என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர் என எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி தகவல் தெரிவித்துள்ளார்.
    குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அலட்சியம் வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பின்விளைவு காரணமாக உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர் என எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி தகவல் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 500 என்று சராசரியாக இருந்து வருகிறது. இதுவரை 6.50 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக 13 முதல் 60 வயதினர் 5 லட்சத்து 83 ஆயிரம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 83 ஆயிரத்து 500 பேரும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 24 ஆயிரத்து 700 பேரும் அடங்குவர்.

    கொரோனா வைரஸ் ஒரு நபரின் நுரையீரலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு திணறலை உண்டாக்கும். பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று முதியவர்களையும், வேறு சில நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே அதிகளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகளை இந்நோய் தொற்று பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு பின்னர் குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

    அந்தவகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:-

    குழந்தைகள் இருக்கும் வீட்டில், கொரோனா தொற்று அறிகுறி இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கொரோனா பரிசோதனை செய்யும்போது, குழந்தைகளை தவிர மற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

    இதனால் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பெற்றோர் நிம்மதி பெரு மூச்சுவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் 2 அல்லது 3 வாரங்கள் கழித்து அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இது பல நாடுகளில் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திலேயே உலக நாடுகளில் பலர், கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பின் விளைவுகளை கண்டறிந்துள்ளனர்.

    ஆனால் இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகுதான் இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறியாக உண்டாகிறது. இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு ‘பிம்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த அறிகுறி வந்ததும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் மீண்டும் தொற்று இல்லை என முடிவு வரும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டி டாக்டரை அணுகாமல் இருந்து விட்டால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அதாவது, ‘பிம்ஸ்’ குழந்தைகளின் உடல் உறுப்புகளை மெல்ல மெல்ல அமைதியான முறையில் தாக்கி பாதிப்படைய செய்யும்.

    முக்கியமாக குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் வருகிற குழந்தைகளுக்கு ‘ஐ.வி.ஐ.ஜி’ எனப்படும் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, குழந்தையின் உடல் உறுப்பை பாதிக்காமல் தடுக்கப்படுகிறது. இதுவரை இந்த மருத்துவமனையில் 55 குழந்தைகள் ‘பிம்ஸ்’ பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகளின் பெற்றோர் மட்டும் அல்ல, அவர்களின் உறவினர்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அந்த குடும்பத்தில் யாரேனும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருந்தாலும், அந்த தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    ‘பிம்ஸ்’ ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கிறது. இதன்பிறகு ‘ஐ.வி.ஐ.ஜி’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, விரைவில் அவர்கள் குணமடைகின்றனர்.

    இது போன்ற பாதிப்புகளுடன் சென்னை, மும்பையில் அதிகளவில் குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது மதுரையில் கடந்த 2 மற்றும் 3 வாரங்களாக அதிகளவில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

    கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கூட வைரஸ் தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கொரோனாவுக்கு பின் ஏற்படுத்தும் விளைவுகள், குழந்தைகளின் உடலுறுப்பை பெரிதும் பாதிப்படைய செய்கிறது.

    எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர் கண்காணித்து, ஏதேனும் அறிகுறி இருந்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், மருத்துவமனை சென்று ‘பிம்ஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தமிழக சுகாதாரத்துறையிடம் போதுமான அளவு உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பருவமழை காலத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியமாகும். எனவே, விபத்துகளை தவிர்க்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
    பருவமழை காலத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியமாகும். எனவே, விபத்துகளை தவிர்க்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

    * மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.

    * ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.

    * மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

    * குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.

    * 30 எம்.ஏ. ஆர்.சி.சி.பி. அல்லது ஆர்.சி.பி.ஓ. (மின் கசிவு தடுப்பான்)யை வீட்டில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்த்திடுவீர்.

    பழுதடைந்த சாதனங்கள்

    * உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதடைந்த மின்சார சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.

    * கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

    * ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

    * சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    * 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.

    * மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்கவும்.

    * குளியறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள்.

    * சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

    * மின் இணைப்புகான கருவிகளை பயன்படுத்தும் போது அவைகளில் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    * மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள்.

    * மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

    மழைக்காலங்களில்

    * மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.

    * மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லாதீர்கள். உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளியுங்கள்.

    * மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகவும்.

    * தமிழ்நாடு மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்கள்.

    * மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.

    * அவசர நேரங்களில் மின் இணைப்பிணை துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகளின் இருப்பிடம் அமைய வேண்டும்.

    * மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ஆப் செய்து வைக்கவும்.

    தீ விபத்து ஏற்பட்டால்...

    * மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். மின்சார தீவிபத்துக்களுக்கான தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயனபொடி, கரியமில வாயு போன்ற தீயணைப்பான்களை பயன்படுத்தலாம்.

    * தீ விபத்து ஏற்பட்டால் உடனே மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும்.

    * மின்சார பெட்டி அருகில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது அதன் அருகில் செல்ல வேண்டாம். மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் அளிக்கவும்.

    * எந்த மின் இணைப்பிலும் பளு ஏற்ற கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.

    இடி-மின்னல்

    * இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிட வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள்.

    * இடி, மின்னலின் போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீர்கள்.

    * தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.

    * இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள். டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைப்பேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். மேலும், திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய ஒன்று. அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது.

    உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தி உறவு கொண்டால் உடலில் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது. இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது.

    பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும். வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உறவு வைத்துக்கொண்டால் உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சினைகள் எழும். குறிப்பாக, சாப்பிட்டதும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இரவில் படுக்கைக்குச் சென்றதும் சில மணி நேரம் கழித்து உறவு கொள்வதே சரி.

    இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. குறிப்பாக, பல ஆண்கள் பகல் வேளையில் கண்டுகொள்ளாத தம் மனைவியரை இரவில் படுக்கைக்கு மட்டும் அழைப்பதால் பலர் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு உறவுக்கு மறுப்பார்கள். ஆகவே, மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் உறவுக்கு சம்மதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    உடலுறவு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர். நேரம், காலம் பார்க்காமல் உறவு கொள்வதில் ஆண்களே ஆர்வம் காட்டுகின்றனர். பகலில் உறவு கொள்வதைவிட இரவில் உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    உடலுறுப்பு பகுதிக்கு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைக்க வேண்டியது அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கும். இரவில் எத்தனைமுறை உறவு கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும். இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில் தாம்பத்தியம் வைத்துகொள்வதே உடல்நலத்துக்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

    சிலர் இரவு முழுவதும் உறவு வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை உறவு கொண்டபிறகு ஆழ்ந்து உறங்கினால் ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் நடக்கும். இதனால் மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. அதுவே பகல் நேரமாக இருந்தால் உடல் சோர்வடைவதுடன் வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் பகலில் உடலுறவு பரிந்துரைக்கப்படுவதில்லை.
    கொரோனா தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம், சானிடைசர் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
    கொரோனா தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது அவசியமாகிவிட்டது. அதேவேளையில் இறுக்கமான முக கவசங்களை அணிவது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், எரிச்சல், சொறி ஏற்படுதல் போன்ற பிரச் சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

    அதிக நேரம் முக கவசம் அணியும்போது முகத்தில் வெளியேறும் வியர்வை அப்படியே அதில் படிந்திருக்கும். அதனால் வீட்டிற்கு வந்ததும் முகத்தை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். சுடுநீரில் ஆவி பிடிப்பதும் நல்லது. அது சரும துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும். முகத்தை சுத்தம் செய்த பிறகு, மாய்ஸ்சரைசர் தடவுவதும் நல்லது. அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். அதிலும் வறண்ட சருமம் கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியமானது. எண்ணெய் பசை அல்லாத மாய்ஸ்சரைசரை தேர்வு செய்யலாம். முக கவசம் அணிந்திருந்தாலும் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் தடவுவதும் நல்லது. அது சருமம் வறட்சிக்குள்ளாகாமல் பாதுகாக்க உதவும்.

    கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக கை கழுவும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. வைரஸ் கிருமிகள் பரவுவதை தவிர்க்க சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி கைகழுவவும், ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. சானிடைசர் கையடக்கமாக இருப்பதாலும், வெளி இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்துவதற்கு சவுகரியமாக இருப்பதாலும் நிறைய பேர் அதனையே பயன்படுத்துகிறார்கள். சோப்பு கொண்டு கைகளை கழுவும்போது படியும் ஈரப்பதத்தை துடைக்க வேண்டியிருக்கும். ஆனால் சானிடைசரை கைகளில் தடவியதும் சட்டென்று உலர்ந்துவிடும் என்பதால் அது பெரும்பாலானோரின் விருப்ப தேர்வாக மாறிவிட்டது.

