என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு அதிக கவலையை ஏற்படுத்தும் விஷயம் என்ன தெரியுமா? வழுக்கை தலை. ஆண்களில் பலரும், தங்கள் தலை வழுக்கையாகிவிடக்கூடாது என்று கருதினாலும், நடப்பது நேர் எதிராகத்தான் இருக்கிறது.
    ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு அதிக கவலையை ஏற்படுத்தும் விஷயம் என்ன தெரியுமா? வழுக்கை தலை. தங்கள் தலை வழுக்கையாகிவிட்டால், அழகே குலைந்துபோய் விட்டதாகவும், வயது திடீரென்று அதிகமாகிவிட்டது போலவும் உணர்கிறார்கள்.

    ஆண்களில் பலரும், தங்கள் தலை வழுக்கையாகிவிடக்கூடாது என்று கருதினாலும், நடப்பது நேர் எதிராகத்தான் இருக்கிறது. வழுக்கைக்கு காரணமான முடி உதிர்வு, ஆண்கள் 30 வயதை கடக்கும்போதே தொடங்கிவிடுகிறது. 87 சதவீத ஆண் களுக்கு இந்த காலகட்டத்தில்தான், முடி அடர்த்தி குறைந்து வழுக்கைக்கான ஆரம்ப அறிகுறி தென்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு 40 வயதுகளில் தெரிந்த இத்தகைய அறிகுறிகள் தற்போது 20 வயதிலே சிலருக்கு தெரிவது கவனிக்கத்தக்கது. நெற்றியின் அருகில் உள்ள முடி குறைந்து, மேல் பகுதி முடியின் அடர்த்தி குறைவதை கருத்தில் கொண்டு பெரும்பாலான இளைஞர்கள், தங்களும் எதிர்காலத்தில் வழுக்கைத் தலையர்களாகி விடுவோமோ என்று கவலை கொள்கிறார்கள்.

    வழுக்கைத் தலை உள்ளவர்களின் தேவையை உணர்ந்து, இப்போது தலையில் முடியை நட்டு வைக்கும் சிகிச்சைகள் நடந்துகொண்டிருந்தாலும் இளைய தலைமுறையினர் வழுக்கைத்தலை ஆகும் முன் காப்பதே சிறந்தது. உங்கள் தலை வழுக்கையாகிவிடாமல் தடுக்க புதிய ஆய்வுகள் சொல்லும் கருத்துக்களை கவனியுங்கள்.

    தலைப்பகுதியை, குறிப்பாக மண்டை ஓட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தொலைதூர பயணங்கள் சென்று வந்தால் உடனடியாக குளியுங்கள். மண்டை ஓட்டுப் பகுதியையும் கழுவி சுத்தம் செய்யுங்கள்.

    பொடுகு சாதாரண அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. கூடுதலாக பற்றிப்பிடித்த நிலையில் இருந்தாலோ, சிவப்பாகவும்-தடித்தும் காணப்பட்டாலோ, அரிப்புத் தன்மை அதிகமாக தோன்றினாலோ, சரும நோய் டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

    முடி நன்றாகவும், அடர்த்தியாகவும் காணப்பட வேண்டும் என்பதற்காக, விளம்பரங்களில் பார்த்த எண்ணெய், கிரீம், ஜெல், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தாதீர்கள். அவை இருக்கிற முடிக்கும் பாதிப்பை உருவாக்கிவிடலாம்.

    உணவிலும் அதிக அக்கறை காட்டுங்கள். போதுமான அளவில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் சத்துக்கள் குறைந்தால், அது முடி உதிர்தலுக்கு காரணமாகிவிடும்.

    மன அமைதியும் தேவை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து வருந்தி, புலம்பிக்கொண்டிருந்தால் மன அழுத்தம் தோன்றும். அதனாலும் முடி உதிரும். மன அழுத்தத்தை உங்களால் குறைக்க முடியாவிட்டால் அதற்குரிய நிபுணரின் கவுன்சலிங் பெறுங்கள்.

    வழுக்கையை போக்குவதற்கு பலவிதமான சிகிச்சைகள் இருந்தாலும், அவை களின் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும். அத்தகைய சிகிச்சைகளில் சில பின் விளைவுகளும் உண்டு.

    ஆண்மை ஹார்மோனான ‘டை ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரான்’ தாக்கமே, வழுக்கைக்குக் காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் மருந்தினை கொடுக்கும்போது முடி உதிர்வது குறையும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இந்த மருந்தினை சாப்பிட்டால்தான் ஓரளவாவது பலன் கிடைக்கத் தொடங்கும். ஆனால் இதற்கான மருந்தை அதிக நாட்கள் சாப்பிடும்போது ஆண் களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படலாம். அவர்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதோடு, மன அழுத்தம் ஏற்படவும் இடமுண்டு.

    மண்டை ஓட்டில் பூசுவதற்கான மருந்துகளும் இருக்கின்றன. அவை முடியின் வேர்க்காலில் செயல்பட்டு வளர்ச்சியைத் தூண்டும். ஆனால் அந்த மருந்துகள் சிலருக்கு தலைவலியையும் அலர்ஜியையும் தோற்றுவிக்கும்.

    வழுக்கையை மறைக்க தற்காலிக நிவாரணங்களும் இருக்கின்றன. ‘விக்’ வைத்து வழுக்கையை மறைக்க முடியும். ஆனால் மற்றவர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. ‘ஹேர் வீவிங்’ என்பது இருக்கிற முடியில் ‘கிளிப்’ மூலம் கூடுதல் முடிகளை இணைப்பது. ஆனால் ‘கிளிப்’களின் பயன்பாட்டால் இருக்கிற முடியும் பாதிக்கப்படலாம்.

