என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.
    தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என எத்தனையோ வகையான நகைகள் இருந்தாலும் முத்துக்களால் செய்யப்பட்ட நகைகளுக்கு எப்பொழுதுமே தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது. பொதுவாக முத்துக்கள் வெள்ளை, சந்தன நிறம் மற்றும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும். ஆனால் முத்துக்களில் ஊதா, கருப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, ஷாம்பெயின், சாக்லேட், நீலம் மற்றும் லாவென்டர் நிறங்களும் உள்ளன.

    நீர்வாழ் உயிரினமான மெல்லுடலி (மொலுஸ்க்)யிலிருந்தே இயற்கை முத்தானது உருவாகின்றது. ஊதா நிற முத்துக்களே அரிய வகையான முத்தாகக் கருதப்படுகின்றது.

    முத்துக்களால் செய்த நகைகள் என்று எடுத்துக் கொண்டால் முத்து மூக்குத்தி, முத்து வளையல், முத்து நெக்லஸ், முத்துமாலை, முத்து ஆரம், முத்து கம்மல், முத்து ஜிமிக்கி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    அளவில் பெரியதாக இருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்த்து அதற்கு தங்கத்தினால் செய்த மயில், சந்திரன், லட்சுமி போன்ற டாலர்களில் கற்கள் பதித்து அவற்றின் கீழ்ப்புறத்தில் சிறிய முத்துச்சலங்கைகள் தொங்குவதுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பது எந்தவித விழாக்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

    நடுத்தர அளவிலிருக்கும் முத்துக்கள் அல்லது சிறிய முத்துக்களை இரண்டு மூன்று சரங்களாகக் கோர்த்து அவற்றிற்கு தங்கத்தினால் செய்த பெரிய டாலர்கள் இருப்பதுபோல் இருக்கும் முத்து மாலைகளை அணியும் பொழுது கம்பீரமான தோற்றத்தைத் தருவதாகவே உள்ளன. இந்த முத்துச்சரங்களை இணைத்து இடையில் வரும் தங்க முகப்புகள் சிறிய அளவாக இருந்தால் அதே டிசைனில் டாலரானது பெரிய அளவில் இருப்பது போன்று வருபவை பிளெயின் பட்டுச் சேலைகளுடன் அணியும் பொழுது பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

    முத்துக்கள் தங்கக் கம்பிகளில் கோர்க்கப்பட்டு இரண்டு சரங்களாக வர இவற்றின் இடையில் தங்கக் குண்டுகளைக் கோர்த்த மிளகுச் சரமானது வர அவற்றிற்கு பக்கவாட்டில் யானைகள் தும்பிக்கையை தூக்கி இருக்க தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி டாலரின் கீழே முத்துக்கள் இரண்டு அடுக்குகளாகத் தொங்குவதுபோல் இருக்கும் முத்து ஆரங்களை முத்து ஜிமிக்கிகளுடன் அணிந்தால் அவற்றின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

    மிகச்சிறிய முத்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கோர்த்து செய்யப்படும் மாலைகளுக்கு இரட்டை டாலர்களுடன், அதற்கு ஏற்ற ஜிமிக்கிகளும் அணியும் பொழுது ஒரு மிரட்டலான, அழகான தோற்றத்தைத் தருகின்றன. இதுபோன்ற சிறிய முத்துக்களை கோர்த்து வருபவற்றை லோரியல்கள் என்றும் அழைக்கிறார்கள்.

    முத்துக்களோடு தங்கம், பவளம், மரகதம், வெள்ளை மற்றும் சிகப்புக் கற்களும் சேர்த்து மிகவும் அருமையான மாடல்களில் மாலைகள், நெக்லஸ்கள், பதக்கங்கள், காதணிகள், வளையல்கள் போன்றவை செய்யப்படுவது பிரமிப்பான தோற்றத்தைத் தருகின்றன.

