என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    முதுகுவலியில் அவதிப்படுபவர்கள் அந்த வலியில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வழிமுறைகளை பின்பற்றினால் போதும். முதுகு வலி வராமல் தடுக்கலாம்.
    இன்று.. பொதுவாக பெரும்பாலானோர் உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை பின்பற்றினால் போதும்:-

    1. தினம் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

    2. அமரும்போது வளையாதீர்கள்.

    3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

    4. சுருண்டு படுக்காதீர்கள்.

    5. கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள்.

    6. தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

    7. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

    8. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

    9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

    10. காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

    இதை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து நிவாரணம் அடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
    வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. குழந்தைகளின் மூளை நன்கு வளர்ச்சி பெறவும் தூண்டப்படுவதற்கு ஏற்றதான பயிற்சிகளை விளையாட்டு மூலம் கொடுக்கலாம்.
    குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    பில்டிங் பிளாக்ஸ் விளையாட்டு

    ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகின்ற எளிமையான விளையாட்டு இது. வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஒரு உருவத்தை செய்வார்கள். இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும். மூளை தூண்டப்படும்.

    பசல்ஸ்

    கிச்சடி சமையலில் எவ்வளவு சத்துகள் நிரம்பியுள்ளதோ அதுபோல இந்த பசல்ஸ் விளையாட்டில் மூளை தூண்டப்படும் காரணிகள் அமைந்து இருக்கும். அவர்கள் ஒரு உருவத்தை வரவைக்க சிந்தித்து, அதை, இதை என மாற்றி மாற்றி மூளைக்கு வேலைத் தருகிறார்கள். கண்களும் கைகளும் ஒருங்கிணைப்பாக வேலை செய்யும். இந்த பசல்ஸ் வெற்றிகரமாக விளையாடி முடித்தவுடன், குழந்தை வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியைப் பெறும். தன் மேல் நம்பிக்கை வரும்.

    வார்த்தை விளையாட்டு

    ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கு ஏற்ற படத்துடன் பொருத்துவது போன்ற விளையாட்டு இது. சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரை பொருத்துவது போன்ற விளையாட்டு. எழுத்து திறமை மேலோங்கும். நினைவு திறன் அதிகரிக்கும்

    கண்டுபிடி கண்டுபிடி

    ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு அதைக் குழந்தையிடன் காண்பிக்கவும். அந்தப் பந்தை வீட்டில் தேடி கண்டுபிடிக்க சொல்லலாம். இதுபோல வார்த்தை வைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால் குழந்தைகள் வார்த்தைகளை அதன் சொல் அமைப்பை நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.

    போர்ட் கேம்ஸ்

    பாம்பு - ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும். பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

    எண் விளையாட்டு

    இசையை ஒலிக்க செய்துவிட்டு, 1 முதல் 100 வரை சொல்ல வேண்டும். பாட்டை நிறுத்திய உடனே எந்த எண்ணில் இருக்கிறார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். ஒவ்வொரு முறை பாட்டை நிறுத்தும்போது ஒவ்வொரு குழந்தையும் எண்ணை மாற்றி மாற்றி சொல்லி கொண்டே இருப்பார்கள். இசை நிறுத்தியவுடன் எந்த எண்ணில் விட்டார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். குழுவாக விளையாடும் திறன் மேலோங்கும். எண் பற்றிய அறிவு கிடைக்கும்.

    மொழி திறன்

    உங்களுக்கு தெரியுமா? குழந்தைகளால் தங்களது 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்று கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.

    உடலுக்குப் பயிற்சி தரும் விளையாட்டு

    ஓடுதல், ஸ்கிப்பிங் விளையாடுதல், குதித்தல், ஓடிப் பிடித்து விளையாடுதல், பந்தை பிடித்தல், கொகோ விளையாடுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளால் பல்வேறு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். உடற்பயிற்சி, மனபயிற்சி இவை.
    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்துப் பழக்கிவிடுவது நல்லது.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

    நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

    குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதி
    நீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.
    கருப்பு மிளகு வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்கக்கூடியது. சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும் உதவும்.
    உங்களுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறதா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணமாகும். உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அவசியமானது.

    வீட்டின் சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச்செய்துவிடலாம். இதற்கு கருப்பு மிளகு சிறந்த தீர்வாக அமையும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    கருப்பு மிளகு தரும் ஆரோக்கிய நன்மைகள்:

    உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு குடல் ஆரோக்கியம் முதன்மையானது. தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். செல்கள் சேதமடைவதையும் தடுக்கும். பருவகால நோய் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வழிவகை செய்யும்.

    காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். வெதுவெதுப்பான நீருடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்த்து பருகி வரலாம். நீர், மிளகு இவை இரண்டும் செரிமானத்தை சீராக்கும். அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். ஒரு மாதத்திலேயே உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம்.

    சூடான நீருடன் மிளகு சேர்த்து பருகுவது குடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். நீரிழப்பை தடுக்கவும் உதவும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவதற்கும் துணைபுரியும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் வழிவகுக்கும்.

    நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் பிரச்சினை குறைந்து வருவதை உணரலாம். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதன் மூலம் வயிற்றுக்கும் இதமாக இருக்கும்.

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை பருக ஆரம்பித்தால் உடலில் ‘ஸ்டெமினா’ அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஏனென்றால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்துவிடும். அதனால் உடல் ஆற்றலும் அதிகரிக்கும்.

    கருப்பு மிளகு வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்கக்கூடியது. சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும் உதவும். கீல்வாதம், மூட்டு வலி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது நல்லது. அதேவேளையில் அதிகம் பருகினால் குடலில் எரிச்சல் ஏற்படக் கூடும்.
    கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்க சத்தான சுவையான ராகி மினி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிது

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை சிறிது சிறிதாக ராகி மாவில் ஊற்றி மரக்கரண்டி அல்லது மர ஸ்பூனால் கட்டி விழாமல் கிளறவும். இதை மூடி போட்டு ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு கைகளில் எண்ணெய் தடவிகொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    அடுப்பில் இட்லி குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டை வைத்து துணி விரித்து, உருட்டிய கேழ்வரகு உருண்டைகளை தட்டில் வைத்து மூடி போட்டு, பத்து நிமிடம் வேக விடவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது வதக்கி, பெருங்காயத்தூள், வேகவைத்த கொழுக்கட்டை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மெதுவாகப் புரட்டி இரண்டு நிமிடம் வதக்கவும்.

    அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை ரெடி.
    பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது. கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
    நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகள் தூண்டப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றது என்பது பழங்காலத்தொட்டே நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். அதிலும் கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது.

    * கண்டசரம்: வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன்.

    * உட்கத்துச்சரடு: கழுத்தை ஒட்டி அணியும் ஷார்ட் செயின்களே இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவற்றில் மிக மெல்லியதாக இருப்பவை இளவயது ஆண், பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படும் தங்கச்சங்கிலிகள் ஆகும். அதேபோல், நடுத்தர அளவில் வரும் செயின்களும், பட்டையாக வரும் செயின்களும் கூட ஆண் மற்றும் பெண்களால் விரும்பி அணிப்படுகின்றது.

    * நெக்லஸ்: முழுவதும் தங்கத்தால் ஆனவை. கற்கள் பதித்தவை, முத்து, பவளம் பதித்தவை, வைரம் மற்றும் பிளாட்டின நெக்லஸ்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நெக்லஸ்களில் பலவிதமான டிசைன்கள் உள்ளன. இதிலும் பட்டையாக மட்டுமல்லாமல் நடுத்தர அளவிலும் நெக்லஸ்கள் வருகின்றன. கற்கள் பதித்த நெக்லஸ்களின் அடிப்புறம் கற்களை மூடியவாறு வருபவை ‘க்ளோஸ்டு’ வகையாகும். இவ்வகை நெக்லஸ்களில் தங்கம் அதிக அளவில் உபயோகப் படுத்துவதால் இவற்றின் எடை அதிகமாக இருக்கும்.

    ‘ஓபன்’ வகை நெக்லஸ்களில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களை அடிப்புறம் மூடாமல் வைத்திருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

    நெக்லஸ்களில் குறைந்த தங்கத்தில் அதிக மாடல்களும், டிசைன்களும் இப்பொழுது வந்துவிட்டன. வைர மற்றும் பிளாட்டின நெக்லஸ்கள் பெரும்பாலும் மெல்லிய மற்றும் நடுத்தர அளவிலேயே வருகின்றன. இதில் பெங்காலி மாடல், வார்ப்பு (கேஸ்டிங்) மாடல், கல்கத்தா மாடல், பாம்பே மாடல், டர்கிஷ்மாடல் என பல மாடல்களில் நெக்லஸ்கள் தனிச்சிறப்புகளுடன் வருகின்றன. இதில் மேக்னட் நெக்லஸ் மாடல்கள் பார்ப்பதற்கு பென்டென்ட்டுகளுடன் வரும் குட்டைச் செயின்கள் போல இருந்தாலும் பென்டென்ட்டுகளை விரித்து நெக்லஸ் போல மாற்ற முடியும். இவற்றை கழுத்தை ஒட்டியும் அணிந்து கொள்ளலாம்.

