என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    முத்து நகைகள், பவள நகைகள் என்று தனித்தனியாகவும், முத்தும், பவளமும் இணைந்த நகைகளாகவும் மக்களிடம் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.
    ரத்தினங்களில் தங்களுக்கென்று தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவை முத்துக்களும், பவளங்களும் என்று சொல்லலாம். முத்துக்களிலும், பவளங்களிலும் ஏராளமான வகைகளும், எண்ணற்ற வண்ணங்களும் உள்ளன. முத்து நகைகள், பவள நகைகள் என்று தனித்தனியாகவும், முத்தும், பவளமும் இணைந்த நகைகளாகவும் மக்களிடம் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.

    வெள்ளை நிறத்திலிருக்கும் முத்துக்களோடு சிவப்பு நிறத்திலிருக்கும் பவளத்தை சேர்த்து செய்யப்படும் நகைகளின் அழகை என்னவென்று வர்ணிப்பது? பாரம்பரியமான நகைகள் முதல் இன்று நடைமுறையில் அணியக்கூடிய டிரெண்டிங் நகைகள் வரை அனைத்திலும் முத்து, பவள இணைப்பு நகைகள் அருமையாக வந்துள்ளன.

    சிறு சிறு முத்துக்களை ஒரு விரல் நீளத்திற்குக் கொத்தாகக் கோர்த்து வைத்திருக்க அதனைத் தொடர்ந்து ஒரு விரல் நீளத்திற்கு சிறிய பவள மணிகள் கொத்தாகக் கோர்க்கப்பட்டு இருப்பது போல் வந்திருக்கும் கழுத்து நெக்லஸ்களின் மாடலானது மிகவும் நேர்த்தியாக உள்ளது. இதே முத்து, பவள சிறு மணிகளைக் கொண்டு காதுத் தொங்கலும் ஜோடியாக கிடைக்கின்றன. இவற்றை சுடிதார் செட்டுகளுடன் அணியும் பொழுது நாகரீகமான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    பெரிய முத்துக்களிலிருந்து சிறிய முத்துக்கள் அதனிடையே பெரிய பவளத்திலிருந்து சிறிய பவளம் என இருபுறமும் தங்கப் பூண்களுடன் கோர்க்கப்பட்டு வருபவையும், வட்டக் கழுத்து டாப்புகளுடன் அணியும் பொழுது மிகவும் ஸ்டைலான தோற்றத்தைத் தரும். இத்துடன் ஒரே ஒரு பெரிய முத்தோ அல்லது ஒரே ஒரு பவளமோ வைத்து அதனைச் சுற்றி மெல்லிய தங்கக் கம்பி போல் வரும் காதணிகள் இளம் பெண்களும் அணியக்கூடியவைகளாக உள்ளன.

    தங்க அட்டிகையில் பச்சை, சிவப்பு கற்கள் பதித்திருக்க அதன் கீழே பவள மணி தங்கத்தினால் செய்த மணி மற்றும் முத்து மணி என அடுத்தடுத்து தொங்குவது போல் வரும் அட்டிகையும், புடவை மற்றும் சுடிதார்களுக்கு மட்டுமல்லாமல் லெஹங்காக்களுக்கும் அணியும் விதமாக உள்ளன.

    மூன்று சரங்களில் குறுக்கு வாக்கில் பவளமணி மூன்று அடுத்து குறுக்கு வாக்கில் பவளமணி மூன்று என்று இருக்க அதன் நடுவில் முத்தும் பவளமும் வைத்த பதக்கம், அதற்கு ஏற்ற டிசைனில் முத்து பவளத் தொங்கல் பட்டுச் சேலைகளுடன் அணிய இந்த நகையானது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    பெரிய பவளத்துடன் அதை விடச் சிறிய அளவிலிருக்கும் முத்துகளையும் தங்கத்தினால் செய்யப்படும் டிசைன் குண்டுகளையும் கோர்த்து செய்யப்படும் நீளமான மாலைகளுக்கு வெள்ளை வைரக் கற்கள் பதித்த டாலரின் கீழே முத்துக்கள் தொங்குவது போல் செய்யப்படும் நகைகள் நடுத்தர வயதுப்பெண்கள் மட்டுமல்லாது வயதான பெண்களும் வைரக் கம்மலுடன் அணிய ஏற்றவையாக உள்ளன.

    நடுத்தரமான பவள மணிகள் மற்றும் அதைவிடச் சிறிய முத்து மணிகள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கச்சங்கிலியில் கோர்க்கப்பட்டிருக்க, இரண்டு அன்னங்கள் தங்கத்தினால் செய்யப்பட்டு எதிரெதிரே இருக்க நடுவே பெரிய மரகதக்கல். அதனைச்சுற்றிலும் சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் டாலரின் கீழே நீள வடிவிலான பவள மணிகள் தொங்குவது போலிருக்கும் செயினானது பாவாடைத் தாவணி, புடவை மற்றும் சுடிதார்களுடனும் அணியக்கூடியது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டாலர் செயினானது பழமையில் புதுமையை நினைவூட்டுகின்றது.

    ரோஜா மலர் போன்றிருக்கும் பவளத்துடன் முத்துக்கள் பதித்து செய்யப்படும் நெக்லஸ்களும் அருமையோ அருமை என்று சொல்லுமளவுக்கு உள்ளன.

