என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த லிங்கத்திற்கு பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்து வந்ததன் காரணமாக, நெய் உறைந்து சிவலிங்கத்தையே மறைத்து விட்டது.
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘வடக்குநாதர்’ என்பதாகும். இங்குள் மூலவருக்கு பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்து வந்ததன் காரணமாக, நெய் உறைந்து சிவலிங்கத்தையே மறைத்து விட்டது. அப்படி உறைந்த நெய்யின் உயரமே சுமார் 4 அடி இருக்கும் என்கிறார்கள். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்திருந்தாலும், வெயில் காலத்தில் வெப்பம் தகித்த போதிலும், உறைந்த நெய்யானது உருகுவதில்லையாம்.
இன்னும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அபிஷேக நெய் பிரசாதத்தை வாங்கி உண்டால், தீராத நோய்களும் தீரும் என்கிறார்கள்.

கோவில்களில் பரிகாரங்கள் செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறக்கப்பட்டு் செயல்படத் தொடங்கியது.
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் கோவில்களில் பரிகாரங்கள் செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறக்கப்பட்டு் செயல்படத் தொடங்கியது.
இதையடுத்து காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் பரிகாரங்கள் மற்றும் திதி கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும் 5 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. இறந்த உறவினர்களின் அஸ்தி கரைப்பதற்கு ஒரு சிலரே வந்திருந்தனர்.
பரிகாரம் செய்ய வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.பரிகார மண்டபத்துக்கு செல்லும் நுழைவுவாயிலில் பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய பின்னரே பரிகார மண்டபத்துக்கு நுழைய அனுமதி கொடுக்கப்பட்டது.

கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
அலகுக் காவடி எடுப்பதன் மூலம் உடலில் உள்ள பிணிகள் குணமடைந்து நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அலகுக்காவடியை சுமந்து வந்து வழிபட்டால் பழனி முருகனின் அருளால் செல்வங்கள் பெருகும், தொழில் வளம் சிறக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மேலும் அலகுக்காவடி எடுத்து வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளில் இருந்து பழனி முருகன் காத்தருள்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. அதேபோல் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவத்தை பெற முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ளது பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில். இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவிலில் பல்வேறு யாக சாலை பூஜைகள், ஹோம பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, மூலவரை தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சண்முகம், கோவில் குருக்கள் கிருபாகரன் மற்றும் உளவாரப் பணிக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.

திருப்பாச்சூரில் தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவிலில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாட்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம்.
திருப்பாச்சூரில் தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்து வந்தால், தம்பதியரிடையே ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.
திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.
அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.
அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

