search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வகை வகையான குர்த்திகள்....
    X
    வகை வகையான குர்த்திகள்....

    தீபாவளிக்கு குஷியாக அணியலாம்... வகை வகையான குர்த்திகள்....

    நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும்.
    நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும் இதுபோன்ற லாங் குர்த்திகளின் மேல் எத்னிக் ஜாக்கெட்டுகளை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கின்றன என்றே சொல்லலாம்.

    லாங் ஸ்கர்ட்டுகளுடன் லாங் குர்த்திகளை அணியும் பொழுது அவை நவீன தோற்றத்தைத் தருகின்றன. விருந்துகள், பகல் நேரப் பயணங்கள் போன்றவற்றிற்கு அணிய ஏற்ற ஆடையாக இது உள்ளது. இவை மஷ்ரு, காட்டன், சில்க், ரேயான், விஸ்கோஸ், பாலியஸ்டர், க்ரேப் மற்றும் ஜ்யார்ஜெட் போன்ற பல வகையான துணிகளில் தயாரிக்கப்படுகின்றன.

    பாகிஸ்தானிய குர்த்தி என்பது நீண்ட நேரான குர்த்தியின் மற்றொரு பதிப்பாகும். இவை பாரம்பரிய பிரிண்டுகளுடன் எத்னிக் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் ஜீன்ஸ், ஜெகிங்ஸ், லெகிங்ஸ், ஸ்ட்ரெய்ட் பேன்ட்ஸ், ஸ்கர்ட்ஸ் மற்றும் பளாஸோக்களுடன் அணிய ஏற்றவையாக உள்ளன. பாகிஸ்தான் குர்த்தியுடன் ஆக்ஸிடைஸ்டு நகைகள் பெரிய அளவில் இருப்பதைத் தெர்ந்தெடுத்து அணியும் பொழுது எத்னிக் தோற்றத்தை அப்படியே வெளிக்கொணருகின்றது.

    உடலின் முன்புறம் வங்கி போன்று குட்டையாகவும் பின்புறம் வால் போன்று நீண்டும் இருக்கும். குர்த்திகள் ‘டெய்ல்’ குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ், ஜீன்ஸ் மற்றும் ஜெகிங்ஸ்களுடன் அணியும் பொழுது கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகைக் குர்த்திக்களை அதற்கேற்றார் போன்ற காலணிகள் மற்றும் நகைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணியலாம். ஸ்லிங் பேக் அல்லது க்ளட்ச்கள் இவ்வகை குர்த்திகளுடன் எடுத்துச் செல்ல ஏற்றவை.

    ஆங்கில எழுத்தான ‘எ’ வடிவில் இருக்கும் குர்த்திகள் இளம் பெண்களிடையே பெரிய அளவில் பெற்றிருப்பவை என்று சொல்லலாம். இந்தக் குர்த்தியானது இடுப்பிலிருந்து விரிவடைந்து முழங்கால் அல்லது கணுக்கால் வரை நீண்டிருக்கின்றது. இவற்றை திருவிழாக்கள் மட்டுமல்லாது சாதாரணமாகவும் அணியலாம். டோத்தி பேண்டுகள், ஜெக்கிங்ஸ், ஜீன்ஸ், பாட்டியாலா, கேப்ரி மற்றும் சுடிதார்களுடன் அணியலாம். பம்ப்ஸ், கோலாபுரி, செருப்புகள் அல்லது ஷுக்களை இந்த குர்த்திகளுடன் அணியலாம். இவை ‘எ’ லைன் குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

    அழகான மற்றும் நேர்த்தியான பாரம்பரியக் கலவை என்று அனார்கலி வகைக் குர்த்திகளைச் சொல்லலாம். இவ்வகைக் குர்த்தியானது எவ்வகை உடல் வாகு உடையவர்களுக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகம், கல்லூரி, விழாக்கள் என அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக திருமணங்கள் வரவேற்புகளிலும் அணியப்படுகின்றன. சைட்ஸ்லிட், ஃப்ரன்ட் ஸ்லிட், அடுக்கு (லேயர்டு) எனப் பல மாடல்களில் அனார்கலி குர்த்திகள் வடிவமைக்கப்படுகின்றன. அனார்கலி அணியும் பொழுது உயர்ந்த குதிகால் செருப்பு அணிந்தால் அது அந்த ஆடையின் அழகை உயர்த்திக் காட்டுகின்றது.

