என் மலர்
ஆரோக்கியம்
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட முடியும். குழந்தைகள் பல விதம் உண்டு. குழந்தைகளை பார்த்தவுடன் அவர்களை கையில் எடுத்து கொஞ்ச தோன்றும். ஆனால், சில குழந்தைகள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல்தான் இருக்கும். வயிறு மட்டும் பெருத்து காணப்படும்.
ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள். குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடல் வீங்கி காணப்படும். இந்த பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும்.
இதனால் வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது. இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான். இந்த நிலையில் குழந்தையின் கல்லீரல் சிறிதளவு பாதிப்படையும். இதுபோல் குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம், அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புறசூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கும். கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும். இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும். குழந்தைகளின் ஞாபக திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம். ஞாபக சக்தியை தூண்டுவது பித்தம்தான். அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான்.
கல்லீரலை பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும். கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதற்கு மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையை தூண்ட கூடிய மருந்துகளை கொடுக்க வேண்டும்.
மேலும் வயிற்று கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்று பொருமல் மாறி ரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும். தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும். குழந்தை அன்பு, பாசம், பரிவு என எல்லாமே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும். அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும்.
இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு மேலே கண்ட நோய்களின் தாக்கம் உண்டாகும். முன்பு தாய்மார்கள் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டே மாதத்தில் நிறுத்தி கொள்கின்றனர். இன்னும் சிலரோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாயின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என எண்ணிக் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். ஆனால், அது தவறான எண்ணமாகும்.
குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் அவசியமோ அதுபோல் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடலில் எல்லாச் சுரப்புகளும் சீராக சுரந்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாசம் அதிகப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பாலுடன் தாய்மார்களின் எண்ணம், செயல், பாசம், பரிவு என்ற தாய்ப்பாசமும் அவசியமாகிறது.

தோல்வி அடைந்து விட்டோம் என்று காரணத்துக்காக தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம். தோல்வி இன்றி வரலாறா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முதல் தோல்வி அடைந்தாலும் அதனை மறுமுறை திருத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம்.
ஒரு மனிதன் தன் வாழ்வைத் தொடங்கி முடிக்கும்வரை பல தோல்விகளை சந்திக்கிறான். ஒவ்வொரு முறையும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எந்தஒரு காரியத்தையும் தொடங்குகிறோம். ஆனால், அது ஒரு சில நேரங்களில் தோல்வியில் முடிந்து விடுகிறது. இதனால், பெரும் வருத்தம் அடைகிறோம். ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது வெற்றி, தோல்வி இரண்டுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அதனை ஏற்கும் பக்குவத்துடன் தொடங்க வேண்டும்.
நம்மில் பலர் கூறுவார்கள், “நன்கு யோசித்து தொடங்கு, தொடங்கியபின் யோசிக்காதே“ என்று. எதை யோசிக்க வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்றால் எதையும் ஏற்கும் பக்குவம் உள்ளதா! வெற்றி வந்தால் என்ன செய்வது!, ஒருவேளை தோல்வி வந்தால் என்ன செய்வது! அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகர்வது என்பதை யோசிக்க வேண்டும். முயற்சி மேற்கொள்ளும் போதே தோல்வி தான் வரும் என எண்ணாமல் தோல்வியும் வர வாய்ப்புள்ளது என்று தான் என்ன வேண்டும்.
மேலும், ஒரு முயற்சி மேற்கொண்டு நாம் அதில் தோற்றுப் போனால் உடனே வருந்துவதோ, துவண்டு போகவோ கூடாது. காரணம் நாம் அடைந்தது தோல்வி தானே தவிர குற்றமில்லை. குற்றம் செய்தவன்தான் தன் குற்றத்தை எண்ணி வருந்த வேண்டும். தோல்வி தந்த பாடத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு கண்களை துடைத்து மறுபடியும் வெற்றி காண முயல வேண்டும். எவர் ஒருவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளாரோ அவருக்கு தான் அதிக தோல்விகள் வந்திருக்கும்.
இவ்வுலகில் சாதனை படைத்த விஞ்ஞானிகள், தலைவர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் இது புலப்படும். தோல்வி அடைந்து விட்டோம் என்று காரணத்துக்காக தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள் தனம். தோல்வி இன்றி வரலாறா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முதல் தோல்வி அடைந்தாலும் அதனை மறுமுறை திருத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம்.

நாம் விழுங்கிய உணவு அலையின் வேகத்தில் பயணிப்பதாலும் அல்லது அலையைவிட வேகமாகப் பயணிப்பதாலும், அந்த தசைச்சுருக்க அலை இரைப்பையை சென்றடைந்து விடுகிறது.
உணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும் வரை தொடர்கிறது. இந்த அலைகளை ‘தசைச்சுருக்க அலைகள்’ என்று அழைக்கிறார்கள்.
நாம் விழுங்கிய உணவு அலையின் வேகத்தில் பயணிப்பதாலும் அல்லது அலையைவிட வேகமாகப் பயணிப்பதாலும், அந்த தசைச்சுருக்க அலை இரைப்பையை சென்றடைந்து விடுகிறது.
