என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாகர்கோவில் பெயர் வர காரணமான நாகராஜா கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம்.
நாகர்கோவில் பெயர் வர காரணமான நாகராஜா கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டு இருக்கும்.
தலப்புராணம்
நாகராஜா கோவிலுக்கு என்று தனியாக தலப்புராணம் கிடையாது. இது சமண கோவிலாக இருந்துள்ளது. கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை சமண பள்ளியாக இருந்த இந்த கோவிலின் வழிபாடு பற்றிய சான்றுகள் இல்லை. ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக இருந்துள்ளார்.
தர்ணேந்திரன் பற்றி சமண கதைகள் உண்டு. அதாவது, சமணத்தின் 23-ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர். இவருக்கு பிறவிகள்தோறும் துன்பம் அளித்தவன் சமடன். இவன் கடைசி பிறவியில் மகிபாலன் என்ற பெயரில் பிறக்கிறான். மகிபாலனுக்கு பேரனாக பார்சுவநாதர் உள்ளார். ஒரு நாள் மகிபாலன் ஒரு மரக்கட்டையை தீயில் போட முயன்றான். அப்போது சிறுவனாக இருந்த பார்சுவநாதர் அந்த மரக்கட்டையில் 2 பாம்புகள் இருப்பதாகவும், எனவே அதை தீயில் போடாதே என்றும் கூறி தடுக்க முயன்றார்.
ஆனால் மகிபாலன் கேட்கவில்லை. கட்டையை தீயில் போட்டுவிட்டான். இதனால் 2 பாம்புகளும் தீயில் எரிந்து இறந்தன. அதன் பிறகு பார்சுவநாதர் மந்திரம் ஓதி இறந்த பாம்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். அதில் ஒன்றுதான் நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) மற்றொரு பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறந்தன. இதன்படி கோவிலில் தெற்கு கருவறையில் இருக்கும் நாகராஜர்தான் தர்ணேந்திரன் ஆவார்.
கட்டுமானம்
இதுதவிர இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் உள்ளன. அதாவது இந்த கோவிலை முதலில் வைஷ்ணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர், 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுலவல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தார். இந்த அரசனுக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடம்பில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். தான் கோவிலில் தங்கி இருந்த காலகட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது.
பரிவார தெய்வங்கள்
இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் இருக்கிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு சிறு சன்னதிகள் உண்டு.
இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவில் 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே பாலமுருகன் சன்னதி உள்ளது. இது 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது.
12 கல்வெட்டுகள்
நாகராஜா கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. இங்கு தெப்பக்குளம் உண்டு. ஆனால் தெப்ப விழாக்கள் நடைபெறுவது இல்லை. கோவிலில் உள்ள 12 கல்வெட்டுகளிலும் அரசர் பூதலவீர உதய மார்த்தாண்டவர்மாவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தேரேகால்புதூர், தேரூர், சுசீந்திரம், புரவசேரி ஆகிய இடங்களில் கோவிலுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலம் இன்னமும் உள்ளன. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடப்பதுபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆன்லைனில் கல்யாண உற்சவத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி :
திருப்பதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி பல்வேறு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. எனினும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது.
இதற்கு பக்தர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி தங்கள் கோத்திரம், பெயர், நட்சத்திரம் உள்ளிட்டவற்றுடன் முன்பதிவு செய்து கொண்டால் அவர்களின் பெயரில் சங்கல்பம் செய்து அர்ச்சகர்கள் கல்யாண உற்சவத்தை நடத்துவர்.
பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் தங்கள் வீடுகளிலிருந்து தேவஸ்தான பக்தி டி.வி. (எஸ்விபிசி சேனல்) வாயிலாக கலந்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு 90 நாட்களுக்குள் ரூ.300 கட்டண டிக்கெட் தரிசனத்தை தேவஸ்தானம் இலவசமாக வழங்கி வருகிறது. இதில் நேரடியாக பங்கேற்று பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆன்லைன் கல்யாண உற்சவத்தை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ரூ.500 செலுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இதில் கலந்து கொள்ளலாம்.
பின்னர் அவர்களுக்கு 90 நாட்களுக்குள் தாயாரின் தரிசனம் இலவசமாக வழங்கப்படும். தரிசனம் முடித்த பின்னர் பக்தர்களுக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கைத்துண்டு, அட்சதை அளிக்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

கல்வி கேள்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணங்கிடும் நன்னாளே ‘சரஸ்வதி பூஜை’.
நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் சிறப்புடன் நடைபெறும். இதில் முதல் மூன்று நாள் வீரத்தின் அடையாளமாய் துர்க்கையையும், அடுத்த மூன்று நாள் செல்வத்தின் அடையாள மாய் லட்சுமியையும், கடைசி மூன்று நாள் கல்வியின் வடிவமாய் திகழும் சரஸ்வதியையும் வணங்கி வழிபடுகிறோம். கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு பண்டிகை முடிவதால், அந்த பண்டிகை நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்றே அனைத்து மக்களும் கொண்டாடுகின்றனர். கல்வி கேள்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணங்கிடும் நன்னாளே ‘சரஸ்வதி பூஜை’.
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடி இறைவனை வணங்க பூஜை செய்கிறோம். ஆனால் அந்த பண்டிகையின் பெயருடன் பூஜை என்ற சொல் சேர்ந்து வருவதில்லை. ஞான கடவுளான சரஸ்வதியை வணங்கும் பூஜைக்கு மட்டுமே ‘சரஸ்வதி பூஜை’ என்று பெயர். நாம் செய்யும் பூஜை என்பது, நமக்குள் ஓர் ஞான பூர்த்தியை ஏற்படுத்த வேண்டும். மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயையை அகற்றி ஞானத்தை உண்டாக்க செய்வதே பூஜை. அத்தகைய ஞானத்தை தருபவளான சரஸ்வதிக்கு மட்டுமே ‘பூஜை’ என்ற சொல் சேர்ந்து வரும்.
சிறப்பு மிக்க சரஸ்வதி பூஜை அன்று, வீடு மற்றும் அலுவலகங்களில் சரஸ்வதி தேவியை வணங்கி பூஜைகள் செய்வர். பெரும்பாலும் அலுவலகங்களில் யாகம் செய்து பெரும் பூஜையாக மேற்கொள்கின்றனர். வீட்டிலும் அதுபோல் முறைப்படியான பூஜைகள் மேற்கொள்ளலாம். அது முடியாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாட்டிற்குரிய இடத்தில் சரஸ்வதி படம் அல்லது அன்னையின் முக உருவம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம். சரஸ்வதிக்கு அருகம்புல் மற்றும் மலர்மாலை சார்த்தி, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். நவராத்திரி முழுவதும் விரதமிருந்து அன்னையை வணங்காதவர்கள் கூட, சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை வணங்கினால் போதுமானது. கலசம் வைத்து கலைவாணியை எழச்செய்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.
சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்த பின், ஐந்துமுக குத்து விளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தலைவாழை இலையில் பழங்கள், அவல், பொரி, கடலை போன்றவை வைத்து ‘ஓம் கணேஷாய நமஹ’ என்றும், ‘ஓம் துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம’ என்றும் கூறி பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி ஸ்தோத்திரம் மற்றும் ஆராதனை பாடல்களை பெரியவர்களும், குழந்தைகளும் ஒரு சேர சொல்லி, பின் அன்னைக்கு பிடித்த நைவேத்தியமான பால்பாயசம், வெள்ளைகடலை சுண்டல், பொங்கல் படைத்து கற்பூர தீபாரதனை செய்திட வேண்டும்.
சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், எழுதுகோல், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும். அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானமாக வழங்கலாம். சரஸ்வதி பூஜை முடிந்த பின் மறுநாள் காலை மறுபடியும் சரஸ்வதி தேவியின் முன், புதிய இலையில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி, கடலை வைத்து பூஜை செய்த பின் தான் படத்தை எடுக்க வேண்டும். முகம் மற்றும் கலசம் வைத்திருந்தால் எடுத்து நீர்நிலைகளில் கரைத்து விடலாம்.
சரஸ்வதி தேவி வெண்மை நிறத்துடன் இருப்பவர். அதனால் வெண்தாமரை, மல்லி, முல்லை, இருவாட்சி, சம்பங்கி போன்ற பூக்கள் அவளுக்கு ஏற்ற பூக்களாய் உள்ளன. அலங்கரித்த சரஸ்வதி உருவமாய் இருப்பின் முத்துமாலை அணிவித்து பூஜை செய்யலாம். சரஸ்வதி தேவி ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், அவளை வணங்கி ஞானத் தெளிவை பெறுவோம்.