    ரோஜா மொட்டுகள் போன்று குவிந்து வரும் பவளத்துடன் நீளவாக்கிலிருக்கும் முத்துக்களைக் கோர்த்து செய்யப்படும் ஒற்றைச்சார மாலைகள் அனைத்து வயதினரும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது.

    முத்தும், பவளமும் சேர்த்து செய்யப்படும் காதணிகளும், தொங்கட்டான்களும், ஜிமிக்கிகளும் கல்லூரி செல்லும் பெண்களால் பெரிதும் விரும்பக்கூடிய வகையில் டிரெண்டியாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

    குளிர்ச்சி தன்மையை உடையது முத்து. வெப்ப தன்மையை உடையது சிவப்பு நிறமுடைய பவளம். அதேபோல் சிவப்பு நிறமுடைய பவளம் தைரியத்தையும், வலிமையையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் முத்து மனதில் சமநிலையை அளிக்கிறது. எனவே, இந்த இரண்டும் சேர்ந்த நகைகளை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் நன்மை பயக்கும்.
    கோபப்படும் சமயத்தில்தான் அவசரப்பட்டு சிந்திக்காமல் முடிவுகளை எடுத்து அவதிப்படுகிறோம். அதனால் தான் கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
    ‘கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு உட்காருவான்’ என்று கூறுவார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மையான வாசகம்.

    சினம் என்பது ஆசிட் போன்றதாகும். அதனை எதன் மீது உற்றினாலும் எரித்து அழித்து விடும். அதே சமயம் அதனை வைத்திருக்கும் பாத்திரத்தையும் அரித்து விடும். இதனால்தான் சினம் எனும் சேர்ந்தாரை கொல்லி என்று வள்ளுவ ஆசான் கூறுகிறார். கோபம் இல்லாத குடும்பத்தில்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் உள்ளமும் குளிர்ந்திருக்கும்.

    சிலர் கோபத்தை தங்கள் அடையாளமாகவே வைத்திருப்பார்கள். ஏன் எதற்கெடுத்தாலும் இப்படி எரிந்து விழுகிறீர்கள்? என்று கேட்டால் இந்த காலத்தில் கோபப்பட்டால்தான் வீட்டிலும் நாட்டிலும் காரியம் நடக்கிறது என்பார்கள். ஒருசிலர் நான் எங்கே கோபப்படுகிறேன், என்னை கோபப்பட வைக்கிறார்கள் என்பார்கள்.

    மேலதிகாரிகள் பலரும் இதுபோன்று தனக்கு கீழ் வேலை பார்ப்பவரிடம் கோபத்தை காட்டுவார்கள். அதன் மூலம் வேலையை எளிதாக முடித்து விடலாம் என்பது அவர்களின் நினைப்பு. ஆனால் அது உண்மையல்ல. பயந்து செய்யும் எந்த காரியமும் உருப்படாது. அதில் முழுமை இருக்காது. அன்பால் செய்யும் வேலையே திருப்திகரமாக இருக்கும்.

    கோபப்படுவதால் பிறருடைய மனம் புண்படுவதுடன் நமது உடல்நிலையும் பாதிக்கப்படும். ரத்தக்கொதிப்பு உண்டாகும். கோபப்படும் போது லாஜிக்கலாக சிந்திக்கும் திறனுடைய நமது இடது பக்க மூளை செயலற்று போகிறது. அந்த சமயத்தில் உணர்ச்சிப்பூர்வமான வலதுபக்க மூளை முழு வேகத்துடன் செயல்பட்டு, உங்கள் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு தவறான முடிவுகளை எடுக்க செய்கிறது.

    அதனால்தான் குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே சண்டை ஏற்படும் போது, மனைவி இனி ஒரு நொடியும் உங்களுடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அம்மா வீட்டுக்கு செல்வதும், இனி என் முகத்தில் முழிக்காதே என்று கணவன் சொல்வதும் நடக்கிறது. இது சிந்தித்து எடுத்த முடிவல்ல. உணர்ச்சியில் எடுத்த தவறான முடிவு.

    நாம் பெரும்பாலும் அமைதியான நிலையில் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை. கோபப்படும் சமயத்தில்தான் அவசரப்பட்டு சிந்திக்காமல் முடிவுகளை எடுத்து அவதிப்படுகிறோம். அதனால் தான் கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சொல்வார்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படக் கூடியவர்களை, பிறர் எளிதாக தூண்டி விட்டு எது வேண்டுமானாலும் செய்யலாம். எனவே எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    கோபப்பட்டால் குடும்பத்தில் மட்டுமல்ல சமுதயத்திலும் மதிப்பு கிடைக்காது. ஒரு வெற்றிகரமான தலைவருக்கு அடிப்படை தேவை பொது அறிவோ செல்வமோ இல்லையாம். சினம் கொள்ளாமல் இருப்பதே முக்கிய தகுதியாம். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் 24 வருடமாக ஒரு ஆய்வை நடத்தியது. இதில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு பொது அறிவு என்று சொல்லப்படும் ஐ.கியூ. 20 சதவீதம் இருந்தாலே போதும்மாம். இ.கியூ. எனப் படும் வாழ்வியல் கல்விதான் 80 சதவீதம் தேவை என்று தெரிய வந்துள்ளது.