தில்லை எனப்படும் சிதம்பரத்தில் அவதரித்தவர், திருநீலகண்டர். இவரும், இவரது மனைவியும் சிவ பக்தியில் சிறந்தவர்களாக இருந்தனர். இவரது வாழ்க்கையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
தில்லை எனப்படும் சிதம்பரத்தில் அவதரித்தவர், திருநீலகண்டர். இவரும், இவரது மனைவியும் சிவ பக்தியில் சிறந்தவர்களாக இருந்தனர். மனைவி மீது மிகவும் அன்பு கொண்டவராகவே திருநீலகண்டர் இருந்தார் என்றாலும், அன்று அவரது புத்தி தடுமாறி விட்டது. அவர் தன் இளமை ஆசை காரணமாக விலைமாது ஒருத்தியை நாடிச் சென்றுவிட்டார்.
இது தெரிந்த காரணத்தால், வீட்டிற்கு வந்த திருநீலகண்டரிடம் அவரது மனைவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விஷயத்தை அறியும் நோக்கில், படுத்திருந்த தனது மனைவியை தொட்டு எழுப்புவதற்காக கையை நீட்டினார். அப்போது நீலகண்டர் அதிர்ந்துபோகும்படியாக “என்னைத் தொடாதீர்கள்” என்று சத்தமிட்டார், அவரது மனைவி. “எப்போது விலைமாதுவை நாடிச் சென்றீர்களோ, அப்போதே என்னை தொடும் உரிமையை இழந்து விட்டீர்கள். இனி நான் இறக்கும் வரை என்னை நீங்கள் தொடக்கூடாது. இது சிவன் மீது ஆணை” என்று வெடித்தார்.
மனைவியின் வார்த்தைகளால் மனம் வருந்தினாலும், அதை தன் தவறுக்கு தண்டனையாக எடுத்துக் கொண்டார், திருநீலகண்டர். எனவே மனைவியைத் தீண்டவே இல்லை. அதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. இருவருக்கும் சிவசிந்தனையே மேலோங்கியிருந்தது. அவர்கள் எப்போதும் சிவ பக்தியிலேயே திளைத்திருந்தனர். காலங்கள் கடந்தன. திருநீலகண்டரும், அவரது மனைவியும் வயோதிகத்தை எட்டியிருந்தனர்.
ஒரு நாள் அவர்களின் வீட்டு வாசலில் ஒரு சிவனடியார் வந்து நின்றார். அவரை வீட்டிற்குள் வந்து உணவருந்தும்படி அழைத்தார், திருநீலகண்டர். அதனை மறுத்த சிவனடியார், “எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். என்னுடைய திருவோடை பத்திரமாக வைத்துக் கொள். சில நாட்கள் கழித்து வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.
திருநீலகண்டரும் அந்த திருவோடை பணிவுடன் வாங்கி வீட்டிற்குள் பத்திரமாக வைத்தார். நாட்கள் கடந்தன. திருவோடை அளித்த சிவனடியார் திரும்பி வந்து, திருநீலகண்டரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு, அவரை அழைத்தார். வெளியே வந்து பார்த்தார் திருநீலகண்டர். அங்கு தன்னிடம் திருவோடு கொடுத்த சிவனடியார் இருப்பது கண்டு மகிழ்ந்தார். பின்னர் சிவனடியாரின் திருவோடை வீட்டில் தேடியபோது, அதனைக் காணவில்லை. வெளியே அமர்ந்திருந்த சிவனடியாரோ, “எனக்கு நேரமாகிறது” என்றார்.
மனைவியை அழைத்து, திருவோடு பற்றி கேட்டதற்கு அவருக்கும் தெரியவில்லை. இருவருமாக வீடு முழுவதும் அலசி விட்டனர். ஆனால் திருவோடு மாயமானது எப்படி என்று புரியவில்லை. கவலையடைந்த திருநீலகண்டர் நேராக சிவனடியாரிடம் சென்று, “ஐயா! தாங்கள் தந்த திருவோடு காணாமல் போய்விட்டது. இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள். நானே ஒரு அழகிய திருவோடை உருவாக்கி தருகிறேன்” என்றார்.
சிவனடியாருக்கு கோபம் வந்து விட்டது. “உங்கள் குழந்தைக்கு பதிலாக வேறொரு குழந்தையை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என் திருவோடு சிறப்பு வாய்ந்தது என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் திருடிக்கொண்டாய்” என்றார். திருநீலகண்டரோ “இல்லை, இல்லை” என்று பதறினார்.
உடனே சிவனடியார், “அப்படியானால் இங்குள்ள கோவில் திருக்குளத்துக்கு வா. உன் மனைவியின் கரம் பிடித்து, ‘திருவோடை நான் திருடவில்லை’ என்று கூறியபடி, குளத்தில் ஒரு முறை மூழ்கி எழுந்திரு. அப்போது நம்புகிறேன்” என்றார்.
‘பல ஆண்டுகளுக்கு முன்பு சிவனின் மீது ஆணையிட்டு மனைவி சொன்னதற்காக காத்துவரும் சத்தியத்தை இப்போது மீறும்படி ஆகுமோ?. அப்படிச் செய்தால் சிவபெருமானை அவமதித்ததுபோல் ஆகிவிடுமே. ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்ட திருநீலகண்டர், “ஐயா.. நான் மட்டும் குளத்தில் மூழ்கி எழுந்து உங்களுக்கு உறுதிமொழி அளிக்கிறேன்” என்றார்.
சிவனடியார் பொறுமை இழந்து கத்தத் தொடங்கினார். “என் திருவோடையும் தர மறுக்கிறாய். நான் கூறும் சொல்லையும் மதிக்க மறுக்கிறாய். உன்னை நம்பமாட்டேன். ஊர் சபையிலேயே இதற்கு நியாயம் கிடைக்கட்டும்” என்று கூறி ஊர் சபையைக் கூட்டினார்.
திருநீலகண்டரைப் பற்றி ஊர் மக்களுக்கு நன்கு தெரியும். ஆயினும் வழக்கு என்று வந்து விட்டதால், ஊரார் விசாரிக்கத் தொடங்கினர். “திருநீலகண்டரே.. சிவனடியார் சொல்வது போல், நீங்களும், உங்கள் மனைவியும் கரம் பிடித்து, குளத்தில் மூழ்கி எழுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது.”
ஊராரின் கேள்வியால் நடந்த உண்மைகளை மறைக்காமல் சபையில் சொன்னார், திருநீலகண்டர். இதையடுத்து ஊரார் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி நிண்ட குச்சியின் ஒரு முனையை திருநீலகண்டரும், மறு முனையை அவரது மனைவியும் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்க வேண்டும் என்று முடிவானது. அதன்படியே அவர்களும் செய்தனர்.
குளத்தில் மூழ்கி எழுந்த திருநீலகண்டரும், அவரது மனைவியும் இளமையாக மாறியிருந்தனர். அதைப் பார்த்து ஊர் மக்கள் திகைத்தனர். திருநீலகண்டரும், அவரது மனைவியும் கூடத்தான். வழக்கு தொடுத்திருந்த சிவனடியாரை காணவில்லை.
அப்போது வானில் இருந்து ஓர் அசரீரி ஒலித்தது. “திருநீலகண்டரே.. நீயும் உன் மனைவியும் என்மீது கொண்ட பக்தியால், சத்தியத்தை மீறாமல் வாழ்ந்து வயோதிகத்தை எட்டி விட்டீர்கள். அதன்காரணமாக உங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் நீங்கள் இல்லறத்தில் ஈடுபட்டு நல்லறம் காணுங்கள்” என்றது அந்தக் குரல்.
சிவபெருமான் தங்கள் மீது கொண்ட கருணையை நினைத்து, அந்த தம்பதியர் ஆனந்தக் கண்ணீரில் திளைத்துப் போயினர்.