இடையே உணவு எங்கேனும் தேங்கி நின்றுவிட்டால், அதன் பின்னிருந்து இன்னொரு அலை புறப்பட்டு உணவை நகர்த்தி இரைப்பைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இந்த தசைச்சுருக்க அலையை மூளையின் அடித்தண்டு கட்டுப்படுத்துகிறது. உணவு நகர்ந்து விட்டதா, இல்லையா? என உணவுக் குழாயைச் சுற்றி இருக்கும் நரம்புகள் தொடர்ச்சியாக மூளைக்குத் தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன.
நாம் உண்ட உணவு இரைப்பையில் அமிலம், பிற நொதிகளுடன் கலந்து அரைக்கப்பட்டுக் கூழாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர் உணவுக் குழாயில் நடக்கும் தசைச்சுருக்கம் போன்ற, ஆனால் குறைந்த தொலைவு பயணிக்கிற தசைச்சுருக்க அலைகள் மூலம் சிறு குடலுக்கு நகர்த்தப்படுகிறது.
இது செரிமான மண்டலத்தில் மட்டும் அல்ல, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அமைப்பான நிணநீர் சுரப்பிகளில் இருந்து நிணநீர்க் குழாய்கள் சுற்றி இருக்கும் தசைகளின், தசைச்சுருக்க அலைகள் வழியாகவே உடலெங்கும் கடத்தப்படுகிறது. இந்த தசைச்சுருக்க அலை இருப்பதால்தான் விண்வெளியில், விண்வெளி வீரர்களால் உணவருந்த முடிகிறது. ஈர்ப்புவிசைதான் உணவை நகர்த்துகிறது என்றால் மனிதர்களால் விண்வெளியில் தாக்குப்பிடிக்கவே முடியாது.

ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மிகவும் உடையக்கூடியதாக ஆக்குகிறது. இதனால் லேசான இருமல் அல்லது இடுப்பை சற்று வளைத்தல், போன்ற செயல்களால் முதுகெலும்பு அல்லது மணிக்கட்டில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். எலும்புகள் உடையக்கூடியதாக இருப்பதால் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம். ஏனெனில் இவர்களுக்கு எலும்பு உடைந்துவிட்டால் சரிசெய்வது சற்று கடினம். பெண்கள் வயதாகும்போது முதுகு கூன் போடச் செய்துவிடும். எலும்பு முறிவு ஏற்பட்டால் அது மிகவும் மெதுவாகத் தான் குணமாகும்.
மீனாட்சி மருத்துவமனை ஆஸ்டியோ போரோசிஸ் மருத்துவர் கே.கனகசாரதி கூறியதாவது:-
ஆஸ்டியோபோரோசிஸ் எம்பது நம் உடலில் உள்ள எலும்புகளில் எளிதில் உடையக் கூடிய நிலையைக் குறிப்பதாகும். இடுப்புகளை சிரமப்படுத்தி வளைத்து உடற்பயிற்சி செய்தல், கடுமையான யோகா, குளியளறையில் வழுக்கி விழுந்தால், குறைவாக பளு தூக்கினாலும் கூட இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆண்களை விடப் பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே அதிகம் இருப்பதால் சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் D3 அவர்களுக்கு அதிகம் கிடைக்காமல் போய்விடுகிறது. சத்தான உணவில் அக்கறை காட்டாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
இடுப்பு முழங்கால், முதுகு போன்ற எடை அதிகம் தங்குகின்ற மூட்டுகளில் அதிக வலி உண்டாகும். முதுகுத் தண்டுவடம் வளையத் தொடங் கும். இவைகளை ஆஸ்டியோ போரோசின் அறிகுறிகளாகக் கொள்ளலாம். இம்மாதிரியான எலும்பு முறிவு ஏற்பட்டால் குணமாவதற்கு கால தாமதம் ஆகும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் ஏதேனும் தொடர் தொற்றுகள், நீரிழிவு இருதய பாதிப்பு, புற்றுநோய் இருப்பவர்கள் ஆண்டுக் கணக்காக ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பர் கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவ சியம்.
இன்றைய மருத்துவ வளர்ச்சி யில் ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதை எக்ஸ்ரே மற்றும் டெக்சா என்கிற ஸ்கேன் முறையிலும் பி.எம்.டி.(Bone mineral denssity) என்று சொல்லப்படும் எலும்பின் அடர்த்தி அறியப்படும். சோதனைகளாலும் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
சத்தான பழங்கள், காய் கறிகள், கீராவகைள், பால், முட்டை, ஈரல் முதலான கால்சியம், இரும்புச் சத்து மற்றும் D3 உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கான உரிய சில உடற்பயிற்சிகளை மேற் கொள்வதாலும் முறையான மாத்திரைகளாலும் ஆஸ்டியோபோசிசை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும்.
