search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X
    பழனி சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    பழனி சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி சிவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, லட்சுமி பூஜை, யாக பூஜைகள் ஆகியவை நடந்தது.
    பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி சிவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, லட்சுமி பூஜை, யாக பூஜைகள் ஆகியவை நடந்தது.

    அதையடுத்து 4-ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று கலச புறப்பாடு நடந்தது. பின்னர் சிவசக்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை சன்னதி மேல் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகம், பூஜைகளை பழனி கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் நடத்தி வைத்தார்.
    Next Story
    ×