலும், சரியான முறையில் குழந்தைக்கு உணவை தராவிட்டாலும், சரியான வெப்பத்தில் உணவை தராவிட்டாலும் குழந்தை திட உணவை சாப்பிட மறுக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் உணவை சரியாக முறையாக செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்து கொண்டு குழந்தைக்கு பாலுட்ட வேண்டும்.

அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூந்தல் வறண்டு போகக் கூடும். இந்த பிரச்சனையை கடுகு எண்ணெய் கொண்டு தீர்வு காணலாம்.
நீங்கள் அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூந்தல் வறண்டு போகக் கூடும். இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். உங்கள் கூந்தலை கடுகு எண்ணெய் கொண்டு அழகாக்கி விடலாம். இந்த கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கடுகு எண்ணெய் கூந்தலுக்கு ஒரு நல்ல கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது. வறண்ட கூந்தலால் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை இந்த எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து சரி செய்யலாம். தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
ஒரு கப்பில் கடுகு எண்ணெய் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும். அதை தலையில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துண்டை எடுத்து அதை சூடான நீரில் நனைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதை தலையில் கட்டி 30-40 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசுங்கள். இப்படி செய்து வந்தால் சீக்கிரமே வறண்ட கூந்தல் பொலிவாக மாறும். கூந்தல் அழகு பெறும்.
கடுகு எண்ணெய் தேங்காய் எண்ணெயைவிட சற்று அடர்த்தி அதிகம் என்பதால் அதில் பிசுபிசுப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். சாதாரணமாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வது போல் அப்ளை செய்து கொள்ளலாம். வெளியில், அலுவலகத்துக்கு என்று செல்பவர்களாக இருந்தால், இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையுடன் கலந்து லேசாக சூடு செய்து தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரையிலும் நன்கு அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் எப்போதும் போல மைல்டான ஷாம்பு கொண்டு தலையை அலசி விடுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இதை செய்து பாருங்கள். அதனால் கிடைக்கும் பலனை நீங்களே நன்கு உணர்வீர்கள்.

கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு சாதம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க:
மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
கறிவேப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து வையுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் சாதம், பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க:
மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
கறிவேப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6.

செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து வையுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் சாதம், பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சத்தான சுவையான கறிவேப்பிலை சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காதல் வாழ்க்கையில் நம்மைக் கடந்து போகிற ஒரு நிகழ்வு என்பதை புரிந்து கொண்டால் பிரேக் அப் சோகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிட முடியும்.
கல்வி, வேலை என்பது போல காதலும் வாழ்க்கையில் நம்மைக் கடந்து போகிற ஒரு நிகழ்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அது வெற்றியை நோக்கிப் பயணித்தால் திருமணத்திலும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் இடம் கொடுக்காமல் போனால் பிரேக் அப்பிலும் முடிகிறது என்ற எளிய உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும். பிரேக் அப் சோகத்திலிருந்து மிக விரைவில் வெளியேறிவிட முடியும்.
வழக்கமாக உங்களுக்கு பிடித்ததை விட உங்களுடைய காதலருக்கு பிடித்தது போலத்தான் அதிகமாக ஆடைகள் அணிந்திருப்பீர்கள். நடை பாவனை இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முதலில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஆடைகளை அணியுங்கள். புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட உங்கள் மனதை உற்சாகமாக மாற்றிவிடும்.

காதலித்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களைத் தூக்கியெறிவது தான் நல்லது. அதை பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதெல்லாம் வீண். அது சிலருக்கு தன்னை குற்றவாளியாகவும் தன்னுடைய இயலாமையையும் அல்லது தான் காதலித்த நபர் மீது கோபத்தையும் வன்மத்தையும் மட்டுமே அதிகரிக்கச் செய்யும். அதற்கு உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில், நீங்கள் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி பக்குவமடையும் வரையில், உங்கள் நம்பிக்கைக்குரிய யாரிடமாவது கொடுத்து வைத்திருங்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு காட்ட வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் அதையதை அப்படியே வெளிக்காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெளிவர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும்.
இதுவரையிலும் காதலனுடன் மட்டுமே வெளியில் சென்று, நண்பர்களையெல்லாம் மறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருப்பீர்கள். அதனால் மீண்டும் நண்பர்களைத் தேடிப் போங்கள். இதுவரை வாழ்ந்த ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள்.

நடந்து முடிந்த பழைய விஷயங்களைத் தோண்டி ஆராய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் உங்கள் முன்னால் காதலனை நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் உங்கள் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்து விடுங்கள். சமூக ஊடகங்களில் அவர்களுடன் தொடர்பில் இருப்பதால், நம் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவர்களை சார்ந்து வாழாமல் நீங்கள் தனியாக சுதந்திரமாக உணர்வதற்கு, அவர்களுடன் இருக்கும் சமூக ஊடகத் தொடர்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.