ஆஸ்டியோபோரோசிஸுக்கு சிகிச்சையளிக்கும் போது பிற மருந்து, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்ப்பது மிகப்பெரிய பலனை ஏற்படுத்துகின்றன. எலும்பை வலுவாக வைத்திருக்க வைட்டமின் D முக்கியம். சத்தான உணவினை நாம் சாப்பிடுவது மிக முக்கியம் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாகக்கூடும். அன்றாட உணவில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
நம்மை காக்கும் எலும்புகளை நாமும் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம். அற்புதமான தாயாக விரும்பும் பெண்கள், மகள் சிறு வயதாக இருக்கும்போதே அதற்குரிய செயல்பாடுகளை தொடங்கிவிடவேண்டும்.
ஐந்து வயது சிறுமியாக இருக்கும்போதே மகளுக்குரிய நேரத்தை ஒதுக்க, தாயார் முன்வரவேண்டும். அவளது குட்டி உலகத்து கனவுகள், கற்பனைகளை எல்லாம் மனந்திறந்து, தன்னோடு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ‘என் அம்மாவுக்கு நான் ஒரு தேவதை. என் ஆசைகளை எல்லாம் என் அம்மா நிறைவேற்றி வைப்பார்’ என்ற நம்பிக்கையை அவளுக்கு உருவாக்க வேண்டும். உனக்கு ஒரு சோகம் என்றால், சாய்ந்து அழ என் தோள்கள் எந்நேரமும் காத்திருக்கும் என்பதை உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லாம் உங்கள் மகளை வளர்த்தாலும், அவள் 15 வயதை எட்டும்போது சூழ்நிலைகள் மாறத்தான் செய்யும். கோபம் கொள்வாள்; ஆத்திரப்படுவாள்; கலகம் செய்வாள். அப்போது அவளது அத்தனை செயல்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு, அவளோடு சேர்ந்து தாயும் பிடிவாதம் பிடித்து போராட வேண்டியதில்லை. சில விஷயங்களை கண்டும் காணாததும்போல் கடந்து போய்விட வேண்டும். ‘டீன்-ஏஜில்’ இப்படித்தான் கலாட்டா செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டு, அவ்வப்போது மெதுவாக தலையிட்டு மென்மையாக இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அடுத்த 10 வருடங்களை இதமாக கையாண்டால், 25 வயதில் மகள், தாயின் அன்பிற்குரிய தோழியாகிவிடுவாள்.
டீன்-ஏஜ் மகள்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அம்மாக்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு, ஒரே மாதிரிதான் இருக்கிறது. ‘அம்மா என் மீது தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கிறார். என்னை இப்போதும் சின்ன குழந்தைபோல் நடத்துகிறார். அவர் விரும்பியது போல்தான் நான் நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’ என்பதுதான்.
உண்மையில் ‘டீன்-ஏஜ்’ மகள்கள் மீது எல்லா அம்மாக்களும் அதிகபட்ச அக்கறை செலுத்துகிறார்கள். அந்த அக்கறையை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வெளிப்பாடு மகளுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மகள்களின் தோற்றம், அலங்காரம், செயல்கள் அத்தனையிலும் தாய்மார்கள் தலையிடக்கூடாது. மகள்களின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதே நேஇரத்தில் பிரச்சினைக்குரிய நட்புகள், பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்களில் தாயார் தலையிட்டுதான் ஆகவேண்டும்.
பெரும்பாலான அம்மாக்கள், தன்னைப்போலவே தன் மகளும் வளரவேண்டும், வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு தவறு. தன் மகளாகவே இருந்தாலும் அவள் இன்னொரு பெண். அவளுக்கென்று தனித்துவம் இருக்கும். அவளை அவளாக வளர அனுமதிக்கவேண்டும். ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு, அவளை அவளாக வளர அனுமதிப்பதுதான்.
மகளுக்கு, தாயார் பொறுப்புகளை வழங்கவேண்டும். எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்துவிட்டு, அதற்குள் அவளை கட்டுப்படுத்த முயற்சிக்காமல், முடிவுகள் எடுக்கும் வாய்ப்புகளை அவளுக்கு வழங்கவேண்டும். அவள் முடிவுகள் எடுத்த பின்பு அதில் இருக்கும் நிறைகுறைகளை அலசி, அடுத்தடுத்த முடிவுகளை சிறப்பாக எடுக்க அனுமதிக்கவேண்டும்.
மகளோடு தாய் அதிக நேரம் பேசவேண்டியதில்லை. ஆனால் அவளோடு இணைந்து அதிகநேரம் செயல்பட வேண்டும். அதன் மூலம் மகள் தனது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை தாயின் செயல்பாடுகளில் இருந்து பெறுவாள். அதிக எதிர்பார்ப்புகள் கொண்டவளாக மகளை வளர்த்து விடக்கூடாது. எல்லாவற்றிலும் யதார்த்தங்களை மகளுக்கு புரிய வைக்கவேண்டும். தாயும், மகளும் வெவ்வேறு மனிதர்கள். ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், குணாதிசயங்கள், கருத்துக்கள் இருக்கும். மகளிடம் இருக்கும் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தாய்மார்களிடம் இருக்கவேண்டும்.

லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது. இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
லச்ச கொட்ட கீரை - 100 கிராம்
பாசிப் பருப்பு - 20 கிராம்
சீரகம் - 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் - விருப்பத்திற்கேற்ப
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் - 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
லச்ச கொட்ட கீரையை அலசி நடுநரம்பினையும், காம்பையும் நீக்கி பின்னர் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கி விடவும்.