அன்னை காமாட்சியே ஸ்ரீசக்கரமாகவும் விளங்குகிறாள். வட்ட வடிவமான தொட்டி போன்று, இந்த ஸ்ரீசக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் என்றவுடன் பக்தர்கள் பலரின் நினைவுக்கு வருவது அங்கு அருளாட்சி செய்யும், காமாட்சி அம்மனின் நினைவுதான். ‘காமாட்சி’ என்பதற்கு ‘அன்பும் கருணையும் நிறைந்த கண்களைக் கொண்டவள்’ என்று பொருள் ஆகும். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த காமாட்சி அம்மனே அம்பாளாக விளங்குகிறாள். அதன் காரணமாகத்தான், காஞ்சிபுரத்தில் உள்ள எந்த சிவாலயங்களிலும் அம்பாளுக்கு என்று தனி சன்னிதி காணப்படுவதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்தி மட்டுமே அனைத்து சிவாலயங்களிலும் காணப்படும்.
காமாட்சி அம்மன் கோவிலில், முதல் பிரகாரத்தின் மையப்பகுதியில் காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம், 24 கல் தூண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தின் நடுவில்தான் காமாட்சி அம்மன் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். தென் கிழக்காக வீற்றிருக்கும் காமாட்சி அம்மன், நான்கு கரங்களுடன் பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அன்னையின் கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு (புஷ்ப பாணம்), கரும்பு வில் முதலியவை காணப்படுகின்றன.
தட்சன் நடத்திய யாகத்தின் போது, அந்த யாக குண்டத்தில் விழுந்து உயிர்நீத்தாள், தாட்சாயிணி. அவளது உடல் பாகங்கள் பாரத தேசம் முழுவதும் 51 இடங்களில் விழுந்ததாகவும், அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும், 51 சக்தி பீடங்களாக உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சக்தி பீடங்களில் ‘காமகோடி பீடம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் திருத்தலம் முக்கியமானதாக போற்றப்படுகிறது. இங்கு காமாட்சி அம்மன், கலைமகளான சரஸ்வதியையும், திருமகளான லட்சுமியையும் தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டிருக்கிறாள். இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் காமாட்சி அன்னையானவள், ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் இருந்து அருள்புரிகின்றாள்.
காமகோடி காமாட்சி - மூல விக்கிரகம் (ஸ்தூல வடிவம்)
அஞ்சன காமாட்சி - அரூப லட்சுமி (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் - ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)
காமகோடி காமாட்சி எனப்படும் மூலவர் அம்பாளின் இடது பக்கத்தில், வடதிசை நோக்கியவாறு அரூப லட்சுமியான ‘அஞ்சன காமாட்சி’ காட்சியளிக்கிறாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால், இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி அன்னையானவள், தவம் புரியும் கோலத்தில் காட்சி தருகின்றாள்.
அன்னை காமாட்சியின் காரண வடிவமாக திகழ்கிறது ஸ்ரீசக்கரம். இது மூலவர் காமாட்சி அம்மனின் எதிரில் காணப்படுகிறது. இதனால் இத்தலம் ‘ஸ்ரீசக்கர பீடத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அன்னை காமாட்சியே ஸ்ரீசக்கரமாகவும் விளங்குகிறாள். வட்ட வடிவமான தொட்டி போன்று, இந்த ஸ்ரீசக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சக்கரத்தை பூஜித்துதான் ஆதிசங்கரர், அன்னையின் அருளைப் பெற்றார் என்று தல வரலாறு சொல்கிறது.

அப்பாவித்தனமாக, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தன்மீது பக்தி செலுத்தும் பக்தர்களை, அவர் நெருங்கிச்சென்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் நான்கு பிள்ளைகள். அதில் மூத்தவனாக இருந்த பிள்ளையின் பெயர் பாலன். அவன் மிகவும் சோம்பேறியாக இருந்தான். தினமும் மூன்று வேளை உணவருந்துவான். ஆனால் எந்த வேலையும் செய்யமாட்டான். இருப்பினும் அவன் உலகமறியாத அப்பாவியாக இருந்தான்.
அவனால் அந்த குடும்பத்திற்கு உபயோகம் இல்லை. பிள்ளையாக இருந்தாலும் அவனை வைத்து உணவிடும் அளவுக்கு குடும்ப சூழ்நிலையும் இல்லை. அதனால் பாலனை, ஏதாவது ஒரு மடத்தில் சென்று தங்கிக்கொள்ளும்படி அவனது குடும்பத்தார் அறிவுறுத்தினர். அவனும் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமல், வீட்டை விட்டு வெளியேறினான்.
