என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.
    பார்வதி தேவி, பூமியில் தாட்சாயணி என்ற பெயரில் தட்சனின் மகளாகப் பிறந்திருந்தாள். அப்போது சிவபெருமானின் உத்தரவை மீறி, தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள், தாட்சாயணி. இதனால் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி, மீண்டும் சாதாரணப் பெண்ணாக பூமியில் பிறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள். அவள் பூமியில் பிறந்து, சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தாள். அந்த இடம் ‘திருப்பாச்சூர்.’ இங்கு தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்து வந்தால், தம்பதியரிடையே ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

    இந்தக் கோவிலை கரிகால் பெருவளத்தான் கட்டியதாக கூறப்படுகிறது. குறும்பன் என்ற சிற்றரசன், கரிகால் பெருவளத்தானுக்குக் கப்பம் கட்டி ஆட்சிசெய்து வந்தான். திடீரென கப்பம் செலுத்த மறுத்தான். இதனால் சிற்றரசன் மீது போர் தொடுத்தான், கரிகால் சோழன். குறும்பனும் தம் குலதெய்வமான காளி தேவியை வணங்கி போர் புரியத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காளிதேவி விண்ணிலிருந்து அம்புகளை எய்து சோழர்படை வீரர்களை அழித்தாள். விண்ணிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளும், அவற்றை எய்யும் காளிதேவியும் சோழர்படை வீரர்கள் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

    இதனால், அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து சோழர்படை வீரர்களும் போரில் கொல்லப்பட்டனர். சோழர் படைத்தளபதி மட்டும் உயிருடன் இருந்தார். அவரை வரவழைத்த குறும்பன், “உன் மன்னன் போருக்கு வந்தாலும் கொல்லப்படுவது உறுதி. இந்தத் தகவலை சொல்வதற்குத்தான் உன்னை உயிரோடு விட்டுள்ளேன். இதை கரிகாலனிடம் போய்ச் சொல்” என்று திருப்பி அனுப்பினான்.

    நடந்ததை கரிகாலனிடம் கூறினார் தளபதி. தம் படை வீரர்கள் மாண்டதையறிந்து வேதனையுற்ற கரிகாலன், படை திரட்டிக் கொண்டு போருக்கு விரைந்தான். கல்மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சிற்றரசனுக்கு தம்முடைய படையை தோற்கடிக்கும் பெரிய ஆற்றல் எப்படி வந்தது என்ற வியப்புடன், சிவபெருமானை நினைத்து வேண்டினான்.

    அப்போது சிவபெருமான் அசரீரியாய் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார். “கவலைகொள்ள வேண்டாம் மன்னா.. நான் உன் அருகிலேயே இருக்கிறேன். சிற்றரசனுக்கு அவன் குலதெய்வம் காளிதேவி உதவிபுரிகிறாள். உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நிகழ்வுகள் நடந்தேறின. குறும்பனுக்கு இந்த தகவல் தெரியாது. நான் சொன்ன பிறகு போரைத் தொடங்கு. நீ வெற்றி கொள்வாய்!” என்றார்.

    பின்னர் ஆவேசமாகவுள்ள காளிதேவியை சாந்தப்படுத்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் நந்தியை அனுப்பினார் சிவபெருமான். தங்கச் சங்கிலியைக் கண்டதும் சினம் தணிந்து சிரித்தாள் காளி. அவளை தங்கச் சங்கிலியால் கட்டி அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்தார் நந்தி.

    இதைத் தொடர்ந்து சிவபெருமான் கரிகாலனிடம், “இப்போது நீ போரைத் தொடங்கு” என்றார். மூங்கில் புதர்கள் மத்தியில் மறைந்திருந்தபடியே ஒற்றன் மூலம் போருக்கு தகவல் அனுப்பினான் கரிகாலன். குறும்பனும் போர்புரிய சம்மதித்தான். கடும் போரில் கரிகாலன் வெற்றிபெற்றான். போரில் தோற்ற குறும்பனின் சொத்துகள் அனைத்தையும் ஈசனுக்குரியதாக ஆக்கினான் கரிகாலன்.