    இந்த வாழ்வியல் கல்வியிலும் தன்னையும் பிறரையும் கையாலும் தன்மைதான் முக்கியமானது. அதிலும் கோபத்தை கட்டுப்படுத்துவதே பிரதானமாகும்.
    அதனால் நாம் என்ன படித்திருந்தாலும் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் ஒரு லீடராக வரவேண்டும் என்றால் கோபத்தை கையாள தெரிந்திருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    தலைமை பதவிக்கு மட்டுமல்ல இல்லத்தில் இனிய வாழ்வுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதை அறிந்திருந்தாலும் நம்மால் கோபத்தை தவிர்க்க முடியவில்லையே ஏன்? சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் சாத்தியமே. மற்றவர்கள் செய்யும் அல்லது செய்யாமல் விடும் சில விஷயங்கள் நம் கோபத்தை தூண்டி விடுகிறது.

    உண்மையில் மற்றவர்கள் வேலைகளை சரியாக செய்யவில்லை என்பதைவிட “நான் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை... என் பேச்சை மதிக்கவில்லை...” என்றெல்லாம் நினைப்பதே கோபத்தை வரவழைக்கிறது. உங்கள் வழிமுறைகளை சரி என்று நீங்கள் நினைப்பது போல், தாங்கள் செயல்படும் விதமே சரியானது என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.

    கோபத்திற்கு இடம் தருவதற்கு முன் கொஞ்சம் நிதானித்து பிறருடைய உணர்வுகளையும் மதித்தால் உங்கள் கோபம் தானாகவே வெளியேறிவிடும். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள். ஒரே ஒரு பறவையை விரட்டுவதற்காக கல் எறிந்தால் போதும், அது சுற்றியிருக்கும் பறவைக்கூட்டத்தையே விரட்டி விடும். கோபமும் அப்படித்தான். ஒரு பிரச்சினைக்காக நிதானம் இன்றி கோபப்பட்டால் அதுவே வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

    எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற பதட்டத்தின் போதோ அல்லது மற்றவர்களின் குறைகளை கண்டிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதோ, மற்றவர் ஏதாவது சிறு தவறு செய்யும் போதோ கோபம் என்கிற பூதம் உங்களுக்கு உதவி செய்ய வருவது போல் வந்து உங்களை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. இது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயர், உறவுகள், தன்மானம், புகழ், நிம்மதி என அனைத்தையும் தகர்த்தெறிந்து விடுகிறது.
    சீட்டுகட்டு மாளிகையை சிறு காற்று சட்டென்று சரித்து விட்டு செல்வது போல் உங்களின் மொத்த மகிழ்ச்சியையும் கோபம் எனும் பூதம் தோன்றிய நொடியில் உடைத்து விடுகிறது.

    கோபம் வருவது இயல்புதான்.ஆனால் அதற்கு நீங்கள் பணிந்து போவது அல்லது அதனை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது ஆகிய இரண்டுமே உங்கள் வசம்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காத ஒன்று நடக்கும் போது கோபத்தை சட்டென்று வெளிப்படுத்தாமல் கொஞ்சம் நிதானியுங்கள். சினத்தை வெளியே விட்டால் அது ஏற்படுத்தி விட்டு செல்லும் விளைவுகளை நினைத்து பாருங்கள். ஒரு முறை ஆழ்ந்த மூச்சுவிட்டு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

    கோபம் வரும் சமயத்தில் சிறிது நேரம் இடது மூக்கினை ஒற்றை விரலால் மூடிக்கொண்டு வலது மூக்கின் வழியே சுவாசத்தை உள்ளித்து வெளியிட வேண்டும். இது மூளையின் உணர்ச்சிவசப்படும் பகுதியை மூடிவிட்டு சிந்திக்கும் பகுதியை செயல்பட வைக்கும். கோபப்படும் சமயத்தில் தண்ணீரை சப்பி சப்பி குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

    இதுபோல் செய்தால் பூதம் போல வரும் கோபம் சட்டென மறைந்து விடும். உங்கள் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஒரு சேதமும் இல்லாமல் நிலைத்திருக்கும்.

    Email:fajila@hotmil.com
    கழுத்தை ஒட்டி அணிபவை, சற்றே இறக்கி அணியக்கூடியது, தளர்வாய் அணியக்கூடியது, மெலிதாகவோ அடர்த்தியாகவோ என்று நெக்லஸில் பல வகைகள் இருக்கிறது.
    பெண்கள் கழுத்தில் விரும்பி அணியும் நெக்லஸ், போடும் ஆடைகளுக்கு பொறுத்தமானதாக இருந்தால்தான் அழகு. நெக்லஸ்களில் பல வகைகள் உண்டு. கழுத்தை ஒட்டி அணிபவை, சற்றே இறக்கி அணியக்கூடியது, தளர்வாய் அணியக்கூடியது, மெலிதாகவோ அடர்த்தியாகவோ என்று இவற்றில் பல வகைகள் இருக்கிறது.

    காலர் நெக்லஸ்

    பொதுவாக தங்கம், கற்கள் பதித்து பெண்கள் பட்டுச் சேலைகளுக்கு அணியக்கூடியது இந்த வகைதான். இது கழுத்தை ஒட்டி சற்று தளர்வாக ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவத்தில் இருக்கக்கூடியது. இதை யூ நெக் ப்ளவுஸ், போட் நெக் ப்ளவுஸ் அல்லது இருக்கமான கழுத்துள்ள சுடிதார், கவுன் போன்றவற்றிற்கும் அணியலாம். இந்த நெக்லஸ் 12 -14 அங்குலம் நீளத்தில் இருக்கும்.