பின்னர் தனக்கு எப்போதும் உணவு கிடைக்கும்படியான மடத்தைத் தேடினான். ஒரு மடத்தில் இருந்த சீடர்கள் அனைவரும் நல்ல உடல் பருமனுடன் காணப்பட்டனர். அந்த மடத்தின் குருவும் கூட உடல் பருமனாகவே இருந்தார். அதனால் இங்கு உணவுக்கு பஞ்சம் இருக்காது என்று தீர்மானித்த பாலன், மடத்தின் குருவிடம் சென்று தங்கிக்கொள்ள அனுமதிகேட்டான். அவரும் அனுமதி கொடுத்துவிட்டார்.
தினமும் மடத்தில் உள்ளவர்கள் அதிகாலையிலேயே எழுந்தாலும், பாலன் வழக்கம் போல சூரியன் வெளிப்பட்ட பிறகே எழுவான். மூன்று வேளையும் வஞ்சம் இல்லாமல் உணவருந்துவான். பின்னர் மடத்தில் நடைபெறும் சொற்பொழிவுகளை கேட்டபடியே பொழுதை கழிப்பான். பாலனை எவரும் எதுவும் கேட்கவில்லை. அது அவனுக்கு மனநிம்மதியை அளித்தது. இப்படியே 10 நாட்களுக்கு மேல் சென்று விட்டது. அடுத்த நாள் பாலன் உணவருந்துவதற்காக சென்றபோது, அங்கு சமையல் நடைபெற்றதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
பாலன் பதறிப்போனான். அங்கு இருந்தவர்களிடம் “இன்று உணவு செய்யவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இன்று ஏகாதசி தினம். பெருமாளுக்கு உகந்த நாள். எனவே இந்த மடத்தில் உள்ள அனைவரும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் ஏகாதசி தோறும் இதுபோன்று விரதம் இருப்போம். அன்றைய தினம் உணவு சமைக்கப்படாது” என்றனர்.
நேராக குருவிடம் ஓடினான், பாலன். “சுவாமி.. இன்று ஏகாதசி என்பதால் மடத்தில் உணவு சமைக்கப்படாதாம். என்னால் பசி பொறுக்க முடியாது. எனக்கு மட்டுமாவது உணவு சமைத்து தர ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
அதற்கு குருவோ, “உன் ஒருவனுக்காக சமைக்க இயலாது. வேண்டுமானால் உன் ஒருவனின் உணவுக்கு தேவையான பொருட்களைத் தரச் சொல்கிறேன். மடத்திற்கு வெளியே இருக்கும் ஆற்றின் கரையில் வைத்து சமைத்து உணவருந்தி விட்டு வா..” என்றார்.
பாலனுக்கு மடத்தில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது. ஒரு நாளும் அவன் வேலை செய்ததில்லை என்றாலும், உணவருந்தாமலும் இருந்ததில்லையே.. அதனால் தனக்கு தெரிந்ததை செய்து உணவை சமைத்து விட்டான். தினமும் மடத்தில் உணவருந்துவதற்கு முன்பாக இறைவனுக்கு படைத்து விட்டுதான் சாப்பிட வேண்டும் என்று குரு சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்த பாலன், ராமபிரானின் நாமத்தைச் சொல்லி அழைத்தான். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் வருத்தம் அடைந்த பாலன், “ராமா.. நீ வரவில்லை என்றால், நான் எப்படி உணவருந்துவது. என்னால் பசி பொறுக்க முடியவில்லை. நீ வந்து சாப்பிட்டால்தான், நான் சாப்பிட முடியும்” என்றான்.
அவனது அப்பாவித்தனத்தால் கவரப்பட்ட ராமபிரான், சீதாதேவியை அழைத்துக் கொண்டு உணவருந்த வந்துவிட்டார். இப்போது பாலனுக்கு அதிர்ச்சி.. ‘நாம் இருவர் சாப்பிடும் வகையில்தானே சமைத்து வைத்துள்ளோம். சீதாவும் வந்திருக்கிறாரே’ என்று நினைத்தான். இருந்தாலும் உணவருந்த வந்த ராமருக்கும், சீதைக்கும் உணவிட்டு மகிழ்ச்சியாக அனுப்பிவைத்தான். இறுதியில் பாலனுக்கு உணவில்லை. அன்று அவன் விரதம் இருந்தான்.