    ‘ஹேர் பிக் ஷிங்’ என்பது ஒருவித பசை மூலம் கூடுதல் முடிகளை ஓட்டுவது. இதை எளிதாக மற்றவர்களால் கண்டறிய முடியாது என்றாலும், இதை தினமும் ஒட்டுவது கடினமாக கருதப்படுகிறது. அந்த பசை ரசாயன கலப்பு கொண்டது. அதனால் அலர்ஜியும் ஏற்படலாம்.

    இந்த பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விதமான தீர்வினை சொல்கிறார்கள். ஒன்று: தொடக்கத்திலேயே கவனம் செலுத்தி வழுக்கை விழாமல் தவிர்ப்பது. இரண்டு: வழுக்கை வந்துவிட்டால் அதை ‘புருஷ லட்சணம்’ என்று ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது. வேற வழி இல்லைங்க..
    ஊரடங்கு காலத்தில் வீடுகளில் குழந்தைகளின் கையில் டி.வி. ரிமோட்டுகள் விளையாட்டு பொருளாக மாறி இருக்கின்றன. விளையாட்டின்போது டி.வி. ரிமோட்டுகள் உடைந்து போவதால் பெற்றோர் கலக்கம் அடைகின்றனர்.
    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    டி.வி. பார்த்துக் கொண்டும், விரும்பிய புத்தகங்களை படித்தும், குழந்தைகளுடன் விளையாடும் மக்கள் தங்கள் பொழுதை போக்கி வருகிறார்கள். மேலும் உறவினர்கள் நண்பர்களுடன் செல்போனில் கதை பேசி தங்களது பழைய நினைவுகளை அசை போட்டுக்கொள்வதுடன், உறவுகளையும் மேம்படுத்தி வருகின்றனர். ஊரடங்கினால் தங்களது நிம்மதியை தொலைத்தவர்கள் என்றால் அது குழந்தைகள் மட்டும்தான். பட்டாம்பூச்சிகள் போல சுற்றித்திரிந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் தற்போது சிறைக்கைதிகள் போல வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

    தற்போது குழந்தைகளின் ஒரே பொழுதுபோக்கு டி.வி. பார்ப்பது மட்டுமே. அதுவும் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். வேறு ஏதாவது நிகழ்ச்சிகளும் சினிமா படங்களும் போட்டுவிட்டால் போதும் மூலைமுடுக்குகளில் சோகமாக அமர்ந்து விடுகிறார்கள். அப்போது கையில் கிடைக்கும் பொருட்களை தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி நினைத்துக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

    இதனால் தற்போது டி.வி. மற்றும் ஏ.சி. ரிமோட்டுகள், செல்போன் என கையில் கிடைத்த எல்லா பொருட்களையும் கொண்டு ஆசை தீர விளையாடி மகிழ்கிறார்கள்.

    குழந்தைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலரது வீடுகளில் தற்போது டி.வி., ஏ.சி. ரிமோட்டுகள் உடைந்துபோகின்றன. பல வீடுகளில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை போல ரிமோட்டுகளுக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது.

    அந்த அளவு ரிமோட்களை செல்லோ டேப் மற்றும் ரப்பர் பேண்ட் கொண்டு சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

    இன்னும் பலரது வீடுகளில் ரிமோட்டுகள் உடைந்த நிலையில் டி.வி.க்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரிமோட்டுகள் உள்பட மின்னணு சாதனங்களை அருகில் உள்ள வீடுகளில் இருந்து இரவல் பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

    தற்போது கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் மின்னணு சாதனங்களை எங்கே போய் வாங்குவது என பொதுமக்கள் பரிதவித்து வருவதை பார்க்க முடிகிறது.

    இதனால் வீடுகளில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளின் நடவடிக்கையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியதாக உள்ளது.
    இந்த ரத்தப்போக்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘உலக ரத்தம் உறையாமை விழிப்புணா்வு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதைப்பற்றி இங்கே பார்க்கலாம்..
    நமது உடலின் எல்லா பாகங்களிலும் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ரத்தம், காயம் ஏற்படும்போது வெளியேறுவது உண்டு. சிறு காயங்களால் ஏற்படும் ரத்தக்கசிவு நிற்காமல் அதிக ரத்தம் வெளியேறினால் அது ரத்தம் உறையாமை (ஹீமோபிலியா) பாதிப்பாக இருக்கலாம்.

    நீங்கள் விளையாடும்போது ஏற்படும் காயங்களால், உங்களுக்கோ, உங்களோடு விளையாடும் மற்றவருக்கோ ரத்தக் கசிவு ஏற்பட்டு, அது நிற்காவிட்டால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் நிற்காத ரத்தப்போக்கு ஆபத்தானது.

    மூக்கில் இருந்து காரணம் இல்லாமல் ரத்தம் கசிவது, தோலின் நிறம் மாறி ரத்தச்சிவப்பாக காணப்படுவது, மலத்துடன் ரத்தம் கசிவது ஆகியவையும் ஹீமோபிலியாவின் அறிகுறியே. இது ஒரு மரபு வழி நோயாகும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல், குறிப்பிட்ட சத்துக்குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் ரத்தம் உறையாமைக்கு காரணமாவது உண்டு.

