என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ரோஸ் கோல்டு நகைகள் அணிவதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்த நகைகளை நேவி, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் கிரீம் போன்ற நடுநிலை வண்ணங்களுடன் கூடிய ஆடைகளுடன் அணியும் பொழுது அவை மிகச்சிறப்பான தோற்றத்தைத் தருகின்றன.
    ரோஸ் கோல்டு என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் தங்கமாகும். 24 காரட் மஞ்சள் நிறத்தங்கம், தாமிரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலவையே இந்த இளஞ்சிவப்பு (ரோஸ் கோல்டு) தங்கமாகும்.

    ரோஸ் கோல்டு நகைகள் அணிவதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்த நகைகளை நேவி, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் கிரீம் போன்ற நடுநிலை வண்ணங்களுடன் கூடிய ஆடைகளுடன் அணியும் பொழுது அவை மிகச்சிறப்பான தோற்றத்தைத் தருகின்றன.

    ரோஸ் கோல்டு தங்க நகைகளில் கல் பதித்த மோதிரங்கள் பார்ப்பவர்களை மயக்கும் விதத்தில் பல டிசைன்கள் மற்றும் மாடல்களில் வந்துள்ளன. ரோஸ் கோல்டு மோதிரத்தில் வைரக்கற்கள் பதித்தவற்றை நிச்சயதார்த்த மோதிரங்களாகப் பரிசளிப்பது பிரபலமாகி வருகின்றது.

    * காதணிகள் என்று எடுத்துக்கொண்டால் தொங்கல் மாடல்களில் எண்ணற்ற டிசைன்கள் நவீன தோற்றத்தில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இரத்தச் சிவப்புக் கற்களும், வெண்மை நிறக் கற்களும் பதித்த பாலி மாடல் காதணிகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. முழுவதும் வெண்மை நிறக் கற்கள் பதித்த ஜிக் ஜாக் மாடல், ஓவல் வடிவத்தில் கீழே கற்கள் தொங்குவது போன்ற மாடல், காதணியில் வைரக்கல் பதித்து அதிலிருந்து தொங்கும் செயினிலும் வைரக்கற்கள் பதித்து அதன் முடிவில் ஐந்து வட்ட வடிவக் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் மாடல், கம்மல் பாலி மாடலில் சிறிய வெண்மை நிறக் கற்கள் பதித்திருக்க கீழே தொங்கலானது இலை வடிவில் வெண்மை நிறக் கற்கள் பதித்த மாடல் என எண்ணற்ற மாடல்கள் உள்ளன.

    * கம்மல் மாடல்களிலும் அதேபோல் ஏராளமான டிசைன்கள் உள்ளன. இதய வடிவில் நடுவில் பெரிய கருமை நிறக்கல் பதித்து அதன் பார்டராக வெண்மை நிறக் கற்கள் பதித்திருப்பது கருப்பு இதயமாக ஜொலிக்கின்றது. அதேபோல் ஆங்கில ‘ஜெ’ வடிவத்தில் இடையில் சிறிய வெண்மை நிறக்கற்களால் வடிவமைக்கப்பட்ட மூன்று மலர்கள், அரைக்காது வடிவில் காதின் நடுவே ஏழு கற்கள் பதித் கம்மல், மூன்று இதயங்கள் இணைவது போன்ற கம்மல் பூக்கம்மல் எனக் கம்மல்களில் ஏகப்பட்ட மாடல்கள் உள்ளன. இந்த ரோஸ் கோல்டினால் செய்யப்படும் கம்மல் வகைக் காதணிகள் புதுமையும், பழமையும் கலந்தவையாக இருப்பதால் எந்த வயதுப் பெண்களும் அணிய ஏற்றவையாக உள்ளன.

    * மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் மட்டுமல்லாது அனைத்து விரல்களுக்கும் சேர்ந்தாற்போல் அணியும் மோதிரங்கள் ரோஸ் கோல்டில் மிகச்சிறப்பாகவும், நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மெல்லிய கம்பியில் மேற்புறம் முத்துக்கள் பதித்தவை, கற்கள் பதித்தவை, டை வடிவத்தில் கற்கள் பதித்தவை, பிளையின் ரிங், பிளையின் பட்டை வடிவ மோதிரத்தின் மேற்பகுதியில் ஒரே பெரிய கல் அல்லது சிறிய கற்கள் பதித்தது போன்று இருப்பவையும் அழகாக உள்ளன. மோதிரத்தின் மேற்புறத்தில் மலர் மலர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கும் மாடல் நிஜ மலருக்கு சவால் விடும் விதத்தில் உள்ளது.

    * இவை மட்டுமல்லாது கிளையிலிருக்கும் இலை, அலை வடிவம், மிஸ்டிக், புறாவின் கால் வடிவம், முகடு மற்றும் சமவெளி வடிவம், ரிப்பன் லூப், லூப்பி லூப் வடிவம் என மிக வித்தியாசமாகவும், நவீன டிசைனிலும் ரோஸ் கோல்டு மோதிரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஓரிகமி இதய வடிவ மோதிரங்கள் பார்ப்பவர்களை கட்டாயம் வாங்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

    * கழுத்தாணிகள் என்று எடுத்துக்கொண்டால் மெல்லிய செயின்களில் சிறிய கற்கள் பதித்த டாலர்கள், அதே டிசைனில் காதணிகள் பார்க்கவே அழகாக உள்ளன. குட்டையான அடுக்குச் செயின்கள், ஒவ்வொரு செயினின் நடுவிலும் சிறிய டாலர்கள், இதய வடிவ பென்டன்டுடன் இருக்கும் செயின், குயின்ஸ் நெக்லஸ், குந்தன் நெக்லஸ், போக்லி சோக்கர், கியூபிக் ஜிர்கோனியா நெக்லஸ், சாம்ப்பேன் லாங் நெக்லஸ், இராசிக்கற்கள் பதித்த, நெக்லஸ்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சங்க்கி செயின் நெக்லஸ் என ஏராளமான டிசைன்களில் ரோஸ் கோல்டு கழுத்தணிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    * பழமை மற்றும் புதுமையைக் கலந்து வைரக் கற்கள் பதித்து செய்யப்பட்ட பென்டன்ட்டுகள் இல்லாத நெக்லஸ்கள் அருமையோ அருமை.

