search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறப்பு
    X
    பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறப்பு

    11 மாதங்களுக்கு பிறகு பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறப்பு

    கோவில்களில் பரிகாரங்கள் செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறக்கப்பட்டு் செயல்படத் தொடங்கியது.
    கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் கோவில்களில் பரிகாரங்கள் செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் திறக்கப்பட்டு் செயல்படத் தொடங்கியது.

    இதையடுத்து காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் பரிகாரங்கள் மற்றும் திதி கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும் 5 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. இறந்த உறவினர்களின் அஸ்தி கரைப்பதற்கு ஒரு சிலரே வந்திருந்தனர்.

    பரிகாரம் செய்ய வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.பரிகார மண்டபத்துக்கு செல்லும் நுழைவுவாயிலில் பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய பின்னரே பரிகார மண்டபத்துக்கு நுழைய அனுமதி கொடுக்கப்பட்டது.
    Next Story
    ×