search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone game"

    போக்குவரத்து போலீசார் பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று அறிக்கை வெளியிட்ட தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் பலர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாமல், சாலையோரம் உட்கார்ந்துக் கொண்டு செல்போனில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடும் கண்டனம் தெரிவித்தார்.

    ‘பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், தன் கார் உள்பட சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் புறப்படும்போது, ஒரு பெண் சாலையை வேகமாக கடந்தார். ஆனால், எதையும் கண்டு கொள்ளாமல், போக்குவரத்து போலீசார் தன்னுடைய செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார்.


    இதுகுறித்து தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரது கவனத்துக் கொண்டு செல்லவேண்டும்’ என்று அரசு குற்றவியல் வக்கீல் முகமது ரியாசிடம் நீதிபதி கூறினார்.

    இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அரசு குற்றவியல் வக்கீல் ஆஜராகி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகளை தாக்கல் செய்தார்.

    அதில், ‘போலீசார் எந்நேரமும் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக புகார்கள் ஏராளமாக வருகின்றன. போலீஸ் பணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் விதமாக துடிப்புடன் இருக்கும் பணியாகும். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் போலீசார், செல்போன் பயன்படுத்துவதன் மூலம் கவனச்சிதறல் ஏற்படுகின்றன. எனவே, செல்போன் பயன்பாட்டினால், ஏற்படும் கெட்ட பின்விளைவுகளை உயர் அதிகாரிகள் எடுத்துக் கூறவேண்டும். பணியில் இருக்கும் போலீசார் செல்போன்களை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது.

    எனவே, சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் பணியாற்றுபவர்கள், பணியின்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி என்பது முக்கியமான பணி என்பதால், போக்குவரத்து போலீசார் பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர் அரசு குற்றவியல் வக்கீல், ‘இந்த சுற்றறிக்கை வெளியிட்ட பின்னரும் செல்போனை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 13 போலீசார் மீதும், திருவாரூர் மாவட்டத்தில் 9 போலீசார் மீதும், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் தலா 3 பேர் என்று 6 போலீசார் மீதும், திண்டுக்கலில் 2 பேர் மீதும், கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒரு போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘ஐகோர்ட்டு கருத்து தெரிவித்ததும், டி.ஜி.பி.யும், சென்னை போலீஸ் கமி‌ஷனரும் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. பொது மக்களின் நலனுக்காகத் தான் இந்த கருத்து நான் தெரிவித்தேன். எனவே, போக்குவரத்து போலீசார் பணியின்போது, உயிர் சேதம் ஏற்படாத வண்ணம், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவேண்டும்’ என்று கூறினார். #MadrasHC
    சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீஸ்காரர்கள் செல்போனில் விளையாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். #MadrasHC
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, இன்று காலையில் ஐகோர்ட்டுக்கு வரும் வழியெல்லாம் போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருந்ததை பார்த்தேன். அத்தனை பேரும், அங்கு சர்வ சாதாரணமாக உட்கார்ந்துக் கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    யாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை செய்யவில்லை. சிக்னலில் என்னுடைய கார் உள்பட ஏராளமான வாகனங்கள் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், அனைத்து வாகனங்களும் புறப்படும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலை குறுக்கே ஓடுகிறார். அதை கண்டுக் கொள்ளாமல், போலீஸ்காரர் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட அரசு வக்கீல், அது எந்த சிக்னல் என்று கூறினால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.

    அதற்கு நீதிபதி, அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. என்னைப் பொருத்தவரை பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த பெண்மணி மீது வாகனங்கள் மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு இடம் மட்டுமல்ல, சென்னை முழுவதும் 99 சதவீத போக்குவரத்து போலீஸ்காரர்கள் வேலை செய்வது இல்லை.


    சாலையோரம், சிக்னல் அருகே உள்ள இரும்பு சேரில் உட்கார்ந்துக் கொண்டு போன் பேசுவது அல்லது போனில் வாட்ஸ்அப் பார்ப்பது, இதை தான் செய்கின்றனர். சாலையில் செல்லும் உயர் போலீஸ் அதிகாரிகளும் இதை கண்டு கொள்வது இல்லை. அதற்காக இந்த நிலையை இப்படியே விட்டு விடவும் முடியாது என்று கூறினார்.

    பின்னர், நீதிபதிகள் தன் மேஜைக்கு மேல் செல்போன்களை வைத்துக் கொண்டு, வழக்கு விசாரணைகளுக்கு இடைஇடையே செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாலோ, பேசினாலோ எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் இந்த நிலவரத்தை கூறுங்கள். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பதை வருகிற 30-ந்தேதி எனக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். #MadrasHC
    ×