என் மலர்

  ஆரோக்கியம்

  பெண்களின் மனம் கவரும் ரோஸ் கோல்டு நகைகள்
  X
  பெண்களின் மனம் கவரும் ரோஸ் கோல்டு நகைகள்

  பெண்களின் மனம் கவரும் ரோஸ் கோல்டு நகைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஸ் கோல்டு நகைகள் அணிவதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்த நகைகளை நேவி, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் கிரீம் போன்ற நடுநிலை வண்ணங்களுடன் கூடிய ஆடைகளுடன் அணியும் பொழுது அவை மிகச்சிறப்பான தோற்றத்தைத் தருகின்றன.
  ரோஸ் கோல்டு என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் தங்கமாகும். 24 காரட் மஞ்சள் நிறத்தங்கம், தாமிரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலவையே இந்த இளஞ்சிவப்பு (ரோஸ் கோல்டு) தங்கமாகும்.

  ரோஸ் கோல்டு நகைகள் அணிவதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்த நகைகளை நேவி, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் கிரீம் போன்ற நடுநிலை வண்ணங்களுடன் கூடிய ஆடைகளுடன் அணியும் பொழுது அவை மிகச்சிறப்பான தோற்றத்தைத் தருகின்றன.

  ரோஸ் கோல்டு தங்க நகைகளில் கல் பதித்த மோதிரங்கள் பார்ப்பவர்களை மயக்கும் விதத்தில் பல டிசைன்கள் மற்றும் மாடல்களில் வந்துள்ளன. ரோஸ் கோல்டு மோதிரத்தில் வைரக்கற்கள் பதித்தவற்றை நிச்சயதார்த்த மோதிரங்களாகப் பரிசளிப்பது பிரபலமாகி வருகின்றது.

  * காதணிகள் என்று எடுத்துக்கொண்டால் தொங்கல் மாடல்களில் எண்ணற்ற டிசைன்கள் நவீன தோற்றத்தில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இரத்தச் சிவப்புக் கற்களும், வெண்மை நிறக் கற்களும் பதித்த பாலி மாடல் காதணிகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. முழுவதும் வெண்மை நிறக் கற்கள் பதித்த ஜிக் ஜாக் மாடல், ஓவல் வடிவத்தில் கீழே கற்கள் தொங்குவது போன்ற மாடல், காதணியில் வைரக்கல் பதித்து அதிலிருந்து தொங்கும் செயினிலும் வைரக்கற்கள் பதித்து அதன் முடிவில் ஐந்து வட்ட வடிவக் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் மாடல், கம்மல் பாலி மாடலில் சிறிய வெண்மை நிறக் கற்கள் பதித்திருக்க கீழே தொங்கலானது இலை வடிவில் வெண்மை நிறக் கற்கள் பதித்த மாடல் என எண்ணற்ற மாடல்கள் உள்ளன.

  * கம்மல் மாடல்களிலும் அதேபோல் ஏராளமான டிசைன்கள் உள்ளன. இதய வடிவில் நடுவில் பெரிய கருமை நிறக்கல் பதித்து அதன் பார்டராக வெண்மை நிறக் கற்கள் பதித்திருப்பது கருப்பு இதயமாக ஜொலிக்கின்றது. அதேபோல் ஆங்கில ‘ஜெ’ வடிவத்தில் இடையில் சிறிய வெண்மை நிறக்கற்களால் வடிவமைக்கப்பட்ட மூன்று மலர்கள், அரைக்காது வடிவில் காதின் நடுவே ஏழு கற்கள் பதித் கம்மல், மூன்று இதயங்கள் இணைவது போன்ற கம்மல் பூக்கம்மல் எனக் கம்மல்களில் ஏகப்பட்ட மாடல்கள் உள்ளன. இந்த ரோஸ் கோல்டினால் செய்யப்படும் கம்மல் வகைக் காதணிகள் புதுமையும், பழமையும் கலந்தவையாக இருப்பதால் எந்த வயதுப் பெண்களும் அணிய ஏற்றவையாக உள்ளன.

  * மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் மட்டுமல்லாது அனைத்து விரல்களுக்கும் சேர்ந்தாற்போல் அணியும் மோதிரங்கள் ரோஸ் கோல்டில் மிகச்சிறப்பாகவும், நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மெல்லிய கம்பியில் மேற்புறம் முத்துக்கள் பதித்தவை, கற்கள் பதித்தவை, டை வடிவத்தில் கற்கள் பதித்தவை, பிளையின் ரிங், பிளையின் பட்டை வடிவ மோதிரத்தின் மேற்பகுதியில் ஒரே பெரிய கல் அல்லது சிறிய கற்கள் பதித்தது போன்று இருப்பவையும் அழகாக உள்ளன. மோதிரத்தின் மேற்புறத்தில் மலர் மலர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கும் மாடல் நிஜ மலருக்கு சவால் விடும் விதத்தில் உள்ளது.

  * இவை மட்டுமல்லாது கிளையிலிருக்கும் இலை, அலை வடிவம், மிஸ்டிக், புறாவின் கால் வடிவம், முகடு மற்றும் சமவெளி வடிவம், ரிப்பன் லூப், லூப்பி லூப் வடிவம் என மிக வித்தியாசமாகவும், நவீன டிசைனிலும் ரோஸ் கோல்டு மோதிரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஓரிகமி இதய வடிவ மோதிரங்கள் பார்ப்பவர்களை கட்டாயம் வாங்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

  * கழுத்தாணிகள் என்று எடுத்துக்கொண்டால் மெல்லிய செயின்களில் சிறிய கற்கள் பதித்த டாலர்கள், அதே டிசைனில் காதணிகள் பார்க்கவே அழகாக உள்ளன. குட்டையான அடுக்குச் செயின்கள், ஒவ்வொரு செயினின் நடுவிலும் சிறிய டாலர்கள், இதய வடிவ பென்டன்டுடன் இருக்கும் செயின், குயின்ஸ் நெக்லஸ், குந்தன் நெக்லஸ், போக்லி சோக்கர், கியூபிக் ஜிர்கோனியா நெக்லஸ், சாம்ப்பேன் லாங் நெக்லஸ், இராசிக்கற்கள் பதித்த, நெக்லஸ்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சங்க்கி செயின் நெக்லஸ் என ஏராளமான டிசைன்களில் ரோஸ் கோல்டு கழுத்தணிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

  * பழமை மற்றும் புதுமையைக் கலந்து வைரக் கற்கள் பதித்து செய்யப்பட்ட பென்டன்ட்டுகள் இல்லாத நெக்லஸ்கள் அருமையோ அருமை.

  * ரோஸ் கோல்டினால் செய்யப்பட்ட பிளையின் மற்றும் கற்கள் பதித்த பிரேஸ்லெட்டுகளிலும் ஏராளமான டிசைன்களும், மாடல்களும் உள்ளன.

  * ரோஸ் கோல்டு நகைகளை குறிப்பாக இரவு விழாக்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் மீதுதான் இருக்கும். இவ்வளவு அழகாகவும், நவீனமாகவும் செய்யப்படும் ரோஸ் கோல்டானது அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
  Next Story
  ×