
முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடந்தது. அதையடுத்து நேற்று காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, புண்ணியாகவாஜனம், பூர்ணாகுதி, தீபாராதனை, ரெங்கம்மாளுக்கு வருடாபிஷேக ஆராதனை உள்ளிட்டவைகள் நடந்தது.
அதன் பின்னர் காலை 9 மணிக்கு மேல் குபேர விநாயகர், நாகர், சப்த கன்னிமார் ஆகிய தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.