பாசிப் பருப்பை அலசி கொதித்த தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், சீரகம், உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் நறுக்கிய கீரை, தேவையான உப்பு சேர்த்து ஒருசேர கிளறி, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.
கீரை வெந்ததும் பாசிப் பருப்பின் நீரை வடித்துவிட்டு, பாசிப் பருப்பை கீரையில் சேர்த்துக் கிளறவும்.
ஒருநிமிடம் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.
பின்னர் தேங்காய் துருவலை கீரையுடன் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

சுவையான லச்ச கொட்டை கீரை பொரியல் தயார்.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும்.
மனம் ஒரு கண்ணாடி. கவலை என்பது அதில் படியும் அழுக்கு போன்றது. அந்த அழுக்கினைப் போக்கும் இராஜதிரவமே புன்னகை என்பது. புன்னகை என்பது முகத்திற்கு மட்டுமல்ல. மனதிற்கும் அழகுசேர்க்கிறது.
புன்னகைக்கு மட்டுமே புத்துணர்ச்சி ஊட்டுகிற வல்லமை உண்டென்பது பல்வேறு மனிதர்களின் வரலாறு காட்டும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் ஒரு முறை தனது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதிக்கிடந்தது. நல்ல வேலை இவருக்கு ஏதும் ஆகவில்லை. இவர் வாகனத்திலிருந்து இறங்கி பக்கத்தில் மரத்து நிழலில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டுநரை விட்டு மெக்கானிக்கை அழைத்து வரக் கூறினார். அந்த பக்கம் வந்த ஒருவர் என்ன ஆனது எனக் கேட்க ஒன்றுமில்லை. நீண்ட நேரம் பயணம் செய்ததால் மரத்தில் எனது காரை நிறுத்திவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன் என்றாராம். தனது கார் விபத்துக்குள்ளான இந்த நிலையில் யாராலாவது இப்படி நகைச் சுவையை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா?. அதுதான் கலைவாணர். இந்த மனநிலைதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்பதை, அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
சகுந்தலா என்ற இவரின் திரைப்படத்தைப் பார்த்த திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜா சென்னை வந்து அப்போது ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். கிருஸ்ணன் மற்றும் எ.ஏ. மதுரம் ஆகியோரைச் சந்தித்துப் பாராட்டினாராம். பின்பு அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றாராம்.
எனவே நகைச்சுவை உணர்வு நம்மை உயர்த்துவதோடு, சோகம் நம்மைத் தாக்காமலும் பாதுகாக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்த விலங்கு. சிரிப்பு ஒரு மனிதனுக்கு நல்ல அறிமுகத்தைத் தருகிறது என்பதை உணர்ந்தோர் அறிகின்றனர். நகைச்சுவை உணர்வு என்பது துன்பத்தின் சுமையை எளிதாக்குகிறது. பரபரப்பான வாழ்க்கையை பரவசப்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் சோகங்களிலிருந்து மீட்டெடுக்கிறது. ஆகவே இடுக்கண் வரும்போதும் நகுவோம். இல்லறம் சிறக்க சிரித்து மகிழ்வோம்.
எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன் என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளது எண்ணிப்பார்க்கத் தக்கது. நாம் சிரித்து வாழவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் பிறரைத்தாக்கி, கிண்டலடித்து மகிழக் கூடாது. அது தமிழர் வழியுமல்ல. நாகரிகமும் அல்ல. ”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என வள்ளுவம் கூறுவதை மனதில் ஆழப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும். இதனை இன்றைய நமது கலாச்சாரத் தேவை என்றே கூறலாம்.
நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் போது, நமது உடலில் 86 தசைகள் இயங்குகின்றன. குறிப்பாக மூளைக்குத் தகவல் அனுப்பும் நரம்புகள் நன்கு இயங்குவதோடு, பெப்டைன் என்ற ஒரு வித கார்மோன் சுரந்து இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகிறது. இதனால் உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது. உற்சாகம் ஊற்றெடுக்கிறது. இதனால் மனம் அமைதி அடைகிறது.
வாய்விட்டுச் சிரிக்கும் போது, உடலின் உள் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. சிரிப்பினை உள் உறுப்புகளுக்கான உடற்பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது. எனவேதான் நம் முன்னோர்கள் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றார்கள். சென்னை போன்ற பெரும் நகரங்களில் சிரிப்புக் கழகங்கள் உருவாக்கப்பட்டு, சிரிப்பூட்டும் தெரபி முறையைப் பின்பற்றுகின்றனர். சிரிப்பு ஒரு மருத்துவ முறை என்பதை நவீன அறிவியல் உலகம் பல முறைகளில் நிரூபித்துள்ளது.
வாழ்க்கை இருட்டிலேயே கிடக்கிறது.
சிரிக்கும்போது மட்டுமே
வெளிச்சமடைகிறது’
என்ற புதுக்கவிதையின் உட்பொருள் ஆழமானது.