    எக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றமே ரத்தம் உறையாமைக்கு காரணம் என்று அறியப்பட்டு உள்ளது. பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    ரத்தம் உறையாமை பாதிப்பு, ஹீமோபிலியா ஏ, பி, சி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹீமோபிலியா-ஏ குறைபாடுதான் பரவலாக காணப்படுகிறது. இது லேசானது, மிதமானது, தீவிரமானது என்று வகைப்படுத்தப்படுகிறது. மற்ற வகை ரத்தம் உறையாமை பாதிப்பு அபூர்வமாக உள்ளது.

    பெற்றோருக்கு இதுபோன்ற ரத்தம் உறையாமை பாதிப்பு இருந்தால், குழந்தைகளுக்கும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படுமா என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்த அணுக்களின் அமைப்பு, ரத்தக்கசிவு நேரம், ரத்தம் உறையும் நேரம் ஆகியவை மதிப்பிடப்பட்டு இந்த நோய் கணிக்கப்படுகிறது. ரத்த உறைபொருள் குறைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

    ரத்தக்கசிவால் பாதிக்கப்படும்போது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அதிக ரத்த இழப்பு ஏற்பட்டாலோ, அடிக்கடி ரத்த இழப்பு ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று ரத்தம் செலுத்தப்பட வேண்டும். சிலருக்கு ரத்த பிளாஸ்மாவை செலுத்த வேண்டிய நிலை வரும்.

    தற்போதைய காலங்களில் ரத்தக் கசிவைத் தடுக்க சில மருந்துகள் உள்ளன. டிரான்ஸ்மிக் அமிலம் சிறிய ரத்தக்கசிவைத் தடுக்க உதவும். இது ரத்த உறைபொருளை ரத்தத்தில் அதிகரிக்க உதவுகிறது.

    மருந்துகள் அல்லாமல் உளவியல் ஆலோசனைகள் மூலம் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி ஆபத்தை குறைக்கலாம். ரத்தம் வழிதல் குழந்தைப் பருவத்தில் கண்டறியப்பட்டால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    ரத்தம் வழிதல் குறைபாடு கொண்டவர்கள், பல் நீக்கம் மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டாக்டரிடம் அதுபற்றி முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். நெருங்கிய உறவில் திருமணம் செய்பவர் களின் வாரிசுகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.

    காயம் ஏற்பட்டு உடலுக்கு வெளியே ரத்தக்கசிவு ஏற்படுவதுபோல, உடலுக்கு உள்ளேயே தோலின் அடியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிவந்ததுபோல மாற்றம் காணப்படுவதும், ஒருவகை ஹீமோபிலியாதான். இதுவும் ஆபத்தானதுதான். சிலருக்கு கொஞ்சம் கடினமான வேலைகள், பயிற்சிகள் செய்தாலே இந்த மாற்றங்களை தோலின் அடியில், மூட்டு இணைப்பு கள் உள்ள இடங்களில் காண முடியும்.

    10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ரத்தம் உறையாமை பாதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் கடந்த வருடம் வரை சுமார் 20 ஆயிரம் பேரே ஹீமோபிலியா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு, அதிகமானவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பில்லை என்பது ஆறுதலான விஷயம். அறிகுறி தென்படுபவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் உயிர்காக்க முடியும்.

    கனடாவைச் சேர்ந்த பிராஞ்க் சன்னேபல் என்பவர் ரத்தம் உறையாமை பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டார். அவரது பிறந்த நாளான (இன்று) ஏப்ரல் 17-ந் தேதி, உலக ஹீமோபிலியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பெரும் முயற்சிகள், ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    அதுவரையில் விழிப்புடன் இருப்போம்; ஆபத்தை தவிர்ப்போம்.
    தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் 3 அடுக்கு முககவசம் அல்லது துணியால் ஆன முககவசங்களை அணிந்தால் போதுமானது.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை முடக்கி போட்டு உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. இந்த போரில் வைரசிடம் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் கேடயமாக சமூக இடைவெளி, தனித்து இருத்தல், முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முககவசம் அணியாமல் வெளியில் சென்றால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் மக்கள் முககவசம் அணியும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஏற்கனவே பலர் கைக்குட்டைகள், துண்டு, சேலை முந்தானை ஆகியவற்றை முககவசமாக பயன்படுத்தி வந்தனர். அவர்களும் வேகமாக முககவசத்துக்கு மாறி உள்ளனர். இந்த முககவசம் பெயரளவுக்கு அணியும் வகையில் இருக்கக்கூடாது. அதனை முறையாக பராமரித்து அணிய வேண்டும். அப்போது தான் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார், அரசு டாக்டர் ஒருவர்.

    அவர் முககவசத்தை எப்படி உபயோகிப்பது என்பது குறித்தும் இங்கு விளக்குகிறார்...

    ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான முககவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் 3 அடுக்கு முககவசம் அல்லது துணியால் ஆன முககவசங்களை அணிந்தால் போதுமானது. ஒவ்வொருவரும் 3 முககவசங்களை வைத்துக் கொண்டு சுழற்சி முறையில் உபயோகிக்க வேண்டும். ஒருநாள் உபயோகித்ததை துவைத்து காயப்போட்ட பிறகு 3 நாள் கழித்து அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். முககவசத்தை எக்காரணம் கொண்டும் முன்பகுதியில் கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். இது நோய் கிருமிகள் நமக்குள் எளிதில் பரவும் வாய்ப்பை உருவாக்கும். முககவசத்தை கழற்றும்போது, கயிற்றை பிடித்து மட்டுமே கழற்ற வேண்டும்.

