என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வலிப்பு நோயுள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? என்ற சந்தேகங்களுக்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.
    வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

    இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

    தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே  திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது  நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

    வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை. 
    ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுவர்-சிறுமிகள் டி.வி. பார்த்தும், செல்போனில் விளையாடியும் அலுத்துப்போய் விட்டனர். இதனால் பாட்டி சொல்லும் கதையை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்கின்றனர்.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் விடுமுறை என்றால் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது உண்டு. அப்படி செல்லவில்லை என்றாலும் குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழ்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் விடுமுறை விடப்பட்டாலும் சிறப்பு வகுப்பு, பரதநாட்டியம், கராத்தே என தங்கள் குழந்தைகளுக்கு கூடுதல் திறமைகளை வளர்க்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டதால் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும் குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர்களால் செல்ல முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேயும் செல்ல முடியாது. அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று நண்பர்களுடனும் சேர்ந்து விளையாட முடியாது.

    இதனால் குழந்தைகள் அனைவரும் அவரவர் வீட்டுக்குள்ளேயே சிறைபட்டு கிடக்கிறார்கள். எவ்வளவு நேரம்தான் டி.வி. பார்ப்பது, செல்போனில் விளையாடுவது என்று அலுத்துப்போய் விட்டனர். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை வேறுவழியின்றி பெரியவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். பாவம்... குழந்தைகள் என்ன செய்வார்கள்?. அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும், பெரியவர்களுக்கு உள்ளது.

    இதனால் தஞ்சை மாநகரில் பாட்டி, தாத்தாக்கள், நமது பாரம்பரிய விளையாட்டு களான பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், குச்சிகளை அடுக்குதல், ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களை தங்களது பேரன், பேத்திகளுக்கு சொல்லி கொடுத்து குடும்பத்தோடு விளையாடி மகிழ்கின்றனர்.

    மேலும் நீதி போதனைகளை சொல்லக்கூடிய கதைகளையும் குழந்தைகளுக்கு பாட்டிகள் எடுத்து கூறி வருகின்றனர். இதை கேட்டு மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள சிறுவர், சிறுமிகளையும் அழைத்து வந்து கதை கேட்கும்படி கூறி வருகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நன்றாக பொழுதுபோவதுடன், வீட்டில் இவர்களது சேட்டை இன்றி பெற்றோர்களும் நிம்மதியுடன் இருக்கின்றனர். இது குறித்து 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கூறும்போது, நான் பாட்டி சொல்லும் கதையை கேட்பதுடன், ஓவியத்தில் ஆர்வம் இருப்பதால் ஓவியமும் வரைந்து வருகிறேன். மேலும் டி.வி. பார்த்து பொழுதை கழித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பலர், யோகா கற்பதுடன், புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் வளர்த்து வருகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை டி.வி., செல்போனின் தாக்கத்தில் இருந்து விடுவித்து செய்தித்தாள், புத்தகம் போன்றவைகளை கொடுத்து வாசிக்கும் பழக்கத்தையும், பாரம்பரிய விளையாட்டுக்கள் மீதும் கவனத்தை திசை திருப்பி அவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும். 
    ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் இடைவிடாமல் டி.வி., பார்ப்பதாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.
    கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர்.

    அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர். மற்ற நேரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு வீட்டில் இருக்கும்போது, பொதுமக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்-சிறுமிகள் டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலர் மூழ்கி விடுகின்றனர்.

    டி.வி., செல்போனை இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பொதுவாக டி.வி., செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கில் செல்போனை பயன்படுத்துவதும், டி.வி. பார்ப்பதும் அதிகரித்துள்ளது. செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிப்படையாமல் இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் இருளில் அமர்ந்து செல்போனை பார்க்க கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனால் கண்களில் விழித்திரை பாதிப்படையும்.

    கண் பார்வையை பாதிக்காத வகையில் கண்ணாடிகள் அணியலாம். குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு செல்போன் பயன்படுத்தலாம், டி.வி. பார்க்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து வதையும் தவிர்த்து விட வேண்டும். இதேபோல குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைட்டமின் ‘ஏ‘ வகை உணவுகளான பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு இறைச்சி, கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன.
    மெனோபாஸ் என்பதே மாதவிடாய் முற்றுப் பெறுகிற ஒரு நிகழ்வு. தேவையின் அடிப்படையில் மெனோபாஸுக்கு பிறகும் மாதவிடாயை வரவழைக்க முடியுமா?‘முடியும்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. எப்படி? எதற்கு? என அதைப் பற்றிய விவரங்களை விளக்குகிறார் அவர்.

