search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கறிவேப்பிலை சாதம்
    X
    கறிவேப்பிலை சாதம்

    சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம்

    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு சாதம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    பொடிக்க:

    மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    முந்திரி - 4,
    கறிவேப்பிலை - 1 கப்,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 6.

    கறிவேப்பிலை சாதம்

    செய்முறை:

    கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.

    பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து வையுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் சாதம், பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கறிவேப்பிலை சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×