    * பாரம்பரிய அட்டிகைகள்: பெரும்பாலும் பட்டையாக கழுத்தை ஒட்டி வரும் இவ்வகை அட்டிகைகளில் பதக்கங்கள் கற்கள் வைத்தவையாகவே இருக்கும். பிளெயின் பதக்கங்கள் வைத்த அட்டிகைகள் குறைந்த அளவிலேயே அணியப்படுகின்றன. பாரம்பரிய அட்டிகைகள் மட்டுமல்லாது இப்பொழுது ஃபேன்ஸி அட்டிகைகளும் வந்துவிட்டன. குழந்தைகள் அணிவது போல் வரும் அட்டிககைள் மிகவும் அழகான சின்ன டாலர்களுடன் வருகின்றன.

    * சோக்கர்கள்: கழுத்தில் நெருக்கமாக அணியும் கழுத்தணி என்று இதைச் சொல்லலாம். சோக்கர்களின் பூர்வீகம் வெஸ்டர்ன் என்றாலும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் உருமாற்றப்பட்டுள்ளது. குந்தன், போல்கி மாடல்கள் மட்டுமல்லாது முத்துக்கள் பதித்த சோக்கர்களும் மிகவும் ஆடம்பரமான தோற்றத்தைத் தருகின்றன. கற்கள்பதித்து வரும் சோக்கர்கள் அடுக்கு மாடல்களில் வருகின்றன இவற்றை பாரம்பரிய ஆடைகள் மட்டுமல்லாது வெஸ்டர்ன் ஆடைகளுடனும் அணியலாம். எடை குறைவாகவும் அதே நேரத்தில பார்வையாகவும் சோக்கர்கள் கிடைப்பது கூடுதல் சிறப்பு. கழுத்தில் இந்த ஒரு நகை அணிந்தாலே அவை நிறைவாக இருக்கும்.
    வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதை விட, கிடைத்துள்ள வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு வாழப்பழகுவதே நல்லது. எங்கும், எதற்கும் அஞ்சாமல் எப்போதும் உற்சாகமாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.
    நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மையமாக மனம் விளங்குகிறது. மனமும், உடலும் இரண்டற கலந்ததே ஆரோக்கியம். கோபம், விரக்தி, பொறாமை, கவலை ஆகியவை மனிதனின் உடல் நலத்தை பாதிக்கின்றன. இதில் கோபம் என்பது நம்மை நாமே அழித்து கொள்ளும் ஆயுதமாக உள்ளது.

    கோபம், ரத்த கொதிப்பை ஏற்படுத்துகிறது. முகத்தை வெளிற செய்து விடுகிறது. எப்போதும் சந்தோசமாய் சிரித்து கொண்டே இருங்கள். தனக்குத்தானே ஆலோசனைகளை வழங்கி, தன்னம்பிக்கையுடன் இருந்தால் எந்த நோயும் தாக்காது.

    மோசமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட நம்பிக்கையினால் உற்சாகம் பெற்று மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு இருக்கின்றனர். எங்கும், எதற்கும் அஞ்சாமல் எப்போதும் உற்சாகமாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதை விட, கிடைத்துள்ள வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு வாழப்பழகுவதே நல்லது.
    குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தந்தையின் ஆயுளுக்கும், பெண் குழந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு பந்தம் இருப்பதாக கீலோனியன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆய்வுக்கு 4310 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2162 பேர் தந்தையர். ஆய்வின் முடிவில் மகன்களின் எண்ணிக்கைக்கும், தந்தையின் ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் மகள் இருந்தால் தந்தையின் ஆயுள் 74 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், எத்தனை மகள்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆயுள் காலம் மாறுபடும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாயின் ஆரோக்கியமும், ஆயுட்காலமும் குறைகிறது. அதேவேளையில் தனியாக வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குழந்தை இல்லாத தம்பதியரை விட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதியர் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
    சிரிப்பதால் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.
    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை  வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. சிரிப்பதால் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது.

    நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. நீண்ட நேர சிரிப்பு உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகள் நீக்க பயன்படுகிறது. மேலும் ஜீரணிக்கும் நீர் சுரப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

    உடல் ரீதியாக..

    * நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

    * மன அழுத்த ஹார்மோனின் செயல்பாடுகளை குறைக்கும்

    * உடல் வலியை போக்கும்

    * தசைகளை தளர்வடைய செய்யும்

    * இதய நோய்களை தடுக்கும்

    மன ரீதியாக...