    வெளியே சென்று வந்ததும் கைகளை கழுவுவதற்கு சோம்பல் கொண்டு சானிடைசர் பயன்படுத்துபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் சானிடைசரின் பயன்பாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவு வதற்கு சாத்தியம் இருப்பின் சானிடைசரை தவிர்த்துவிடலாம் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் வைரஸை கொல்வது மட்டுமல்லாமல், கைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் கொல்லும் தன்மை கொண்டது.

    தொடர்ந்து சானிடைசரை கைகளுக்கு பயன்படுத்தும்போது வறட்சி ஏற்படும். சரும செல்கள் உதிரும் பிரச்சினையும் உண்டாகும். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவைகளின் கூடுதல் இயக்குனர் ஆர்.கே.வர்மா கூறுகையில், “இதுபோன்ற வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பாக இருப்பதற்கு முக கவசம் அணியுங்கள். அடிக்கடி சூடான நீரை பருகுங்கள். நன்றாக கைகளை கழுவுங்கள். ஆனால் சானிடைசர் அதிகம் பயன்படுத்த வேண்டாம்” என்கிறார்.
    காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது.
    காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியத்தோடு பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு பெண்கள் அளித்திருக்கும் பதில்!

    எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடுவோம் என்று 68 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

    சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மட்டுமே நிதானமாக வாயை திறப்போம் என்பது 27 சதவீதத்தினரின் கருத்தாக இருக்கிறது.

    5 சதவீதத்தினர் வீட்டில் சொல்லவே மாட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    (காதலிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் காதலை வீட்டில் சொல்லும் தைரியத்துடனே இருக்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்)

    ‘உங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு..

    குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காதலை அப்போதே கைவிட்டுவிடுவேன் என்பது 9 சதவீதத்தினரின் கருத்து.

    பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுவேன் என்பது 13 சதவீதத்தினரின் பதில்.

    67 சதவீத பெண்கள் பெற்றோருக்கு எடுத்துச்சொல்லி காதலை புரியவைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்கிறார்கள்.

    9 சதவீதத்தினர் பெற்றோரை மிரட்டி பணியவைக்க முயற்சிப்போம் என்றும், 2 சதவீதத்தினர் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

    ‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் லிவிங் டுகெதர் ஜோடிகளை பற்றிய கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார்கள்!

    மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வாழ்க்கைமுறை உருவாகத்தான் செய்யும் என்பது 14 சதவீத பெண்களின் கருத்து.

    சிறிது காலம் அப்படி வாழ்ந்து பார்த்துவிட்டு, பிடித்தால் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடரலாம் என்பது 24 சதவீதத்தினர் கருத்து.

    லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையே தவறு என்று 60 சதவீத பெண்கள் ஆணித்தரமாக பதிலளித்திருக்கிறார்கள்.

    2 சதவீதத்தினர் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

    ‘உங்களுக்கு திருமணம் முடிந்ததும், கணவருக்கு பழைய காதல் தொடர்புகள் ஏதேனும் இருந்ததா என்று தோண்டித்துருவுவீர்களா?’ என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் வித்தியாசமானது.

    61 சதவீதத்தினர் அதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை என்று, பக்குவமாக கூறியிருக்கிறார்கள்.

    19 சதவீதத்தினர் நேரம் பார்த்து நிதானமாக அதை கேட்டு தெரிந்துகொள்வோம் என்றிருக்கிறார்கள்.

    15 சதவீதத்தினர், ‘பழையது எதுவாக இருந்தாலும் அதை மறந்துவிடுங்கள். இனி புதிய வாழ்க்கையை தொடங்குவோம்’ என்று கூறுவார்களாம்.

    5 சதவீதத்தினர் அதை உடனே கேட்டு தெரிந்துகொண்டால்தான் மனம் அமைதியடையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வே இன்றைய இளம் பெண்களின் மாறிவரும் மனோநிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
    சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தினை, பாசிப்பருப்பு சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - ஒரு கப்,
    தினை அரிசி - முக்கால் கப்,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப),
    கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும்.

    மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி,  அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்... சத்தான தினை பெசரட் தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உதட்டில் வறட்சி எதற்கு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், இனிமேல் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும்.
    உதடுகளில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதனை அப்போதே சரிசெய்ய முயல வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த பிரச்சனை எதற்கு வருகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பலருக்கு உதடுகளில் வறட்சிகள் தான் ஏற்படும். எனவே அத்தகைய வறட்சியானது எதற்கு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், இனிமேல் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும்.