    முத்துக்களை ஆங்கில எழுத்துக்களில் பதித்து செய்யப்படும் நெக்லஸ்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முத்துக்களால் செய்யப்படும் ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று அடுக்கு மாடல்களும், முத்தினால் செய்யப்பட்ட சோக்கர் செட்டுகளும், முத்து பிரேஸ்லெட்டுகளும் அப்பப்பா என்று புருவத்தை உயர்த்தும் அளவிற்கு எண்ணற்ற டிசைன்களில் வந்துள்ளன.

    தங்கக் குண்டும், முத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கச் செயினில் பச்சைக் கல்லை நடுவே பதித்து சுற்றியும் சிறிய வெள்ளைக் கற்கள் பதித்த முகப்பு. அந்த முகப்பில் முதல் சரமும், மூன்றாவது சரமும் தங்கக் குண்டுகளும் முத்துக் குண்டுகளும் கோர்த்து மேலே கூறிய செயினைப் போலவே இருக்க நடுவில் முகப்பிலிருந்து வரும் சரத்தில் முகப்பைப் போன்றே சிறிய அளவிலான கற்கள் பதித்த டிசைன்கள் கோர்க்கப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதக்கம் முகப்பு டிசைனிலேயே அதே அளவில் இருப்பது புதுமையாகவும், அட்டகாசமாகவும் இருக்கின்றது.

    முத்துக்கள் பதித்த ஸ்டைலிஷான பென்டெண்டுகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை தனியாக விற்கப்படுகின்றன. அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப தங்கச் செயினிலோ அல்லது வெள்ளிச் செயினிலோ அணிந்து கொள்வதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது.

    ஒரே ஒரு பெரிய முத்தை மெல்லிய செயினில், கழுத்தை ஒட்டி அணிந்து கொள்வதும், பேஷனாகவே உள்ளது. முத்துக்களை வைத்து செய்யப்படும் ஃபேஷன் நகைகளுக்கு இளம் பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதுப் பெண்களும் அதிக ஆதரவைத் தருவதோடு அணிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.
    கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலோ, ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை தவிர்த்தாலோ உடலில் வைட்டமின் டி ஆழமாக உறிஞ்சப்படாது.
    எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு வைட்டமின் டி அவசியமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. எடை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடியது. அதேவேளையில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் எலும்புகள் பலவீனமாகி விடும். எலும்பு சிதைவுகள், மனநல பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

    அதனால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது. உடல் பருமன், நீரிழிவு போன்றவை வைட்டமின் டி குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு முடிவின்படி, வாய்வழி ஆரோக்கியத்தின் மூலமும் வைட்டமின் டி குறைபாட்டை அறிந்து கொள்ளலாம்.

    அடிக்கடியோ அல்லது தொடர்ச்சியாகவோ வாய், உதடுகள் மற்றும் நாக்கில் வலியோ அசவுகரியமோ உண்டானால் அதுவும் வைட்டமின் டி பற்றாக்குறைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமையலாம். கன்னத்தின் உள் அடுக்கு பகுதிகளிலும் பாதிப்பை உணர முடியும். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு கடுமையாக இருக்கும்.

    நாக்கில் எரிச்சல் உணர்வு, வாயின் உள் அடுக்கு பகுதியில் வலி, தொண்டை வலி, தொண்டை வறட்சி, வாயில் உணர்வின்மை, நாக்கு கூசுதல், சாப்பிடும்போது உணவின் சுவை மாறுபடுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

    எவ்வாறு சரி செய்யலாம்?

    சூரிய ஒளியில் தினமும் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி மாத்திரைகள், மருந்துகள் சாப்பிடுவது மட்டும் போதாது. வைட்டமின்கள் உடலில் சரியாக உறிஞ்சப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மீன், தயிர், குறைந்த கொழுப்புள்ள பால், காளான், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளான பச்சை இலை காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.

    வளர்சிதை மாற்றம் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கும் செயல்முறையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

    வைட்டமின் கே, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் டி உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.

    கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலோ, ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை தவிர்த்தாலோ உடலில் வைட்டமின் டி ஆழமாக உறிஞ்சப்படாது. வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடியது. அது உடலில் உறிஞ்சப்படுவதற்கு ஆரோக்கியமான கொழுப்பு தேவைப்படுகிறது. நெய் அல்லது எண்ணெய்யை அளவாக எடுத்துக்கொள்வது ஒருபோதும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

    பால் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தானிய வகைகளையும் உணவில் தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.

    மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் அவசியமானது. ஏனெனில் மன அழுத்த ஹார்மோன்கள் வெளிப்படும்போது,​ அது குடலை பாதிக்கும். ஏனெனில் குடலில்தான் வைட்டமின் டி உறிஞ்சப்படுகிறது. அதனால் அதன் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியமானது.
    மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. இன்று மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாப்பிள்ளை சம்பா அரிசி - 100 கிராம்,
    தண்ணீர் - 100 மில்லி,
    மோர் - 50 மில்லி,
    சின்ன வெங்காயம் - 8 ,
    பச்சை மிளகாய் - ஒன்று ,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

    பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும்.

    நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி ரெடி.
    தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவை இல்லை. இத்தொழிலை முறையாக கற்றுக்கொண்டு சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம்.
    ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இதற்கு ஏற்ப மனித வாழ்க்கைக்கு தற்போது உடைகள் என்பது முக்கியமானதாகி விட்டது. ஆண்களும் சரி, பெண்களும் சரி சிலருக்கு ரெடிமேடு ஆடைகளை பிடிக்கும், சிலருக்கு துணியாக எடுத்து கடைகளில் தைக்கப்படும் ஆடைகளை தான் பிடிக்கும். எது எப்படியோ துணியை அப்படியே உடுக்க முடியாது. தைத்துதான் உடுத்த முடியும்.எனவே ரெடிமேடு ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்தமாக தையல் தொழிலாளர்களிடம் துணியை தைக்க கொடுக்கிறர்கள். இதன் மூலம் இந்த தொழிலும் லாபம் தரக்கூடிய தொழில்தான். குறிப்பாக பண்டிகை காலங்கள் வந்து விட்டால் தையல் தொழிலாளர்களை கைகளில் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு பிஷியாக இருப்பார்கள். துணியை தைக்க கொடுத்தால் கூட வாங்க மறுக்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.

    ஆடைகளின் தேவையும், விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றன. அது சார்ந்த தொழிலான தையல் தொழிலை திட்டமிட்டு செய்தால் நல்ல வருவாய் ஈட்டலாம். ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஷோரூம்கள் அமைக்கவோ முதலீடு அதிகமாக தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவை இல்லை. இத்தொழிலை முறையாக கற்றுக்கொண்டு சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம்.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாக தைத்து கொடுக்கும் அனுபவத்தை வளர்த்து கொண்டால் இந்த தொழிலை சிறப்பாக செய்ய முடியும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் ஆடை தைத்து கொடுப்போரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கும் மட்டும் ஆடைகளை தைத்து கொடுக்கும் தையல் தொழிலாளர்கள் (டெய்லர்கள்) அதிகம் உள்ளனர். அனைத்து தரப்பினருக்கும் தைத்து கொடுக்க அனுபவம் முக்கியம்.

    தையல் கடையை முக்கிய இடத்தில் வாடகைக்கு பிடித்து தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்தபடியே எந்திரங்களை வாங்கி துணிகளை தைத்து கொடுக்கலாம். பணியாட்கள் வைத்துக்கொண்டோ, தனியாகவோ எந்திரங்களை வாங்கி பணியை தொடரலாம். நாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்கு தெரியப்படுத்துவது தான் முக்கியம். அதன் பிறகு படிப்படியாக இடவசதிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்து கொள்ளலாம். பெரிய நிறுவனமாக கூட மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

    மேலும் ரெடிமேடு ஆடை நிறுவனங்களுக்கு சென்று ஆர்டர்கள் கேட்கலாம். முக்கியமாக காலத்துக்கு ஏற்ப ஆடை வடிவமைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவற்றை தைத்து தரும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். புதுவித டிசைன்களை வடிவமைத்து அதற்கு ஏற்ப தைக்கும் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தையல் பயிற்சி பள்ளிகள் நிறைய உள்ளன. அங்கு தையல் கலையை கற்றுக்கொண்டு சிறிய அளவில் பணியை தொடங்கலாம். மேலும் தையல் கடைகளில் சேர்ந்தும் பணியை தொடரலாம். எது எப்படி இருந்தாலும் தையல் தொழில் நஷ்டத்தை தராது. குறைந்த முதலீட்டில் தொடர்ந்து லாபம் தரும் தொழில் இது என்றால் அது மிகையாகாது.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை.
    கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவமனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்துப் பழக்கிவிடுவது நல்லது.