    ‘‘குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்தி இருக்கும். ஆனால், பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு முட்டை உற்பத்தி நின்று விடும். மாதவிடாய் நின்றதும், கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். அதை விரிவாக்க, ஹெச்.ஆர்.டி.

    எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, மாதவிலக்கை வரவழைப்போம். பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளரச் செய்வோம். இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன்பாக பல விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல், குறிப்பாக கர்ப்பப் பையின் ஆரோக்கியம் பார்க்கப்படும்.

    சிறுநீரகங்கள், இதயம் என எல்லாம் சீரான இயக்கத்துடன் இருக்கின்றனவா எனப் பார்ப்போம். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பின் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்கள் வயதானவர்களாக இருப்பார்கள் என்பதால், வயோதிகத்தின் காரணமாக இயல்பாக அவர்களது உடலில் ஒரு தளர்ச்சி இருக்கும். கர்ப்பத்தின் காரண மாக ஏற்படும் மாற்றங்களுக்கு அவர்களது உடல் ஈடு கொடுக்குமா எனப் பார்த்துதான் இந்த சிகிச்சை யைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

    ஹெச்.ஆர்.டி. எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுப்பதன் விளைவாக, உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகலாம். அரிதாக சிலருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் உண்டு. எனவே அதைக் கண்டறிய சில பிரத்யேக டெஸ்ட்டுகளை செய்து, புற்றுநோய்க்கான அபாயமிருக்கிறதா எனப் பார்ப்போம். பாதிப்பிருப்பது தெரிந்தால் சிகிச்சை கொடுக்க மாட்டோம். இது தவிர, கர்ப்பம் சுமக்க விரும்புகிற பெண்ணுக்கு, உறவினர் தரப்பிலிருந்து உதவிகள் இருக்குமா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, கவுன்சலிங் கொடுத்த பிறகே சிகிச்சை ஆரம்பமாகும்.

    6 முதல் 8 மாத காலத்துக்கு கர்ப்பப் பையை வளரச் செய்து, அதன் உள்சுவர் வளர சிகிச்சை அளித்து, பிறகுதான் கருமுட்டை தானம் பெற்று, அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகள் தொடரப்படும். ஹெச்.ஆர்.டி. சிகிச்சையில் சில நன்மைகளும் இருக்கின்றன. இந்த சிகிச்சையைக் கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் உணர்வார்கள். அவர்களது சருமமும், கூந்தலும் அழகாக மாறும். இத்தகைய சிகிச்சையை மிக மிக நம்பகமான மருத்துவமனைகளில் மட்டுமே செய்து கொள்வது பாதுகாப்பானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
    சருமம் எத்தனை முறை உதிரும் என்பது சருமத்தின் தன்மையை பொறுத்தது. சருமத்தை அழகுபடுத்த மெனக்கெடுபவர்களின் ஏக்கத்தை, இந்த செல் உதிர்வு போக்குகிறது.
    கைவிரல்களில் உள்ள சரும செல்கள் நிறைய பேருக்கு உதிர்ந்து கொண்டே இருக்கும். உடலில் மற்ற உறுப்புகளில் எப்போதாவதுதான் இந்த பிரச்சினை ஏற்படும். தோல் உரிதல் என்பது சரும வளர்சிதை மாற்றங்களில் முக்கிய அங்கமாகும். சீரான இடைவெளியில் சரும செல் அடுக்குகள், உதிர்ந்து புதிய செல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்க வழி ஏற்படும்.