    சோக்கர்

    இது கழுத்தை அழுத்தி பிடித்துக் கொண்டிருக்கும், அகலமான ஒரு அணிகலன். இந்த சோக்கர் வகை நகையை புடவை, கவுன், லெஹங்கா, நீளமான ஸ்கர்ட் போன்றவற்றிற்கு அணியலாம். பட்டு ப்ளவுஸ் உடன் அணியும் போது இதை பெரிய விசேஷங்களுக்கு அணியலாம். துண்மையான ஃபிலிகிரி வேலைப்பாடும் பட்டை தீட்டாத கற்களும் பதிக்கப்பட்ட சோக்கர்கள் டிசைனர் புடவைகளுக்கும், அதிக வேலைப்பாடு கொண்ட புடவைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும்.

    பிப் நெக்லஸ்

    இது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பிப் போல மெல்லிய இருபக்க சங்கிலியின் முடிவில் அகலமான நெக்லஸ் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது நம் மார்புப் பகுதியின் மேற்பரப்பு அனைத்தையும் மறைக்கும் என்பதால் முன்புறம் அதிக வேலைப்பாடு இல்லாத ஆடைகளுக்கு இது மிக பொருத்தமாக இருக்கும்.

    பல பட்டைகள் கொண்ட ஸ்ட்ரிங் நெக்லஸ்

    இது பல அடுக்கு அல்லது பட்டைகள் கொண்ட அகலமான அதே சமயம் நீளமாக அணியக்கூடிய நெக்லஸ் ஆகும். முத்துக்கள், பட்டை தீட்டாத கற்கள், பவளம், பல நிறங்கள் கொண்ட பொடி மணிகள், கருப்பு மணி போன்றவற்றைகள் கோர்க்கப்பட்ட மெல்லிய இழைள் இணைந்ததாக இந்த நெக்லஸ் இருக்கும். இந்த நெக்லஸ் புடவை, சுடிதார், டாப்ஸ் மற்றும் குர்தியுடன் அணிந்து கொள்ள பாந்தமாக இருக்கும்.

    ஒப்பரா நெக்லஸ்

    இது இளம் பெண்கள் அணியக்கூடிய சுடிதார், ஆழமான கழுத்து கொண்ட கவுன் அல்லது ப்ளவுஸ் போன்றவற்றிற்கு பொருத்தமாக இருக்கும். இது 26 முதல் 36 அங்குல நீளம் கொண்டதாக இருப்பதால் ஒரே அடுக்காகவோ, 2 அல்லது 3 அடுக்குகளாகவோ மடித்தும் அணிந்து கொள்ளலாம். மாலை வேளை பார்ட்டி போன்றவற்றிற்கு அணிந்து கொள்ள கவர்ச்சியான நெக்லஸ் இது.

    பிரின்சஸ் நெக்லஸ்

    இது 17 முதல் 20 அங்குல நீளம் இருக்கக்கூடிய நெக்லஸ் ஆகும். இது மிக லேசாகவோ அடர்த்தியான தொடர் வடிவமைப்பு கொண்டதாக (அதாவது அகல நீளம் அதிகமாக) இருக்கும். இந்த நெக்லஸ் வகை குர்த், சுடிதார் மற்றும் புடவைகளுக்கு தோதாக அணிந்து கொள்ளலாம். இதன் அடர்த்தி மற்றும் அளவிற்கு ஏற்ப எளிமையான மற்றும் ஆடம்பரமான ஆடைகளுக்கு பொருத்திக் கொள்ளலாம். இந்த வகை நெக்லஸ்கள் கழுத்தில் தொடங்கி வயிற்றுப் பகுதி வரை கூட அடர்த்தியாக நீண்டு இருக்கும். அதனால் இதை இளவரசிகள் அணியக்கூடியது என்ற வகையில் பிரின்சஸ் நெக்லஸ் என்று அழைக்கின்றனர்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இங்கே குறிப்பிட்டுள்ள பழங்களை சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.
    டிஜிட்டல் கலாசாரத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதால் உடல் எடை அதிகரித்தல் பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். உடல் எடையை உணவின் மூலம் எப்படி குறைப்பது என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

    நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை உண்பதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுக்க முடியும். ஒருவர் தினமும் குறைந்தபட்சம் 400 கிராம் பழங்களை சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் எடை குறைப்பு, உடல் பருமன், இதய நோய்கள், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் போன்ற உடல் நல பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க முடியும் என தெரிவித்து இருக்கிறது.

    பழங்களில் அதிக அளவு கலோரிகள் இருக்கும் கொழுப்பு இருக்காது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இங்கே குறிப்பிட்ட பழங்களை சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.

    நமது தட்பவெப்ப நிலையில் எளிதாக கிடைக்கும் நாட்டு ஆரஞ்சு, கொய்யா. பப்பாளி ஆகிய மூன்று பழங்களிலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளும், இந்த பழங்களை சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.

    தர்பூசணி, திராட்டை, மாதுளை, பேரிக்காய், முலாம் பழம் போன்ற பழங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் எளிதில் எடை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    தர்பூசணி இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கோடையில் இதனை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் கிளைசெமிக் அளவு அதிகமாக இருப்பால் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.