    * ரோஸ் கோல்டினால் செய்யப்பட்ட பிளையின் மற்றும் கற்கள் பதித்த பிரேஸ்லெட்டுகளிலும் ஏராளமான டிசைன்களும், மாடல்களும் உள்ளன.

    * ரோஸ் கோல்டு நகைகளை குறிப்பாக இரவு விழாக்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் மீதுதான் இருக்கும். இவ்வளவு அழகாகவும், நவீனமாகவும் செய்யப்படும் ரோஸ் கோல்டானது அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
    வாய்வுத்தொல்லை குணமாக, குடல் புண் உடனே குணமாக தினமும் இந்த லேகியத்தை 1 டீஸ்பூன் சாப்பிடலாம். இன்று இந்த லேகியம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உரித்த பூண்டு - 200 கிராம்
    துருவிய தேங்காய் - ஒன்று (அரைத்து பால் எடுத்து வைக்கவும்)
    கருப்பட்டி - கால் கிலோ
    இஞ்சி - 75 கிராம்
    கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
    நல்லெண்ணெய் - 200 மில்லி
    பசு நெய் - 4 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    இஞ்சியைத் தோல் நீக்கி நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி, அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு தெளிந்த இஞ்சிச் சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

    கருப்பட்டியைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும்.

     பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து உரித்த பூண்டு, பெருங்காயம், தெளிந்த இஞ்சிச் சாறு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுக்கவும்.

    அரைத்த விழுதுடன் தேங்காய்ப்பால், கருப்பட்டி பாகு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டவும்.

    கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பூண்டு-கருப்பட்டிக் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள கிளறவும்.

    இத்துடன் பசு நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கி ஆறவிட்டு, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:
    குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். குறும்புத்தனத்துடன் நடந்து கொண்டவர்கள் வயது அதிகரிக்க தொடங்கியதும் தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்வார்கள். பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறையத்தொடங்கும். அந்த சூழலை பெற்றோர் கையாள்வது சவாலான விஷயமாக இருக்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:

    * குழந்தைகள் கோபமாக இருந்தாலோ, தங்களுக்கு பிடித்தமானவற்றை கேட்டு அடம் பிடித்து அழுதாலோ சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பெற்றோர் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் வெளிப்படும். அதேநேரத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கும். அழுகை குறைய தொடங்கியதும் அழைத்து அன்பாக பேசுங்கள். அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிவிடாதீர்கள். அதேவழக்கத்தை பின்தொடர்ந்துவிடுவார்கள். அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.

    * தொடர்ந்து அடம்பிடித்தால் அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்ளுங்கள். அவர்கள் இயல்புக்கு திரும்பியபிறகு விளக்கமாக சொல்லி புரியவையுங்கள். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதும் அவசியம். அவர்கள் சொல்ல விரும்புவதை காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தால் நீங்கள் பிடிவாதத்தை தளர்த்துவதில் தவறில்லை.

    * சில குழந்தைகள் கோபமாக இருந்தால் சத்தம் போட்டு பேசுவார்கள். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைக்கவும் செய்வார்கள். இத்தகைய போக்கு மோசமானது. அதுபோல் அண்டை வீட்டாரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் அணுகுமுறையும் மோசமானது. அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக அவசியமானது. அந்த அளவுக்கு குழந்தைகள் ஏன் விரக்தி அடைகிறார்கள் என்பதை கண்டறி வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி கோபம் கொள்ளும்போக்கு அதிகரிக்கதொடங்கினால் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.

    * குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் அதுவே பழக்கமாகிபோய்விடும். நாளடைவில் முக்கியமான விஷயங்களையெல்லாம் மறைக்க தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொய் சொல்லும்போது அவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் மனம் திறந்து பேசி எதற்காக பொய் சொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி புரியவையுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் கூட திட்டாமலோ, அடிக்காமலோ அன்பாக பேசினால் உண்மையை சொல்வதற்கு பயப்படமாட்டார்கள்.

    * குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வழக்கம். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள் வதில்லை. நீண்டகாலமாக கவனிக்காமல் விட்டால் அவர்களுக்குள் வெறுப்புணர்வு குடிகொண்டுவிடும். அப்படி சண்டை போடுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ இடம் கொடுக்கக்கூடாது. அவர்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மீறி சண்டை போட்டால் அபராதம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் கூறவேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்குள் குரோதம் வளராமல் இருக்க வழிவகுக்கும்.

    * நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் ரசித்து ருசிப்பார்கள். காய்கறிகள், பழங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கிக்கூற வேண்டும்.

    * செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்குவகிக்க தொடங்கிவிட்டன. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக பல பெற்றோர் அவற்றை வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது. அதை பார்த்துக்கொண்டு குழந்தைகள் வேகமாக சாப்பிடுவார்கள். அதனால் தங்களின் வேலையும் எளிதாகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். நீண்டகாலமாக இந்த வழக்கத்தை தொடர்வது குழந்தைகளை மின்னணு சாதனங்களுக்கு அடிமைப்படுத்திவிடும். வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவை குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், புதுமையாகவும் அமையும். உற்சாகமாக விளையாடவும் தொடங்கிவிடுவார்கள். தினமும் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்வதும் முக்கியம்.
    நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
    நிதி நிர்வாகம் என்பது ஒரு தனிக்கலை. திட்டமிட்டு செயல்பட்டால் நிதியை சேமிக்க முடியும். சேமித்ததை பல மடங்காக பெருக்கவும் முடியும். நிதியை திட்டமிட்டு ஒழுங்குபடுத்த வயது முக்கியம் அல்ல. எதையும் துணிச்சலுடன் அணுகும் மனோபாவம் நிரம்பி இருக்கும் இளம் வயதில் ஓர் அணுகுமுறையும், வயது ஏற ஏற அதற்கேற்ப அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளும் தன்மையும் மனிதர்களுக்கே உரித்தான பண்புகளாகும்.

    இதன்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நிதியை நிர்வகிக்க தேவையான வழிமுறைகளை காண்போம். நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், எத்தகைய இடர்பாடுகளையும், சவால்களையும், சந்திக்கும் துணிச்சல் இயற்கையாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

    பின்னாளில் நீங்கள் கச்சிதமாக திட்டமிட்டு செயல்பட இந்த பழக்கம் பெரிதும் துணை நிற்கும். அதுபோல் நீண்ட கால வரி சேமிப்பு திட்டங்களில் இந்த காலகட்டத்திலேயே முதலீடு மேற்கொள்வது சிறந்ததாகும். செல்போன், கடன் அட்டை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும்போது அதற்கான மாதாந்திர தொகையை ஒழுங்காக செலுத்தி வருவதற்கு முன்னுரிமை அளியுங்கள். நிலம், வீடு வாங்க வங்கிகளிடம் கடன் உதவிக்கு அணுகும் போது உங்களின் திட்டமிட்ட நிதி நிர்வாகத்திற்கு அவை சான்றாக அமையும். எந்த வகையில் நமது முதலீட்டை பெருக்கலாம் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்ள முயலுங்கள்.

    ஒவ்வொரு முதலீட்டிலும் ஆதாயம், இடர்பாடு என இரண்டும் கலந்திருக்கும். நீங்கள் செய்துள்ள முதலீட்டின் தன்மை குறித்து முன் எச்சரிக்கையாக ஒரு திட்ட வரையறையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் முதலீட்டு இனங்களை தேவைக்கேற்ப மாற்றி அமைத்து இடர்பாடு, இழப்பு போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளலாம்.

    30 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பராமரிப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீடு இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு சிறு தொகையை முதலீடு செய்து வாருங்கள். மிகப்பெரிய செலவுகளை சமாளிக்க இந்த முதலீடு உங்களுக்கு துணை நிற்கும். ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு முன்பு, காப்பீட்டு காலம், முதிர்வின் போது கிடைக்கும் தொகை உள்ளிட்ட பலதரப்பட்ட விவரங்களையும் முகவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வீட்டை வாங்குவதற்கு செய்யும் முதலீட்டிற்கும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்து கொள்ளுங்கள். முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.

    எனினும் வீடு, நிலம் விற்பனை துறையின் வளர்ச்சியால் மூலதனத்தின் மீதான வருவாய், ஒரு சில ஆண்டுகளில் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பணவீக்க பாதிப்புளை சமாளிக்க கூடிய வகையில் உங்கள் குழந்தைகளின் கல்வி செலவு இருக்குமாறு பார்த்து கொள்வது திறமையுள்ள நிதி நிர்வாகத்தில் அடங்கி உள்ளது எனலாம்.

    40 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் எப்போது ஓய்வு பெறுவது என்று முடிவெடுக்கும் காலம் இது. உங்கள் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ஓய்வு காலத்திற்கு போதுமா என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஆதாயம் அதிகம் வரும் முதலீட்டை தேர்ந்தெடுங்கள். திடீரென ஏற்படும் செலவுகளை சமாளிக்க வழிவகை செய்யும் முதலீட்டு இனங்களை தேர்ந்தெடுங்கள். இதற்காக குறிப்பிட்ட காலம் வரை மூலதனத்தை திரும்ப பெற முடியாத திட்டங்களை தவிருங்கள். ஓய்விற்கு பிறகு மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை அளிக்க கூடிய நிதித்திட்டங்களை தேர்வு செய்யுங்கள். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் கடன்கள் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன என்று சிந்தியுங்கள். சேமிப்பிற்கு தொகையை ஒதுக்குவதை விட கடன்களை அடைப்பதற்கு அத்தொகையை செலவிட்டு நிம்மதியான வாழ்க்கையை நாடுங்கள்.

    50 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் ஓய்விற்கு பின் கிடைக்கும் தொகை, முதலீட்டின் மீதான வருவாய் போன்றவற்றை கணக்கிட்டு கொண்டு வாழ்க்கை நடைமுறையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதனால் ஓய்விற்கு பிறகு எழும் பதற்றம், தடுமாற்றம், ஆற்றாமை போன்ற பிரச்சினைகளை தவிர்த்து எப்போதும் போல் இயல்பாக வாழலாம். உயில் எழுதவில்லை என்றால் அதை எழுதி வையுங்கள். முறைப்படி அதை பதிவு செய்ய மறக்காதீர்கள். இதனால் வாரிசு சண்டையை தவிர்க்கலாம். ஆரோக்கிய பராமரிப்பு காப்பீட்டு காலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஓய்விற்கு பிறகு உங்கள் முதலீடுகளில் இருந்துகிடைக்கும் தொகையை என்ன செய்யலாம் என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படுங்கள். மறு முதலீட்டின் மூலம் வருவாயை பெருக்க திட்டமிட்டால் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

