என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    திருச்சி மாநகரின் புராதனக் கோவில்களுடன் இணை சிறப்புடன் தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 

    நாளை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும், பகல் 12 மணிக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றும் வைபவமும் நடைபெறுகிறது. 

    13-ந் தேதி(புதன்கிழமை) அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
    சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். சிதம்பரத்திற்குத் தெற்கே தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்தில் உள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டைநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென தனிக்கோவில் உள்ளது.

    சட்டைநாதர் அத்திமரத்தால் அமைந்த திருமேனி ஆதலால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே பூசப்படுகிறது. தேங்காயை உடைக்காமல் முழுக் காயாகவே நிவேதனம் செய்கின்றனர். பின்னர் அந்தக் காயை கீழ்தளத்தில் அமைந்த பலி பீடத்தில் படையலிட்டு அதனை உடைக்கின்றனர். அப்படி உடைக்கப்பட்ட தேங்காயினை வீட்டிற்கு எடுத்து வருவதோ, சமையலுக்குப் பயன்படுத்துவதோ கூடாது. அந்தத் தேங்காயைச் சிறு துண்டுகளாக்கியோ அல்லது பூவாகத் துருவல் செய்தோ அங்கேயே பச்சையாகவே தானும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர வேண்டும் என்பது ஐதீகம்.

    சில சிறப்பு நாட்களில் சட்டநாதருக்கு வடை மாலைகள் சாத்தப்படுவதும் உண்டு. சட்டநாதருக்காக வேண்டிக் கொள்ளும் அபிஷேகம் யாவும் இவருக்கு எதிரே முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் உள்ள பலி பீடங்களுக்கே செய்யப்படுகின்றன.

    சட்டநாதருக்கு ஒவ்வொரு வாரமும் செய்யப்படும் நள்ளிரவு பூஜை விசேஷமானதாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பலி பீடத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சட்ட நாதருக்குச் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. 

    இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் (இதனை யோக ஸ்தானம் என்றும் அழைக்கின்றனர்) கருவறையுடன் கூடிய சிறிய சந்நிதி ஒன்று காணப்படுகிறது. 

    இதன் பிரகாரச் சுவரில் எட்டு முனைகளிலும் எட்டு மாடங்கள் அமைக்கப்பட்டு அஷ்ட பைரவர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இங்கு பைரவர் ஸ்ரீ விமானத்திலிருப்பதால் ஆகாச பைரவர் என்றும், எப்போதும் மகிழ்ச்சியுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பதால் மகா ஆனந்த பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இந்த வலம்புரி மண்டபம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜையின் போது மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஏனைய வேளைகளில் இது மூடப்பட்டே இருக்கும்.
    வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்யப்படும். துளசி இலைகளால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்வது வழக்கம்.
    வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்யப்படும். துளசி இலைகளால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஏழுமலையான் கோவிலில் தனுர் மாத இறுதியில் 5 நாட்கள் விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை நடத்தப்படுகிறது. அதாவது வில்வ இலைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதன்படி வரும் 14-ந்தேதி வரை மேற்கண்ட பூஜை நடக்கிறது.

    விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை தொடக்க நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, அனந்த பத்மநாபசாமி ஆகியோரை கோவில் ஊழியர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு பின்னால் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர்.

    அங்கு காலை 6 மணியில் இருந்து 6.30 மணிவரை உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி உற்சவர்களுக்கு விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டது. அதன்பிறகு உற்சவர்களுக்கு தீபாராதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜையில் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்ட செயலாளர் ஆச்சாரியா சி.ராஜகோபாலன், அதிகாரி சேஷாத்திரி மற்றும் வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
    நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிக்கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டுமினரா, ஓட்டுமினரா, முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாகூர் தர்கா பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் தற்காலிக நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் (ரெங்கநாச்சியார்) நடத்தப்படும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் (ரெங்கநாச்சியார்) நடத்தப்படும்.

    அதன்படி, உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி கடந்த ஜனவரி 4-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 5-ந்தேதி முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இவ்விழாவானது, பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். கடந்த 5-ந்தேதி முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளினார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் நேற்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    திருவாய்மொழி திருநாளையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்திற்கு வருவார்.

    பின்னர் அலங்காரம் கோஷ்டி வகையறா கண்டருளி அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    திருவாய்மொழி திருநாள் உற்சவத்தின் முதல் நாளான நேற்று ரெங்கநாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.
    1. ஓம் அனுமனே போற்றி
    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
    3. ஓம் அறக்காவலனே போற்றி
    4. ஓம் அவதார புருஷனே போற்றி
    5. ஓம் அறிஞனே போற்றி
    6. ஓம் அடக்கவடிவே போற்றி
    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    15. ஓம் இசை ஞானியே போற்றி
    16. ஓம் இறை வடிவே போற்றி
    17. ஓம் ஒப்பிலானே போற்றி
    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    19. ஓம் கதாயுதனே போற்றி
    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
    22. ஓம் கர்மயோகியே போற்றி
    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    25. ஓம் கடல் தாவியவனே போற்றி
    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    29. ஓம் கூப்பிய கரனே போற்றி
    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
    39. ஓம் சூராதி சூரனே போற்றி
    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    44. ஓம் சோக நாசகனே போற்றி
    45. ஓம் தவயோகியே போற்றி
    46. ஓம் தத்துவஞானியே போற்றி
    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    49. ஓம் தீதழிப்பவனே போற்றி
    50. ஓம் தீயும் சுடானே போற்றி
    51. ஓம் நரஹரியானவனே போற்றி
    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    55. ஓம் பண்டிதனே போற்றி
    56. ஓம் பஞ்சமுகனே போற்றி
    57. ஓம் பக்தி வடிவனே போற்றி
    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    66. ஓம் பீம சோதரனே போற்றி
    67. ஓம் புலனை வென்றவனே போற்றி
    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    69. ஓம் புண்ணியனே போற்றி
    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    71. ஓம் மதி மந்திரியே போற்றி
    72. ஓம் மனோவேகனே போற்றி
    73. ஓம் மாவீரனே போற்றி
    74. ஓம் மாருதியே போற்றி
    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    79. ஓம் ராமதாசனே போற்றி
    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    81. ஓம் ராமதூதனே போற்றி
    82. ஓம் ராம சோதரனே போற்றி
    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    93. ஓம் லங்கா தகனனே போற்றி
    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
    96. ஓம் வாயுகுமாரனே போற்றி
    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
    101. ஓம் விஸ்வரூபனே போற்றி
    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு ஒவ்வொரு பிரதோ‌‌ஷத்தன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கொரோனா காலக்கட்டத்திலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பிரதோ‌‌ஷம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பெரியகோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகத்தை சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று பெருவுடையார், பெரியநாயகி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகையையொட்டி நேற்று போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
    வருமான இழப்பை ஈடுசெய்ய சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
    சபரிமலை :

    திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு சபரிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை வருகிற 14- ந் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. கொரோனா காரணமாக, நடப்பு சீசன் ஆரம்பத்தில் சபரிமலை தரிசனத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    மகர விளக்கை முன்னிட்டு தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கடந்த ஆண்டை விட வருமானம் மிகவும் குறைவாக உள்ளது.

    சபரிமலையில் தினசரி செலவுகளை கூட நிறைவேற்ற முடியாத அளவில் வருமானம் தலைகீழாக சரிந்து உள்ளது. இந்த நிலையில் கேரள அரசு ரூ.70 கோடி தேவஸ்தானத்திற்கு மானியமாக தந்து உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி சபரிமலையில் அன்றாட செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எனவே தேவஸ்தானத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் வருமான இழப்பை ஈடு செய்ய எதிர்காலத்தில் கொரோனா முழு தளர்வுக்கு பிறகு மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை நடந்து வருகிறது. அதாவது, சபரிமலையில் மாத பூஜை நாட்களை 5 நாட்களுக்கு பதிலாக 10 நாட்கள் கோவில் நடையை திறப்பது குறித்து சபரிமலை தந்திரியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று வாசு தெரிவித்தார்.
    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் எனத்தொடங்கும் திருப்பாவையையும், அதன் பொருளையும் இங்கே பார்க்கலாம்.
    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் 
    பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் 
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே 
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் 
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு 
    மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் 
    கூட இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்: நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கண்ணபிரான், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும். அதற்கு அந்த சிறுமிகள் நாங்கள் நோன்பு முடிந்ததைக் கொண்டாடும்போது தங்களுக்கு வேண்டுவது என்னென்ன என்று இந்த பாடலில் கூறுகின்றார்கள். 

    பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும். ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். 
     
    மேலும் நீ அணிந்த ஆடைகள் புனைந்து, பால் சோற்றினை முற்றிலும் மூடுமாறு நெய்யினால் அதனை மறைத்து, அந்த பால் சோற்றினில் உள்ள நெய் எங்களது முழங்கைக் வழியாக வழிந்து ஓடுமாறு சோற்றினை எங்களது கையினில் ஏந்தி, உன்னுடன் கலந்து நாங்கள் உண்போம். அவ்வாறு உண்ட பின்னர், எங்களது உள்ளம் குளிரும் வகையில் உன்னுடன் கூடி இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்வோம் என்று பாடுகின்றனர் ஆயர்பாடி இளம்பெண்கள்.
    தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மீது பதியும்.
    * சோம்பலில்லாமல் உழைக்க வேண்டும்

    * சந்தர்ப்பங்கள் வருகின்ற பொழுது அதை நழுவ விடக்கூடாது.

    * தகுதியான சான்றோர்களிடம் அறிவுரை கேட்டுக்கொள்ள வேண்டும்.

    * செய்யும் தொழிலே தெய்வமென்று இருக்க வேண்டும்.

    இவற்றோடு தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மீது பதியும். 
    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் 
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே 
    போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே 
    சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே 
    கோல விளக்கே கொடியே விதானமே 
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

    பொருள்: காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.
    முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள். ‘முருகா’ என்பது மும்மூர்த்திகளும் இணைந்த பெயர். முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
    ‘முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்’ என்பது இனிய பக்திப்பாடலாகும். முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்.

    முருகன் என்ற பெயருக்கான விளக்கம்:-

    ‘மு’ என்றால் காக்கும் கடவுள் - முகுந்தன்

    ‘ரு’ என்றால் அழிக்கும் கடவுள் - ருத்ரன்

    ‘க’ என்றால் படைக்கும் கடவுள் - பிரம்மா என்ற காமலோற்பவன்

    * கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்

    * விசாகன்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்

    * சண்முகன்: ஆறு முகங்களைக் கொண்டவர்

    * சுவாமிநாதன்: சிவனுக்கே, நாதனாக விளங்கி பாடம் சொல்லியவன்

    * மயில் வாகனன்: மயில் வாகனம் கொண்டவன்

    * தேவசேனாதிபதி: தேவர்களுக்கெல்லாம் தலைவன்

    * சேவற்கொடியோன்: சேவலைக் கொடியாகக் கொண்டவன்

    * வள்ளி மணாளன்: வள்ளியை மணந்தவன்

    * வேலாயுதன்: வேலை ஆயுதமாகக் கொண்டவன்

    * முருகன்: இளமையானவன்

    ‘முருகா’ என்பது மும்மூர்த்திகளும் இணைந்த பெயர். முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
    ×