    வாழைப்பழத்திற்கு பசி உணர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதன் காரணமாகவே விரத நாட்களில் வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும் என முன்னோர்கள் கூறினார்கள். எனவே வாழைப்பழத்தை சாலட்டுகளில் சேர்த்துக்கொண்டால் எடை சுலபமாக குறையும்.

    அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது அதில் உள்ள ப்ரோமிலைன் என்ற வேதிப்பொருள் உடல் எடையை குறைக்க உதவும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை வெளியேற்றி உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி பழங்களுக்கு உள்ளது.

    எண்ணெயில் வறுத்த, பொரித்த பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை தவிர்த்து மேற்கூறிய பழங்கள் நிறைந்த சாலட் கலவையை சாப்பிடுங்கள். இதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
    நவராத்திரிக்கு மாலையில் பூஜை செய்யும் போது, நைவேத்தியமாக சுண்டல் ரெசிபிக்களை படைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று கடலைப்பருப்பு சுண்டல் செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - 1/2 கப்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சில துளிகள்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    கடுகு - 3/4 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
    வரமிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!
    பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
    குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், உயர்வுக்கும் பெண் குழந்தைகள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பதும், வாழ்வில் உயர்த்துவதும் ஒவ்வொருவரின் கடமையாகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், சமூகத்தில்  பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை வழங்குதல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

    பெண்களின் சம உரிமை மற்றும் முன்னோற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை குடும்பத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது பொதுவானது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இடுப்பு வலியை கட்டுக்குள் வைக்கலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது பொதுவானது. சுமார் 30 முதல் 35 சதவீத பெண்கள் கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பிரசவ காலம் நெருங்க தொடங்கியதும் வலியும் அதிகரிக்கும். இத்தகைய இடுப்பு வலியை உடற்பயிற்சிகள், சிகிச்சை முறைகள் உள்பட சில வழிமுறைகளில் குறைக்கலாம். ஆனால் கர்ப்பத்தின் தன்மை காரணமாக வலியை தணிக்கும் உடற்பயிற்சிகள் அல்லது செயல்பாடுகளை செய்வது கடினம். ஆபத்தானதும் கூட. எனினும் கர்ப்ப காலத்தில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இடுப்பு வலியை கட்டுக்குள் வைக்கலாம்.

    பந்து பயிற்சி: ‘எக்சர்சைஸ் பால்’ எனப்படும் உருளை பந்தை பயன் படுத்தி பயிற்சி பெறலாம். அதனை உபயோகிப்பது முதுகு, இடுப்பு பகுதிக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். உடல் தசைகளை தளர்த்தி இடுப்பு வலியையும் குறைக்கும். இந்த பயிற்சியை செய்யும்போது உடலை சரியாக வைத்திருக்க வேண்டும். தவறான உடல் தோரணையிலோ, பந்து நழுவும் விதமாகவோ பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி நிபுணரின் துணையுடன் செய்வதுதான் நல்லது.

    சூடான குளியல்: வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவதும், சூடான நீரில் துணியை நனைத்து உடலில் ஒத்தடம் கொடுப்பதும் இடுப்பு வலியை குறைக்க உதவும் ஆரோக்கியமான வழிமுறைகளாகும். சூடான நீரை கொண்டு ஒத்தடம் கொடுப்பது தசைகளை தளர்த்தி உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற வழிவகை செய்யும். மூட்டுகளின் இறுக்கத்தையும் குறைத்து நிவாரணம் தரும். ‘ஹாட் பேடும்’ உபயோகிக்கலாம்.

    கர்ப்பகால தலையணை: கர்ப்பகாலத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக தலையணையும் இடுப்பு வலியை குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். அவை உடல் அமைப்புக்கு இதமாக அமைந் திருப்பதால் உடல் தசைகளுக்கும் இதமளிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தை தூங்குவதற்கு ஏதுவாக இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக மோசமான உடல் தோரணை மற்றும் தூங்கும் நிலை காரணமாக பல பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள். ஆனால் கர்ப்பகால தலையணையை பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்க முடியும். இவை மகப்பேறு தலையணைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் இடுப்பு வலியைக் குறைப்பதில் முக்கிய பங்கும் வகிக்கின்றன.

    மசாஜ்: கர்ப்ப காலத்தில் இடுப்பு, கீழ் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது வலியை குறைக்க உதவும். மசாஜ் செய்யும்போது தவறுதலாக உடலில் அழுத்தம் கொடுத்தாலோ, அதிகமாக அழுத்தினாலோ அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் மசாஜ் செய்வதாக இருந்தால் மருத்துவ நிபுணர்களின் துணையோடுதான் அதனை மேற்கொள்ள வேண்டும்.
    இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது?

    கருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பது, ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவது காரணமாக கர்ப்பிணி பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள். இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் தசை நார் வலி பிரச்சினையை அனுபவிப்பார்கள். எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
    தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருட்கள் உள்ளன.
    வெளி விளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. இது மட்டுமல்லாமல் சுடுவது போன்ற விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்க குணத்தை உண்டாக்கக்கூடும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல நிபுணர்கள். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச்சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    புல்லியிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பலவீனமானவனை கொடுமைப்படுத்துதல்’ என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவை மட்டும்தான் புல்லியிங் என முன்பு கருதப்பட்டது. ஆனால் மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான்.

    தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச்சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் ‘சைபர் புல்லியிங்’ என்கிறார்கள். நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையதளத்தை பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    ‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர்இளம் பருவத்தினரின் வலைதள பயன்பாட்டை கண்காணிப்பதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருட்கள் உள்ளன.

    தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, மாணவர்கள், இளைஞர்கள் இணையதளத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.
    ஒவ்வொரு ஆய்வகத்திலும் பரிசோதனை முடிவுகளை தரும்போது, கூடவே அங்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளின் இயல்பான அளவுகளையும் கொடுக்கிறார்கள்.
    மருத்துவ பரிசோதனை முடிவுகளை பொறுத்த அளவில், பரிசோதிக்கும் ‘லேப்’களை பொறுத்து இயல்பான முடிவுகளிலும், அசாதாரணமான முடிவுகளிலும் சிறிதளவு மாற்றம் இருக்கலாம்.

    அதற்கு காரணம், பரிசோதிக்க பயன்படும் கருவிகள், பரிசோதிக்கும் செயல்முறை, தரக்கட்டுப்பாடு, நோயாளியிடமிருந்து ரத்தம், அல்லது சிறுநீரை பெற்று எவ்வளவு நேரம் கழித்து பரிசோதிக்கிறார்கள் என்ற விவரம் போன்ற காரணங்களை வைத்தே முடிவுகள் அமையும்.

    இதனால்தான் ஒவ்வொரு ஆய்வகத்திலும் பரிசோதனை முடிவுகளை தரும்போது, கூடவே அங்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளின் இயல்பான அளவுகளையும் கொடுக்கிறார்கள்.

    அடுத்தாக மருத்துவ பரிசோதனை கூடங்களில் இப்போது தானியங்கி கருவிகள் வந்துவிட்டன. ஒவ்வொரு மையத்திலும், அவர்கள் பயன்படுத்தும் கருவியைப் பொறுத்து, குறிப்பிட்ட அளவீட்டுக்குத் தினமும் காலையில் செம்மைப்படுத்துவார்கள். அதாவது காலிப்ரேஷன் செய்வார்கள். இது, எல்லோருக்கும் பொதுவான இயல்பு அளவாக இருக்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் இந்த அளவீட்டையும் கருவியையும் பொறுத்தே அமையும்.

    இந்த அளவு மாறும்போது, பரிசோதனை முடிவுகளும் மாறுபட வாய்ப்பு உண்டு. சில நேரம், பரிசோதனைகளை முறையாக செய்யாவிட்டாலும், பரிசோதனைகளை தாமதமாகச் செய்தாலும் முடிவுகள் வித்தியாசப்படும்.

    உதாரணத்துக்கு, ரத்த பரிசோதனையின்போது, ரத்த மாதிரியை சேகரித்து வெகுநேரம் ஆகிவிட்டால், பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்காது.

    நோயாளிகள் பலரும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், தாங்களாகவே பரிசோதனைக் கூடங்களில் ரத்தச்சர்க்கரையைப் பரிசோதித்துவிட்டு பழைய மாத்திரைகளையே சாப்பிட்டு வருகிறார்கள். இது சரியல்ல. அவசரத்துக்கு வேண்டுமானால் ஒரு முறை தாங்களாக ரத்த சர்க்கரையை பரிசோதித்துக்கொள்ளலாம். இதையே வழக்கப்படுத்தக் கூடாது. இதில் பல ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோயால் வரக்கூடிய வேறு நோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது இதனால் தடைபடும்.

    முதலில் பார்த்த மருத்துவருக்கும் அடுத்துப் பார்க்கும் மருத்துவருக்கும் இடைப்பட்ட காலம் அதிகமாக இருந்தால், நோயின் நிலைமை மாறியிருக்கும். இன்னொன்று, 2-வதாக பார்க்கும் மருத்துவரின் நோய்க்கணிப்பு முறை வேறுபடலாம். இந்தச் சூழலில் ஏற்கெனவே பார்த்த பரிசோதனை முடிவுகளை வைத்து சிகிச்சை செய்ய முடியாது. புதிதாகத்தான் மீண்டும் பரிசோதிக்க வேண்டியநிலை வரக்கூடும்.
    இப்பொழுது வரும் வேக்யூம் கிளீனரில் பெரும்பாலான மாடல்கள் மிகவும் இலகுவாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய அளவில் அழகாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.
    வீட்டைப் பெருக்கித் துடைப்பது என்பதை மிகப்பெரிய வேலையாக இல்லாமல், விரும்பி செய்யக்கூடிய வேலையாக மாற்றுபவை வேக்யூம் கிளீனர்கள் என்று சொல்லலாம். எங்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்ய ஆட்களை நியமித்து இருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கும் இவை உபயோகமான வீட்டு உபயோகப் பொருளாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    நாம் செய்யக்கூடிய வேலையைக் குறைந்த நேரத்தில் மிகச் சுத்தமாக செய்யக்கூடிய ஒரு வீட்டு உபயோகப் பொருளை யாராவது வாங்காமல் இருப்பார்களா என்ன?

    இப்பொழுது வரும் வேக்யூம் கிளீனர்கள் அளவில் சிறியதாகவும், தோற்றத்தில் அழகாகவும், செயல் திறனில் சிறந்ததாகவும், எளிதாக இயங்குவது போலும் வந்துவிட்டன.