    இங்கு உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கான சில காரணங்களையும், அதற்கான நிவாரணிகளையும் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    காலநிலை மாற்றங்களால் உதடுகளில் வறட்சி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது, உதடுகளின் மீதுள்ள ஈரப்பசையானது வெளியேற்றப்பட்டு, வறட்சியை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், காலநிலை மாறும் போது, அதிகப்படியாக வேலையின் காரணமாக வெளியே சுற்ற வேண்டியிருப்பதால், குறிப்பாக குளிர்காலம், கோடைகாலம் போன்றவற்றின் போது மேற்கொள்ளும் போது, உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புக்கள் ஏற்படுகிறது. எனவே இக்காலங்களில் உதடுகளை தவறாமல் முறையாக மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும்.

    உதடு வறட்சியால் வெடிப்புக்கள் அதிகமானால், அப்போது லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதடுகளுக்கு லிப் பாம்களை அனைத்து பருவ காலத்திலும் மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அப்போது தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். இப்படி நீரை அதிகம் பருகி வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்

    உடலில் அசிட்டிக் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். அப்போது உதடுகளின் வறட்சியைப் போக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு, அசிட்டிக்கின் அளவை குறைக்க வேண்டும். அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால், அசிட்டிக்கின் அளவு குறைந்து அல்கலைன் அளவானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

    எப்போதும் உதடுகளில் எச்சல் வைத்துக் கொண்டே இருந்தால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயானது குறைந்து, வறட்சி அடைய ஆரம்பிக்கும். எனவே உதடுகளில் எப்போதும் எச்சில் வைப்பதை நிறுத்துங்கள். உதடுகளில் வறட்சி அடைவது குறையும்.
    குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன.
    பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போகும். ஏனெனில் பிறந்த குழந்தையானது புது உலகத்தைப் பார்ப்பதால், அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது, பிறந்த பின்னர் கிடைக்காததால் அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைக்கு போதிய தூக்கம் கிடைக்காமல், அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும்.

    சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகளைப் பார்ப்போம்.

    ஒரே நேரத்தை பின்பற்றுங்கள்

    குழந்தையை தினமும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க ஆரம்பிப்பதன் மூலம், அவர்களின் உயிரியல் உடல் கடிகாரமானது நாளடைவில் அதற்கேற்றாற் போல் மாறிவிடும். இப்படி ஒரு வாரத்திற்கு மேல் சிறிது கஷ்டப்பட்டு பின்பற்றி வந்தால், குழந்தைகள் தானாகவே அந்த நேரத்தில் உறங்கிவிடுவார்கள்.

    இதமான சுற்றுச்சூழல்

    குழந்தை தூங்கும் போது, சுற்றுச்சூழலானது அமைதியாக, வெளிச்சமின்றி இருக்க வேண்டும். இதனால் குழந்தை விரைவில் தூங்கிவிடும்.

    குழந்தையை அவர்களின் நிலைக்கு விடுங்கள்

    ஒவ்வொரு குழந்தையும் தூங்கும் போது, அவர்களுக்கு சுகமாக இருக்கும் நிலையில் தான் தூங்குவார்கள். ஆகவே அவர்கள் தூங்கும் போது, அவர்களின் கை மடங்கியிருந்தால், அதை எடுத்துவிட முயற்சிக்க வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கம் களைந்து, பின் அழ ஆரம்பிப்பார்கள்.

    இரவில் தாய்ப்பால் உதவும்

    இரவில் குழந்தையை அழாமல் தூங்க வைக்க தாய்ப்பால் கொடுங்கள். மேலும் மருத்துவர்கள் கூட குழந்தைக்கு இரவில் தாய்ப்பால் அதிகம் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.

    பகல் வேளையில் குழந்தையை விட்டுவிடுங்கள்

    பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை பகல் நேரத்தில் தூங்காமல் இருந்தால், அவர்கள் சோர்வடைவதுடன், இரவில் தூங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் குழந்தைகள் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆகவே எப்போது அவர்களை தூங்க வைத்தாலும் இரவிலும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆகவே அவர்களது போக்கில் விடுங்கள்.

    இரவில் குளிப்பாட்டவும்

    குழந்தைகளை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால், அவர்களது உடலானது சோர்வடைந்துவிடும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவார்கள்.

    மென்மையான இசை

    குழந்தைக்கு தாலாட்டு அல்லது மென்மையான இசையை போட்டுவிடுங்கள். இதனால் அவர்கள் அந்த இசையை கவனித்தவாறு தூங்கிவிடுவார்கள்.