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பேச்சுவிளாகம் இசக்கியம்மன் கோவிலில் திருவிழா 8-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பேச்சுவிளாகம் இசக்கியம்மன் கோவிலில் திருவிழா 8-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி காலையில் கணபதி ஹோமம், அகண்ட நாம ஜெபம், மதியம் அன்னதானம், இரவு தீபாராதனை, 9-ந் தேதி இரவில் திருவிளக்கு பூஜை, 10-ந் தேதி காலையில் சனீஸ்வர பூஜை, சிறப்பு நெய்யபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 3 மணிக்கு விளையாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
11-ந் தேதி காலை 8.30 மணிக்கு சேரமங்கலம் ஆழ்வார் சிவன் கோவில் வளாகத்தில் இருந்து பேச்சு வளாகம் இசக்கி அம்மன் கோவிலுக்கு யானை மீது கலச நீர் கொண்டு வருதலும், 11 மணிக்கு கலசாபிஷேகமும், மதியம் உச்ச பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. 12-ந்தேதி இரவு 9 மணிக்கு வலிய படுக்கையும், தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், வாணவேடிக்கையும் நடக்கிறது. விழா ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு வருகிற 14-ந் தேதி மாலை 4.40 மணிக்கு நன்றி திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.
கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருக்கொடி ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆலஞ்சி மறை வட்டார அருட்தந்தைகள், பங்கு மக்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், அருட்சகோதரர் கன்சன் பிராங்கிளின், பங்கு அருட்பணி மரிய சூசை வின்சென்ட், வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் ஆகியோர் செய்துள்ளனர்.

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி சிவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, லட்சுமி பூஜை, யாக பூஜைகள் ஆகியவை நடந்தது.
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி சிவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, லட்சுமி பூஜை, யாக பூஜைகள் ஆகியவை நடந்தது.
அதையடுத்து 4-ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று கலச புறப்பாடு நடந்தது. பின்னர் சிவசக்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை சன்னதி மேல் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகம், பூஜைகளை பழனி கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் நடத்தி வைத்தார்.

இந்த ஸ்லோகத்தைக் கூறி சிவபெருமானை வழிபட ஆரோக்கியம், ஆயுள், ஸம்பத்து முதலான சகல பாக்கியங்களும் உண்டாகும்.
ஸுவர்ணபத்மினீ தடாந்ததிவ்ய ஹர்ம்யவாஸினே
ஸுபர்ணவாஹனப்ரியாய ஸூர்யகோடி தேஜஸே
அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ரதாரிணே
ஸதா நமஸ்ஸிவாய தே ஸதாஸிவாய ஸம்பவே
கருத்து: தங்கத் தாமரை நிறைந்த குளத்தின் கரையில் உள்ள ஸர்வோத்தமமான கோயிலில் வசிப்பவரும் கருடனை வாகனமாக உடைய மஹா விஷ்ணுவிடத்தில் ப்ரீதி உள்ளவரும், கோடி சூரியர்களுடைய ஒளியை உடையவரும், மீனாட்சியுடன் விளையாடுகிறவரும் ஸர்ப்பராஜனை சிரசில் தரித்திருக்கின்றவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்போதும் மங்களத்தைக் கொடுக்கிறவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்போதும் நமஸ்காரம்.

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இரணியனை வதம் செய்த கோலத்தில், 16 கைகளுடன் நரசிம்ம பெருமாள் உக்கிர நிலையில் மேற்கு திசை நோக்கி காட்சி அளிப்பது தனி சிறப்பாகும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியும் தனியார் பங்களிப்போடு திருப்பணிகள் நடந்து முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் பூஜையுடன் விழா தொடங்கியது. இதையடுத்து யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கும்பாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலையில் யாத்ராதனம், கும்பாரோகணம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இவ்விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் மனைவி தமிழ்வாணி சம்பத், ஒன்றியக்குழு தலைவர் தெய்வ பக்கிரி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் மாதவன், விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், கோவில் செயல் அலுவலர் மதனா மற்றும் ரெட்டிச்சாவடியை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்ம பெருமாள், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆண்டாள், நாச்சியார், சக்கரத்தாழ்வார் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
யாக மண்டபத்தில் ஸ்ரீரங்க சடகோப கைங்கரியா சபாநிர்வாகி பாலாஜி பட்டர் தலைமையில் 21 பக்தர்கள் கலந்துகொண்டு 108 கலசம் வைத்து சுவாதி நட்சத்திர மாகோலமிட்டு உலக நன்மைக்காக யாகம் செய்தனர்.
இதில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நேர்த்திக்கடனாக மஞ்சள் மாலையை கட்டி பெருந்தேவித் தாயாருக்கு அணிவித்தனர்.