    தமக்கருகில் இருப்பதாய்ச்சொன்ன ஈசனை மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் காட்டில் வசித்த காட்டுவாசி களிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர்.

    அங்கு சென்று மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம் நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உறுதிபூண்டான்.

    ஆலயப் பணி தொடங்கிவிட்டது. ஆனால் போரில் தோற்றவர்கள் கோவில் எழுப்ப இடையூறு கொடுக்கத் தொடங்கினர். இதனால் திருப்பணி மந்தமானது. கரிகாலன் அடிக்கடி வருகை புரிந்து தொல்லை கொடுத்தவர்களை விரட்டியடித்து, மேற்பார்வையிட்டு கோவில் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தினான். திருப்பணி நிறைவு பெற்று கம்பீரமாக ஆலயம் உருப்பெற்றது. புராணப்பெருமையும், சரித்திரப் பின்னணியும் கொண்ட ஒப்பற்ற தலம் இது. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் வாசீஸ்வரர் ஆகும்.

    இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

    இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக் காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது. இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    வளம் சேர்க்கும் 11 விநாயகர்

    புராண காலத்தின் போது, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில் இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது.

    திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

    அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

    அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

    தாழம்பூ வழிபாடு

    தம்முள் யார் பெரியவர் என பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போட்டியில், நடுவராய் விஸ்வரூபமெடுத்த சிவபெருமானின் தலைமுடியைக் கண்டதாகப் (பிரம்மாவுக்கு ஆதரவாக) பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கிவைத்தார் சிவபெருமான். பின்னர் சிவனிடம் மன்னிப்புக்கேட்டு தாழம்பூ அடைக்கலம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்குப் பயன்படுத்தும்படி வரம் கொடுத்தார். அதனடிப்படையில் இக்கோவிலில் சிவராத்திரி அன்று மட்டும் இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்துப் பூஜை செய்கின்றனர். இந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும்.

    அமைவிடம்

    திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.
    தேவர்களும், முனிவர்களும் அந்தகாசுரன் எனும் அசுரனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார்.
    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்கள் மற்றும் முனிவர்களை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் வேலையை செய்யும் படி கட்டளை இட்டான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள் மயமாக்கி ஆட்சி செய்தான்.

    தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களின் கருணையால் அந்தகாசுரன் அழிந்தான். இதுவே பைரவர் அவதராம் அவதரித்த நோக்கம்.

    பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் விளங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் உள்ளது.
    இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
    இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.

    சித்திரை ஸ்நாதனாஷ்டமி
    வைகாசி சதாசிவாஷ்டமி
    ஆனி பகவதாஷ்டமி
    ஆடி நீலகண்டாஷ்டமி
    ஆவணி ஸ்தாணு_அஷ்டமி
    புரட்டாசி சம்புகாஅஷ்டமி
    ஐப்பசி ஈசான சிவாஷ்டமி
    கார்த்திகை கால பைரவாஷ்டமி
    மார்கழி சங்கராஷ்டமி
    தை தேவதாஷ்டமி
    மாசி மகேஸ்வராஷ்டமி
    பங்குனி திரியம்பகாஷ்டமி - இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.
    ராசிபுரம் அருகே மேட்டுக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர்.
    ராசிபுரம் அருகே மேட்டுக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்து அலகு குத்தி அக்னி குண்டத்தில் தீ மிதித்தனர். மாலை எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த 6 அடி ஆழமுள்ள குழியில் எருமைக்கிடா வெட்டி போட்டு மூடினர். எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மேட்டுக்காடு, பட்டணம், காக்காவேரி, வடுகம், ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.
    முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம்.
    முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம். முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம். வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம். ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம்.