    பெரும்பாலும் வேக்யூம் கிளீனர்களில் தூசியைச் சேகரிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் பையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிலெடுத்து தூசிகளை முற்றிலும் அகற்றிவிட்டு மறுபடியும் பொருத்த வேண்டும். ஆனால், இந்த வேலையை நாம் மறந்து விடுவதால் அதிகப்படியான தூசியானது அந்த பைகளில் சேர்வதால் நாம் வேக்யூம் கிளீனரை இயக்கும் பொழுது அதன் உறிஞ்சும் திறனானது குறைந்து விடுகின்றது. இதுபோன்ற, பிரச்சனைகள் ஏற்படாதிருக்க இப்பொழுது வரும் வேக்யூம் கிளீனர்களில் தூசியை சேகரிக்கும் பையானது நிரம்பியவுடன் நமக்குத் தெரியப்படுத்தும் படியான அமைப்பானது உள்ளது.

    அதேபோல் ஒவ்வொரு முறையும் குனிந்து வேக்யூம் கிளீனரில் இருக்கும் பொத்தானை ஆன், ஆஃப் செய்யாமல் கால்களிலேயே அவற்றை இயக்கிக் கொள்ளலாம்.

    இப்பொழுது வரும் வேக்யூம் கிளீனரில் பெரும்பாலான மாடல்கள் மிகவும் இலகுவாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய அளவில் அழகாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன. மேலும், காற்றிலிருக்கும் அதிகப்படியான தூசுகளை நீக்குவதோடு, தரையில் விழுந்திருக்கும் முடியையும் சுலபமாக நீக்குகின்றது.

    அறையின் மூலைகளைச் சுத்தம் செய்ய, கார்பெட்டுகளைச் சுத்தம் செய்ய, ஒட்டடை அடிக்க, வாகனங்களைக் கழுவ, தரையைக் சுத்தம் செய்ய என தனித்தனியான ப்ரஷ்கள் மற்றும் நம் வசதிக்கேற்ப நீட்டிக் குறைத்துக் கொள்வது போன்ற குழாய்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    இன்னும் சில வேக்யூம் கிளீனர்கள் வீட்டிலுள்ள தூசியை அகற்றுவதோடு மிகச்சுத்தமாகத் துடைத்துக் கொடுக்கும் வேலையையும் செய்கின்றன. அதேபோல் துடைத்த இடத்தை நிமிடங்களில் காய வைத்துக் கொடுக்கும் வசதியுடனும் வந்திருக்கின்றன. வேக்யூம் கிளீனர்களை இயக்கும் பொழுது சத்தம் குறைவாக வருவது போன்றும் தயாரிக்கப்பட்டு விற்பனையில் அசத்தும் மாடல்களும் வந்து விட்டன. தரை ஈரமாக இருந்தாலும், காய்ந்து இருந்தாலும் அவற்றைச் சுத்தம் செய்ய உதவக்கூடிய ப்ரஷ்கள், எவ்வளவு குறுகிய, இடுக்கலான இடத்திற்குள்ளும் சென்று சுத்தம் செய்யக்கூடிய ப்ரஷ்கள் என பல சிறப்பம்சங்களுடன் நவீனத் தொழில் நுட்பத்துடன் பணிச்சூழலியல் நண்பனாக வேக்யூம் கிளீனர்கள் வந்து விட்டன. இதுபோன்ற வெட்/ட்ரை வேக்யூம் கிளீனர்கள் நமது பணிச்சுமையைக் குறைக்க பெரிதும் உதவுவதால் பெண்களிடையே பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன.

    இன்னும் சில மாடல்கள் கார், கணினி, புத்தகங்கள், திரைச்சீலைகள், வீட்டிலுள்ள ஃபர்னிச்சர்களிலுள்ள சிக்கலான டிசைன் கைப்பிடிகள் இதுபோன்ற இன்னும் பலவற்றை எளிதில் சுத்தம் செய்யக்கூடியவையாக கைக்கு அடக்கமான மாதிரிகளில் வந்துள்ளன. இவற்றை இயக்குவதும் எளிது. அதேபோல் மிகச்சிறிய இடத்திலும் இவற்றை வைத்துக் கொள்ளலாம்.

    இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என இருபாலரும் வேலைக்குச் செல்வதால் வேக்யூம் கிளீனரை இயக்குவதற்கு கூட நேரமில்லை என்று சொல்பவரா நீங்கள்? கவலை வேண்டாம். வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சமாக தரையைத் துடைப்பது மற்றும் பெருக்குவது என்பது மிகவும் கஷ்டமான வேலையாகவே இருக்கும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வந்திருப்பவையே போரோட் வேக்யூம் கிளீனர்கள் ஆகும்.

    ரோபோட் வேக்யூம் கிளீனர்களில் நவீன தொழில் நுட்பங்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நம் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பொழுது அவற்றின் உரோமம் தரையில் அதிகமாக உதிர வாய்ப்புள்ளது. அவற்றை மிகச்சிறப்பாக சுத்தம் செய்கின்றன. இவ்வகை ரோபோ வேக்யூம் கிளீனர்கள். மேலும், இவற்றை இயக்கி விட்டு நம்முடைய வேலைகளை நாம் செய்து கொண்டிருக்கலாம். இந்த ரோபோட் வேக்யூம் கிளீனர்களில் அருகில் நாம் நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

    இந்த அறையை இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும், அந்த அறையை மட்டும் சுத்தம் செய்தால் போதும் போன்ற கட்டளைகளை அவற்றில் பதிவேற்றம் செய்து விட்டால் அவற்றை நம் கைப்பேசியில் தொடர்புபடுத்தி வேலைகளைச் செய்ய வைக்கலாம். நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிபோல இங்கும், அங்கும் சுற்றி வீட்டைச் சுத்தம் செய்யும் அழகே அழகு. அதே போல் வீட்டைப் பெருக்குவதோடு துடைத்தெடுக்கும் வசதியும் இவ்வகை வேக்யூம் கிளீனர்களில் இருக்கின்றன. இவற்றை மின்சாரத்தில் சார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் தன் வேலையை சிறப்பாக செய்யக் கூடியவை இவை.