    இதுகுறித்து சரும நல நிபுணர் அஜய் ராணா கூறுகையில், ‘‘நமது சருமமே அதனை சுயமாக அழகுபடுத்திக் கொள்கிறது. சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும் எளிய வழிமுறையாக இது அமைந்திருக்கிறது. சருமத்தை அழகுபடுத்த மெனக்கெடுபவர்களின் ஏக்கத்தை, இந்த செல் உதிர்வு போக்குகிறது. சருமம் எத்தனை முறை உதிரும் என்பது சருமத்தின் தன்மையை பொறுத்தது. சிலருக்கு வாரத்தில் இரண்டு முறைகூட சரும செல்கள் உதிரும். இந்த செயல்முறை இறந்த செல்களின் அடுக்குகளை நீக்க உதவும். அதோடு சருமம் கூடுதல் பொலிவும் பெறும்’’ என்கிறார்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு முயற்சி செய்யலாம். ஏற்கனவே அவர்களுடைய சருமம் வறண்டு இருப்பதால் அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டியதில்லை. சருமம் எண்ணெய் தன்மையுடனோ, முகப்பரு பாதிப்புடனோ இருந்தால், வாரத்திற்கு மூன்று முறை துடைத்தெடுக்கலாம்.

    சரும எரிச்சல், சருமம் சிவப்பு நிறத்தில் காணப்படுதல், நமைச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சருமத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இறந்துபோன சரும செல்களை வெளியேற்றுவதற்கு சருமத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அது சருமத்தில் படிந்திருக்கும் தூசு, துகள்களை அகற்ற உதவும். முகத்தை கைகளை கொண்டு வட்ட வடிவத்தில் சில நிமிடங்கள் தேய்த்து கழுவி சுத்தப்படுத்தலாம். சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டியது அவசியம்.
    இந்த ஜூஸ் நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும். மேலும் உடலுக்கு சக்தியை தரும். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி பழம் - 4
    கேரட் - 1
    தண்டு கீரை - 1
    சிவப்பு குடை மிளகாய் - 1
    மிளகு - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    பூண்டு - 5 பல்
    தண்ணீர் - அரை கப்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    வெஜிடபிள் ஜூஸ்

    செய்முறை

    தக்காளி, கேரட், தண்டு கீரை, சிவப்பு குடை மிளகாயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டை லேசாக இடித்து கொள்ளவும்.

    வாணலியில்  தண்ணீர் ஊற்றி தக்காளி, கேரட், கீரை தண்டு, சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு, பூண்டை போட்டு சிறு தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் இறக்கி 10 நிமிடங்கள் ஆற விடவும்.

    பின்னர் அந்த காய்கறிகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    இறுதியில் கொத்தமல்லி தழை, தண்ணீர் சேர்த்து சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

    இந்த ஜூஸை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து விட்டு பரிமாறவும்.

    நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊரடங்கால் சூழ்நிலை கைதியாக தவிர்ப்போர், குடும்பத்தினருடன் உரையாடுவதற்கு ‘வீடியோ கால்’ உதவுகிறது.
    பணி நிமித்தமாக அண்டை மாநிலங்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சென்னையில் வசிக்கிறார்கள். ‘எப்போது லீவு கிடைக்கும்? சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்’ என்ற மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு கொரோனாவால் தொடர் விடுமுறை கிடைத்து இருக்கிறது.

    இந்த விடுமுறை அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. மாறாக சோகத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊரடங்கால் எங்கும் நகர முடியாததால் குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் சூழ்நிலை கைதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை சந்திக்க முடியாமல் சொந்த நாட்டிலேயே அகதி போன்று வாழும் நிலைக்கு ‘கொரோனா’ மக்களை தள்ளி உள்ளது.

    கொரோனா எனும் கொடிய வைரஸ் வேகமாக பரவும் சூழ்நிலையில் குடும்பத்தினரை அருகில் இருந்து கவனித்து கொள்ள முடியாமல் பரிதவிப்போருக்கு செல்போன் உரையாடல்தான் ஆறுதலாக அமைகிறது. மனைவி, குழந்தைகள், பெற்றோர்களை நேரில் பார்க்க முடியாமல் வேதனை அடைவோருக்கு செல்போன் ‘வீடியோ கால்’ மன நிம்மதியை அளிக்கிறது.

    எனவே தினமும் பலர் வீடியோ காலில் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் நேரத்தை செலவழிக்கிறார்கள். முகம் பார்த்து பேசி உணர்ச்சி வசம் அடைகிறார்கள்.