அடுத்த 15 நாட்களுக்குப் பின் மீண்டும் ஏகாதசி திதி வந்தது. இப்போது குருவிடம் சென்ற பாலன், “குருவே.. எனக்கு உணவு போதவில்லை. கூடுதலாக சமையல் பொருட்கள் வேண்டும்” என்று கேட்டான். அதன்படியே அவனுக்கு கூடுதல் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆற்றங்கரை சென்று சமையல் செய்தவன் இப்போது, “ராமபிரானோடு, சீதாதேவியையும் உணவருந்த வரும்படி அழைத்தான். ஆனால் அவர்கள் இருவரோடு லட்சுமணனும், அனுமனும் வந்துவிட்டனர். ராமர் கேட்டார், “அனைவருக்கும் உணவிருக்கிறதல்லவா?”.
பாலனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இது என்னடா சோதனை.. ஒருத்தர கூப்பிட்டா, இரண்டு பேர் வருகிறார்கள். இரண்டு பேரைக் கூப்பிட்டால் நான்கு பேர் வருகிறார்கள்’ என்று நினைத்தாலும், அனைவரையும் அமரவைத்து உணவளித்தான். இன்றும் பாலனுக்கு உணவு கிடைக்கவில்லை. விரதம் இருந்தான்.
அடுத்த ஏகாதசி அன்று குருவிடம் சென்ற பாலன், “குருவே.. ராமரை உணவருந்த அழைத்தால் அவர் மேலும் நான்கு பேரை அழைத்து வந்து விடுகிறார். எனவே எனக்கு இன்னும் கூடுதலாக அரிசி, பருப்பு, காய்கறிகள் வேண்டும்” என்றான்.
குருவும் ‘வேறு யாருக்கோ உணவு அளிக்கிறான் போல’ என்று நினைத்து, அவன் கேட்டபடியே ஐந்து, ஆறு பேர் உணவருந்தும் வகையிலான பொருட்களைக் கொடுத்து அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்டு ஆற்றங்கரை சென்ற பாலன், உணவை சமைத்து முடித்து, ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோரை அழைத்தான். ஆனால் இன்று அவர்கள் நால்வரோடு, பரதன் மற்றும் சத்ருக்கணனும் வந்துவிட்டனர்.
‘சரிதான்.. நமக்கு இன்றும் உணவு கிடைக்கப்போவதில்லை’ என்று நினைத்த பாலன், வந்திருந்த அனைவருக்கும் உணவிட்டு விட்டு, அன்றும் விரதம் இருந்தான்.
மீண்டும் ஏகாதசி வந்தபோது, குருவிடம் சென்ற பாலன், “குருவே.. 10 கிலோ அரிசி, 10 கிலோ பருப்பு, ஒரு மூட்டை காய்கறிகள் வேண்டும். நான் நினைப்பதை விட அதிகமானவர்கள் சாப்பிட வருகிறார்கள்” என்று கூறினான்.
இப்போது குருவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ‘இவன் நாம் கொடுக்கும் பொருட்களை எல்லாம், பணத்திற்காக விற்பனை செய்துவிடுகிறான்போல’ என்று நினைத்தார். இருப்பினும் அவன் கேட்ட பொருட்களை கொடுத்து விட்டு, சில சீடர்களுடன் பாலனை பின் தொடர்ந்து செல்ல முடிவு செய்தார்.
சமையல் பொருட்களுடன் ஆற்றங்கரைக்கு வந்த பாலன், உணவை சமைக்காமல், ராமர், சீதா, லட்சு மணன், பரதன், சத்ருக்கணன், அனுமன் ஆகியோரை அழைத்தான். ஆனால் அங்கு அவர்களோடு, கவுசல்யா, கைகேயி, சுபத்ரா, ராமருடைய மூன்று தம்பிகளின் மனைவியர் என்று பலரும் வந்துவிட்டனர்.
ராமபிரான், “பக்தனே.. உணவு சமைக்கவில்லையா..?” என்றுகேட்டார். அதற்கு பாலன், “நான் சமைத்து வைக்கிறேன். கடைசியில் எனக்கே இல்லாமல் அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறீர்கள். அதற்கு நான் ஏன் சமைக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான பொருட்கள் இங்கே இருக்கிறது. நீங்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்த மரத்தடியில் படுத்துவிட்டான்.
