
எந்த ஜபமாலையை அணிந்துகொள்கிறோம் என்பது முக்கியமில்லை. பக்தி சிரத்தையோடு எவ்வாறு அம்பிகையின் மேல் நமது சிந்தையைச் செலுத்துகிறோம் என்பதே முக்கியம். அபிராமிபட்டர் சதா சர்வகாலமும் அம்பிகையின் நினைவாகவே இருந்ததால்தான் அமாவாசை நாளிலும் வானத்தில் பௌர்ணமி நிலவு ஒளிவீசியது.
திருக்கடையூரில் சாதாரண புரோகிதர் ஆக இருந்த சுப்ரமணிய அய்யர், அபிராமிபட்டர் என பெயர் பெற்றதற்கு அவர் அபிராமி அன்னையின் மீது கொண்டிருந்த அலாதியான பக்தியே காரணம். பக்திக்கு சிரத்தைதான் முக்கியமே அன்றி ஜபமாலை அல்ல.