காதலித்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களைத் தூக்கியெறிவது தான் நல்லது. அதை பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதெல்லாம் வீண். அது சிலருக்கு தன்னை குற்றவாளியாகவும் தன்னுடைய இயலாமையையும் அல்லது தான் காதலித்த நபர் மீது கோபத்தையும் வன்மத்தையும் மட்டுமே அதிகரிக்கச் செய்யும். அதற்கு உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில், நீங்கள் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி பக்குவமடையும் வரையில், உங்கள் நம்பிக்கைக்குரிய யாரிடமாவது கொடுத்து வைத்திருங்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு காட்ட வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் அதையதை அப்படியே வெளிக்காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெளிவர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும்.
இதுவரையிலும் காதலனுடன் மட்டுமே வெளியில் சென்று, நண்பர்களையெல்லாம் மறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருப்பீர்கள். அதனால் மீண்டும் நண்பர்களைத் தேடிப் போங்கள். இதுவரை வாழ்ந்த ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள்.
யோகா செய்வதால் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடிவதோடு, தாம்பத்திய வாழ்க்கை இன்னும் அற்புதமாக அமையும். செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்களைப் பார்க்கலாம்.

பூர்ணா டிடாலி ஆசனம் (Poorna Titali Asana) இந்த ஆசனம் பட்டாம்பூச்சியின் நிலை போன்று இருக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக உட்கார்ந்து, படத்தில் காட்டியவாறு இரண்டு பாதங்களும் ஒன்றோடு ஒன்று தொடும் நிலையில், கைகளால் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால், தொடைகள் நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகி, இடுப்பு பகுதி நன்கு விரிவடைந்து, இனப்பெருக்க உறுப்புகள் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.
ஹனுமனாசனா (Hanumanasana) இந்த ஆசனமானது, படத்தில் காட்டியவாறு 180 டிகிரி அளவு கால்களை விரிக்க வேண்டும். பின் கைகளை மேலே தூக்கி, மெதுவாக கால்களை தொட வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தினால் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தம், டென்சன் போன்றவை குறைந்து, செக்ஸ் வாழ்க்கையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
மலையேறும் நிலை (Mountain Climber Pose) இந்த ஆசனத்திற்கு தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊற்றி, மேலே எழுந்து, இடது காலை முன்புறமாக தூக்கி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளிவிட வேண்டும். இதேப்போல் வலது புறம் செய்ய வேண்டும். இந்த யோகாசனத்தின் மூலம் இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, இடுப்பு எலும்புகள் வலிமையடைந்து, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் ஸ்ட்ரெட்ச் ஆகி, படுக்கையில் நன்கு செயல்பட உதவும்.
புஜங்காசனம் (Bhujangasana) இந்த ஆசனம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஆசனத்தின் போது, தரையில் குப்புற படுத்து, உள்ளங்கைகளை தரையில் ஊற்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு உடலை மேலே தூக்க வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்பும் போது மூச்சை வெளிவிட வேண்டும். இதேப்போன்று 10 முறை தினமும் செய்து வந்தால், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலுறவில் ஈடுபடும் போது சிறப்பாக செயல்பட முடியும்.
கர்ணபிதாசனா (Karnapidasana) இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். ஆனால் இன்த ஆரசத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.

கருச்சிதைவை தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துகொள்ளச் சிலர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்ல பயப்படுகிறார்கள்.
கருச்சிதைவுக்கு பின் அறிகுறிகள்
காய்ச்சல்
வயிற்றில் வலி
யோனியிலிருந்து கடுமையான இரத்தப்போக்கு
கருவுற்றிருந்த பெண்ணிடம் இந்த அறிகுறிகள் காணப்பட்டால் அது கருச்சிதைப்பின் விளைவாக இருக்கலாம். ஆனால் இவை கருச்சிதைவின் விளைவாகவும் இருக்கக்கூடும். கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்தல், இடுப்பெலும்புக்குழி அழற்சி காரணமாகவும் இருக்கலாம்.
கருச்சிதைப்பைச் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துகொள்ளச் சிலர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்ல பயப்படுகிறார்கள். அல்லது வெட்கப்படுகிறார்கள். சிலர் குறிப்பாகக் கருச்சிதைப்பு இரகசியமாகவோ, சட்டத்திற்கு மாறாகவோ செய்யப்பட்டிருந்தால் மருத்துவ உதவியை நாடுவதற்கு கூட அஞ்சுகிறார்கள்.
கடுமையாக நோயால் பாதிக்கப்படும் வரை அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார்கள். இந்தக் காலதாமதம் மரணம் வரை கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம். கருச்சிதைப்பைத் தொடர்ந்து கடுமையான இரத்தப்போக்கு (மாதவிலக்கில் இரத்தம் போவதை விட அதிகமாக) அல்லது தொற்று ஏற்படுதல் மிகவும் ஆபத்து. உடனே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் அதிர்ச்சிக்கு சிகிச்சை தரவும். தொற்று ஏற்பட்ட அறிகுறிகள் இருந்தால், குழந்தை பிறந்த பிறகு காய்ச்சலுக்கு மருந்து தருவதைப் போலவே தரவும்.