    60 வயதுக்குமேல் உள்ளவர்கள் ஏற்கனவே எழுதிய உயிலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதை உடனே செய்து விடுங்கள். உங்கள் பேரக் குழந்தைகளுக்கு வரிச்சலுகைகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை பரிசாக வழங்குங்கள். அவசர காலத்தில் உடனடியான பணத்தேவைக்கு குறிப்பிட்ட தேவையை ரொக்கமாக கையில் வைத்திருங்கள். தேவைக்கு அதிகமான மூலதனம் இருப்பதாக கருதினால் சமூக நலப்பணிகளுக்கு விரும்பும் தொகையை அன்பளிப்பாக வழங்கி மன அமைதியையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுங்கள்.
    கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    இந்த நூற்றாண்டில் தகவல் தொடர்பில் மிகவும் முக்கிய இடத்தில் இருப்பது கம்ப்யூட்டர். அறிவியல் கண்டுபிடிப்பின் அற்புத படைப்பான கம்ப்யூட்டர் இன்றி எந்த வேலையும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. எனவே, கம்ப்யூட்டர் தொடர்பான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து விட்டது. இதனால் கம்ப்யூட்டர் கல்விக்கும் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

    கம்ப்யூட்டரை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்று பெயர். இந்த நோயின் முதல் அறிகுறி கண்களில் வலி ஏற்படும். தொடர்ந்து பார்வை மங்கல், கண்கள் உலர்ந்துவிடுதல், தலைவலி போன்றவை வரும். கழுத்து வலி, முதுகுவலியும் வருவதுகூட கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பார்க்கும் வேலையால்தான் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்துக்கு 16 முறை கண் சிமிட்டுகிறோம்.

    கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்னதான் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் மானிட்டரை சற்று கீழ்நோக்கி இருக்குமாறும், மானிட்டரின் மையப்பகுதி கண்களின் நேர் பார்வையில் இருந்து 4-6 அங்குலம் கீழாக இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏசியில் இருந்து வரும் காற்றோ, பேனில் இருந்து வரும் காற்றோ கண்ணில் பட்டு செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மானிட்டரில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியை கட்டுப்படுத்தும் அளவுக்கு, கண்களை பாதுகாக்க உரிய ஆலோசனை பெற்று கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்.

    தற்போது வந்து இருக்கும் தட்டை வடிவ (எல்.சி.டி) கம்ப்யூட்டர்கள் கண்களுக்கு ஓரளவு பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். எனவே இதுபோன்ற கம்ப்யூட்டர்களை பயன்படுத்தலாம். கம்ப்யூட்டர் திரையில் கறுப்பு எழுத்துக்கள் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. கம்ப்யூட்டர் திரையின் ஒளிரும் தன்மையை (காண்டிராக்ட்) அதிக அளவில் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கம்ப்யூட்டர் திரையில் இருந்து நமது கண்கள் 20 அங்குல தூரத்தில் இருக்க வேண்டும். 28 அங்குலத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. வேலையின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு கண்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். தலைக்கு மேல் இருந்து வரும் ஒளியோ, சன்னலில் இருந்து வரும் ஒளியோ கண்களில் நேராக படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் வருவதை குறைக்கலாம்.
    முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.
    பெண்கள் தாய்மையடையும்போது இயற்கை அவர்களது உடலில் மிகப்பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்துகிறது. அதாவது கருவுறும் தொடக்க காலத்திலே, பிறக்கப்போகும் குழந்தையின் உணவுக்காக தாயின் மார்பகங்கள் பால் உற்பத்திக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுவிடும். அத்தகைய மாற்றங்கள் தாய்மையடைந்த ஆறாவது வாரத்திலேயே மார்பகங்களில் தென்படும். அப்போது மார்பகங்களுக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து ரத்த நாளங்கள் புடைத்து எழுவதால் வலியும் தோன்றும்.

    முழு சுரப்பியின் பரிமாணமும் அதன் வெளிப்புற நுண்ணறைகளில்தான் முதலில் வெளிப்படும். அப்போது மார்பகங்கள் கெட்டியாகவும், மேடான முனைப்புகளுடனும் காணப்படும். மெதுவாகத் தொட்டாலே வலிக்கும். இந்த நிலை கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தின் இறுதியில் தொடங்கி, குறிப்பிட்ட காலம் வரை இருந்துகொண்டிருக்கும்.

    மார்பகத்தின் வெளிப்புறத்தை மெதுவாக அழுத்தினால் மார்பகக் காம்பு வழியாக தெளிந்த கசிவு கொஞ்சமாக வெளிப்படும். சிலருக்கு தாமாகவேகூட வெளிப்படும். அது முதலில் மெல்லிய வைக்கோல் நிறத் திரவம் போலவும், பிறகு கெட்டியாகி அடர் மஞ்சள்நிறமாகவும் தோன்றும். 14-வது வாரத்தில் மார்பகக் காம்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிறம்மாறும். கர்ப்பகாலத்தில் பெண்களின் மார்பகங்களில் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். அவை இயற்கையானவைதான்.

    முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.

    இயல்பான கர்ப்பமாக இருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. தாம்பத்யம் கொள்வதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

    இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தாம்பத்யத்தை தவிர்ப்பது நல்லது. சிறிது ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தாலோ, பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்று வலி இருந்தாலோ, தாம்பத்யத்தை தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் எப்போதுமே கர்ப்பிணியின் மனநிலை, உடல்நிலை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். கர்ப்பிணி விரும்பும்பட்சத்தில் பாதுகாப்பான ‘பொஷிஷனில்’ தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளலாம்.

    முதல்முறையாக கர்ப்பம்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் எழும். அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் மகப்பேறு டாக்டரிடம் விளக்கம் கேட்டு விடைதேடிக்கொள்ளவேண்டும். அப்போது கர்ப்பகால தாம்பத்யம் குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டுத்தெரிந்துகொள்வது அவசியம்.

