என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைக்கு எப்போது உணவை ஆரம்பிக்க வேண்டும் என்பதை தாயார் தெரிந்து கொள்வது நல்லது.

    பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற தொல்லைகள் வரலாம். உணவு நஞ்சாவது , பேதியாவது போன்றவை ஏற்படும். ஆகவே, உணவு கொடுக்கும் முன்பு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    குழந்தை நான்கு மாதமாக இருக்கும்போது தாய்ப்பால் , பார்முலா பால் அல்லது கதகதப்பான நீரில் தானிய உணவை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம் . வேகவைத்த ஆப்பிள் மற்றும் வேக வைக்காமல் வாழை மற்றும் பப்பாளி ஆகியவை கொடுக்கலாம்.

    காய்கறிகளில் காரட், காலிப்ளவர், உருளை , சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து நன்றாக மசித்து சிறிது சிறிதாக கொடுக்கலாம் . இதை சூப் மாதிரி திரவ வடிவில் கொடுப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் இந்த உணவை தர வேண்டும். முட்டை தர கூடாது.

    ஐந்து மாத குழந்தைக்கு தினமும் இருவேளை உணவு தரலாம். காலையில் குழைந்த சாதம், மாலையில் காய்கறிகள் அல்லது பழம் ஆகியவற்றை தரலாம் . திராட்சையை உரித்து தரலாம், மாம்பழம் தரலாம். முட்டை அல்லது தானியங்கள் தர கூடாது.

    ஆறு மாத குழந்தைக்கு வித்தியாசமாக உணவு தரலாம் . இறைச்சியை வேகவைத்து நன்றாக மசித்து தரலாம். உப்பு, பூண்டு, வாசனை பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . இந்த குழந்தைகளுக்கு உணவு கொஞ்சம் திடமாக இருக்கலாம். தினமும் இருவேளை உணவு தருவது நல்லது . அதன் பிறகு குழந்தை தவழ ஆரம்பிக்கும்போது விருப்பம் போல உணவூட்டலாம்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஜூஸை தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 1
    பீட்ரூட் - 1
    ஆப்பிள் - 1
    லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
    தேன் - விருப்பப்பட்டால்

    ஜூஸ்

    செய்முறை :

    கேரட், பீட்ரூட், ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும்

    மிக்சியில் வறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ், தேன் சேர்த்து கலந்து பருகவும்.

    சத்தான ஜூஸ் ரெடி. 
    உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
    உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.

    சிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல்(weight) எடையை குறைக்க முதலில் நாம் எண்ணும்போது, "உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது" என்று நினைத்து, உடல் எடையைக்(weight) குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

    உடல் எடையை(weight) குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை(weight) குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.
     
    இடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

    உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும்(weight) ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை  செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦ முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.
    சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட, சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட, சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம், தவிர, பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே விரைப்புத் தன்மை குறைந்து விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    ஆண்மைக்குறைவு ஏற்படுவதைத் தவிர்க்கவும். குறைபாடு அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது முதல் வேலை. இதற்கு பரிசோதனை முதல் சிகிச்சை வரை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கட்டுப்பாடான வாழ்க்கை; ஊட்டமுள்ள - அதேவேளையில் சர்க்கரையை மிகைப்படுத்தாத உணவு முறை, உடற்பயிற்சிகள், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதல் ஆகியவை மிக முக்கியம்.

    உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது இரத்த இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடாமலும், இயல்பான அளவைவிட அதிகமாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இரத்த சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இலக்காக வைத்து அதற்கேற்ற வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

    தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதோடு, ஆண்மைக்குறைவு ஏற்படாமலும் தடுக்கிறது.
    ஒரு காலத்தில் படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்று தவிர்த்த காலம் போய் இன்று பிறவி எடுத்ததே செல்பி எடுப்பதற்குத் தான் என்று என்னும் அளவிற்கு இந்தக் காலம் மாறியுள்ளது.
    காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை படம் எடுத்து செல்பி எனும் (தாமியாக) பதிவிட்டு ‘லைக்‘கிற்காக ஏங்கிக் காத்திருக்கிறது இன்றைய இளைஞர்கள் கூட்டம். செல்போன் பயன்பாடு நல்லது செய்கிறதா மனிதனுக்கு கெடுதல் செய்கிறதா என்று சமூக வெளியில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் அளவிற்கு இன்று செல்போன் நம்மிடையே வாழ்வில் கலந்து போன விஷயமாக அமைந்துள்ளது. அது தினமும் பல தகவல்களை உலக அளவில் அள்ளிக்கொண்டு வந்து வழங்கி வருகிறது.

