search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராசி"

    • ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.
    • அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

    பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும்.

    15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்த வர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

    இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

    இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்து இருந்து புதனும் - குருவும் ஜாதகத் தில் உச்ச நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களை யும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி- உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.

    மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ர கதியில் இருக்கும் போதும், சிம்மம்- விருச்சிகம்- கும்ப-மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெறும் போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் என்னும் ராகுவின் நட்சத்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தியைப் பெறுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்,

    "போற்றுகின்ற ஜோதிட நூல்

    பொய்யாது ஒருநாளும்''

    என்கிற ஜோதிட பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு.

    சூன்ய திதி, சூன்ய ராசி, சூன்ய கிரகம்

    1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    2. துதியை திதி தனுசு-மீனம் குரு

    3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்

    4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்

    5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்

    6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்

    7. சப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்

    8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்

    9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு

    12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்

    14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்

    • ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
    • நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்

    ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

    அஸ்வினி, மகம், மூலம்

    நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளை தொடங்குங்கள். சதுர்த்தி நாளில் விநாயகர் கோயிலுக்கு செல்ல மறக்காதீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில் வைடூரியத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

    பரணி, பூரம், பூராடம்

    சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும்.

    அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்ட கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

    சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு.

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்ட கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

    ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும்.

    அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி ராசியின ரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.

    மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாய் அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும்.

    அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்ட கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம்

    ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகு திசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகு வேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது.

    அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்ட கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திர அதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழன் அன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டகடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுப பலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் தொடங்குவது நன்மை தரும். அதிர்ஷ்ட கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

    பூசம், அனுஷம், உத்திரட்டாதி

    உங்களின் நட்சத்திர அதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.

    அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்ட கல் நீலம். ரிஷபம், மிதுன ராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

    ஆயில்யம், கேட்டை, ரேவதி

    கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திர அதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை.

    அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்.

    • எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்புகளை படிக்கலாம்? என்பது பற்றி பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்தார்.
    • கூடுதல் வெற்றி பெறலாம்.

    மதுரை

    எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொதுவாக மாணவர்கள் அவரவர் சொந்த விருப்பப் படியும், ஆர்வத்தின் அடிப் படையிலும் உயர் கல்விகள் தேர்ந்தெடுத்து படித்தால் அதிவேக முன்னேற்றம் அடையலாம். இருந்தாலும் அவர வர் ராசிப்படி ராசிக் கேற்ற குணங்கள், தன்மை அடிப்படையில் உயர் கல்வியை தேர்ந்ெதடுத்து படித்தால், மேலும் முன்னேற்றம் அடையலாம் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.

    அதன் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் கணிதம் எந்திரவியல் அரசியல் படிப்புகளையும், ரிஷப ராசியினர் கலை, இலக்கியம், ஜோதிடம் மருத்துவ துறையிலும், மிதுன ராசியினர் ஆசிரியர் பயிற்சி, பட்டய கணக்கு, ஆராய்ச்சி படிப்புகளையும், கடக ராசிக்காரர்கள் மருத்துவம், அறிவியல், நீர், கடல் சார்ந்த படிப்பு களை யும், சிம்ம ராசிக்காரர்கள் மின்னியல், சட்டம், அரசியல் சார்ந்த படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

    இதேபோல் கன்னி ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி , பட்டய கணக்கு, மனோ வியல் படிப்பு களையும், துலாம் ராசிக் காரர்கள் சட்டம் நீதித்துறை, வணிகம் சார்ந்த, படிப்பு களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் நெருப்பு, மின்னி யல், பாதுகாப்பு சம்பந்தப் பட்ட துறைகளையும், தனுசு ராசிக்காரர்கள் சித்த மருத்துவம், ஜோதிடம், மனோவியல் துறைகளையும், மகரம் ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி, கணிதம், அரசியல் சார்ந்த படிப்பு களையும், கும்ப ராசிக் காரர்கள் மின்னியல், எந்திரவியல் சார்ந்த படிப்பு களையும், மீன ராசிக் காரர்கள் கலைத்துறை அரசியல் அறிவியல் மருத்துவம் சார்ந்த படிப்பு களையும் தேர்ந்தெடுத்தால் கூடுதல் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×