    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.
    இன்று இளம் தாய்மார்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் மூலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.
    சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.

    வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் மூலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை.

    காய்ச்சல்

    குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

    உடலில் அக்கி உண்டானால்

    குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

    வயிற்றுப் பொருமல்

    குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

    காமாலை

    குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

    விக்கல்

    மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

    நாக்கில் பாதிப்பு

    உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

    தொண்டைப் பிடிப்பு

    இலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

    காது பாதிப்பு

    கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

    கழுத்தில் பாதிப்பு

    குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

    வயிற்றுவலி

    குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

    இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.
    வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும்.
    சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம். உடனடியாக பிரசவம் இருக்கும் என்று நினைத்தாலும்,  மருத்துவமனையிலிருந்து வீடு அதிக தொலைவில் உள்ளது என்றாலும், பிரசவத் தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சேரச் சொல்லலாம்.

    ‘மழை எப்போது பெய்யும்; மகப்பேறு எப்போது நிகழும் என்பது அந்த மகேசனுக்கே தெரியும்’ என்று கிராமங்களில் ஒரு வழக்கு சொல்வதுண்டு. பிரசவம் ஆவதற்கு இந்த நாள், இந்த கிழமை, இத்தனை மணிக்கு என்று யாராலும் குறிப்பாகச் சொல்ல முடியாது என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது. உண்மையும் இதுதான்.

    மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பிரசவத் தேதிகூட கர்ப்பிணிக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாக வைத்துக் குறிக்கப்படும் ஓர் உத்தேசக் கணக்குதான். ஆனாலும் பிரசவம் குறித்து கர்ப்பிணிக்கு எச்சரிக்கை தருவதற்கு உடலில் இயற்கையாகவே, சில அலார ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் பிரசவ வலியும் ஷோ(Show) எனப்படும் நிகழ்வும் பனிக்குடம் உடைவதும் முக்கியமானவை.

    பிரசவ வலியில் பொய் வலி, உண்மையான வலி என இரண்டு வகைஉண்டு. அவற்றைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கருப்பை சுருங்கி விரிவதால்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. இடுப்பில் மேலேயிருந்து கீழாக மின்னல் ஒன்று தாக்குவது போல் விட்டுவிட்டு இந்த வலி ஆரம்பிக்கும். 10 நிமிடம், 20 நிமிடம் என்ற இடைவெளியில்தான் இந்த வலி ஏற்படும். அப்படி ஏற்படும் கால இடைவெளியைக் கொண்டு உண்மையான பிரசவ வலியா, பொய் வலியா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

    ஒருமுறை வலி தொடங்கி, அடுத்தமுறை வலி ஆரம்பிக்கும் இடைவெளி ஒரே சீராக இருந்து, வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால், அது உண்மையான பிரசவ வலி. அடுத்த பிரசவ அலாரம் இது: சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். இதுதான் ‘ஷோ’! கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் திறக்க ஆரம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறி இது.

    மூன்றாவது அலாரம் பனிக்குடம் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறுவது. கருப்பையிலிருந்து குழந்தை இறங்கத் தொடங்கியதும், குழந்தையைச் சுற்றியுள்ள பலூன் போன்ற பனிக்குடமும் பிதுங்கலாக இறங்குகிறது.

    அப்போது பிதுங்கிய ஒரு பகுதி உடைந்துபோகும். இதனால் இளநீர் போன்று பனிக்குட நீர் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும். இந்த உண்மை தெரியாத சில கர்ப்பிணிகள், தங்களுக்கு சிறுநீர்தான் கட்டுப்படாமல் வெளியேறுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.