    தற்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் திருமணமானதும், ‘தமக்கும் குழந்தையில்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ!’ என்று பயம்கொள்கிறார்கள். எந்த கருத்தடை முறையையும் கடைப்பிடிக்காமல் இயல்பாக தாம்பத்ய உறவு மேற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் வரையில் கருத்தரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். முப்பது வயதுக்குமேல் ஆகி, கருத்தரிக்கக் காலதாமதமானால் விரைந்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

    பொதுவாக திருமணமாகி ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 30 முதல் 35 வயதுக்கு இடையே கருத்தரிக்கும் வாய்ப்பு, அதற்கு முன் கருத்தரிப்பதில் இருந்த வாய்ப்பைவிட பெருமளவு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு விஷயம் என்னவென்றால், புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத் தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு தரமான சினைமுட்டையும், ஆற்றல்மிகுந்த உயிரணுவும் தேவையாக இருக்கிறது. சினைமுட்டை முதிர்ந்து வெடித்து மாதந்தோறும் சினைப்பையில் இருந்து வெளியேறும். முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட வேண்டும். அவ்வாறே, உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம்வரை உயிருடன் இருக்கும். ஆகவே கருத்தரிக்க சிறந்த நேரம், முட்டை வெளியான காலத்தை சார்ந்தே இருக்கிறது.
    நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும்.
    நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும் இதுபோன்ற லாங் குர்த்திகளின் மேல் எத்னிக் ஜாக்கெட்டுகளை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கின்றன என்றே சொல்லலாம்.

    லாங் ஸ்கர்ட்டுகளுடன் லாங் குர்த்திகளை அணியும் பொழுது அவை நவீன தோற்றத்தைத் தருகின்றன. விருந்துகள், பகல் நேரப் பயணங்கள் போன்றவற்றிற்கு அணிய ஏற்ற ஆடையாக இது உள்ளது. இவை மஷ்ரு, காட்டன், சில்க், ரேயான், விஸ்கோஸ், பாலியஸ்டர், க்ரேப் மற்றும் ஜ்யார்ஜெட் போன்ற பல வகையான துணிகளில் தயாரிக்கப்படுகின்றன.

    பாகிஸ்தானிய குர்த்தி என்பது நீண்ட நேரான குர்த்தியின் மற்றொரு பதிப்பாகும். இவை பாரம்பரிய பிரிண்டுகளுடன் எத்னிக் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் ஜீன்ஸ், ஜெகிங்ஸ், லெகிங்ஸ், ஸ்ட்ரெய்ட் பேன்ட்ஸ், ஸ்கர்ட்ஸ் மற்றும் பளாஸோக்களுடன் அணிய ஏற்றவையாக உள்ளன. பாகிஸ்தான் குர்த்தியுடன் ஆக்ஸிடைஸ்டு நகைகள் பெரிய அளவில் இருப்பதைத் தெர்ந்தெடுத்து அணியும் பொழுது எத்னிக் தோற்றத்தை அப்படியே வெளிக்கொணருகின்றது.

    உடலின் முன்புறம் வங்கி போன்று குட்டையாகவும் பின்புறம் வால் போன்று நீண்டும் இருக்கும். குர்த்திகள் ‘டெய்ல்’ குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ், ஜீன்ஸ் மற்றும் ஜெகிங்ஸ்களுடன் அணியும் பொழுது கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகைக் குர்த்திக்களை அதற்கேற்றார் போன்ற காலணிகள் மற்றும் நகைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணியலாம். ஸ்லிங் பேக் அல்லது க்ளட்ச்கள் இவ்வகை குர்த்திகளுடன் எடுத்துச் செல்ல ஏற்றவை.

    ஆங்கில எழுத்தான ‘எ’ வடிவில் இருக்கும் குர்த்திகள் இளம் பெண்களிடையே பெரிய அளவில் பெற்றிருப்பவை என்று சொல்லலாம். இந்தக் குர்த்தியானது இடுப்பிலிருந்து விரிவடைந்து முழங்கால் அல்லது கணுக்கால் வரை நீண்டிருக்கின்றது. இவற்றை திருவிழாக்கள் மட்டுமல்லாது சாதாரணமாகவும் அணியலாம். டோத்தி பேண்டுகள், ஜெக்கிங்ஸ், ஜீன்ஸ், பாட்டியாலா, கேப்ரி மற்றும் சுடிதார்களுடன் அணியலாம். பம்ப்ஸ், கோலாபுரி, செருப்புகள் அல்லது ஷுக்களை இந்த குர்த்திகளுடன் அணியலாம். இவை ‘எ’ லைன் குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

    அழகான மற்றும் நேர்த்தியான பாரம்பரியக் கலவை என்று அனார்கலி வகைக் குர்த்திகளைச் சொல்லலாம். இவ்வகைக் குர்த்தியானது எவ்வகை உடல் வாகு உடையவர்களுக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகம், கல்லூரி, விழாக்கள் என அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக திருமணங்கள் வரவேற்புகளிலும் அணியப்படுகின்றன. சைட்ஸ்லிட், ஃப்ரன்ட் ஸ்லிட், அடுக்கு (லேயர்டு) எனப் பல மாடல்களில் அனார்கலி குர்த்திகள் வடிவமைக்கப்படுகின்றன. அனார்கலி அணியும் பொழுது உயர்ந்த குதிகால் செருப்பு அணிந்தால் அது அந்த ஆடையின் அழகை உயர்த்திக் காட்டுகின்றது.

    லாங் ஸ்ட்ரெய்ட் குர்த்திகளை தினசரி அணியும் உடையாகவும், பிரயாணங்கள், சிறு விழாக்கள் போன்றவற்றிற்கும் அணிகிறார்கள். இது மேலிருந்து கீழ் வரை ஒரே நேராக இருக்கின்றது.