    * மகிழ்ச்சியை நிலைத்திருக்க செய்யும்

    * கவலை, பயத்தை போக்கும்

    * மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைக்கும்

    * மன நிலையை மேம்படுத்தும்

    * மன நெகிழ்ச்சியை அதிகப்படுத்தும்

    சமூக ரீதியாக...

    * உறவை வலுப்படுத்த உதவும்

    * மற்றவர்களை எளிதில் அணுக முடியும்

    * குழுவாக செயல்படுவதை ஊக்கப்படுத்தும்

    * மற்றவர்களுடனான மோதல் போக்கை குறைக்க உதவும்
    பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். இதற்கு இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.
    குழந்தை பிறப்புக்கு பின்பு பெரும்பாலான பெண்களின் அடிவயிற்றுப்பகுதியில் சதை போடும். இதை கட்டுப்படுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டபோதும் அவை எதுவும் பலன் தராமல் வயிறு பெருத்துவிட்டது என்று கவலைப்படுவார்கள்.

    பெத்த வயிற்றில் பிரண்டையை கட்டு எனும் பழமொழி கிராமங்களில் பரவலாக உள்ளது. பிரண்டையில் உள்ள சத்துக்களுக்கு அடிவயிற்று கொழுப்பை கரைக்கும் தன்மை உண்டு. குழந்தை பெற்ற தாய்மார்கள் பிரண்டையை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் அடிவயிற்று கொழுப்பை எளிதாக குறைக்கலாம் என்பதை வலியுறுத்தியே இந்த பழமொழி உருவாக்கப்பட்டு உள்ளது.

    பிரண்டை அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பை கரைக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். பிரண்டையை வாரத்தில் 2 முறை துவையலாக தயார் செய்து சாப்பிடலாம். பிரண்டை கிடைக்காத நேரங்களில் பிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் எடுத்து பாலில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் உடல் பருமன் குறைவதோடு அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு குறையும்.

    பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். இதற்கு இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.

    பிரண்டை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும். எனவே பிரண்டை தண்டு மற்றும் இலையை பயன்படுத்தும் போது இளம் இலைகள், தண்டுகளை நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி பயன்படுத்த வேண்டும். 300-க்கும் மேற்பட்ட வியாதிகளை குணப்படுத்தக்கூடிய தன்மை பிரண்டைக்கு உள்ளது. நமது உடலை வஜ்ரம் போல் பாதுகாப்பதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உள்டு

    கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, கரோட்டின் போன்ற சத்துக்கள் பிரண்டையில் உள்ளது.
    மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்..
    தேவையான பொருட்கள்

    கொண்டைக்கடலை - 200 கிராம்
    மிளகாய் வற்றல் - 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையானது
    பெருங்காயம் - ½ டீஸ்பூன்
    எண்ணெய் - தாளிக்க

    செய்முறை

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய், வற்றல் சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும்.

    பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும்.

    சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி!

    பாத்திரம் தேய்ப்பதற்கு முடியாதவர்கள் மற்றும் பிடிக்காதவர்களுக்கு மிக மிகச் சுத்தமாகப் பாத்திரத்தை கழுவித்தரும் வேலையை டிஷ்வாஷர்கள் செய்கின்றனர்.
    பாத்திரம் தேய்க்கும் இயந்திரங்களை (டிஷ் வாஷர்ஸ்) சமையலறையின் சொத்து என்று சொல்லலாம். சமையலை எளிதாக முடித்து விடலாம். ஆனால், பாத்திரம் தேய்ப்பதற்கு முடியாதவர்கள் மற்றும் பிடிக்காதவர்களுக்கு மிக மிகச் சுத்தமாகப் பாத்திரத்தை கழுவித்தரும் வேலையை டிஷ்வாஷர்கள் செய்கின்றனர். டிஷ்வாஷர்களை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கூடிக் கொண்டே வருகின்றது.

    இவை நம்முடைய நேரம், ஆற்றல் மற்றும் மின்சாரத்தைக் குறைந்த அளவு உபயோகிப்பதால் பணத்தையும் மிச்சப்படுத்துகின்றது. நம் இந்திய சமையலில் அதிக எண்ணெய் மற்றும் மசாலாக்களை பயன்படுத்துகின்றோம். இதனால் பாத்திரங்களில் பிசுபிசுப்பு அதிகமாக இருப்பதால் அவற்றைக் கழுவி எடுப்பது என்பது மிகவும் கடினமான வேலையாகும். இதுபோன்ற கஷ்டங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற வந்திருக்கும் உயிர்காப்பான் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அற்புதமாக பாத்திரம் தேய்க்கும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. டிஷ்வாஷர்களில் சென்சார்கள் மற்றும் ரேக் சிஸ்டம் இருப்பதால் இவை பாத்திரங்களை மிகவும் சுத்தமாகவும், கிருமிகள் இல்லாதவாறும் கழுவித் தருகின்றன.