    மேற்சொன்ன 3 அலாரங்களில் எது ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். முக்கியமாக, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். பனிக்குட நீர் இளநீர் பதத்தில் இல்லாமல், மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், உள்ளே குழந்தை மலம் கழித்து இருக்கிறது என்று பொருள். இப்போது இன்னும் சீக்கிரமாகக் கிளம்பிவிட வேண்டும்.
    நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 என்னும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பதை உலகமும், இந்திய குடிமக்களும் உணர்ந்து உள்ளனர்.
    நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் உணர்ந்து உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து கொழுப்பு உணவுகளை தவிர்த்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்று ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜ் கூறுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 என்னும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பதை உலகமும், இந்திய குடிமக்களும் உணர்ந்து உள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கிறது.

    நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிறார். அனைத்து டாக்டர்களும், உடல் நல நிபுணர்களும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் தான் நோய்களுக்கு எதிராக போராட முக்கியமானது என கூறுகின்றனர். அதேசமயம் உடல் பருமன், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைந்து விடுகிறது.

    உடல் பருமன் உள்ளவர்களை தசை எலும்பு மற்றும் கொழுப்பு கொண்டவர்கள் என வகைப்படுத்தலாம். உதாரணமாக 100 கிலோ அளவுக்கு அதிகமான எடையுள்ள ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் குறைந்த கொழுப்புடன் வலிமையாக இருந்தால் அவர் நல்ல ஆரோக்கியமானவர் தான். அதேசமயம் ஒல்லியாக இருப்பர் அதிக கொழுப்புடன் இருந்தால் அவர் ஆரோக்கியமானவர் அல்ல. ஒருவர் தனது கொழுப்பு அளவை அறிந்து அதை குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவை கட்டுப்படுத்த கூடாது.

    இந்த தொற்று காலம் நாம் நல்ல நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கிறோமா, நோயை எதிர்த்து போராட முடியுமா என்பதை உணர்த்தியுள்ளது.

    உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி, நடைபயிற்சி, மூச்சு பயிற்சி, நீச்சல் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இவை உடலில் உள்ள கொழுப்பு சத்தை எரிக்கும் என்பதே எனது மாபெரும் அறிவுரை. உடற்பயிற்சிக்கு பதிலாக உணவை கட்டுப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
    தேவையான பொருட்கள்:

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
    வேர்க்கடலை - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    பொடிக்க:

    மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    முந்திரி - 4,
    கறிவேப்பிலை - 1 கப்,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 6.

    செய்முறை:

    கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.

    பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    அருமையான கறிவேப்பிலை சாதம் ரெடி.
    சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடையாளம் காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
    பார்போற்றும் பட்டு துணிகள் அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தரும் என்று புகழ்வார்கள். மங்கையர்கள் அதிகம் விரும்பி வாங்குவது பட்டு சேலை ஆகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது நாட்டில்தான் பட்டு நூல்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு 4 வகையான பட்டு நூல்கள் இருந்தாலும், பட்டுப்புழுவில் இருந்து எடுக்கப்படும் மல்பெரி பட்டு நூலில் நெய்யும் பட்டு சேலைகளே அதிகம். கையால் நெய்த பட்டு சேலைக்குதான் மவுசு அதிகம். தற்போது பட்டுசேலையை கையால் நெசவு செய்ய போதிய ஆட்கள் இல்லாததால், எந்திரங்கள் மூலம் கையால் நெய்யப்படுவது போன்றே பட்டுசேலை நெய்யப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடையாளம் காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

    அசல் பட்டு சேலை

    பொதுவாக பட்டு சேலையை திருமணம் உள்பட முக்கிய விழாக்களுக்கு அணிந்து செல்வார்கள். பட்டு சேலையில் சரிகை புரக்கோடு, கோர்வை, பட்டு செல்ப் என்ற வகைகள் உள்ளன. சரிகை புரக்கோடு வகையில் டிசைன்கள் குறைவாக இருக்கும். கோர்வையில் ஆங்காங்கே டிசைன்கள் இருக்கும். பட்டு செல்ப் வகையில் டிசைன்கள் அதிகமாக இருக்கும்.