    ஓம் நமோ பகவதே
    சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
    ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
    காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
    வீராய சூராய மக்தாய மஹா பலாய
    பக்தாய பக்த பரிபாலனாயா
    தனாய தனேஸ்வராய
    மம ஸர்வா பீஷ்டம்
    ப்ரயச்ச ஸ்வாஹா!
    ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
    ஓம் முருகா சரணம்!!!
    திண்டுக்கல் வேடப்பட்டி கருப்பணசாமி-ரெங்கம்மாள் கோவிலில் வருடாபிஷேக விழா, குபேர விநாயகர், நாகர், சப்த கன்னிமார்கள் ஆகிய சாமி சிலைகள் பிரதி‌‌ஷ்டை விழா நடந்தது.
    திண்டுக்கல் வேடப்பட்டி கருப்பணசாமி-ரெங்கம்மாள் கோவிலில் வருடாபிஷேக விழா, குபேர விநாயகர், நாகர், சப்த கன்னிமார்கள் ஆகிய சாமி சிலைகள் பிரதி‌‌ஷ்டை விழா நடந்தது.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னே‌‌ஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடந்தது. அதையடுத்து நேற்று காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, புண்ணியாகவாஜனம், பூர்ணாகுதி, தீபாராதனை, ரெங்கம்மாளுக்கு வருடாபிஷேக ஆராதனை உள்ளிட்டவைகள் நடந்தது.

    அதன் பின்னர் காலை 9 மணிக்கு மேல் குபேர விநாயகர், நாகர், சப்த கன்னிமார் ஆகிய தெய்வங்களின் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.
    வங்கக் கடலோரம், அமைதியான சூழலில் சுமையோடு வரும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா. உலகப் புகழ் பெற்றுத் திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பாசலிக்க அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.

    இதனால் எல்லாச் சமயங்களைச் சார்ந்த பக்தர்களும், அன்னை மரியாளை வழிபட்டு தன்னை செபத்தின் மூலமாக ஒப்புக்கொடுக்கிறார்கள். இங்கு, திருவிழா நாட்கள் என்று இல்லாமல் எப்போதும் பல வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றார்கள்.

    திருமண தடை, குடும்ப பிரச்னை, நினைத்த காரியம் நிறைவேறத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாத் திருவிழாவில் கலந்துகொள்ள வருவார்கள். அதேபோல், தனது வேண்டுதலுக்காகக் குறைந்தது மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தொடர்ந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி புதுக்கோயிலின் பின் பக்கம் வாசலில் இருந்து, பழைய வேளாங்கண்ணி கோயில் மாதா குளம் வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள். முக்கியமாக முழந்தாட்படியிட்டுச் புதுக்கோயிலில் இருந்து பழைய கோயில் வரை பக்தியுடன் நடந்து சென்றால், வேண்டியது நிச்சயம் நடந்தேறும் என்பது பக்தர்களின் காலம் காலமான அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பாத யாத்திரையாக நடந்து வந்தாலும், முழந்தாட்படியிட்டுச் நடந்து வந்தாலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும், வேளாங்கண்ணி பழைய கோயிலின் ஆலமரத்தில்.. திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தாலிக் கயிற்றையும், குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டவர்கள் தொட்டிலையும், தீராத நோய் மற்றும் உடல் நலம்பெற வேண்டியவர்கள் அந்த உடல் உறுப்பு பகுதிளை தகடுகளாக அந்த ஆலமரத்தில் கட்டிவிட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், பின் மீண்டும் வந்து தங்களது பிரார்த்தனை மூலமாக நன்றியை பக்தர்கள்த் தெரிவிக்கிறார்கள்.

    சுமையோடு வருபவர்களின் மனதை சுகமாக்குவதாலும், வேண்டிக் கொண்டவர்களின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் மட்டுமல்லாமல், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களைக் கருணையோடு தருவதாலேயே அனைவருக்கும் ஆரோக்கிய அன்னையாகத் திகழ்கிறார் அன்னை வேளாங்கண்ணி மாதா. இத்தகைய மாட்சிமிக்க வேளாங்கண்ணி மாதா புனித திருத்தலத்தில், இந்த ஆண்டுக்கான புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி மாதா பிறந்த நாளுடன் நிறைவடையும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர் பவனி, வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.

    வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், பல அற்புதங்களைப் தமது வாழ்வில் பெறுகிறார்கள். அன்னையின் கருணை மழையில் நாமும் நனைந்து, வாழ்வில் இன்னும் இன்புற்று இருப்போம்!
    10 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

    தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டமாக நீராடுவதை தவிர்க்கும் வகையில், புண்ணிய தீர்த்தமான கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து கோவில் நாழிக்கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடினர். 10 மாதங்களுக்கு பிறகு நாழிக்கிணற்றில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடி வருகின்றனர்.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.
    காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய்,தேங்காய் எண்ணெய், நல்லஎண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

    தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

    தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

    சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
    பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். ஆகவே காவடி எடுத்து பழனி முருகனின் அருளை பெற்று செல்வோம்.
    பழனிக்கு வருகின்ற பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் காவடி எடுத்து பின்னர் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.

    இவ்வாறு முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டால் துன்பங்கள் விலகி, ஆயுள் அதிகரிக்கும். செல்வ வளமும் பெருகும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் யாத்திரையாக செய்தால் பிணி (நோய்) நீங்கி உடல் ஆரோக்கியம் கிட்டும். வேளாண் விளைச்சல் பெருகி விவசாயிகளின் மனக்கவலை நீங்கும். குழந்தை செல்வம் கிடைக்கும் என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர்.

    பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். ஆகவே காவடி எடுத்து பழனி முருகனின் அருளை பெற்று செல்வோம்.
    விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில் எந்தக் காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:
    விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில் எந்தக் காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:

    சாப்பிடும்போது: ‘கிருஷ்ணா’, படுக்கச்செல்லும்போது: ‘பத்மநாபா’, யுத்தத்தின் போது: ‘சக்ரதாரி’, வெளியே கிளம்பும்போது: ‘திரிவிக்ரமா’, கெட்ட கனவுகளைக் கண்டால்: ‘கோவிந்தா’, ‘கண்ணா’, காட்டு வழியில் செல்லும்போது: ‘நரசிம்மன்’, சுபகாரியப் பேச்சுநடக்கும் போது: ‘நாராயணா’, மருந்து உண்ணும் போது: ‘மகாவிஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக: ‘ஸ்ரீராமா’, ‘மாதவா’, ‘கேசவா’ என்று நாம் உச்சரிக்க வேண்டும்.

    இவ்வாறு உச்சரித்தால், ‘உரு ஏற, உரு ஏறத் திரு ஏறும்’ என்பது போல, காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்துக்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணனை, கிருஷ்ணனை, புருஷோத்தமனை, புரட்டாசி மாத சனியில் வழிபட்டு பொன்னான வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்.
    இந்த மூன்று ஆசைகளையும் நீக்கினால் முக்தி கிடைக்கும். எனவே இதை விளக்கும் மேற்கண்ட மூன்று நூல்களையும் நாம் படித்துணர்வது நல்லது.
    அத்தனை பேரும் படிக்க வேண்டிய முத்தான மூன்று நூல்கள் உள்ளன. அவை: 1) மண் ஆசையால் விளைந்த ‘மகாபாரதம்’, 2) பெண் ஆசையால் விளைந்த ‘ராமாயணம்’, 3) பொன் ஆசையால் விளைந்த ‘சிலப்பதிகாரம்’.

    இந்த மூன்று ஆசைகளையும் நீக்கினால் முக்தி கிடைக்கும். எனவே இதை விளக்கும் மேற்கண்ட மூன்று நூல்களையும் நாம் படித்துணர்வது நல்லது. ஆசையே துன்பத்திற்கு காரணம். அளவோடு ஆசைப்படலாம். அதிலும் சுயக்கட்டுப்பாடு தேவை. புராணங்களின் வாயிலாக வாழ்க்கை நெறியை நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது.
    ×