    என்.95 என்ற முககவசம் உள்ளது. இந்த முககவசத்தை பொதுமக்கள் அணிய வேண்டிய அவசியம் இல்லை. இது அதிக விலை கொண்டது. மிகவும் நுண்ணிய கிருமிகளையும் தடுக்கும். கொரோனா நோயாளிகளை நேரடியாக கையாளக்கூடிய சுகாதார பணியாளர்கள் இந்த முககவசத்தை அணிய வேண்டும். ஒரு முககவசத்தை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே அணிய வேண்டும். ஆகையால் பொதுமக்கள் கவனமுடன் முககவசத்தை கையாண்டு நோய் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார், அந்த டாக்டர்.
    எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
    இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் கணவர் மனைவியின் ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும்.

    எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

    கிரியேட்டிவ் மூட்:

    உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.

    சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!

    சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.

    பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.

    .உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.

    ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன்  வேறு பெண்கள்மீது  அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.

    இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.

    ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள்  மனைவிமார்கள். செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.

    மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது,  பிறந்த நாள்,  பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.

    ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!
    உலகின் எந்த மூலையில் நடக்கும் இந்தியத் திருமணம் என்றாலும் அதற்குப் பாந்தமான மற்றும் பொருத்தமான உடை என்று எத்னிக் ஆடைகளைச் சொல்லலாம்.
    திருமண வரவேற்பு, திருமணம், பிறந்த நாள் விழா, நவராத்திரி விழா, தீபாவளி பார்ட்டி, அலுவலக பார்ட்டி, குடும்ப விழாக்கள் என எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பு என்று வந்து விட்டால் நம்மை அறியாமலேயே உற்சாகமும், என்ன அணிந்து செல்வது? என்ற மிகப் பெரிய கேள்வியும் எழும். அதுவும் திருமண விழா என்று வந்து விட்டால் கல்யாண வீட்டுக்காரர்களை விட விருந்தினர்களாகச் செல்லும் நமக்குத்தான் என்ன அணிந்து கொள்வது? என்பதே புரிபடாது.

    உலகின் எந்த மூலையில் நடக்கும் இந்தியத் திருமணம் என்றாலும் அதற்குப் பாந்தமான மற்றும் பொருத்தமான உடை என்று எத்னிக் ஆடைகளைச் சொல்லலாம். சேலைகள், சல்வார் சூட்டுகள் மற்றும் லெஹங்கா சோளி என ஒவ்வொரு சமூகக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் நாம் உடைகளை அணிந்து செல்லலாம்.

    * வட இந்தியத் திருமணங்கள் பொதுவாகவே ஆடல் பாடல் என்று அமர்க்களமாகவும், பிரகாசமாகவும் இருக்கும். எனவே, மெட்டாலிக் கோல்டன் பட்டிஸ்களுடன் இருக்கும் ப்ரொகேட் லெஹங்காக்கள் மற்றும் பிரகாசமான ராணி இளஞ்சிவப்பு சேலைகளை அணிந்தால் அவை ஆடம்பரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும். கிறிஸ்டல் பதித்த நெக்லைன்ஸ் மற்றும் சங்கி அலங்காரத்துடன் நாம் விழாவில் நுழைந்தால் அனைவரது தம்ஸ் அப் நமக்கே என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    * வட இந்தியத் திருமணங்களை ஒப்பிடும்பொழுது தென்னிந்தியத் திருமணங்கள் மாறுபட்டவை. ஆனால், உடை விஷயத்தில் பாரம்பரிய நெசவுப் புடவைகளான காஞ்சிப் பட்டு மற்றும் பட்டின் பல வகைகளை அணிந்து கொள்வதைப் பெருமிதமாக நினைக்கிறார்கள். எனவே, இதுபோன்ற திருமணங்களுக்கு பட்டுச் சேலைகள் அல்லது அணிந்து கொள்ள வசதியான பட்டு சல்வார் சூட், பிளெயின் ஜ்யார்ஜெட் சூட்டுடன் டிசைனர் துப்பட்டாவை அணிந்து செல்லலாம்.

    இரவு நேரத் திருமணம் அல்லது வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதாக இருந்தால் நாம் அணியும் ஆடைக்குத் தகுந்தாற் போல் வைர, அமெரிக்கன் டைமண்ட், ஜெர்க்கான் கற்கள் பதித்த நகைகளை அணியலாம்.

    * இஸ்லாமிய கலாசாரத்தின் திருமண விழாவான நிக்கா’ என்றால் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வண்ணங்கள் மற்றும் ஸ்டைலில் சிறிதளவு மாறுபாடுகள் இருக்கும். ஷராரா சூட்ஸ், அனார்கலி சூட்ஸ் மற்றும் இந்தோ-வெஸ்டர்ன் லெஹங்கா ஆடைகளை அணிந்து செல்லலாம்.

    * கிறிஸ்துவத் திருமணங்களில் லாங் குர்த்திஸ், லாங் ஃப்ராக், சுடிதார்கள், லெஹங்காக்கள் என அணியலாம். திருமணப் பெண் அழகிய வெள்ளை நிற ஃப்ராக்கில் வரும்பொழுது அந்தத் திருமணத்திற்குச் செல்லும் நாமும் லாங் ஃப்ராக் போன்றவற்றை அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். லாங் ஃப்ராக் அணியும் பொழுது மிகவும் மெல்லிய செயின், மெல்லிய ப்ரேஸ்லெட், மாடர்ன் காதணி போன்றவற்றை அணிந்து சென்றால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பராக நாம் இருப்போம்.