    நவீனப் போக்குடன் சமகால வடிவமைப்புடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவையாக இருப்பவை டோத்தி குர்த்திகளாகும். இந்த குர்த்திகள் ஒரு அசாதாரணமான ட்ரேப் பாணியுடன் அணிய வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலான தோற்றமுடைய இவை உடலின் மேல் பகுதியை அனைத்தும் இடுப்பிலிருந்து தொள தொளப்பாகவும் இருக்கின்றது. இந்த குர்த்தியை தனித்து முழு ஆடையாகவோ அல்லது ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ் மற்றும் டைட்ஸ்களுடனும் அணியலாம்.

    அந்தக்கால இசைக் கலைஞர்களின் ஆடை வடிவமைப்பிலேயே வந்திருப்பவைதான் அங்க்ரகா குர்த்திகளாகும். டேங்கில் காதணிகள், பெரிய ஜீம்காக்கள், தங்க மற்றும் வைர நகைகள், ஆக்ஸடைஸ்டு நகைகளுடன் அணியும் பொழுது இந்த குர்த்தியின் அழகானது மேலும் மேம்படும். சிஃபான், ஜியார்ஜெட், நெட், காட்டன், சந்தேரி மற்றும் பட்டுத் துணிகளில் அங்க்ரகா குர்த்தியானது தயாரிக்கப்படுவதால் அனைத்து கால நிலைகளிலும் இதை அணிந்து கொள்ள முடியும்.

    இந்திய மற்றும் மேற்கத்திய பாணிகளின் இணைவுடன் ஷர்ட் மற்றும் குர்த்தி இரண்டும் சேர்ந்த கலவையாக வந்திருப்பவை ஷர்ட் குர்த்தி. இவை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. டெனிக், காட்டன், ஜியார்ஜெட், க்ரேப், விஸ்கோஸ், ரேயான் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் தயாரிக்கப்படுகின்றன. இவை கணுக்கால் வரை, முட்டி வரை அல்லது குட்டையானவை எனப்பல்வேறு நீளங்களில் கிடைக்கின்றன.

    குர்த்திகளின் மேல் குட்டை ஜாக்கெட்டுகள் அணிவதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. குர்த்திகளில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மேல் ஜாக்கெட்டுகளை அணிவது ஃபேஷனாகி வருகின்றது. குர்த்தி பிளெயின் நிறத்தில் இருந்தால் மேலே அணியும் ஜாக்கெட் பிரிண்ட்டுகளுடனும், குர்த்தியில் பிரிண்ட்டுகள் இருந்தால் மேலே அணியும் ஜாக்கெட்டானது பிளெயினாக இருப்பது போன்றும் வித்தியாசமான கழுத்து மாடல்களுடன் வடிவமைத்திருக்கிறார்கள்.

    இரண்டு மூன்று லேயர்களாக துணிகளை வைத்து தைக்கப்படும் குர்த்திகள் ஓவர்லே குர்த்திகளாகும். உட்புறம் பிரிண்ட் செய்யப்பட்ட துணி இருந்தால் மேல்புறம் பிளெயின் நிறத்துணி வைத்தும், உட்புறம் பிளெயின் நிறத்துணி இருந்தால் மேற்புறம் டிசைன் செய்யப்பட்ட துணி வைத்தும் இவ்வகைக் குர்த்திகளை வடிவமைக்கிறார்கள்.

    முன்புறம் மட்டும் ஸ்லிட் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் குர்த்திகள் நம்முடைய தோற்றத்திற்கு கவர்ச்சியைத் தருகின்றன. இரு பக்கவாட்டிலும் ஸ்லிட் இருக்கும் குர்த்திகள் நாம் அணிவதற்கு வசதியானவையாக உள்ளன. இன்னும் சில குர்த்திகளில் முன்புறத்தில் மட்டுமல்லாமல் இரு பக்கவாட்டிலும் ஸ்லிட் இருப்பது போன்று வடிவமைத்திருப்பது பார்க்க வித்தியாசமாக உள்ளது. இவ்வகை குர்த்திக்களை நீண்ட ஸ்கர்ட்டுகளுடன் அணியும் பொழுது அவை லெஹங்கா வை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளன.
    தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும்.
    தேவையான பொருட்கள் :

    தினை - ஒரு கப்
    அரிசி மாவு - கால் கப்
    தயிர் - ஒரு கப்
    தண்ணீர் - 2 கப்
    மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    சீரகம் - அரை தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 2

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    மிளகாய் வற்றல் - 2

    செய்முறை :

    இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடி பண்ணிய தினை ரவா, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.

    கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

    தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

    சத்தான டிபன் தினை சீரக தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    புதிதாக படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள், பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன.
    சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேலை வாய்ப்புகளில் முதன்மை இடம்பிடித்த திறன்கள் தற்போது காணாமல் போய் இருப்பதற்கு நாமே சாட்சி. அதேபோன்று தற்போது கல்வி பயில்வோர் வேலை வாய்ப்பு சந்தையில் கால் வைக்கும்போது இன்றுள்ள பணி வாய்ப்புகளில் பெரும்பாலானவை வழக்கொழிந்து போயிருக்கும். அல்லது அப்போதைய மாற்றங்களை செரித்துக்கொண்டு புதிய பரிமாணம் எடுத்திருக்கும்.

    அதிகரிக்கும் தானியங்கி மயமாதல், செயற்கை நுண்ணறிவு போன்றவை மட்டுமன்றி அதன் நீட்சியாக முளைக்கும் புதிய நுட்பங்களாலும் இந்த திறன்களின் தேவை புதுப்புது வடிவெடுக்கும். படைப்பாற்றல், இடர்பாடுகளை தீர்த்தல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திறன்களுடன் புலன்சார் உயர் நுண்ணுணர்வும் முதன்மையாக தேவைப்படுகிறது.