நாம் கோபப்படும்போது, உடலில் 32 தசைகள் மட்டுமே இயங்கும். அதுவும் இத் தசைகளின் இயக்கத்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் இருக்கமான நிலையில் உடல் தசைகள் இயங்கும். ஆகையால் இதயத்திற்குச் செல்லும் ரத்தமும் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தமும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஆகவேதான் அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் சில வரையறைகள் உள்ளன. நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்க வேண்டும். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு, ஒருவன் மகிழ்ச்சி அடைவானேயானால், அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக் கொடுமையானது. பிறரை மகிழவைத்து மகிழ்வதே, மகிழ்ச்சியில் உயர்வானது. விக்ரம் சாராபாய் பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் ஒரு விளையாட்டு விளையாடுவாராம். பொதுவாக குழந்தைகள் வகுப்பில் நண்பர்களின் பொருட்களை எடுத்து வேறு இடத்தில் ஒளிய வைத்துவிட்டு, தேட வைப்பார்கள். தேடிக் கிடைக்கவில்லை என்றால், கடைசியில் எடுத்துக் கொடுத்து மகிழ்வார்கள். இது ஒரு வகுப்பறை விளையாட்டு. ஆனால் விக்ரம் சாராபாய் திடீரென்று சாக்லேட்டுகளை வாங்கி வந்து யாரும் அறியா வண்ணம், அனைத்து மாணவர்களின் பைகளிலும் வைத்துவிடுவாராம். நண்பர்கள் பையினை திறக்கும் போது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவார்கள். அந்த இன்ப அதிர்ச்சியைக் கண்டு மகிழ்வாராம் விக்ரம் சாராபாய்.
நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமோ, அதைப்போல நமக்கும் உண்மையான மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். சிலர் எதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பதே தெரியாமல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியல்ல. மகிழ்ச்சிக்கு அர்த்தம் இருக்க வேண்டும்.
முல்லா ஒரு குடிகாரர். தினமும் குடிப்பார். ஆனால் ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் இனி குடிக்கக் கூடாது எனக் கருதுவார். குடிக்கக் கூடாது என நினைப்பார். கள்ளுகடை வாசல்வரை மட்டுமே அந்த மனஉறுதி நிற்கும். கள்ளுக்கடையைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் உள்ளே நுழைந்து விடுவார். ஒருமுறை மனக் கட்டுப்பாட்டோடு கள்ளுக்கடையைக் கடந்து சென்று விட்டார். அவரின் மனஉறுதியை அவராலேயே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டாமா? கள்ளுக்கடைக்குள் நுழைந்தார். மகிழ்ச்சியை முறையாகக் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சி, வாழ்க்கையை எந்த வகையிலும் மேம்படுத்தாது. எனவே மகிழ்ச்சியும் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

எப்பொழுதுமே இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள் குறிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. இவ்வகை குர்திகளை வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.
எப்பொழுதுமே இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள் குறிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. எம்பிராய்டரி ட்யூனிக்ஸ் என்பது தனித்துவமான மேற்கத்திய அமைப்புடன் விதவிதமான இந்திய எம்பிராய்டரி டிசைன்களை ஆடைகளில் கொண்டுவரும் அதாவது, சுருக்கமாக சொல்வதென்றால் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்த்திகள், டாப்புகள் என்றும் சொல்லலாம். இவ்வகை குர்திகளை வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.
பழமையான இந்திய கலைகளில் ஒன்றான இந்த எம்பிராய்டரி வேலைப்படானது இந்தியாவின் பல பகுதிகளிலும் அங்கு வாழும் மக்களால் அவர்களின் தனிச்சிறப்புகளோடு செய்யப்பட்டு வருகிறது. எம்பிராய்டரி செய்வதற்கென்றே தனியாக இருக்கும் விதவிதமான நூல்களை, டிசைனுக்கு ஏற்றாற்போல் துணிகளில் உபயோகித்து தத்ரூபமான உருவங்களை கண்ணை கவரும் விதத்தில் கொண்டு வருவது என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.
எம்பிராய்டரி ட்யூனிக் மேலாடைகள் (டாப்ஸ்)
எம்பிராய்டரியானது பொதுவாக டாப்புகளில் கழுத்திற்கு அருகிலிருந்து மெல்லியதாகவோ அல்லது பெரிய பேட்ச் வேலை போல் மார்பு முழுவதும் மறைப்பது போலவோ பரவியிருக்கும். சில குர்த்திகளில் கழுத்திற்கு மட்டும் எம்பிராய்டரி செய்யப்பட்டு இருக்கும். இன்னும் சில குர்த்திகளில் முக்கால் கைகளில் கை முடியும் இடங்கள் மற்றும் ஹெம் லைன்களிலும் இரண்டு விரல் அகலத்திற்கு செய்யப்பட்டிருக்கும். எம்பிராய்டரி டிசைன்கள் கம்பீரமான தோற்றத்தை தருவதாக இருக்கும். அதிக முறையான (பார்மல்) அல்லது ஆடம்பரமான ஆடைகளிலும் கூட முழுத்துணியிலும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
சிக்கன்காரி, காந்த்தா, பூல்காரி, ஜர்தோசி, ராஜஸ்தானி பேட்ச் வேலைப்பாடு, கஷிதாகாரி, ஆரி, கோட்டா, கசூத்தி, கட்ச் அல்லது அரிபாரத், சிந்தி தையல், கஷ்மீரி, முகேஷ், பிச்வாய், பிப்லி, ராபரி சிக்வின், குரோஷா மற்றும் தோடா என பலவகையான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் துணிகளில் செய்யப்படுகின்றன.