    அரவணைப்புடன் இருங்கள்

    குழந்தையை தூங்க வைக்க வேண்டுமானால், அவர்களை அரவணைத்தவாறு இருங்கள். இதனால் குழந்தை தன் தாயின் அரவணைப்பால் எந்த ஒரு பயமின்றி நிம்மதியாக தூங்கும்.

    மென்மையான வலை

    குழந்தையை மென்மையான படுக்கை விரிப்பில் படுக்க வைத்து, அவர்களைச் சுற்றி மென்மையான தலையணையை வைத்து படுக்க வைத்தால், அவர்கள் சுகமான தூக்கத்தை மேற்கொள்வார்கள்.

    மலங்கழிப்பது

    குழந்தையை தூங்கு வைப்பதற்கு முன்பே, அவர்களை மலங்கழிக்குமாறு பழக்கப்படுத்துங்கள். இதனால் அவர்கள் தூங்கும் போது நிம்மதியாக தூங்குவார்கள்.
    வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவு பொருட்களை உட்கொண்டே குறைக்கலாம். அதுபற்றி பார்க்கலாம்.
    வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவு பொருட்களை உட்கொண்டே குறைக்கலாம். அதுபற்றி பார்க்கலாம்.

    1. பாதாம் பருப்பு:

    இதில் அளவுக்கு அதிகமாக மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு ஏற்படும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக்கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

    2. கடல் உணவு:

    கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது சற்று ரிலாக்ஸ் ஆக இருப்ப தோடு, சற்று புத்துணர்ச்சியோடும் இருக்கும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.

    3. பால்:

    மனச்சோர்வோடு இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருளான தயிரை உணவில் அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.

    4. சிக்கன்:

    இதுவரை நாம் சிக்கன் உண்பது உடல் நலத்திற்கு நல்லது என்று யார் சொல்லியும் கேட்டிருக்க மாட்டோம். ஆனால் இப்போது சிக்கன் பிடித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சிக்கனில் அதிகமாக புரோட்டீன், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட் இருப்பதால், இது மனதை அமைதிப்படுத்தி, ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

    5. கார்போ ஹைட்ரேட்:

    உடல் எடை குறைய வேண்டுமென்று கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். கார்போஹைட்ரேட் உள்ள உணவு எடையை அதிகரிக்கும் தான், ஆனால் அதே சமயம் கொஞ்சம் கூட சேர்க்காமல் இருக்க கூடாது. இதனால் மனச்சோர்வு தான் ஏற்படும்.

    6. சாக்லேட்:

    மனச்சோர்வு குறைய சாக்லேட் கூட ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டிடிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும் போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்ட மின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
    வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆனால் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதில் இருக்கும் இரும்பு சத்து ரத்தசோகையை எதிர்த்து போராட உதவும். உடல் எடையை சீராக வைத்திருக்கும் திறனும் வாழைப்பழத்திற்கு உண்டு. இதயம் மற்றும் கண்களையும் பாதுகாக்க துணைபுரியும். ஆனாலும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. அந்த சமயத்தில் சாப்பிடுவது சளியை அதிகரிக்கச்செய்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

    வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சோர்வான தசைகளை வலுவாக்க உதவும். அதனால் மாலை வேளையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது இரவில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள், “ஒரு வாழைப்பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. அது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் 10 சதவீதத்தை வழங்குகிறது” என்கிறார்கள்.

    ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளன. ஒருவேளைக்கு 500 கலோரிகளுக்கும் குறைவாக சாப்பிட விரும்பினால், இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் ஒரு கப் பால் பருகலாம். இரவில் காரமான உணவை சாப்பிடுபவர்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்த உதவும். இனிப்பு பலகாரங்களை சாப்பிட விரும்பினால் அதற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடலாம். அதில் இருக்கும் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, மேலும் நல்ல தூக்கத்தையும் தரும். அதே நேரத்தில் ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.
    கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். ஆனால் அதிகளவு பால் குடித்தால் பிரச்சனைகள் வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலை அதிகம் குடிப்பதால், அது கர்ப்பிணிகளுக்கு நன்மைகளைக் கொடுப்பது மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்கும். ஏனெனில் இருப்பதிலேயே பாலில் தான் கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

    மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் அதிக அளவில் பால் குடிக்கும் கர்ப்பிணிகளை விட, 1 கப்புக்கும் குறைவாக பால் குடித்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை மிகவும் சிறியதாக எடை குறைவாக பிறந்துள்ளதாக சொல்கிறது. ஆகவே குழந்தை நன்கு அழகாக, சற்று குண்டாக பிறக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அதிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது சிறந்தது. சரி, இப்போது கர்ப்பிணிகள் பால் அதிகம் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

    * கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்சியத்தின் அளவு அதிகம் தேவைப்படும். அத்தகைய கால்சியத்தை பெண்கள் அதிக அளவில் பால் குடித்து சேகரிக்க வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம் தேவைப்படுவதால், தாயில் உடலில் உள்ள கால்சியம் உறிஞ்சப்படுவதால், கர்ப்பிணிகள் தினமும் 3 கப் பாலாவது பருக வேண்டும்.