    ஆரம்பத்தில் தகவல் தொடர்பிற்காக செல்போனை மருந்து போல பயன்படுத்தி வந்த மனிதன் இன்று அது மனிதனை அடிமைப்படுத்தும் மதுவின் போதை போல அமைந்துள்ளது. தாமி எனப்படும் செல்பி பட மோகம் மக்கள் மத்தியில் பெரிதும் வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. பிரபலங்கள் முன் படம் எடுப்பது, ரெயில் முன் படம் எடுப்பது, ஆளைக் கொல்லும் கொடிய மிருகங்கள் அருகே சென்று படம் எடுப்பது என்பது தொடங்கி அதிகாலை வாக்கிங் செல்பி, உடற்பயிற்சி நேரத்தில் செல்பி, குளியலறை செல்பி, உணவு நேர செல்பி, படுக்கை அறை செல்பிகள் என்று செய்யும் செயல் ஒவ்வொன்றினையும் குறித்து எடுக்கப்படும் செல்பிகள் மோகம் வளர்ந்து கொண்டே செல்கிறது.

    இதுவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 90 மில்லியனுக்கு மேற்பட்ட படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு லைக் மற்றும் கமெண்ட்ஸ் பெறப்பட்டுள்ளது. இது நமக்கு செல்பி மீது இருக்கும் மோகத்தையும் அதன் காரணமாய் ஏற்படும் ஆபத்தை அலட்சியப்படுத்தும் போக்கினையும் உணர்த்துவதாய் உள்ளது.

    நடை, உடை, பேச்சு அணிகலன்களில் நாகரிகம் வந்தது போல தற்போது ஆபத்தான செல்பி எடுத்துப் பதிவிடுவதும் நாகரிகப்போக்காய் வளர்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஒரு படத்தினை எடுத்து அதனை பதிவேற்றம் செய்து மற்றவரின் லைக்கைப் பெறுவது என்பது தன்னம்பிக்கை மற்றும் சுய கவுரவத்தை கொடுப்பதாக மனரீதியாக நம்பப்படுகிறது. பொதுவாக செல்பி படத்தினைப் பதிவிடுவோரின் கூற்று தனது இருப்பை பதிவு செய்தலும் மற்றும் வெளிகாட்டலுமே செல்பியின் பணி என்று தொடங்கியது. இன்று வாழ்வில் தவிர்க்க இயலாத நடைமுறையாக ஆகியுள்ளது.

    வளரும் செல்பி மோகத்தின் ஆபத்தினை உணர்ந்த அரசாங்கம் சில பகுதியில் செல்பி எடுக்கத்தடை விதித்து உள்ளது. தமிழக கோவில் கோபுரங்கள், ரெயில் நிலைய இருப்புப்பாதைகள், விமான ஓடு பாதைகள், அணைக்கட்டுப் பகுதிகள், அனல்மின் நிலையபகுதிகள், தேசிய நெடுஞ்சாலைத் திருப்பங்கள் போன்ற ஆபத்தான பகுதிகளில் செல்பி எனும் தாமி எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 15 இடங்களில் செல்பி படங்கள் எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது, இதுமட்டுமின்றி தற்போதைய மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அந்தந்த மாநில அரசிற்கு இது போன்று ஆபத்தான இடங்களில் எச்சரிக்கைப் பலகை வைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    டிக் டாக், ஷேர்சாட்டில் காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான ஒவ்வொரு செயலினையும் படத்துடன் பதிவேற்றம் செய்து பின்னணியாக திரைப்படத்தின் பாடலையும், வசனத்தையும் பதிவு செய்து லைக்கிற்காக ஏங்கிக் காத்து நிற்கிறது இன்றைய இளைஞர்கள் கூட்டம். இதுமட்டுமல்லாது லைக்கிடைக்க வில்லையே என்ற ஏக்கத்தின் விலைவாக தன் விலைமதிப்பில்லா தனது உயிரையும் மாய்த்துக்கொள்கின்ற பரிதாப நிலையும் இன்று பல இடங்களில் அரங்கேறுகிறது.

