என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்காதேவி அருள்புரிகிறாள்.
    • கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்காதேவி அருள்புரிகிறாள். எட்டுக் கரங்களையுடைய இந்த துர்க்கை, ஒரு கையில் கிளியை வைத்திருக்கிறாள்.

    • விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்க்கை, தலை சாய்ந்த திருக்கோலத்தில் வடக்கு நோக்கி பிரம்மாண்டமான தோற்றத்தில் காட்சியளிக்கிறாள்.

    • சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் துர்க்கை.

    • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் வடபுறமுள்ள கோஷ்டத்தில் ஆறுகரங்களை உடைய துர்க்கை எருமைத் தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

    • புதுக்கோட்டை மலையப்பட்டி குடவரை சிவன் கோயிலில் தாமரை மலரில் நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் துர்க்கை.

    • திருத்தணிக்கு அருகே மத்தூர் ஆலயத்தில் துர்க்கை திருவுருவத்தின் கீழே மகிஷனின் முழு உடம்பும் காணப்படுகிறது.

    • கையில் சூலத்தை ஏந்தியிருக்கும் துர்க்கை சூலினி துர்க்கா! அம்பர் மாகாளம் என்ற ஊரில் மகாகாளி சூலினி துர்க்கையாக அருள் தருகிறாள். இந்தச் சிலையை அர்ச்சிக்கும் அர்ச்சகர்கள் கூட அம்பாளைத் தொட்டுப் பூஜை செய்வதில்லை. ஒரு சிறு கோலால் மாலை அணிவிப்பார்கள்.
    உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

    "ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
    வராஹி மனோகராய தீமஹி
    தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்."

    "ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
    தண்ட ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராஹி ப்ரசோதயாத்."
    கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
    * அரிதாக சில கோவில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். 

    விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி கோலம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவரை ‘தவ தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

    கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். உமாதேவியாருக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை சிவன் உபதேசித்ததால், இது குருமூர்த்தி தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

    * சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவபுரி என்னும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

    * சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.
    நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயம் நாகர்கோவில் குருசடியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தன.

    இதனைதொடர்ந்து 6.40 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணியாளர் இயேசுரெத்தினம் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கார்மல் நகர் பங்கு பணியாளர் சகாயபிரபு, கார்மல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைமன்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். அப்போது ஆலய நிர்வாகிகள் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினர்.

    2-ம் நாளான இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, செபமாலை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மணக்குடி இணைப்பணியாளர் அருட்பணி ஞானராய் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட அன்பியப்பணிக்குழு இயக்குனர் அருட்பணி வலோரியன் அருளுரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக கீழ ஆசாரிபள்ளம் பங்குபணியாளர் அந்தோணிபிச்சை கலந்து கொள்கிறார்.

    9-ம் நாள் திருவிழாவன்று காலை 6.30 மணிக்கு செபமாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை நடக்கிறது. வட்டக்கரை பங்குப்பணியாளர் ஆண்ட்ரூஸ் அருளுரையாற்றுகிறார். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறும்.

    10-ம் நாள் திருவிழாவில், அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். காலை 9.30 மணிக்கு மேல் ஆசாரிபள்ளம் பங்குபணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அனுமந்தபுரி ஊத்துமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
    தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அனுமந்தபுரி ஊத்துமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு அன்று காலை 7.15 மணிக்கு மேல் நவக்கிரக சுதர்சன ஆஞ்சநேய மூலமந்திர ஜெப ஹோமம், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேயர் பக்த சபா மற்றும் ஊத்துமலை மலையடிவார கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    27 நட்சத்திரங்களுக்கு உகந்த சித்தர்களையும் அவர்களை வழிபட செல்ல வேண்டிய கோவில்களையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    * அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

    * பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

    * கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

    * கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

    * ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

    * மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.

    மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

    மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.

    மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

    * திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

    * புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,

    புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

    * பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

    * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

    * மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

    பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

    * உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

    உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;

    * உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

    * உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

    * அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.

    * சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.

    சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

    * சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

    * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

    விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

    * அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

    * கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

    * மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

    * பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.

    * உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

    * உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

    * திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

    * அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

    * சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

    * பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.

    பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

    * உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

    * ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.
    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இவர் ‘திருமேனியழகர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘சாந்தநாயகி’ என்பதாகும். சவுந்திரநாயகி என்ற பெயரும் அம்பாளுக்கு உண்டு.