    இந்த திறன்களில் செயற்கை நுண்ணறிவு, எந்திரங்களால் முடியாதவற்றை செய்துமுடிப்பதற்கே மனித தேவை அதிகம் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு வங்கி ஒன்றின் குமாஸ்தா வேலையை கணினி மயமான எந்திரத்தால் செய்ய வைக்கலாம். ஆனால், அதே வங்கியின் மேலாளர் இருக்கையை எந்திரங்களால் இடம்பெயர்க்கவே முடியாது. ஒரு மேலாளரின் அன்றாடப் பணிகளை எளிதில் அனுமானிக்க முடியாததே அதற்கு காரணம். இதேபோல அலுவலகங்களின் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்கள் காணாமல் போகும். ஆனால், நிர்வாகத்தை வழிநடத்தும் பணியிடங்கள் நிலையாக நீடிக்கும்.

    உலக வங்கி அறிக்கை ஒன்றின்படி ஆட்டோமேஷன் வருகையால் பறிபோகும் இந்திய வேலை வாய்ப்புகள் 69 சதவீதமாக அதிகரிக்க உள்ளன. வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, மென்பொருள் துறை ஆகியவை இந்த வரிசையில் முன்னிற்கின்றன. எனவே தொழில்துறை நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட ஆள் எடுப்புக்கு, ஆட்டோமேஷனால் நிரப்ப இயலாத தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் தர உள்ளன.

    இந்த திறன்கள் புதியவர்களுக்கு மட்டுமல்ல. தற்போது பணியில் ஒட்டியிருப்பவர்களின் எதிர்காலத்தையும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு உடன்படுவதை ஒட்டி நிறுவனங்கள் தீர்மானிக்க உள்ளன. மாறும் தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன் மேம்பாடு என்பது பணியாளர்களுக்கு தவிர்க்க முடியாதது. புதிதாக படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள், பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன. தங்களை தற்காத்துக்கொள்ள இவர்கள் திறன் மேம்பாடு மேற்கொள்வது அவசியமாகிறது. இதற்கு முதல்படியாக இருக்கும் திறன்களை பட்டை தீட்ட வேண்டும்.

    ஒரு பணியாளர், வேலை தேடுபவர் புதிய மாற்றங்களுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதை, முந்தைய திறன்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ள முடியும். அதற்கு பழைய திறன்களையும், அதையொட்டிய அனுபவத்தையும் சேர்த்து தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் கூடுதல் திறன்களை மேம்படுத்திக்கொள்வது நல்லது. புதிய திறன்களை கற்றுக்கொள்வது என்றவுடன் நேற்று அறிமுகமான ஒரு தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள முயல்வதைவிட, அடிப்படை திறன்களின் நீட்சியாக புதியதை விரிவுபடுத்திக்கொள்ள முயலலாம். அதைத் தொடர்ந்து புதிய நுட்பங்களை பரிசீலிக்கலாம்.
    நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.
    குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள். நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

    ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை. ஆனால், இன்றைய குழந்தைகள் பீஸா, பர்கர், சாக்லேட், கோலா பானங்கள், பானி பூரி, பேல் பூரி, மசாலா பூரி போன்ற சாட் ஐட்டங்கள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், செயற்கையான ரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பலரச பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    இதுதான் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை எனக் கொண்டுவருகிறது. தரமற்ற இந்த உணவுகளால் ஏற்படும் அதிகப்படியான தொப்பை, உடல்பருமன் இதய நோய்களைக்கூட உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் போன்ற அனைத்துச் சத்துக்களும் சமச்சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

    இன்றைய குழந்தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை உண்பது இல்லை. இரவில் வெகு நேரம் நாம் உண்ணாததால் பசியுணர்வு ஏற்பட்டு, உணவைச் செரிப்பதற்காக அமிலங்கள் சுரந்து தயார்நிலையில் இருக்கும். நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது நம் இரைப்பையையும் குடலையும் அந்த அமிலச் சுரப்பு பாதிக்கிறது. மேலும், இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன், பி.பி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உணவு இடைவேளையில் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு பழங்கள், நட்ஸ், சுண்டல் போன்ற புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் அனைத்துச் சத்துக்களும் கொண்ட சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியை மட்டுமே உண்ணாமல் கம்பு, கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, சோளம் போன்ற சிறுதானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் கடினமான உணவை உண்ணும்போது செரிமானம் தாமதமாவதால் உறக்கமும், உடலின் பிற வளர்சிதை மாற்றப் பணிகளும் பாதிப்பட்டு உடல் பருமன் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதே போல் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் வெள்ளை உப்புக்கு பதிலாக இந்துப்பு எனப்படும் கறுப்பு உப்பையும், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
    பொதுமக்கள், இதுபோல் நெஞ்சுவலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்போது, உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். அறிகுறிகள் தென்பட்டத்திலிருந்தே வீணாக்கப்படும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்பை நோக்கி ஒவ்வொரு படிக்கல்லாக கருதப்படுகிறது.
    உலகெங்கிலும் ஏற்படும் இருதய நோய்கள் தான் பெரும்பாலான உயிரிழப்பிற்கு காரணமாக விளங்குகிறது, அதிலும் திடீர் இருதய உயிரிழப்பு என சொல்லப்படும் இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பு மிகவும் தீவிரமானது.