    நீங்கள் விரும்பினால் தவிர உங்கள் உடையை ஒட்டுமொத்த சமூகத்துடன் உங்களால் தொடர்பு படுத்த முடியாது. ஒரு விருந்தினராக தென்னிந்தியத் திருமணத்திற்கு ஷராராவும், வட இந்தியத் திருமணத்திற்கு காஞ்சிபுரம் பட்டுச் சேலையும் அணிந்து செல்வது நம்முடைய விருப்பம் மற்றும் வசதியைச் சார்ந்ததாகும். இதில் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உடையானது பாரம்பரியமாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும்.

    வண்ணங்கள்

    இந்தியத் திருமணங்களில் அணியக்கூடிய எத்னிக் ஆடைகள் மிகவும் வண்ணமயமானதாக இருக்கும். ட்ரெஸ் கோட் அல்லது கலர் தீம் போன்றவை இல்லை என்றால் பிரகாசமான பிங்க், உயிரோட்டமான பச்சை, அடர் நீலம் எனப் பட்டாம்பூச்சி போல் பல்வேறு வண்ணங்களில் அணியலாம்.

    அடர்ந்த சிவப்பு / மெரூன் புடவைகள் மற்றும் லெஹங்கா சோளிகளை மணப்பெண்கள் பெரும்பாலும் அணிவதால் அவற்றை நாம் தவிர்க்கலாம். அதேபோல் முழு வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடைகளை இதுபோன்ற மங்கள நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதை (திருமண வீட்டார் விரும்பாத பட்சத்தில்) தவிர்க்கலாம்.

    அணிகலன்கள்

    ஆடைக்கேற்ற ஆபரணங்கள் என்பவை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தங்க, வைர நகைகள் மட்டுமல்லாமல் இமிடேஷன் நகைகளும் திகைப்பூட்டும் அளவிற்கு அணிந்தால் ஆடம்பரமான தோற்றத்தைத் தருவதாக வந்து விட்டன.

    நெக்லஸ், ஹாரம், சோக்கர், அட்டிகை, பிப் நெக்லஸ், ஆத் நெக்லஸ், காலர் நெக்லஸ், குந்தன் ஜ்வல்லரி, கோல்ட் ஜ்வல்லரி, டெம்பிள் ஜ்வல்லரி, காசுமாலை, ஃப்லிக்ரீ ஜ்வல்லரி, ஆன்டிக் ஜ்வல்லரி, நவரத்ன அணிகலன், மாங்கா மாலை, மீனாகாரி ஜ்வல்லரி என எதை வேண்டுமானாலும் நம் நடைக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து அணியலாம்.

    சில உடைகளுக்கு மிகப்பெரிய ஜிமிக்கிகளை அணியும் பொழுது பார்ப்பவரை கவரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வளவு அழகான ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணியும்பொழுது அதற்கு ஏற்றாற்போன்ற காலணிகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். எம்ப்ராய்டரி ஜுட்டில், வண்ணமயமான சப்பல்கள், கட் ஷூக்கள் மற்றும் கற்கள் பதித்த குதிகால் செப்பல்களை தேர்வு செய்து அணியலாம்.

    அதே போல் காலணிகளை முதன் முதலாக நாம் செல்லும் விழாக்களுக்கு அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சில நேரங்களில் புதிய காலணிகள் கால்களுக்கு ஒத்துழைக்காமல் பிரச்சனையைத் தரும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எவ்வளவு நேர்த்தியாக உடை உடுத்தி அலங்காரம் செய்திருந்தாலும் காலணி ஒத்துவரவில்லை என்றால் அந்த விழாவில் நாம் முழுமனதுடன் உற்சாகமாக இருக்க முடியாது.

    காலணி மட்டுமல்ல உடைகளைக்கூட முதன் முதலாக விழாவிற்குப் செல்லும் நேரத்தில் அணிவதை விட முன்னதாகவே அணிந்து பார்த்து அவை நமக்கு எல்லா விதத்திலும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
    டயட்டில் இருப்பவர்கள் காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் செய்து சுவைக்கலாம்.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரவுன் பிரெட் - 8
    முட்டை - 4
    (சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைகருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் )
    வெங்காயம் - 1 பெரியது
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    குடை மிளகாய் - 1 சிறியது
    வெள்ளரி - அரையளவு
    உப்பு - தேவையான அளவு

    கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்

    செய்முறை

    வெங்காயம், வெள்ளரிக்காய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    பின் உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    இடையில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் ( முட்டை வெள்ளைக்கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் )

    வெங்காயம் வதங்கியதும் முட்டையை ஊற்றி கலந்து கிண்டவும்.

    இறுதியில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெள்ளரி கலந்து இறக்கவும்.

    பிரவுன் பிரெட்டை ஓரத்தை வெட்டி  விட்டு அதை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    இரண்டு பிரெட் துண்டங்களுக்கு நடுவில் முட்டை கலவையை வைத்து sandwich மேக்கரில் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பழச்சாறுகளிலிருந்தும் எந்த சத்துக்களும் வெளியேறாமல் நமக்குத் தரும் விதமாக ஜூஸர்கள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.
    பழங்களை நன்றாகக் கழுவிவிட்டு அப்படியே கடித்து, மென்று மெதுவாகச் சாப்பிடும்போது அதிலிருக்கும் எல்லாச் சத்துக்களும் நம் உடலுக்கள் செல்கின்றது. ஆனால், பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதற்கு சில நேரங்களில் விருப்பப்படுகிறோம். ஜூஸாக்கும் பொழுது அதன் மெல்லிய தோல்களை அகற்றி விடுகிறோம். மேலும், நாம் உபயோகப்படுத்தும் மிக்ஸர்களில் ஜூஸ் போடும்பொழுது அவை சிறிது சூடாகின்றது. இதுபோன்ற காரணங்களால் சில வைட்டமின் சத்துக் களானது வெளியேறி விடுகின்றது.

    இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல், நாம் பழங்களை அப்படியே சாப்பிட்டால் என்னென்ன சத்துக்களை இழக்காமல் எடுத்துக் கொள்கிறோமோ அதேபோன்று பழச்சாறுகளிலிருந்தும் எந்த சத்துக்களும் வெளியேறாமல் நமக்குத் தரும் விதமாக ஜூஸர்கள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

    பொதுவாக ஜூஸர்களில் இரண்டு வகை உள்ளது. அவை ஃபாஸ்ட் ஜூஸர், ஸ்லோ ஜூஸர். இதில், ஃபாஸ்ட் ஜூஸர் என்பவை பெரும்பாலான வீடுகளில் உபயோகப் படுத்தப்படும் சென்ட்ரிஃப்யூகள் ஜூஸர்கள். இவை, விரைவாக செயல்பட்டு பழச்சாறை எடுப்பதால் பழச்சாறனது சூடாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    ஸ்லோ ஜூஸர் அல்லது கோல்டு ப்ரஸ் ஜூஸர் அல்லது மேஸ்டிகேட்டிங் ஜூஸர் என்பவை பழங்களை மெதுவாக நாம் வாயில் மெல்வது போல் கசக்சிச் சாறைப் பிழிவதால் இவற்றில் பழச்சாறானது சூடாவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால், பழத்தின் பெரும்பாலான வைட்டமின் சத்தை அப்படியே நமக்குச் சாறாக்கித் தருகின்றன.

    * கோல்டு ப்ரஸ் ஜூஸர் என்று பிரபலமாக அழைக்கப்படும் இவை நார்மல் ஜூஸர்களை விட குறைந்த சத்தத்துடனேயே இயங்குகின்றன.

    * அதே போல் இதன் மூலம் பிழிந்தெடுக்கப்படும் பழக்கூழும் மிகவும் தரமானதாக உள்ளது.

    * இவை மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதால் அதிக பழக்கூழ், காய்கறிக் கூழைத் தர முடிகின்றது. இதனால், மிகவும் தரமான, சக்தி நிறைந்த உணவை நாம் உட்கொள்ளு கிறோம் என்ற திருப்தி நமக்கு ஏற்படு கின்றது.

    இவ்வகை ஸ்லோ ஜூஸர்கள் இரண்டு விதமான வடிவங்களில் கிடைக் கின்றன.

    * வெர்ட்டிகல் ஜூஸர்

    * ஹரிஸான்ட்டல் ஜூஸர்

    இந்த இரண்டு வகை ஜூஸர்களுமே சிறந்த வகையில் ஜூஸ்களைத் தயாரிக் கின்றன.

    இதில் சிங்கிள் கியர் மற்றும் ட்வின் கியர் ஜூஸர்கள் உள்ளன. சிங்கிள் கியர் ஜூஸர் அளவில் சற்று சிறியது. டபுள் கியர் ஜூஸரானது அளவில் பெரியது. அளவில் பெரியதாக இருப்பதால் இவற்றில் போடப்படும் காய்கறி மற்றும் பழங்களிலிருந்து ஒரு சொட்டு சாறைக்கூட வீணாக்காமல் நமக்குத் தருகின்றது.

    * இவ்வகை கோல்டு ப்ரஸ் ஜூஸர்களின் சிறந்த வடிவமைப்பு மற்றும் ஸ்டர்டி கட்டுமானத்தை வேறு எந்த ஜூஸர்களும் பிரதிபலிக்க முடியாது.

    * அதேபோல் மிக நீண்ட உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன.

    * இவற்றை சுத்தம் செய்வது எளிது. மிகக் குறைந்த நேரத்திலேயே சுத்தம் செய்து விடலாம்.

    * அதிகமாக உபயோகப்படுத்தினாலும் உராய்வது, உடைவது, ஒடுங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருந்தால் இவ்வகை ஜூஸர்களை வாங்காமல் இருக்க மாட்டோம்.

    இதன் விலையானது சற்று அதிகமாக இருந்தாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இவற்றை வாங்கலாம்.

    இவ்வகை ஜூஸர்களில் பிழியப்படும் சாறானது மிகவும் சிறந்த தரம் மற்றும் சிறிதளவும் கசப்பு இல்லாமல் இருப்பது இதன் சிறப்பிற்கு ஒரு சான்று எனலாம்.

    ட்வின் கியர் ஜூஸரானது காய்கறிகள், வெங்காயம் போன்றவற்றை மிகச் சிறப்பாக அரைக்கின்றது.

    ஜூஸர்களின் உள்ளிருக்கும் சில பாகங்களை நம்மால் சரிவர சுத்தம் செய்ய இயலாது. ஆனால் அதுபோன்ற சமயங்களில் இவ்வகை ஜூஸர்களில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் அவை தாமாகவே அவற்றைச் சுத்தம் செய்து கொள்ளக்கூடிய சிறப்பம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கருப்பு, வெள்ளை, சிவப்பு, கோல்டு மற்றும் க்ரே நிறங்களில் இவ்வகை ஜூஸர்கள் கிடைக்கின்றன.
    இம்முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதன் முதலாக புதிய பாடத்திட்டத்தின்படியும், வினாத்தாள் வடிவமைப்பு இல்லாமலும், நன்கு சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் இடம்பெறும் வினாத்தாள்களுக்கும் விடையளிக்க உள்ளனர்.
    கொரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 27-ந் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 14-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதன்பிறகான நாட்களில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை எப்படி பயன்படுத்தி கொள்வது என்பதை திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் விளக்குகிறார்.