    ஊரடங்கால் குடும்பத்தினரை போய் பார்க்க முடியாமல் தனித்திருக்கும் ஆண்களுக்கு, ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகம் போன்று கடக்கிறது என்று சொன்னால் அது மிகையாகது.
    ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில், திருக்குறளை கற்று வாட்ஸ்-அப் குரூப்பில் வீடியோவாக அனுப்ப வேண்டும் என ஆசிரியர் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்.
    கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சமயத்தில், கொரோனாவின் தாக்கம் அறியாமல் சிலர் வெளியே சென்று விளையாடுவதாகவும், வீட்டில் இருக்கும் மாணவர்கள் டி.வி. பார்ப்பது மற்றும் சின்ன, சின்ன சேட்டைகளை செய்து பெற்றோருக்கு இடைஞ்சலையும் உருவாக்குவதாக தெரிகிறது.

    இந்தநிலையில், ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் முயற்சி எடுத்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தில் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வாட்ஸ்-அப் குரூப் உள்ளது. இதில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் இணைந்துள்ளனர். பள்ளிக்கு பயனுள்ள நல்ல விஷயங்கள் இதில் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள மாணவர்கள், கல்வி கற்க அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் கென்னடி நடவடிக்கை எடுத்தார்.

    அதாவது, முதல்கட்டமாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்து வீடியோவில் பதிவு செய்து பள்ளி வாட்ஸ்-அப் குரூப்பிற்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 திருக்குறளும், 2-ம் வகுப்பிற்கு 45 திருக்குறளும், 3-ம் வகுப்பிற்கு 60 திருக்குறளும், 4-ம் வகுப்பிற்கு 80 திருக்குறளும், 5-ம் வகுப்பிற்கு 100 திருக்குறளும் ஒப்புவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்து வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவு செய்தனர்.

    கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 2-வது வாரமாக இன்று முதல் நடனம், 3-வது வாரம் பாட்டு, 4-வது வாரம் வாசித்தல் திறன் குறித்த போட்டிகள் நடக்க உள்ளது. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறந்த பின்பு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை பொதுமக்கள் பாராட்டினர்.
    தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
    மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.

    தண்ணீரின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு.

    தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    * உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.

    * உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராகும்.

    * வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும்.

    * விடியற்காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.

    *3 வேளையும் சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.

    * போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

    * தண்ணீர் அருந்துவது நல்லதுதான். அதற்காக தாகம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது.

    * அதிகமாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம் அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமாக சூட்டில் பருகுவது மிகவும் நன்மை தரும்.
    தலைமை அதிகாரியின் முக்கியமான வேலையே சிறந்தவர்களை நிறுவனத்திற்கு சேர்ப்பதுதான். தலைமை அதிகாரியாக இருப்பவர் சிறந்த முறையில் கருத்துகளை பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
    ஒரு நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக பொறுப்பு ஏற்பவருக்கு அந்த துறை குறித்த அனுபவம் மட்டும் இருக்கிறதா? அல்லது அனைத்து துறை சார்ந்த அனுபவம் உள்ளதா? என்று அறிய வேண்டும். அதாவது உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்துதல், நிதி, செயல்பாடு, தொழில்நுட்ப விவரங்கள் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

    நிறுவனத்தின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைப்பவராக அவர் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நிறுவனத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட தொழில் குறித்து அவருக்கு போதிய அனுபவம் இல்லாது போனால் மிகவும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் அவரால் சரியான முடிவை எடுக்க முடியாது.

    தலைமை அதிகாரியின் முக்கியமான வேலையே சிறந்தவர்களை நிறுவனத்திற்கு சேர்ப்பதுதான். ஒவ்வொரு துறை பற்றியும் அவருக்கு போதிய பரிச்சயம் இல்லையெனில் அந்த பிரிவில் திறமையானவர்களை அவரால் அடையாளம் காண முடியாமல் போகும். இதனால் அவர் தேர்வு செய்வோர் நிறுவன எதிர்பார்ப்புக்கு ஏற்றவராக நிச்சயம் இருக்க மாட்டார். இதனால் முக்கியமான பதவிக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதில் தலைமை அதிகாரிகள் சில வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், மேலாண்மை வல்லுனர்கள்.