    உயிருக்கு உலை வைக்கும் செல்பி மோகம்...

    திரிலிங்கான படத்தினைப்போட்டு அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முயற்சிகள் பல ஆபத்தில் போய் முடிகிறது. சமீபத்தில் புதுக்கோட்டையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் செல்பி மோகத்தின் விளைவால் ரெயில் மோதி ஒருவர் உயிரிழந்த பரிதாப நிலையும் நாளேடுகள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆபத்தான செல்பி படம் பதிவேற்ற மோகத்தின் விளைவாக இந்திய அளவில் இதுவரை 259-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து இருப்பதாக காவல்துறைக் கணக்கெடுப்பு கூறுகிறது.

    ஒரு காலத்தில் பொழுதுபோக்கு என்பது தமது வேலை நேரம் போக எஞ்சி இருக்கும் நேரம் மட்டுமே ஆகும். ஆனால் இன்றைய நாகரிகச் சூழலில் முழு நேரமும் பொழுது போக்கிற்காக ஒதுக்கப்படுகிறது. தனது வாழ்க்கை நகர்வினைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இன்றைய இளம் வயதினர் கையில் ஒரு செல்போனுடன் பெரும் பொழுதினைக் கழிப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது. சினிமா பாடலுக்கு ஆடுவது, சினிமா வசனங்களுக்கு நடிப்பது, பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டி ஆடைகளின் அளவினைக் குறைத்துப் பதிவிட்டுக் கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் போக்கும் இன்று பரவலாக காணப்படுகிறது.

    லைக் என்னும் விருப்பத்தினைப் பெரும் பொருட்டு லைப் என்னும் வாழ்க்கையை துச்சமாக என்னும் போக்கு வளர்ந்த வண்ணம் உள்ளது. ஒரு காலத்தில் தன்னையும் தன் அதீத செயலையும் காட்டிடும் வகையில் தலைகீழாக நடப்பது, தண்ணீரில் மிதப்பது, மரத்தின் உச்சியில் இருந்து குதிப்பது என்று சாகசம் செய்வது போய் இன்று வலைத்தள மோகத்தின் விளைவால் அழகான உயிரையும், வாழ்க்கையும் பெரிதாக எண்ணாமல் எடுக்கும் செல்பிகள் பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. இதனால் குடும்பமே பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

    அடுத்தவர் விருப்பத்தினை பெருவதற்காக எடுக்கப்படும் படங்கள் ஒருபுறம் இருந்தாலும் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றை கேலியாக்கும் வகையில் எடுக்கப்படும் பதிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் சமூக ஆபத்தினை ஏற்படுத்துகிறது. லைக்கினை பெருவதற்காக தமது வீரத்தினை வெளிப்படுத்துகிறோம் என எண்ணிக் கொண்டு சமூக அமைதிக்கு ஆபத்தான செயல்களை பதிவிட்டு பின் சிறை தண்டணைக்கு உள்ளாகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது,

    ஒரு காலத்தில் படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்று தவிர்த்த காலம் போய் இன்று பிறவி எடுத்ததே செல்பி எடுப்பதற்குத் தான் என்று என்னும் அளவிற்கு இந்தக் காலம் மாறியுள்ளது.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்னும் முதுமொழிக்கு ஏற்ப செல்போனில் செல்பிகளை அளவுடன் பதிவிட்டு மகிழ்வோம். லைக்கை விட லைப்பே உயர்வானது என்பதை உணர்வோம். அறிவியல் நல்ல சேவகன் ஆனால் கெட்ட எஜமானன் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்.

    முனைவர் பெ.வைரமூர்த்தி, இணைப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, குளித்தலை.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சப்பாத்தி - 5
    முட்டை- 2
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி,  கறிவேப்பிலை  -  சிறிதளவு
    எண்ணெய்  - 4 ஸ்பூன்
    உப்பு - தேவைாயன அளவு

    முட்டை கொத்து சப்பாத்தி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கி பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும்.

    சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும்.

    முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான முட்டை கொத்து சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நற்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.
    தாங்கள், தங்களின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பண்புகளை, முதலில் பெற்றோர்கள் பயிற்சிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தை பின்பற்ற ஆரம்பிக்கும். உதாரணமாக, எதையாவது கேட்கும்போது, "ப்ளீஸ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், எதையாவது பெறும்போது, "தாங்க்யூ" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர விரும்பினால், அந்தப் பண்புகளை முதலில் நீங்கள் தவறாமல் பின்பற்ற தொடங்க வேண்டும்.