எளிமையான எம்பிராய்டரி முதல் மிகவும் கடினமான எம்பிராய்டரிகளுடன் குர்த்திகளும், டாப்புகளும் கிடைக்கின்றன. தினசரி அணிந்து கொள்ளக்கூடிய ட்யூனிக்குகள், பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளக்கூடிய ட்யூனிக்குகள் என அவற்றில் செய்யப்பட்டிருக்கும் எம்பிராயிடரி வேலைப்பாட்டை பொறுத்து வகைப்படுத்தி கொள்ளலாம்.
எம்பிராய்டரி வகைகள்
* ரேஷம் எம்பிராய்டரி, சீஸா வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, லேஸ் டிசைன்கள் மற்றும் வெல்வட் பேட்ச் வேலைப்பாடுகளும் ட்யூனிக்குகளில் செய்யப்படுகின்றன.
* பிராந்திய எம்பிராய்டரி பாங்குகளான ஆரி, பூட்டி, கசூத்தி, கஷின்டா மற்றும் பூல்காரி எம்பிராய்டரிகளால் பெரும்பாலும் ட்யூனிக்குகள் அலங்கரிக்கப்படுகின்றன.
* இதுபோன்ற மிக நுண்ணிய மற்றும் சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் ட்யூனிக் டாப்புகளுக்கு கூடுதல் அழகை தருகின்றன.
* டிசைனர் அல்லது பார்ட்டிக்கு அணியக்கூடிய ட்யூனிக்குகளில் ஒரு தனிப்பட்ட மாதிரியை உருவாக்க வேறுபட்ட நுட்பங்களை இணைத்தும் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படும் வேலைப்பாடுகள் தனித்துவத்துடனும், கண்களை கொள்ளை கொள்வதாகவும் இருக்கின்றன.
* பட்டு நூல்களினால் செய்யப்படும் பூ வேலைப்பாடுகளின் உள்ளே அல்லது சீஸாக்களை கொண்டு செய்யப்படும் பேட்ச் பார்டர் மாதிரிகளுக்கு சீக்வின்ஸ் எம்பிராய்டரியை பயன்படுத்துகிறார்கள்.
* பலவிதமான துணிகளில் எம்பிராய்டரி செய்யப்பட்ட டியூனிக்குகள் இருந்தாலும் பொதுவாகவே நீடித்து உழைக்கக்கூடிய துணிகளிலேயே இதுபோன்ற வேலைப்பாடுகளை செய்கிறார்கள். காட்டன், பலவகையான பட்டு, ஜியார்ஜெட், ஷேட்டின் மற்றும் கிரேப் வகை துணிகளில் எம்பிராய்டரி செய்யப்பட் டியூனிக்குகளை பரவலாக பார்க்க முடியும். மிகவும் மெல்லிய துணிகளில் பெரும்பாலும் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்படுவதில்லை.
* காட்டன் மற்றும் ஆர்ட் சில்க் துணிகளில் தயாரிக்கப்படும் எம்பிராய்டர்ட் ட்யூனிக்குகள் தினசரி அணிவதற்கும், ஜியார்ஜெட், கிரேப், டியூபியன் சில்க் மற்றும் டஸ்சர் சில்க் துணிகளில் தயாரிக்கப்படும் எம்பிராய்டர்டு ட்யூனிக்குகள் பார்ட்டிகள் மற்றும் வெளியில் அணிந்து செல்வதற்கும் ஏற்றவையாகும்.

மாம்பழங்கள் சியானவை என்பது எல்லோருக்கும் தெரியும். மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளில் முதன்மையான பத்து விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

1. தித்திப்புச் சுவையுடன் கூடவே சத்துகளையும் தனக்குள் அள்ளி அடக்கி வைத்துள்ளது மாம்பழம். ஒவ்வொரு மாம்பழத்திலும் 81 சதவீதம் தண்ணீர், 0.4 சதவீதம் கொழுப்பு, 0.6 சதவீதம் புரதம், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 17 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளன. நமக்குத் தேவையான முக்கிய தாதுப்பொருட்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், கந்தகம் ஆகியவை மாம்பழத்தில் நிறைந்துள்ளன.
2. மாம்பழம் என்றால், மல்கோவா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், சிந்தூரா என்று நமக்குச் சில வகைகள்தான் தெரியும். ஆனால் மாம் பழத்தில் சுமார் 1000 ரகங்கள் இருக்கின்றன. மாம்பழத்தில் பல்வேறு ரகங்களை உருவாக்கும் விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள், போர்த்துக்கீசியர்கள்.