    மேலும் தலைமை அதிகாரியாக இருப்பவர் சிறந்த முறையில் கருத்துகளை பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவர் மூன்று வகையான பிரிவினருடன் அதாவது நிறுவனத்தின் பங்குதாரர், தொழிலாளர் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தகவல்களை பரிமாற வேண்டும். நிறுவனத்தின் எதிர்கால குறிக்கோள் குறித்து தனது பணியாளர்களுக்கு தெளிவாகத் தெரிவித்து இலக்கை எட்டுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான கொள்கைகளை வகுப்பவரே சிறந்த தலைமை அதிகாரியாக இருக்க முடியும்.

    நிறுவன இலக்கை எட்டுவதில் அனைத்து பணியாளர்களும் குழுவாக செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்ற வேண்டும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை விரிவாக பேச வேண்டும். மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும், அதை ஒரு சில மணி நேர செயல்பாடுகளில் நிரூபிக்கலாம். அதன் மூலம் எது சரி அல்லது எது தவறு என்பதை உணர்த்த முடியும்.

    நிறுவனத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக, கீழ்ப்படியாமல் நடப்பவர்களை வெளியேற்ற தயக்கம் காட்டக் கூடாது. ஊழியர்களை வெளியேற்றுவது என்பது மிகவும் இக்கட்டான தருணம் தான். இந்த விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். 
    தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
    கணவன்- மனைவி இருவரும் அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தால் மட்டுமே, அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். ஒரு பிரிவினர் அதில் முழு ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள்.

    தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. அதை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.

    தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு அழகையும், பாதுகாப்பையும் தருவது சருமம்தான். சராசரியாக ஒரு மனித உடலை, 20 சதுர அடி சருமம் மூடியிருக்கிறது. உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பங்கஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால்தான் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.

    ‘அதுதான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன் படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும். மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.

    ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.

    பெரும்பாலான தம்பதிகள் முத்தத்தோடுதான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய்தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்தியத்தை மிகவும் இனிமையாக்கி விடும். வாய் துர்நாற்றத்தால் பெரும்பாலானவர்கள் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்றம் தாம்பத்திய ஆர்வத்தைக் குறைத்துவிடும். வாயில் பிரச்சினை இருந்தாலும், பற்களில் கேடு இருந்தாலும், வயிற்றில் கோளாறுகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று காரணத்தைக் கண்டறிந்து உடனே அதனை சரி செய்திடுங்கள்.

    தாம்பத்திய இன்பத்தை நன்றாக நுகர விரும்புகிறவர்கள் கைகளையும், கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கை, கால் நகங்களையும் வெட்டிவிட வேண்டும். நீண்ட நகங்கள், தம்பதிகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கூர்மையான ஆயுதங்களாக மாறி, அவர்களை காயப்படுத்திவிடக் கூடும். கை நகங்களை வெட்டி, அழுக்குகளை நீக்கி பராமரிப்பது, குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அக்குள் மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் இருக்கும் ரோமங்களை ‘ஷேவ்’ செய்து அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியை இளம் சுடுநீரால் அவ்வப்போது கழுவவேண்டும்.

    பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி பேடு’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும். சானிட்டரி பேடு மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். உணவருந்திய பின்பு கையை கழுவுவது எப்படி அவசியமோ, அதுபோல் உறவு முடிந்த பின்பும் கணவன்-மனைவி இருவரும் உறுப்புகளை சுத்தம் செய்யவேண்டும்.
    காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மரவள்ளிக்கிழங்கு - ஒரு கப்
    ரவை - ஒரு கப்
    அரிசி - மாவு ஒரு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    உருளைக்கிழங்கு - 1
    பச்சை மிளகாய் - 2
    சாட் மசாலா - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி பேஸ்ட் - 2டீஸ்பூன்

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை

    மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொண்டு வட்ட வடிவமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த மாவில் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தவாவை வைத்து இந்த மாவை இரண்டு தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.

    ஒரு தட்டில் தோசை வைத்து அதன் மேல் முதலில் வட்டவடிவமாக வெட்டிய தக்காளி, அடுத்து வெங்காயம், அடுத்து உருளைக்கிழங்கு அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலா, சிறிதளவு உப்பு, என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயராக அடுக்கி அதன் முடிவில் மற்றொரு தோசையில்  கொத்தமல்லி பேஸ்டை தடவி மூடி துண்டுகளாக வெட்டி சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×