    நல்ல பண்புக்கூறுகள் என்பது, நடத்தைமுறை, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் ஆகிவற்றோடு தொடர்புடையது. இப்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.

    ஒரு குழந்தை தனது நடத்தையில் சற்று வழுக்கினால், அதை நாம் கடுமையாக கையாளக் கூடாது. நம் குழந்தை ஒரு பொது இடத்தில் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ நடந்துகொண்டு, அதன்மூலம் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த நேரத்தில், குழந்தை எதற்காக அவ்வாறு நடந்துகொண்டது என்பதை உணர்ந்து, குழந்தையை ஆறுதல் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி நினைத்து விடுவார்களே என்று எண்ணி, குழந்தையை தண்டிக்கக்கூடாது. குழந்தை ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டால், அதை நல்ல முறையில் பாராட்ட வேண்டும்.
    பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் A சத்து உள்ளது. சத்து நிறைந்த முதல் உணவு . மலம் எனப்படும் Meconium வெளியேறுவதற்கு சீம்பால் உதவும்.

    குழந்தைக்குத் தேவைப்படும் போது உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.

    குழந்தைக்கு தேவையான சூட்டில் சுத்தமான பால் கிடைக்கிறது.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது தாய்  சேய் பிணைப்பு ஏற்படுகிறது.  

    தாய்க்கு மனநிறைவு உண்டாகிறது.

    தாய்மார்களின் கருத்தடை முறையாகவும் இது பயன்படுகிறது. தாய்ப்பால்கொடுக்கும் தாய்மார்கள் வழக்கமாக கருத்தரிப்பதில்லை.

    தாய் சாதாரணமாக ஒரு நாளைக்கு 500-600 மில்லிலிட்டர் பால் சுரக்க முடியும் . இது முதல் நான்கு மாதம் வரை குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.

    ஒரு 500 மி.லி பாலின் விலை சுமராக  16.50  மாதத்திற்கு ஆகும்.  செலவு 180 ருபாய் பவுடர் பால் இதுபோல் ஆறு மடங்கு அதிக விலை உள்ளதாகும்.

    தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் உடல் அதிக சதைப்பிடிப்பு ஏற்படமால் உடற்கட்டு பாதுகாக்கப்படுகிறது.
    சரும பிரச்சனை, தோல் வறட்சியால் அவதிப்படும் பெண்கள் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே நிவாரணம் பெறலாம். சரும பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

    பன்னீரும் தேனும் ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.

    உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணெணை தடவலாம். ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும்.

    காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.

    எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும்.

    வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.

    வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து அரைத்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும்.

    தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய்  இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும். 
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா உகந்தது. இன்று பரோட்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கோதுமை மாவு - அரை கப்
    ராகி மாவு -  அரை கப்
    உப்பு - தேவையான அளவு
     
    ஸ்டஃப்பிங்க்கு...

    உருளைக்கிழங்கு - 1
    கரம் மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    ஒமம் - கால் ஸ்பூன்

    கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.

    மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
    வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளது.

    காலை உணவு எப்போதுமே ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.

    வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது. வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவதே நல்லது. ட்ரை ஃப்ரூட்ஸ், ஆப்பிள் மற்றும் மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம். மக்னீஷியம் மற்றும் கால்சியம் இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

    பொதுவாகவே, வெறும் வயிற்றில் எந்த பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்ல. ஓட்ஸ், வாழைப்பழம், நட் பட்டர் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து சாப்பிடலாம். இதனை காலை உணவாக சாப்பிட ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    பெர்ரீஸ், வாழைப்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக வெட்டி, ஸ்கிம்டு மில்க் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

    வாழைப்பழம், நட் மில்க், கோகோ பௌடர் ஆகியவை சேர்த்து கிரீமியான ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும். 
    காலை உடற்பயிற்சி புத்துணர்ச்சியுடனும், உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
    காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சியகம் அனைத்தின் மூலமும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

    காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

    எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.

    நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவனையை கொண்டுள்ளனர். எனவே உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற் பயிற்சி செய்ய மிகவும் அமைதியான நேரம்.
    ×