பக்தனின் சொல்லை ஏற்றார் ராமபிரான். அவரும், அவரது குடும்பமும் இணைந்து அன்றைய சமையல் வேலையைச் செய்தனர். அந்த நேரம் பார்த்து மடத்தின் குரு அங்கு வந்தார். அவரது கண்ணுக்கு ராமபிரானோ, அவரோடு வந்தவர்களோ புலப்படவில்லை. தரையில் காய்கறிகள் சிதறிக்கிடப்பதும், மரத்தடியில் பாலன் படுத்து உறங்குவதும்தான் தென்பட்டது. பாலனின் அருகில் சென்று அவனை எழுப்பிய குரு, “உணவு சமைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு பாலன், “அதுதான் சமையல் வேலை நடந்துகொண்டிருக்கிறதே. உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டவன், ராமபிரானிடம் “சுவாமி.. என்னுடைய குருவிற்கு நீங்கள் தெரியவில்லையாமே.. அவர் என்னை சந்தேகப்படமாட்டாரா..” என்றான்.
உடனே ராமர், தன் குடும்பம் சகிதமாக சமையல் பணியை செய்தபடியே, மடத்தின் குருவிற்கும், சீடர்களுக்கும் காட்சியளித்தார். அதைக்கண்டு ஆனந்தம் அடைந்த குரு, பாலனின் பக்திக்கு, ராமபிரான் குடும்ப சகிதமாக வந்ததை எண்ணி மகிந்தார். பாலனை வணங்கினார்.
இறைவன் தன்னுடைய பக்தர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பக்திக்கு கட்டுப்படுவார். என்றாலும், அப்பாவித்தனமாக, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தன்மீது பக்தி செலுத்தும் பக்தர்களை, அவர் நெருங்கிச்சென்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.

சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள்.
கவுரவர்களால் திட்டமிட்டே வனவாசம் அனுப்பட்டவர்கள், பாண்டவர்கள். அவர்களின் 12 வருட வனவாசமும், 1 வருட மறைவு வாழ்க்கையும் கழிந்து விட்டது. பாண்டவர்களுக்கு இப்போது வாழ்வதற்கு இடம் வேண்டும். சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள்.
அதுபற்றி தங்களின் சார்பாக கவுரவர்களிடம் பேசவும், தங்களின் கோரிக்கையை எடுத்துரைக்கவும் யுதிஷ்டிரன் எனப்படும் தருமன், கிருஷ்ணரைத் தேர்வு செய்தான்.
அதன்படி கிருஷ்ணரை அழைத்து, “கண்ணா.. நீ கவுரவர்களிடம் சென்று, எங்களுக்கான ராஜ்ஜியத்தை கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், ஐந்து சிறிய நாடுகளையாவது கேள். அதுவும் மறுக்கப்பட்டால், ஐவருக்கும் ஐந்து வீடுகளையாவது கேள். எப்படியாவது போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு” என்றான்.
கிருஷ்ணரும் அப்படியேச் செய்வதாகச் சொன்னார். மேலும் இதுபற்றி மற்றவர்களிடமும் கருத்து கேட்டு விட்டு அஸ்தினாபுரம் புறப்படுவதாகச் சொன்னார். ஆனால் பீமனோ, “கண்ணா.. வெறும் ஐந்து வீடுகளையாவது யாசகமாக பெற்று நாம் வாழ வேண்டுமா.. எனக்கு போர்தான் வேண்டும். அப் போதுதான் துரியோதனன் மற்றும் துச்சாதனனைக் கொல்வதாக கூறிய என் னுடைய சபதம் நிறைவேறும்” என்று கர்ஜித்தான். அர்ச்சுனனும் இதே கருத்தைத்தான் சொன்னான். ஆனால் பீமனின் அளவுக்கு இல்லாமல், கொஞ்சம் தன்மையாக கூறினான்.
பாண்டவர்களில் ஒருவனான நகுலனுக்கும் போர்தான் சரியான வழி என்று பட்டது. திரவுபதியோ, “கண்ணா.. என் சபதம் என்னாவது? துரியோதனன் அழியவில்லை என்றால், நான் என்னுடைய கூந்தலை அள்ளி முடிவது எப்போது?” என்று கேட்டால். அந்த தொனியே, அவள் போரை விரும்புகிறாள் என்று பறைசாற்றியது. இப்போது கிருஷ்ணன், சகாதேவனைக் காணச் சென்றார். அவனிடமும், “சகாதேவா.. நான் கவுரவர்களிடம் தூது செல்லப்போகிறேன். நீ போரை விரும்புகிறாயா.. இல்லையா.. போரை நிறுத்துவதற்கு உன்னிடம் ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கேட்டார், கிருஷ்ணன்.