    இதுகுறித்து சேலம் காவேரி மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கபிலன் கூறியதாவது:-

    இருதயத்தின் செயல்பாட்டில் திடீரென்று ஏற்படும் பாதிப்பினால், அறிகுறிகள் தென்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் ஏற்படும் உயிரிழப்பினை திடீர் இருதய உயிரிழப்பு என்கிறோம். சராசரியாக 1000 நபர்களில் ஒருவருக்கு, திடீர் இருதய உயிழப்பு ஏற்படுகின்றது. இருதய பிரச்சினைகளால் ஏற்படும் 50 சதவீத மரணங்கள் திடீரென்று நிகழ்வதாகும். இவ்வாறான உயிரிழப்புகளுக்கு 80 சதவீதம் காரணமாக இருப்பது இருதய ரத்தக்குழாய்கள் அடைபடுவதினால் ஏற்படும் மாரடைப்பே ஆகும்.

    சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகமாக உள்ள கொழுப்பு சத்து, புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. சில அரிதான காரணங்களினாலும் இந்த திடீர் இருதய உயிரிழப்பு ஏற்படலாம். இருதயத்தின் மின்னாற்றலை கடத்தக் கூடிய தசைகளில் ஏற்படும் பாதிப்புகளால், மிகவும் அதிகமான மற்றும் சீரற்ற இருதய துடிப்பினால் இம்மாதிரியான உயிரிழப்புகள் ஏற்படலாம். இருதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் தசையின் அபரிமித வளர்ச்சி காரணமாக அமையலாம்.

    மாரடைப்பு வந்தவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சைகள் மேற்கொண்டு ரத்தக் குழாய்களிலுள்ள அடைப்புகள் நீக்கப்படவில்லையென்றால், இருதய தசைகளில் தழும்புகள் ஏற்படலாம். இதுபோன்ற தழும்புகளினாலும் சீரற்ற இருதய துடிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக அமையலாம். இருதயத்தின் செயல்பாடு மாரடைப்பினாலோ, தசை வலுவிழப்பினாலோ குறைவாக இருக்கலாம். அவ்வாறு இருக்கும் நிலையில் திடீர் இருதய உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

    இன்றைய நவீன மருத்துவத்தில் இவற்றை தடுக்கக்கூடிய நவீன சிகிச்சைகள் மற்றும் கருவிகள் உள்ளன. நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், படபடப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும் பொழுதே கால நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான முறையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் இம்மாதிரியான உயிரிழப்புகளை கணிசமாக குறைக்க முடியும். இருதய நோய் உள்ளவர்கள் புகைப்பழக்கத்தை தவிர்த்து, ஆரோக்கியமான உணவு, வாழ்வியல் முறைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட்டால் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க இயலும்.

    பொதுமக்கள், இதுபோல் நெஞ்சுவலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்போது, உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். அறிகுறிகள் தென்பட்டத்திலிருந்தே வீணாக்கப்படும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்பை நோக்கி ஒவ்வொரு படிக்கல்லாக கருதப்படுகிறது. இந்த பொன்னான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை, முழுமையான குணமடையும் சதவீதத்தை அதிகப்படுத்துகிறது. இருதய பாதிப்பினால் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பதற்கு விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்படுவதே சாலச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும். இதற்கு சூப்பரான வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.
    பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

    கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

    வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரம், உதாரணமாக மதிய நேரம் வெளியில் செல்ல வேண்டாம்.

    ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி.

    சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். நீச்சல் பயிற்சி முறைப்படி கற்றறிந்த கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் அடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவை யில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் அதிக பட்சமான உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.இவ்வாறு கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும்.

    கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச் சத்து தேவைப்படும். எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவும் அறிவும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம்.   ஊட்டச்சத்து பொட்டாசிய த்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம்.

    வாழைப்பழம், அவகேடோ அத்திப்பழம், லீட்டாஸ், செலரி, கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் இந்த சத்து நிறைந்துள்ளது. கீரை வகையான புதினாவிலும் பொட்டாசியம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காபியில் நிறைந்துள்ள கேஃபைன் சிறு நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும்.

    இதனால் உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக மிளகு மற்றும் புதினா கலந்த தேநீரை அருந்தலாம். இது கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் படுக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். நேராகப் படுப்பது அல்லது வலது பக்கமாகப் படுப்பதை விட இடது பக்கமாகப் படுப்பது சிறந்தது. இவ்வாறு படுப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீரான அளவில் இருக்கும். ஆகக் கால் வீக்கமும் குறையும்.

    கர்ப்பிணிப் பெண்கள் தினம் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாலை வேளை என்று இல்லை வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவ்வப்போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடப்பது நல்லது. இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சரியான அளவில் நடைபெறும். இதன் மூலம் நிச்சயம் கால் வீக்கம் குறையும்.

    கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் உணவுகளை யும் சாலையோரங்களில் மலிவான விலையில் கிடைக்கும் துரித உணவு களையும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பும் சேர்த்து இருப்பார்கள். இது கால் வீக்கத்தை அதிகரிக்க செய்து விடும். ஆக இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தையோ அல்லது டப்பையோ எடுத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எப்சம் சால்ட்டைக் கலந்து கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் சில சொட்டுகள் லேவண்டர் ரோசையும் கலந்து கொள்ளலாம். இதில் பெண்கள் தங்கள் கால்களை விட்டுக் கொள்ளலாம். தினம் ஒரு 15 நிமிடங்கள் இதைச் செய்யலாம். இந்த எப்சம் சால்ட் தசை வலிகளை நீக்க உதவும். இது கால் மற்றும் பாதங்களில் உள்ள நச்சுகளையும் கழிவுகளையும் நீக்க வல்லது. ஆர்னிகா எண்ணெயைப் பாதங்கள் மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீர் அடையும்.கால் வீக்கம் வடியும்.
    ×