    தரையைச் சுத்தம் செய்யும்பொழுது தரை விரிப்புகள் வந்துவிட்டால் அவற்றை சுத்தம் செய்வதற்கு தகுந்தாற்போல் தன்னுடைய பயன்முறையை தானாகவே மாற்றிக் கொள்ளக்கூடிய சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. அதேபோல் இவ்வகை ரோபோட் வேக்யூம் கிளீனர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேட்டரி டௌனாகி விட்டால் தானாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியுடனும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து வெளியில் செல்லும்பொழுது இவற்றை இயக்கி விட்டு சென்று விட்டால். அது தன் வேலையை தானாகவே செய்து கொள்ளும் சிறப்புடையவை.
    ஒரு சில பெண்கள் அந்த நாட்களில் வலியை உணர்வார்கள் என்பதால் அவர்களுக்கு உறவில் ஈடுபாடு இருக்காது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
    மாதவிடாய் என்பது வயது வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வருவது. இந்த நாட்களில் பெண்களின் உடலுக்குள் இருக்கும் செல்கள் சத்தம் அவர்களின் பிறப்பு உறுப்பு வழியாக வெளியேறும். இதனால் அந்த நாட்களில் பெண்களை தள்ளி வைக்கும் பழக்கம் தற்போது வரை நீடிக்கிறது.

    இதற்கு காரணம் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் அந்த ரத்தத்தில் இருக்கும் செல்கள் உயிரிழந்து இருப்பதால் அதன் மூலமாக நோய் தொற்று ஏற்படும் என்கிற அச்சம்தான். ஆனால் தற்போதைய சூழலில் பெண்கள் பாதுகாப்பான நாப்கின்கள் மூலமாக அந்த ரத்தத்தை அப்புறப்படுத்தி விடுவதால் நோய் தொற்று என்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் கூட இந்த நாட்களில் உடலுறவு கொள்வ தில் ஆண்களும் பெண்களும் தயக்கம் காட்டுகின்றனர்.

    ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் உடல் உறவில் அதிக ஈடுபாடு ஏற்படும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சில பெண்கள் அந்த நாட்களில் வலியை உணர்வார்கள் என்பதால் அவர்களுக்கு உறவில் ஈடுபாடு இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் பெரும்பாலான பெண்கள் இந்த நாட்களில் உச்ச நிலையை அடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் இதனை வெளியே கூற தயங்குவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.

    தங்களிடம் வரும் பெரும்பாலான பெண்கள் உறவு குறித்து பேசும் போது கூச்சம் அடைவதாகவும் பிறகு விவரத்தைக் கூறி அவர்கள் பிரச்சினையை கேட்கும்போது பெரும்பாலானவர்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்வதாகவும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

    அந்த நாட்களில் உரிய பாதுகாப்புடன் உறவு கொள்வதால் எந்த பிரச்சனையும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை என்பதை கூறி புரிய வைப்பதாகவும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

    ரத்தப்போக்கு இல்லாத சமயத்தில் பெண்கள் தாராளமாக தங்கள் துணையுடன் சேரலாம் என்றும் அதற்கு மனதளவில் இருவரும் தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முன்னெச்சரிக்கை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    மாதவிடாய் சமயத்தில் பெண்கள் கருத்தரிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும் அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது. எனவே உரிய பாதுகாப்பு முறையை பயன்படுத்தி பெண்கள் மாதவிடாய் சமயத்தில் உறவு கொள்வதில் பிரச்சினையில்லை என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.
    குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து பற்களை வெண்மையாக பராமரிக்க முடியும். இப்போது எந்த பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
    குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து பற்களை வெண்மையாக பராமரிப்பதற்கான வழிமுறைகள் இதோ:-

    1. பற்களின் வெண்மைக்கும் பலன்அளிக்கும் ஒரு சிறந்த பொருள் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை வாயிற்குள் ஊற்றி, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்சில் தேங்காய் எண்ணெய்யை படரச்செய்து அதை தேய்ப்பதாலும் பலன் கிடைக்கும்.

    2. நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடர் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்கள் தேய்க்க வேண்டும், இப்படி செய்தாலும் பற்கள் வெண்மை அடையும்.

    3. பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் முக்கியமானது எலுமிச்சை பழம். அதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேய்த்து அதை கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை பார்க்கலாம்.

    4. நல்ல தரமுள்ள பேக்கிங் சோடாவை வாங்கி பசையாக மாற்றி, அதை பற்களில் தினமும் தேய்த்து கொப்பளித்து வர வேண்டும். இந்த முறைகளை பின்பற்றி வந்தால் பற்களில் வெண்மை பளிச்சிடும்.
    ×