    தல வரலாறு

    சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் இந்த அண்டசராசரங்களையும், அதில் உள்ள உயிர்களையும் படைத்தார். அதைத் தொடர்ந்து உருவான உயிர்கள் அனைத்தும் தங்களின் இனத்தைப் பெருக்கி, தங்கள் வாழ்வை வாழத் தொடங்கின. இப்படி அவரவர் தங்கள் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதைக் கண்ட சிவபெருமான், தனது இருப்பிடமான கயிலாய மலைக்குச் சென்று யோக நிஷ்டையில் அமர்ந்தார். அந்த யோக நிஷ்டையால் தன் உடலும், உணர்வும் அசைவற்று போன நிலைக்குச் சென்றார். இந்த அகிலமே ஈசனின் அசைவில்தான் எனும்போது, அந்த ஈசன் அசைவின்றி போனால் என்ன ஆகும்?.. ஆம்.. ஈசன் அசைவற்றுப் போனதால், உலகத்தின் இயக்கமும், உயிர்களின் இயக்கமும் செயலற்றுப்போயின. விஷ்ணு, பிரம்மாவால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனைக் கண்டு பிரம்மனும், விஷ்ணுவும் அதிர்ச்சியடைந்தனர். இருவரும் சிவபெருமானிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டினர். சிவபெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள்புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின. சிவனின் இந்த அற்புதத்தை அருகில் இருந்து கண்டு வியந்த பார்வதிதேவி ‘‘அண்ட சராசரங்களும், அதில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயக்கமாக இருப்பது யார்?’’ என்று கேட்டார்.

    அதற்கு ஈசன், “நான் தான்” என்று பதிலளித்தார். அதனை ஏற்காத பார்வதிதேவி, “இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள், பார்க்கலாம்” என்று கூற, சிவபெருமானும் அப்படியே செய்தார். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் மூச்சு விட முடியாமல் திணறின. அதை உணர்ந்த ஈசன், உடனடியாக தன்னுடைய மூச்சை வெளியிட, உயிர்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றன.

    பின்னர் தம்மை சோதித்து, உயிர்களுக்கு துன்பத்தை விளைவித்த பார்வதியை நோக்கி, “உயிர்களுக்கு துன்பம் விளைய காரணமாக இருந்த நீ, பூலோகத்தில் பிறப்பாய். மீனவ குலத்தில் பிறந்து என்னை நினைத்து தவம் செய்து, மீண்டும் கயிலாயம் வந்தடைவாய்” என்றார். அதன்படி பார்வதிதேவி, புன்னை வனமாக இருந்த திருவேட்டக்குடி என்ற இத்தலத்தில், குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்த்தார். பருவ நிலையை அடைந்த பார்வதி, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து வந்தார்.

    இதற்கிடையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்றதன் காரணமாக தேவர்களை துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் பிரம்மனிடம் இருந்தே வேதங்களை திருடிச் சென்று, கடலுக்குள் ஒளித்து வைத்து விட்டான். இதையடுத்து மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்து, கடலுக்குள் இருந்த அரக்கனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அரக்கனை வதம் செய்த பிறகும் கூட விஷ்ணுவின் ஆவேசம் குறையவில்லை. அவர் மீன் உருவத்தில் இருந்தபடியே கடலை கலக்கினார். இதனால் கடலுக்குள் இருந்த பிற உயிரினங்கள் துன்பம் அடைந்தன. உலகமே நடுநடுங்கியது.

    இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் அனைவரும், கயிலாயம் சென்று சிவனிடம் இதுபற்றி முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன், மீனவ உருவம் எடுத்து, கடலை கலக்கிய பெரிய மீனை பிடித்து தரைக்கு கொண்டு வந்து போட்டார். ஈசனின் கரம் பட்டதும் மீனாக இருந்த பெருமாள், சுய உரு பெற்று வைகுண்டம் சென்றடைந்தார்.

    பின்னர் மீனவர் வடிவில் இருந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த பார்வதியைக் கண்டு, தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி அருளினார். தன்னை வணங்கி நின்ற பார்வதியிடம், “வேண்டிய வரம் கேள்” என்றார் ஈசன்.

    அதற்கு பார்வதி, “இறைவா.. நான் நிறுவி வழிபட்ட இந்த லிங்கத்தில், தாங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    ஆலய அமைப்பு

    ஆலயத்தின் முகப்பில் கிழக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றதும், விசாலமான முன் மண்டபம் காணப்படுகிறது. அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் சுந்தர விநாயகர் சன்னிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான் சன்னிதியும், புன்னை வனநாதர் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் இருக்கிறது. வடக்கு நோக்கியபடி பூரணை - புஷ்கலை உடனாய ஐயனார், தெற்கு நோக்கிய நிலையில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

    புன்னை வன நாதர் சன்னிதியின் முன்புறம் இடதுபுறத்தில் சம்பந்தரும், வலதுபுறத்தில் தனி சனி பகவானும் இடம் பிடித்துள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. அதனை யொட்டி அலங்கார மண்டபமும் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள், சாந்தநாயகி என்ற பெயரில் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் திருவேட்டக்குடி உள்ளது. பொறையாறு - காரைக்கால் சாலையில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கிலோமீட்டர் சென்றால், திருவேட்டக்குடியை அடையலாம்.
    "ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்....
    இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர்...

    அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்...தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா...தகவல் ஏதுமில்லையே என்று!

    அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், "ஸ்ரீராம ஜெயம்' என்று ஆர்ப்பரித்தார்.

    ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார்.

    அதனால் தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார்.

    பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார்.

    "ரா' என்றால் "அக்னி பீஜம்'. "பீஜம்' என்றால் "மந்திரம்'. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது.

    "மா' என்றால் "அமிர்த பீஜம்'. அது மனதில் அன்பை நிறைக்கிறது.

    அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.

    "ராம' என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் "ராம'வுடன் "ஜெயம்' (வெற்றி) சேர்க்கப்பட்டது.

    அனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?

    அவர் 33 கோடி தடவை "ராம' நாமம் சொல்லியிருக்கிறார். அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார்.

    ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும்.

    "ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்....

    ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம் !!!
    பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.
    பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை, மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.

    இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். 
    அம்மனின் காவல்தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் இருப்பவர், வராகி அம்மன். வராகி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள கோவில்களை அறிந்து கொள்ளலாம்.
    அம்மனின் காவல்தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் இருப்பவர், வராகி அம்மன். திருமாலின் வராக அம்சமாக கருதப்படுபவர் வராகி. இவர் வராகம் என்னும் பன்றி முகமும், எட்டு கரங்களும் கொண்டவர். கருப்பு நிற ஆடை உடுத்தி, சிம்ம வாகனத்தில் அருளும் வராகி, எட்டு வராகிகளாகவும் உள்ளார். மகா வராகி, ஆதி வராகி, சொப்ன வராகி, உன்மத்த வராகி, லகு வராகி, சிம்ஹாருட வராகி, மகிஷாருட வராகி, அச்வாருட வராகி ஆகியோர் அஷ்ட வராகிகள் ஆவர்.

    விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு என்ற ஊரில் அஷ்டவராகி அம்மன் கோவில் உள்ளது. இது வராகி அம்மனுக்காக அமைக்கப்பட்ட முதல் கோவிலாக கருதப்படுகிறது.

    தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் வீரட்டேஸ் வரர் கோவில், வராகி அம்மன் வழிபட்ட தலமாக சொல்லப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியில் செரைக்கன்னிமார் கோவில் உள்ளது. இங்கும் வராகி அம்மன் அருள்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் நரிப்பட்ட என்ற ஊரில் வராகி அம்மனுக்கு ஆலயம் இருக்கிறது.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சப்த மாதர்கள் கோவில் உள்ளது. இங்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு பூஜை மற்றும் மகா யாகம் செய்யப்படுகிறது.
    தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலையைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர்.
    சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான்.

    தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலையைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர்.

    சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்;

    ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர்.

    மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும்.

    அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.

    அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை.

    தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

    அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர்.

    எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.

    முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர்.

    தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

    சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.

    அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர்.

    கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.

    இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர்.

    அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.

    *சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்*

    அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.
    ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.
    ஒருவருடைய ஜாதகத்தில் யோகம் என்ற அடிப்படையில் பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், உயர்ந்த செல்வம், பட்டம், பதவி மற்றும் அனைத்து வகையான செல்வமும் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அதே போல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரரோ ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர் உலக உயிர்களுக்கு ஞானம் அருள்பவர். இங்கே அம்பாளின் ஆற்றலை பெற்று சக்தி மயமாக சுவாமியும், சுவாமி ஆற்றலைப் பெற்று சக்தி சிவமயமாகவும் அமர்ந்து இருப்பதால் பரிவர்த்தனை யோகத்தில் நவகிரக நாயகி அருள்பாலிக்கிறாள். 

    சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தை வழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்த கூடியவர். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாம் தந்தை வழி உறவுகளான ஒற்றுமை பாதிக்கப்பட்டு இருந்தாலும், பூர்வீக சொத்தில் வில்லங்கம், உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு. தலை, கண்கள், வயிற்று வலி, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள், சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசு வழி அனுமதி கிடைப்பதில் தாமதம், சிலருக்கு திருமண தாமதம் உள்ளவர்கள் சூரிய தோஷத்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் வரும்.

    இந்த வகை பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.
    ×