    லாங் ஸ்ட்ரெய்ட் குர்த்திகளை தினசரி அணியும் உடையாகவும், பிரயாணங்கள், சிறு விழாக்கள் போன்றவற்றிற்கும் அணிகிறார்கள். இது மேலிருந்து கீழ் வரை ஒரே நேராக இருக்கின்றது.

    நவீனப் போக்குடன் சமகால வடிவமைப்புடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவையாக இருப்பவை டோத்தி குர்த்திகளாகும். இந்த குர்த்திகள் ஒரு அசாதாரணமான ட்ரேப் பாணியுடன் அணிய வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலான தோற்றமுடைய இவை உடலின் மேல் பகுதியை அனைத்தும் இடுப்பிலிருந்து தொள தொளப்பாகவும் இருக்கின்றது. இந்த குர்த்தியை தனித்து முழு ஆடையாகவோ அல்லது ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ் மற்றும் டைட்ஸ்களுடனும் அணியலாம்.

    அந்தக்கால இசைக் கலைஞர்களின் ஆடை வடிவமைப்பிலேயே வந்திருப்பவைதான் அங்க்ரகா குர்த்திகளாகும். டேங்கில் காதணிகள், பெரிய ஜீம்காக்கள், தங்க மற்றும் வைர நகைகள், ஆக்ஸடைஸ்டு நகைகளுடன் அணியும் பொழுது இந்த குர்த்தியின் அழகானது மேலும் மேம்படும். சிஃபான், ஜியார்ஜெட், நெட், காட்டன், சந்தேரி மற்றும் பட்டுத் துணிகளில் அங்க்ரகா குர்த்தியானது தயாரிக்கப்படுவதால் அனைத்து கால நிலைகளிலும் இதை அணிந்து கொள்ள முடியும்.

    இந்திய மற்றும் மேற்கத்திய பாணிகளின் இணைவுடன் ஷர்ட் மற்றும் குர்த்தி இரண்டும் சேர்ந்த கலவையாக வந்திருப்பவை ஷர்ட் குர்த்தி. இவை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. டெனிக், காட்டன், ஜியார்ஜெட், க்ரேப், விஸ்கோஸ், ரேயான் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் தயாரிக்கப்படுகின்றன. இவை கணுக்கால் வரை, முட்டி வரை அல்லது குட்டையானவை எனப்பல்வேறு நீளங்களில் கிடைக்கின்றன.

    குர்த்திகளின் மேல் குட்டை ஜாக்கெட்டுகள் அணிவதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. குர்த்திகளில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மேல் ஜாக்கெட்டுகளை அணிவது ஃபேஷனாகி வருகின்றது. குர்த்தி பிளெயின் நிறத்தில் இருந்தால் மேலே அணியும் ஜாக்கெட் பிரிண்ட்டுகளுடனும், குர்த்தியில் பிரிண்ட்டுகள் இருந்தால் மேலே அணியும் ஜாக்கெட்டானது பிளெயினாக இருப்பது போன்றும் வித்தியாசமான கழுத்து மாடல்களுடன் வடிவமைத்திருக்கிறார்கள்.

    இரண்டு மூன்று லேயர்களாக துணிகளை வைத்து தைக்கப்படும் குர்த்திகள் ஓவர்லே குர்த்திகளாகும். உட்புறம் பிரிண்ட் செய்யப்பட்ட துணி இருந்தால் மேல்புறம் பிளெயின் நிறத்துணி வைத்தும், உட்புறம் பிளெயின் நிறத்துணி இருந்தால் மேற்புறம் டிசைன் செய்யப்பட்ட துணி வைத்தும் இவ்வகைக் குர்த்திகளை வடிவமைக்கிறார்கள்.

    முன்புறம் மட்டும் ஸ்லிட் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் குர்த்திகள் நம்முடைய தோற்றத்திற்கு கவர்ச்சியைத் தருகின்றன. இரு பக்கவாட்டிலும் ஸ்லிட் இருக்கும் குர்த்திகள் நாம் அணிவதற்கு வசதியானவையாக உள்ளன. இன்னும் சில குர்த்திகளில் முன்புறத்தில் மட்டுமல்லாமல் இரு பக்கவாட்டிலும் ஸ்லிட் இருப்பது போன்று வடிவமைத்திருப்பது பார்க்க வித்தியாசமாக உள்ளது. இவ்வகை குர்த்திக்களை நீண்ட ஸ்கர்ட்டுகளுடன் அணியும் பொழுது அவை லெஹங்கா வை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளன.
    Next Story
    ×