3. உலக மாம்பழ உற்பத்தியில் 42.06 சதவீதப் பங்கு இந்தியாவுக்குத்தான். உலகில் மாம்பழம் விளையும் பரப்பளவில் சுமார் 50 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கிறது. நம் நாட்டிலேயே அதிகளவில் மாம்பழத்தை விளைவிப்பது, ஆந்திரப் பிரதேசம். உலகில் உற்பத்தி செய்யப்படும் வெப்பமண்டலப் பழங்களில் 50 சதவீத அளவைப் பிடித்திருப்பது மாம்பழம்தான்.
4. மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். ஆனால் இன்று உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாம் பழம் விளைவிக்கப்படுகிறது. இந்தியா தவிர பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவில் மாம்பழம் விளைகிறது.
5. நமது தேசியப் பழம், மாம்பழம்தான். பாகிஸ்தான், பிலிப்பைன்சின் தேசியப் பழமும் மாம்பழம்தான். வங்காளதேசத்தின் தேசிய மரம், மாமரமாகும்.
6. மாம்பழத்தை முதன் முதலில் இந்தியாவுக்கு வெளியே கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர், சீன யாத்ரீகர் யுவான் சுவாங். 16-ம் நூற்றாண்டில் பாரசீக வியா பாரிகள் இந்தியாவில் இருந்து மாம்பழத்தை கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். 19-ம் நூற்றாண்டில் மெக்சிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் மாம்பழம் சென்றது.
7. முகலாயப் பேரரசர் அக்பர், மாம்பழப் பிரியர். இவர் கி.பி. 1590-ல் தனது ‘அயினி அக்பரி’ நூலில் மாம்பழங்களின் தரம், சுவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அக்பருக்குச் சொந்தமாக, ஒரு லட்சம் மாமரங்கள் கொண்ட ஒரு பெருந்தோப்பு இருந் ததாம்.
8. உத்தரபிரதேச மாநிலத் தலை நகர் லக்னோவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள, மாலிகாபாத் கிராமம்தான் இந்தியாவின் மாம்பழத் தலைநகர் எனப்படுகிறது. இங்கு சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 700 வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் மாம்பழ வியாபாரம், பல நூறுகோடி.
9. வட இந்தியாவில், மாம்பழ ரகங்களிலேயே சிறந்தது என்று யாரைக் கேட்டாலும், அவர்கள் கூறுவது ‘வதசேரி’யைத்தான். இதன் பூர் வீகம், லக்னோவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தசேரி கிராமம். இங்குள்ள ஒரு தசேரி மாமரம் 300 வயதானது என்கிறார்கள். மனிதர் யாரும் நட்டு வளர்க்காமல், தானாக முளைத்தது என்றும் இதனைச் சொல்கிறார்கள்.
10. மாலிகாபாத் வீதிகளில் நடந்தாலே மாம்பழ வாசம்தான் வீசும். இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் இயற்கையாகவே மாம்பழ விவசாயி ஆகிவிடுகிறார்கள். ஆனாலும் அங்கு வசிக்கும் பெரியவர் கலீமுல்லா கானைத்தான் ‘மாம்பழ மகாராஜா’ என்கிறார்கள். மாம்பழம் தொடர்பான அத்தனை விஷயங்களையும், நுணுக்கங்களையும் அறிந்தவர். கலீமுல்லா கானின் அப்துல்லா தோட்டம், ஒரு பெரிய மாம்பழ சாம்ராஜ்ஜியம். குறிப்பாக இங்குள்ள ஒரு 90 வயதான மாமஇரத்தில் 300 வெவ்வேறு வகை மாம்பழங்களை காய்க்கச் செய்துள்ளார் கலீமுல்லா கான். இதற்காக, லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இம்மாமரம் இடம்பெற்றுள்ளது. மாலிகாபாத்தில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு மாம்பழ விவசாயியும், 15 ஆயிரம் பெட்டி மாம்பழங்களை உற்பத்தி செய்கிறார். மாலிகாபாத்தில் இருந்து இந்தியா முழுமைக்கும், வெளிநாடுகளுக்கும் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெல்லிக்கு மட்டும் 100 லாரி லோடு செல்கிறதாம்.

வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம். அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
மனித இனத்தை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவது, வாயு மண்டலம் சூடாவது, ஓசோன் படலம் தேய்ந்த அதன் வழியே புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைவது, பனிப்பொழிவில், பருவமழையில் அமிலத்தன்மை அதிகரிப்பது, நன்னீர் ஆதாரங்கள் நஞ்சாவது இப்படி நாடறிந்த பல சிக்கல்களை மனித இனத்துக்கு நேரடி பாதிப்புகள் நிறைய.
ஆனாலும் அறிஞர்கள் உயிரினங்கள் அழிக்கப்படுவதைத்தான் முதன்மையான பிரச்சினையாக நினைத்தார்கள். உயிரின வலைப்பின்னல் கண்களுக்கு புலப்படாத ஒன்று. அந்த பின்னலில் கட்டெறும்பு முதல் காண்டாமிருகம் வரை எல்லாமே மனித இனத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த பின்னலின் கணுக்கள் ஒவ்வொன்றாக அறுந்து கொண்டே வந்தால், கடைசியில் மனித இனமும் மடிந்து போக வேண்டியது தான் என்பதை அந்த அறிஞர்கள் உணர்ந்து இருந்ததே இதற்கு காரணம். எனவே தான் மனித வாழ்க்கையையும் மரங்களோடு ஒப்பிட்டு வாழையடி வாழையாய் வாழ்க என வாழ்த்துகிறோம்.
சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய மூன்று சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஒரே ஒரு வாழைப்பழம் நாம் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான சக்தியை கொடுக்கிறது. வாழைப்பழத்தில் இருந்து ட்டிரைடோபான் என்ற புரோட்டீன் நமது ரத்தத்தின் செரடோனின் என்ற ஒரு ஹார்மோனை உண்டாக்கி டிட்ரசன் லிருந்து நம்மை வெளிக்கொண்டு வருகிறது.
ஒரு வாழைப்பழத்தில் இருக்கும் பி6 என்ற வைட்டமின் நமது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் லெவலை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியை கொடுக்கும். வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் ஹீமோக்கோபின் அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம். அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
சிகரெட் மற்றும் புகையிலையில் இருந்து விடுபட விரும்புபவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் பி6 மற்றும் பி12 என்ற வைட்டமின்கள் அவர்களை மீண்டும் சிகரெட் பிடிக்கவோ அல்லது புகையிலை சாப்பிடவோ தூண்டாது. வாழைப்பழத்தில் ஆப்பிளைவிட நான்கு மடங்கு புரோட்டீன், இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட், மூன்று மடங்கு பாஸ்பரஸ், ஐந்து மடங்கு இரும்புத்தாது மற்றும் இரண்டு மடங்கு விட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன.

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.
கண்புரை என்றால் என்ன?
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்களால் காண வேண்டும் என்றால் கருவிழிக்கு பின்னால் உள்ள லென்ஸ் மூலம்தான் பார்க்க முடியும். அந்த லென்சில் உள்ள ஒரு வெண்மையான தோல் படலம் பரவி பார்வையை மறைத்து நாளடைவில் ஒரு வெண் படலமாக மாறி விடுகிறது. இது தான் கண்புரை எனப்படுகிறது. இதை கிராமங்களில் கண்ணில் பூ விழுந்து விட்டது என்று கூறுகிறார்கள்.
முன்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்த கண்புரை நோய் தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக் கூட கண்புரை ஏற்படுகிறது. குழந்தை பருவத்தில் டி.வி. பார்ப்பது, செல்போன் வீடியோ கேம் பார்ப்பது போன்ற காரணங்களினாலும், தற்கால உணவு பழக்கங்களாலும் கண்புரை நோய் குழந்தைகளையும் தாக்க தொடங்கி விட்டன.
சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. கேட்ராக்ட் வந்து விட்டது என்ற உடன் கண்ணாடி அணிந்தால் போதும், சொட்டு மருந்து விட்டால் போதும் என்று நினைத்தால் அது தவறான எண்ணம். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.
5 நிமிடங்களில்...
கண்களில் அறுவை சிகிச்சை என அச்சம் தேவையில்லை. ஊசி இல்லை. தையல் இல்லை. வலி இல்லை, நவீன மருத்துவ முறையில் பாக்கோ எமுல்சிபிகேஷன் முறைப்படி மிக எளிதாக 5 நிமிடங்களில் கண்புரை அகற்றப்பட்டு அன்றே வீட்டுக்கு திரும்பலாம். பாக்கோ முறையில், பாதிக்கப்பட்ட கண் உள்விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையாக உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. இவை அனைத்தும் 5 நிமிடங்களில் செய்யப்பட்டு இழந்த பார்வையை மீட்டுத் தருகிறது.
வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட தரமான, நவீன லென்ஸ்கள் கிட்டப்பார்வை, தூரப் பார்வைக்கு ஏற்றபடி உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. கண்புரை ஏற்பட்ட உடன் உரிய கண் மருத்துவரை அணுக வேண்டும். அவரது ஆலோசனைப்படி கண்புரை தொடக்க நிலையில் இருந்தால் பெக்கோ முறையில் கண்புரையை அகற்றிவிடலாம். கண்புரையை வளர விடுவது நல்லதல்ல.
கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மறுநாளே அனைத்து வேலைகளையும் செய்யலாம். கண்களை மறைக்கும் பச்சைக்கலர் துணி தேவையில்லை. கருப்பு கண்ணாடி மட்டும் 5 நாட்கள் அணிந்தால் போதும். சொட்டு மருந்து 30 நாட்களுக்கு கண்ணில் ஊற்றிக் கொள்ள வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கட்டணமில்லா அறுவை சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
-டாக்டர் கே.கமல்பாபு, கண் அறுவை சிகிச்சை நிபுணர், வாசன் கண் மருத்துவமனை, அண்ணா நகர், மதுரை.

ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும். பெண்கள் ஆடையை தேர்ந்தெடுக்கும் போது ஆடையின் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை.
ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.
ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர்.
பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம். வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை.
இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது. உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை.
ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.