    உணவுத் தட்டுகள், இனிப்பு சாப்பிட்ட தட்டுகள், சூப் கிண்ணம், கண்ணாடி டம்ளர்கள், டீ கப் மற்றும் சாஸர்கள், கத்தி, கரண்டி மற்றும் முட்கரண்டி ஆகியவற்றை வைத்துக் கொள்வது போல இட அமைப்புகள் உள்ள டிஷ்வாஷர்கள் ஏழெட்டு உறுப்பினர்கள் இருக்கும் குடும்பத்திற்கு ஏற்றவையாகும். அதிக பிசுபிசுப்புடன் இருக்கும் கடாய், அதிக அளவு மினுமினுப்பானவை, கூடுதல் உலர் தன்மையோடு இருப்பவை, அரைசுமை (ஹாஃப் லோடு), வேரியோ ஈக்கோ ப்ரீ ரின்ஸ் போன்று ஆறு கழுவும் திட்டங்களுடன் டிஷ்வாஷர்கள் உள்ளன.

    அதிக பிசுபிசுப்புடன் தீவிரமாக இருக்கும் கடாய்த் தேர்வானது இந்தியப் பாத்திரங்களுக்கு ஏற்றவை. அதிகஅளவு மினுமினுப்பானவை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அரை சுமை குறைவான பாத்திரங்களுக்கு ஏற்றவை. கூடுதல் உலர் தன்மையானது உலர்த்தும் செயல் திறனுக்காகவும், வேரியோ ஈக்கோ நீர் மற்றும் மின்சாரத்தின் உகந்த பயன்பாட்டிற்காகவும், ப்ரீரின்ஸ் கடுமையான கறைகளைப் போக்குவதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ள கழுவும் திட்டங்களாகும்.

    சில மாடல்களில் இருக்கும் அக்வா சென்ஸார் அமைப்பானது பாத்திரங்களின் அளவிற்கேற்ப அதில் உபயோகப்படுத்தக்கூடிய நீரின் அளவை நிர்ணயிக்கின்றது.

    பெரும்பாலான மாடல்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதுடன், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சைல்ட் லாக் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    எலக்ட்ரானிக் டிலே டைமர் என்ற அமைப்பானது நாம் விரும்பும் நேரத்தை அதில் முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் அது குறிப்பிட்ட நேரமானவுடன் தன்னுடைய வேலையை செய்யத் தொடங்குவதுடன் பணியின் மீதமுள்ள நேரத்தையும் காட்சிப் படுத்துகின்றது.

    உங்களுடன் சமையலறையின் ஒரு சிறிய மூலையில் பொருத்தக்கூடிய வகையில் வந்திருக்கும் டேபிள் டாப் டிஷ்வாஷர்கள் மிகவும் அழகாகவும், க்யூட்டாகவும் உள்ளன. இவை நீடித்து உழைக்கக்கூடிய ஆனால், அதே நேரத்தில் இலகுரக தயாரிப்பு என்று சொல்லலாம். இவை உருவத்தில் சிறியதாக இருப்பதால் எந்த வகையான சமையலறையிலும் பொருத்தக்கூடியது.

    இதுபோன்ற மாடல்களை பராமரிப்பதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் எளிது. டிஸ்வாஷர்களிலிருக்கும் இன்பில்ட் ஹீட்டர்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அளவிற்கு ஏற்றவாறு தண்ணீரைச் சூடு செய்கின்றது. சுடுதண்ணீரினால் கழுவப்படும் பாத்திரங்கள் மிகவும் சுத்தமாக பிசுக்குகளில்லாமல் இருக்கின்றன.

    இன்வெர்ட்டர் டைரக்ட் டிரைவ் மோட்டார்களுடன் வரும் மாடல்கள் அதிக ஆற்றல்திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இயங்கும் பொழுது அமைதியாக இயக்குவதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

    டிஷ்வாஷர்களில் கொடுக்கப்பட்டுள்ள ரெக்குகளை பெரிய பாத்திரங்களை வைப்பதாக இருந்தால் உயரத்திற்கு தகுந்தாற்போல் சரிசெய்து வைத்துக் கொள்ளலாம்.
    ×