ஜோதிடக் கலையில் வல்லவனாக இருந்த சகாதேவனுக்கு, நடக்கப்போகும் அனைத்தும் தெரிந்திருந்தது. அதனால் அவன் வேடிக்கையாக... ‘இதைச் செய்தால் போர் நடக்காது’ என்பதைப் போல ஒரு வழியைக் கூறினான். அந்த வழி இதுதான்.. “கிருஷ்ணா.. பீமனின் கையில் உள்ள கதையை உடைத்து விட்டு, அர்ச்சுனனின் வில்லை ஒடித்து விட்டு, திரவுபதியின் கூந்தலையும் அறுத்துவிட வேண்டும். மேலும் நீ கவுரவர்களிடம் தூது செல்லாத வகையில் உன்னையும் கட்டிப்போட்டு விட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்தப் போரை நிறுத்திவிடலாம்” என்றான்.
உடனே கிருஷ்ணன், “என்னை கட்டிப்போடுவாயா? உன்னால் முடிந்தால் அதைச் செய்து காட்டு” என்று கூறிவிட்டு, ஆயிரம் உருவங்களை எடுத்து அங்கே நின்றார். அதைப் பார்த்த சகாதேவன், பத்மாசனத்தில் அமர்ந்து கிருஷ்ணரைத் துதிக்கத் தொடங்கிவிட்டான். அவனது பக்திக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணர், தன்னுடைய அனைத்து உருவங்களையும் ஒரே உருவமாக்கி, பின்னர் அந்த உருவத்தையும் சகாதேவனின் நெஞ்சில் சேரும்படி செய்துவிட்டார்.
அதன்பிறகு “சகாதேவா.. நீ உன் பக்தியால் என்னை கட்டிவிட்டாய். இப்போது என்னை விடுவித்து விடு” என்று கேட்டார், கிருஷ்ணர். அதற்கு சகாதேவன், “நான் உன்னை விடுவிக்க வேண்டுமென்றால், நடைபெறப்போகும் போரில் நீ குந்தியின் ஐந்து புத்திரர்களையும் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டான்.
உடனே கிருஷ்ணன், “சகாதேவா.. நன்றாக யோசித்துக் கொள். இந்தக் கேள்வியில் ஏதேனும் பிழை இருப்பதாக நீ உணர்ந்தால், அதைத் திருத்தம் செய்து மீண்டும் கேட்கலாம்” என்றார். அதற்கு சகாதேவன், “அப்படி ஒன்றும் இல்லை.. நான் கேட்டதை மட்டும் செய்” என்றான். அந்த வரத்தையே அவனுக்கு அளித்தார், கிருஷ்ணன்.
அதன்படியே மகாபாரதப் போரில் குந்தியின் மகன்களில் ஒருவரான கர்ணனைத் தவிர, மற்ற ஐவரும் உயிரோடு இருந்தனர். கர்ணன் போர்க்களத்தில் இறந்து கிடந்தபோது, அவனை தன்னுடைய மடியில் போட்டு அழுதாள், குந்தி. அப்போதுதான் பாண்டவர்கள் ஐவருக்கும், கர்ணன் தன் சகோதரன் என்பது தெரியவந்தது. இப்போது சகாதேவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. அன்று நான் ஒரு வரம் கேட்டபோது, கிருஷ்ணன் நன்றாக யோசித்து கேட்கும்படி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டான். தான் படித்த ஜோதிடக் கலையால், தனக்கு ஒரு சகோதரன் இருப்பதையே கண்டறியாமல் விட்டு விட்டதை நினைத்து அவன் வேதனை அடைந்தான். அதனால் தன்னிடம் இருந்த ஜோதிடம் தொடர்பான ஓலைச்சுவடிகளை வீசி எறிந்தான். அவற்றில் சில போர்க்களத்தில் பற்றி எரிந்த தீக்கு இரையாகின.

தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது.
தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ அன்னை என்னும் பெயரின்கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இயேசு சபை குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த புதுச்சேரிக்கு மறைப்பணியாற்ற 1689இல் வந்தனர். பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே இடச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699இல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761இல் இது ஆங்கிலேயர்களால் ஏழாண்டுப் போரின் போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன் 1791 ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து ஆயர் செம்பெனோயிஸால் இவ்வலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1905ஆம் ஆண்டு இடப்பக்க விரிவாக்கப் சேர்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது.
இவ்வலய விழா அமலோற்பவ அன்னையின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாலயம் புதுச்சேரியின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.