    அசல் பட்டு சேலையில் உள்ள பட்டுகள் அனைத்தும் பட்டு நூலை அவித்து செய்யப்பட்டது ஆகும். அதன் தரம் நன்றாக இருப்பதுடன், கண்ணை கவரும் வகையில் இருக்கும்.

    மேலும் பெரிய பணக்காரர்கள் லட்சக்கணக்கான மதிப்பில் பட்டு சேலைகள் அணிந்து செல்கிறார்கள் என்று கூறுவதை நாம் கேட்பது உண்டு. பட்டு சேலையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் செய்ய முடியும். அதில் தங்க ஜரிகை இருக்கும். அதற்கு மேல் விலை கொண்ட சேலையில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இதனால்தான் அந்த பட்டு சேலைகளின் விலை அதிகம்.

    பட்டு சேலையை ஏழை-எளிய மக்களும் வாங்கி உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கோரா பட்டு என்ற வகை சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பட்டு சேலையின் நூலை அவிக்காமல் அப்படியே செய்வார்கள். இதனால் இதன் விலை குறைவு. இந்த வகை சேலையும் அசல் பட்டு சேலையை போன்று மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

    பட்டு சேலையின் ஆயுட்காலம்

    தற்போது கைத்தறி மூலம் பட்டு சேலையை செய்ய போதிய ஆட்கள் கிடைக்காததால் விசைத்தறி மூலம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் கைத்தறி மூலம் செய்யப்படுவதுபோன்று செய்யப்படுவதால், வித்தியாசம் தெரிவது இல்லை. சிலர் அசல் பட்டு என்று கூறி நைலான் நூல் கலவையில் செய்யப்பட்ட சேலையை, பட்டு சேலை என்று கூறி விற்பனை செய்து விடுகிறார்கள்.

    அசல் பட்டு சேலையை கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு அதை விரலால் சிறிது தடவி பார்த்தாலே அதன் தன்மை தெரிந்து விடும். மிகவும் மென்மையாக இருப்பதால் பட்டு சேலையை பற்றி தெரியாதவர்கள்கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். முக்கியமாக சேலையின் ஓரத்தில் போடப்பட்டு இருக்கும் சுங்குமுடிகள் அளவாக ஒரே சீரான முறையில் இருக்கும். அதுபோன்று அசல் பட்டு சேலையை கையால் சுருட்டி மடித்தாலும் அதில் உள்ள பட்டுநூல் உடையாது. சுங்குமுடிகள் சீராக இல்லாமல் இருப்பதை யாராவது பட்டு சேலை என்று கூறி கொடுத்தால் அது அசல்பட்டு கிடையாது. பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது உள்ள நவீன காலத்தில் விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

    பராமரிப்பது எப்படி?

    பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அவ்வாறு செய்யவே கூடாது. ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும். அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பு, மென்மை போகாது.
    சமையலறையில் நாம் செய்யும் வேலையையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் சாதனங்கள் புதிது புதிதாக சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
    சமையலறையில் நாம் செய்யும் வேலையையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் சாதனங்கள் புதிது புதிதாக சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அதில் சில தவிர்க்க முடியாத சாதனங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் தயிர் உறை ஊற்றும் சாதனம்

    குளிர் காலங்களில் தயிரை உறைய வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான வேலை என்றே சொல்லலாம். ஆனால், இந்த எலெக்ட்ரிக் கர்ட் (தயிர்) மேக்கரின் மூலம் நான்கு ஐந்து மணி நேரத்தில் கெட்டியான, சுவையான தயிர் தயார். இந்தச் சாதனமானது பார்ப்பதற்கு சிறிய கேஸிரோல் போன்று உள்ளது. பிளாஸ்டிக்கினால் வெளிப்புறமும் உள்ளே ஸ்டீலினால் செய்யப்பட்ட ஒரு கிண்ணமும் அதனை மூடுவதற்கு மூடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிண்ணத்தில் சிறிதளவு தயிரை ஊற்றி பரப்பி அதன் மேல் அறை வெப்பத்திலிருக்கும் பாலை ஊற்றி மூடிகளைப் போட்டு மூடி மின்சாரத்தை இயக்கினரல் அருமையான தயிர் தயார். இவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.