    * கர்ப்பிணிகளின் உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அது குழந்தையின் எடையை குறைத்துவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதற்கு கொழுப்பு குறைவான பாலை தினமும் அதிக அளவில் பருகுங்கள்.

    * பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் வளமாக உள்ளது. மேலும் வைட்டமின் டி இருந்தால் தான், கால்சியம் சத்தானது உடலால் உறிஞ்சப்படும். இப்போது பாலின் மகத்துவம் புரிகிறதா?

    * பால் ஒரு சிறப்பான ஆன்டாசிட். பொதுவாக கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய நெஞ்செரிச்சலை தடுக்க குளிர்ந்த பாலை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பால் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம்.
    சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். உடலில் தீக்காயம் ஏற்பட்டால் நிறையபேர் தவறான முதலுதவி சிகிச்சைகளை கையாளுகிறார்கள்.
    சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். எண்ணெய்யில் பொரிக்கும்போதோ, வறுக்கும்போதோ எண்ணெய் தெறித்து கைகளில் கொப்பளங்கள் உருவாகக்கூடும். சருமத்தில் வீக்கம், எரிச்சல் ஏற்படவும் செய்யும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரையோ, ஐஸ்கட்டியையோ காயம்பட்ட பகுதியில் வைப்பார்கள். அது எரிச்சல் உணர்வை தணிக்கும். கொப்பளங்கள் தோன்றுவதையும் தவிர்க்கும். ஆனால் அப்படி கைகளை நீண்ட நேரம் நீரில் வைத்திருப்பது திசுக்களை சேதப்படுத்திவிடும். தீக்காயத்தை அதிகரிக்கவும் செய்துவிடும். குணப்படுத்தும் செயல்முறையையும் பாதிக்கும். உடலில் தீக்காயம் ஏற்பட்டால் நிறையபேர் தவறான முதலுதவி சிகிச்சைகளை கையாளுகிறார்கள்.

    * தீயின் காயம் அதிகமாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொப்பளங்கள் தோன்றும். அதை உடைக்கவோ, சொறியவோ செய்யக் கூடாது. கொப்பளங்களில் சீழ் படிந்திருக்கும். அதை சிதைத்தால் மற்ற இடங்களிலும் பரவக்கூடும். வலி மற்றும் சிக்கலையும் அதிகப்படுத்திவிடும். மேலும் கொப்பளங்களை சிதைத்தால் சருமத்தில் தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். கொப்பளத்தில் எரிச்சல் ஏற்படவில்லை என்றால் ஓரிரு நாட்களில் அதன் வீரியம் குறைந்துவிடும். கொப்பளங்கள் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது.

    * சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டால் சில நிமிடங்கள் தண்ணீரில் வைத்திருக்கலாம். வேறு எந்த வீட்டுவைத்தியமும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நிறைய பேர் தீக்காயத்தின் மீது களிம்புகள், ஆண்டிபயாடிக் மருந்துகளை தடவுகிறார்கள். அது எரிச்சலை குறைக்கும். அதேவேளையில் சருமத்தில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொன்றுவிடும். அதனால் அவைகளை பயன்படுத்தக் கூடாது.

    * தீக்காயத்தின் வீரியம் அதிகமானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது.

    * கையில் தீக்காயம் ஏற்பட்டால் வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் தீக்காயங்கள் மீது வெப்பம் படுவது வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். நிறைய பேர் கையில் இருக்கும் தீக்காயங்களை பாதுகாப்பாக மறைக்காமல் வெயிலில் நடமாடுவார்கள். அது தவறானது.

    * கையில் தீக்காயம் ஏற்பட்டால் பலரும் மை அல்லது வெண்ணெய், பற்பசை போன்வைகளை தடவுவார்கள். அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள். மையில் இருக்கும் ரசாயனம் சருமத்தை சேதப்படுத்தும். வெண்ணெய், பற்பசை தடவுவது சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை பயன்படுத்துவதுதான் சரியானது.
    ×