ராஜ்மாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராஜ்மாவில் சுவையான சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் - அரை கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி - அரை கப்,
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும்.
இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஒற்றை மூலிகை, ஆனால் பல நோய்களுக்கு மருந்தாகும், அதுதான் மூக்கிரட்டை. இந்த கீரையை எந்த முறையில் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒற்றை மூலிகை, ஆனால் பல நோய்களுக்கு மருந்தாகும், அதுதான் மூக்கிரட்டை.
மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.
இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது.
மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாக காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.
மூக்கிரட்டை வேரை லேசாக இடித்து, விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும். மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், சிறுநெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சம அளவு எடுத்து, தூளாக்க வேண்டும். இதை தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து அழகு மிளிரும்.

பெண்கள் தலைமுடியின் அடர்த்திக்கேற்ப சரியான ஹேர்ஸ்டைல் தேர்வு செய்தால், நிச்சயம் அடர்த்தியாகத் தெரியும் மாயையை உருவாக்கலாம்.
ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் அல்லது ஸ்ட்ரெயிட் ஹேர்ஸ்டைல் எப்போதும் மெல்லிய தோற்றத்தைத்தான் தரும். வேவி (Wavy) அல்லது கர்லிங் செய்வதால் தலைமுடி சற்று வால்யூம் பெறும். பார்ட்டிஷன் அல்லது இரண்டு பிரிவுகளாக தலைமுடியைப் பிரிக்கும்போது தலையின் நடுவில் பிரிக்காமல், ஒரு பக்கமாகப் பிரிப்பதன் மூலம் முடிகளின் அடர்த்தி அதிகமாகத் தெரியும். உங்கள் முக அமைப்பு சிறியதாக இருந்தால், அதிகளவு வேவ்ஸ் இருப்பது சிறந்தது. இந்த வேவி ஹேர்ஸ்டைல், நன்கு படிந்திருக்க அவசியமில்லை. கட்டுக்கடங்காத வேவி ஹேர்ஸ்டைல், வால்யூமை மட்டுமல்ல ஸ்டைலிஷ் தோற்றத்தையும் சேர்த்துக்கொடுக்கும்.
கிரீடம் சூட்டப்படும் இடத்தில் பின்னலிடுவதால், மெல்லிய முடிகள் ஒன்றிணைந்து அடர்த்தியான கூந்தல் இருப்பதுபோன்ற மாயை உருவாக்க முடியும். எப்போதும் பின்னப்படும் இடத்தில் இல்லாமல் வித்தியாச இடத்தில் பின்னலிடுவதால், மெல்லிய தலைமுடியை மறைப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் கவனத்தையும் சிதறடிக்க முடியும். பகட்டானத் தோற்றத்தையும் பெறலாம்.
பெண்களின் க்ளாசிக் ஹேர்ஸ்டைல் என்றாலே அது `பண்' அல்லது `கொண்டை’தான். மெல்லிய முடிகளைக்கொண்டிருப்பவர்கள், உச்சந்தலையில் ஏற்றி சிறிய கொண்டை போட்டாலே போதும். ஆனால், இந்த பண் சீராகச் செதுக்கிவிட்டதுபோல் இல்லாமல், `மெஸ்ஸி' அல்லது சற்று கலைந்தபடி இருப்பது நல்லது. பாரம்பர்ய உடையாகட்டும், மாடர்ன் அவுட்ஃபிட்டாகட்டும் எல்லாவிதமான உடைகளுக்கும் இந்த ஹேர்ஸ்டைல் பொருந்தும்.
அனைத்துவிதமான முக வடிவமைப்புக்கும் ஏற்ற ஹேர்ஸ்டைல் இந்த `போனிடெயில்'. நெற்றிப் பகுதியிலிருந்து செதுக்கிவிடாமல் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கூந்தலைச் சீவவேண்டும். அப்போதுதான் நன்கு படிந்திருக்கும் முடிகளும் `பெளவுன்ஸாகி’ அடர்த்தியான மாயையை உருவாக்கும். அதோடு, முடி நீண்டிருப்பதுபோன்ற தோற்றத்தையும் இந்த போனிடெயில் கொடுக்கும். தலைமுடி நன்கு படிந்தபடி இல்லாமல், கலைந்தபடி இருப்பதே மெல்லிய கூந்தல்கொண்டவர்களுக்கு மிகவும் சிறந்தது.
நீளமான முடி விரும்பாதவர்கள், யோசிக்காமல் `பாப் கட்' ஆப்ஷனைத் தேர்வுசெய்யலாம். இந்த ஸ்டைல், தலைமுடி அடர்த்தியாக இருக்கிறதா இல்லையா போன்ற கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு கொடுப்பதேயில்லை.