கல்யாணம் போன்ற சுபவிசேஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவதை பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
“வாழையடி வாழையாக வையகத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்’’ என்று வாழ்த்துவார்கள். வாழையடி வாழை என்பது பரம்பரையைக் குறிக்கும் சொல். வாழை ஒன்றுதான் தனது நிழலுக்குக் கீழேயே மற்றொரு கன்றையும் உற்பத்தி செய்யக்கூடியது. எனவேதான் திருமணம் முதலான மங்கலச் சடங்குகளுக்கு வாயிலில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழைமரங்களைக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இறைவனுக்கு நைவேத்யம் செய்யும் பழங்களில் முதன்மையான இடத்தினைப் பிடிப்பதும் வாழையே. புனிதத்தன்மையை உடைய இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தீயசக்திகளும் அண்டுவதில்லை. குலையுடன் கூடிய வாழை மரம் கட்டுவது என்பது வம்ச விருத்திக்காகவும், தங்கள் பரம்பரை செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவும் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை.

ஸ்ரீ நரசிம்மரை வழிபடுவதால் துன்பங்கள் தொலையும், ஆயுள் பெருகும். பிரச்னைகள் யாவும் நீங்கி நலம்பெறலாம். வேண்டிய பலன்கள் யாவும் கிடைக்கும்.
நரசிம்ம காயத்ரீ
வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோநாரஸிகும்ஹ ப்ரசோதயாத்:
திருப்பல்லாண்டு
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்துவழிவழி யாட்செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்
அந்தியம்போதில ரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே

சுப்ரமணிய ஸ்வாமியை குலதெய்வமாக உடையவர்கள் வேலாயுதத்தை வைத்து பூஜை செய்யலாம். ஆனால் வைக்கும் போது இதையெல்லாம் மறக்கக்கூடாது.
சுப்ரமணிய ஸ்வாமியை குலதெய்வமாக உடையவர்கள் வேலாயுதத்தை வைத்து பூஜை செய்யலாம். அதுவும் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அதிக பட்சம் அரை அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
அளவில் பெரியதான வேலாயுதத்தை ஆலயத்தில் மட்டுமே வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடுவது உகந்தது அல்ல.

எந்த ஜபமாலையை அணிந்துகொள்கிறோம் என்பது முக்கியமில்லை. பக்தி சிரத்தையோடு எவ்வாறு அம்பிகையின் மேல் நமது சிந்தையைச் செலுத்துகிறோம் என்பதே முக்கியம்.
ரக்த ஸ்படிகம் என்றழைக்கப்படுகின்ற சிவப்பு நிற ஸ்படிக மணிகளால் ஆன ஜபமாலையைப் பயன்படுத்தலாம். துர்க்கையம்மனை பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த மாலையை அணிவது கூடாது.
எந்த ஜபமாலையை அணிந்துகொள்கிறோம் என்பது முக்கியமில்லை. பக்தி சிரத்தையோடு எவ்வாறு அம்பிகையின் மேல் நமது சிந்தையைச் செலுத்துகிறோம் என்பதே முக்கியம். அபிராமிபட்டர் சதா சர்வகாலமும் அம்பிகையின் நினைவாகவே இருந்ததால்தான் அமாவாசை நாளிலும் வானத்தில் பௌர்ணமி நிலவு ஒளிவீசியது.
திருக்கடையூரில் சாதாரண புரோகிதர் ஆக இருந்த சுப்ரமணிய அய்யர், அபிராமிபட்டர் என பெயர் பெற்றதற்கு அவர் அபிராமி அன்னையின் மீது கொண்டிருந்த அலாதியான பக்தியே காரணம். பக்திக்கு சிரத்தைதான் முக்கியமே அன்றி ஜபமாலை அல்ல.

ஜாதகத்தில் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் உள்ளது. அந்த வகையில் எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

ராகு தோஷம் - 21 தீபங்கள்
சனி தோஷம் - 9 தீபங்கள்
குரு தோஷம் - 33 தீபங்கள்
துர்க்கைக்கு - 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
திருமண தோஷம் - 21 தீபங்கள்
புத்திர தோஷம் - 51 தீபங்கள்
சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்
களத்திர தோஷம் - 108 தீபங்கள்
ராகு தோஷம் - 21 தீபங்கள்
சனி தோஷம் - 9 தீபங்கள்
குரு தோஷம் - 33 தீபங்கள்
துர்க்கைக்கு - 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
திருமண தோஷம் - 21 தீபங்கள்
புத்திர தோஷம் - 51 தீபங்கள்
சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்
களத்திர தோஷம் - 108 தீபங்கள்