    ஃபுட் ப்ராசஸர்

    ஒருசில நிமிடங்களிலேயே காய்கறிகளை அறுப்பது, துருவுவது, சப்பாத்தி மாவு பிசைவது என நம் சமையலறையில் மேஜிக்கை செய்யும் சாதனம் என்று இதைச் சொல்லலாம். எவ்வளவு காய்கறிகளையும் நிமிடங்களில் பல வகையான அளவுகளில் வெட்டித் தருவதற்கென்று பிரத்யேகமான பிளேடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சப்பாத்தி மாவை இதைவிட எளிதாக நம்மால் பிசைய முடியாது என்றே சொல்லலாம்.

    ஸ்பின் அண்டு ஸ்ட்ரெயின் கொலேண்டர்

    இவ்வகை வடிகட்டி (கொலேண்டர்) பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட கூடை வடிவ வடிகட்டியாகும். இதனால் பழம் மற்றும் காய்கறிகள் மட்டுமல்லாது சாதம், அவல், நூடுல்ஸ் என அனைத்தையும் கழுவி, வடிகட்டுவதுடன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பிடியை அழுத்துவதன் மூலம் கூடையானது சுழன்று தண்ணீரே இல்லாதவாறு சுத்தமாக வடிகட்டுகின்றது.

    ஹேண்ட் பிளெண்டர் மற்றும் சாப்பர்

    பிளெண்டர் மற்றும் சாப்பர் ஒரே சாதனமாக இணைத்து விற்பனைக்கு வந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த சாதனத்தின் மூலம் காய்கறிகளை பொடியாக நறுக்குவது, பாதாம், முந்திரி போன்றவற்றைப் பொடியாக நறுக்குவது மட்டுமல்லாமல் சிறிய அளவிலிருக்கும் கீரைகளையும், மோரையும் கடைய முடியும்.

    அதேபோல் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பிளென்டரின் மூலம் ஷேக்ஸ், ஸ்மூத்திஸ், கோல்ட் காஃபி மற்றும் மோர், கீரை என எதை வேண்டுமானாலும் கடையலாம். கேக் மற்றும் பிஸ்கட்டை வீட்டில் தயாரிப்பவர்களுக்கு க்ரீம்களைத் தயார் செய்யவும், பேட்டர்களைத் தயார் செய்யவும் இவை மிகவும் உதவுகின்றன. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷ்கர் அமைப்பின் மூலம் வீட்டிலேயே வெண்ணெய் எடுப்பதும் எளிதாகின்றது.

    மடக்கக்கூடிய பார்பிக்யு ஸூட்கேஸ்

    ஒருசிறிய ஸூட்கேஸ். அதனைத் திறந்தால் பிரித்து பெரிதாக்கிக் கொள்ளக் கூடிய கிரில் ட்ரேயானது கொடுக்கப்பட்டுள்ளது. சார்கோலை உபயோகித்து பார்பிக்யு உணவுகளை சுடச்சுட செய்யலாம். நம் சமையலறையில் ஒருசிறிய இடத்திலேயே இதை வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் எங்கு வெளியில் சுற்றுலா சென்றாலும் இதை எடுத்துச் சென்று சமைப்பது எளிது.
    ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு.
    யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.

    ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நோய். தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.

    புற்று நோய்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்க வழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு.

    இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும்.

    வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான் ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

    நுரையீரல் புற்று: புகை பிடித்தல், ஆஸ்பெட்டாஸ் சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

    வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைபிடித்தல், வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

    ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

    மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

    கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)

    மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

    ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

    ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்தி விடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர். இப்போது எளிதான ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து, நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று ரிஸ்க்தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. புற்றுநோய்க்கு ஆபரேஷன், கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்), ரேடியேஷன்(எக்ஸ்ரே ட்ரீட்மென்ட்) ஆகிய 3 சிகிச்சை முறைகள் உள்ளன.
    ×