    இம்முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதன் முதலாக புதிய பாடத்திட்டத்தின்படியும், வினாத்தாள் வடிவமைப்பு இல்லாமலும், நன்கு சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் இடம்பெறும் வினாத்தாள்களுக்கும் விடையளிக்க உள்ளனர். மேலும் இரு தாள்களாக எழுதப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையில், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே அதிகளவில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இனிவரக் கூடிய தேர்வுகளுக்கு விடுமுறை குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. மாணவர்கள் இதற்கு தகுந்தவாறு தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

    பொதுவாக எந்த பொதுத்தேர்வு தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னர், புதிதாக எந்தப் பாடப் பகுதியையும் படிக்காமல், ஏற்கனவே படித்த பாடங்களை திருப்புதல் (revise) செய்வது வழக்கம். ஏனெனில் படிக்காமல் உள்ள புதிய பாடப் பகுதிகளை படிக்க அதிக நேரமாகும். ஆனால் இப்போது புதிதாக தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட இருப்பதாலும், அதிக விடுமுறை நாட்கள் உள்ளதாலும் மாணவர்கள் படிக்காமல் விட்ட புதிய பாடப் பகுதிகளையும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டும்.

    மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கைப்பேசி மூலமாக ஆசிரியர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறலாம்.

    மேலும் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைய வழிக் கல்வி வலைதளம் e-learn.tnschools.gov.in தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துப் பாடங்களும் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வசதி இல்லாத மாணவர்களும் தங்கள் செல்போன் மூலமாக, தாங்களே கற்றுக்கொள்ளும் வகையில் எளிய வடிவில் இது உள்ளது.

    இதைத் தவிர மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வித் தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. டி.டி. பொதிகை தொலைக்காட்சியிலும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை பாடம் சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன. மாணவர்கள் இவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ், ஆங்கிலப் பாடங்களில் மனப்பாடப்பகுதிகள் மற்றும் இலக்கணம் சார்ந்த பகுதிகள், கணிதப் பாடத்தில் செய்முறை வடிவியல் பகுதி மற்றும் வரைபடம், அறிவியல் பாடப்பகுதியில் உள்ள படங்கள், சமூக அறிவியல் பாடத்தின் வரைபடங்கள் மற்றும் காலக்கோடுகள் போன்றவற்றை அவ்வப்போது திருப்புதல் செய்யவேண்டும். கூடுதலாக அனைத்துப் பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்களை தயார் செய்து படிக்க வேண்டும்.

    ரவி காசி வெங்கட்ராமன்
    இரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான். இரத்த அழுத்தம் திடீரென்று கூடிவிட்டாலோ, குறைந்து விட்டாலோ உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
    இரத்த  அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான். இரத்த  அழுத்தம் திடீரென்று கூடிவிட்டாலோ, குறைந்து விட்டாலோ உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

    இரத்த  அழுத்தம் உயர்ந்து திடீர் சோர்வு ஏற்பட்டால், உடனே பதற்றம் அடைவதை தவிர்த்து, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு, ஓய்வெடுங்கள். மனதை அமைதிப்படுத்தியபடி உட்கார்ந்து, இரத்த  அழுத்தத்தை பரிசோதிக்க முன்வாருங்கள். பரிசோதனையில் இரத்த  அழுத்தம் உயர்ந்திருப்பது தெரிந்தால், ஒரு மணி நேரமாவது அமைதியாக படுத்து ஓய்வெடுங்கள். இரத்த  அழுத்தம் உயர்ந்திருப்பதாக கருதும்போது சுவாச பயிற்சி மேற்கொள்ளவேண்டும். முறையான சுவாச பயிற்சி பெறாதவர்களும் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியேவிட வேண்டும். 15 நிமிடங்கள் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும். பின்பு இரத்த  அழுத்தத்தை பரிசோதித்துப் பாருங்கள். குறைந்திருப்பதாக தெரிந்தால், மீண்டும் அதே பயிற்சியை சிறிதுநேரம் செய்து, இரத்த  அழுத்தத்தை சீராக்க முயற்சி செய்யுங்கள்.

    இரத்த  அழுத்தம் உயர்ந்திருப்பதாக கருதும்போது மன அமைதி முக்கியம். அதுபோல், சுற்றுப்புறத்திலும் அமைதி நிலவவேண்டும். அதிக வெயில் இல்லாத அதிக சத்தம் இல்லாத அமைதியான, காற்றோட்டமான இடத்தில் அமருங்கள். இரத்த  அழுத்தம் திடீரென உயர்வது சில முக்கிய நோய் களுக்கான அறிகுறியாகும். இதய செயல்பாட்டு குறைவாலும், பக்கவாதத்திற்கான தொடக்க பாதிப்பாலும் இரத்த  அழுத்தம் உயரலாம். இரத்த  அழுத்தத்தோடு இயல்புக்கு மாறான மாற்றங்கள் உடலில் ஏற்பட்டாலோ, கட்டுப்பாடுகளை மீறிய தடுமாற்றங்கள் ஏற்பட்டாலோ, உடனடியாக உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைக்கு விரைந்திடுங்கள். அப்போது மன அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்த தகவலும் உங்களை வந்து சேர்ந்துவிடக் கூடாது. அதனால் செல்போனை சைலண்ட் மோடில் போட்டுவிடுங்கள்.

    இரத்த  அழுத்தம் திடீரென்று குறைந்தால்..?

    உப்பு சேர்த்த ஏதாவது ஒரு பானத்தை உடனே அருந்த முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை பழ சாறில் உப்பும், தண்ணீரும் கலந்து பருகுவது நல்லது. செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு, ஓய்வெடுக்க தயாராகுங்கள். ஓய்வு என்பது அரைமணி நேரமாவது படுக்க வேண்டும். படுத்து ஓய்வெடுத்த பின்பு இரத்த  அழுத்தத்தை பரிசோதனை செய்யுங்கள். அப்போதும் இயல்பு நிலை திரும்பாவிட்டால், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    இரத்த  அழுத்தம் குறையும் நேஇரத்த ில் ஏதாவது உணவை சிறிதளவு சாப்பிடலாம். அது எளிதாக ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியாக இருக்கலாம். பிஸ்கெட், பிரெட், ஓட்ஸ், ரவை போன்றது நல்லது. டீ அல்லது காபியும் பருகலாம். இந்த உணவுகள் இரத்த  அழுத்தத்தை மேம்படுத்த உதவும். சிலவகையான நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் இரத்த  அழுத்தம் குறையலாம். எந்த மருந்தால் இரத்த  அழுத்தம் குறைந்தது என்பதை கண்டறிந்து அதற்குரிய மருந்து சாப்பிட்டு இரத்த  அழுத்தத்தை சீராக்கவேண்டும். இந்த பிரச்சினையை டாக்டரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

    மாம்பழம், பீன்ஸ், நெல்லிக்காய், திராட்சை, உலர்ந்த திராட்சை, ப்ராகோலி, நேந்திரம் பழம், ஆப்பிள், தக்காளி பேரீச்சை, ஆரஞ்சு பழம் போன்றவை இரத்த  அழுத்தத்தை சீராக்கும் உணவுகளாகும்.

    இரத்த  அழுத்தத்தில் சீரற்ற நிலை ஏற்படாமல் இருக்க வாஇரத்த ில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முறையான உடற்பயிற்சி செய்யாவிட்டாலும்கூட தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இரத்த  அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உப்பின் உபயோகத்தை குறையுங்கள். ஊறுகாய், அப்பளம் போன்றவைகளை சாப்பிடாதீர்கள். தினமும் உங்கள் உடலுக்குள் 5 கிராமுக்கு மேல் உப்பு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினைகளை மனதில்போட்டு குழப்பாதீர்கள். மன அமைதி கெட்டுவிட்டால் இரத்த  அழுத்தம் உயர்ந்து விடும். மது அருந்தும் பழக்கம் இருந்தால் கைவிட்டுவிடுங்கள். புகயிலை பொருட் களையும் பயன்படுத்தாதீர்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம் இருந்தால், அடிக்கடி இரத்த  அழுத்தத்தை பரிசோதியுங்கள். குறட்டை உயர் இரத்த  அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.
    சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும்.
    தேங்காய் எண்ணெய்யை, கூந்தலுக்கும், சருமத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அதை சமையலுக்கும் உபயோகிக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் இன்னும் என்ன சிறப்புகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்..

    சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகரிக்கும்போது, சரும புற்றுநோய், தோல் சுருக்கங்கள், கருமை புள்ளிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை 20 சத வீதம் வரை தடுக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.

    தேங்காய் எண்ணெய் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. பற்களை தூய்மையாக பராமரிக்காவிட்டால் பற்களில் பாக்டீரியாக்கள் ஊடுருவி ஈறுகளை பாதிக்கும். பற் சிதைவையும் உருவாக்கும். தினமும் பல் துலக்கும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் பற்கள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும். தோல் அலர்ஜி பாதிப்புக்குள்ளான 47 சதவீத குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணியாக செயல்பட்டிருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

    சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். அதேவேளையில் சருமம் அதிக எண்ணெய்ப்பசை தன்மையுடன் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டியதில்லை.
    ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.
    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், தொற்றுநோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காயத்துக்குப் போடும் பிளாஸ்திரி மாதிரி பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். அவற்றில் மிக முக்கியமானது, நிமோனியா.

    எது நிமோனியா? :'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' எனும் பாக்டீரியா கிருமிகள் காற்றில் கலந்து வந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

    ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.

    அறிகுறிகள் :இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.

    இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

    சிகிச்சை என்ன :நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனைச் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.

    அதேநேரத்தில் நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைக் காலத்தோடு போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது. தடுப்பூசி வகை :'பிசிவி 13' தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம்.  குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு 'முதன்மைத் தடுப்பூசி' என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.

    'பிபிஎஸ்வி 23' (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும். அதிலும் எல்லா குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் 'PCV 13' தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து 'PPSV 23' தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'PPSV 23' தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.

    முதியோரையும் தாக்கும் :நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால் உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் 'பிசிவி 13' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து 'பிபிஎஸ்வி 23' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.

    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்குத்தான் இந்த இரண்டுவகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.

    சுத்தம் அவசியம் :நிமோனியா மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். தெருக்களில் எச்சில் மற்றும் சளியைத் துப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் விறகு/கரி அடுப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் எவரும் புகைபிடிக்கக்கூடாது.

    குழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு ஆறு மாதம் முடிகிற வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிரம்பிய இணை உணவுகளை இரண்டு வயது வரை தர வேண்டும். குழந்தைக்கு உடல் சுத்தம், கை, ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.

    -டாக்டர் கு. கணேசன்,பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.gganesan95@gmail.com
    ×