search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vel"

    • பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
    • சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்

    என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது.

    இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது.

    பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

    சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன.

    கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.

    • வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
    • ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!

    வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

    வேல் பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!

    ஈட்டி அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

    வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

    ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது.

    இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

    தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்! பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!

    முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

    முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு.

    • வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!
    • தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!

    'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது!

    ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று அர்த்தமாகும்.

    ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் வேல்!

    ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

    வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

    சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!

    பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இதுன்னு நுழைத்த பின்பே,

    ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

    சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!

    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது

    பல தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி, மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில் எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது.

    பிரமாண்ட வேலுக்கு அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த பக்தர்கள் வேலுக்கு வழிபாடு செய்தனர்.
    பழனி :

    பழனிக்கு நேற்று காலை 27 அடி உயரத்தில் 1,800 கிலோ எடை கொண்ட இரும்பாலான பிரமாண்ட வேல் ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டது. இந்த வேலை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்தனர். இதையடுத்து அந்த பிரமாண்ட வேலுக்கு அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த பக்தர்கள் வேலுக்கு வழிபாடு செய்தனர்.

    இதுகுறித்து வேலை கொண்டு வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் கூறுகையில், இந்த வேல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு லாரியில் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் பிரமாண்ட வேலுடன் திருச்செந்தூரில் யாத்திரையை தொடங்கினோம். தொடர்ந்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலையில் உள்ள முருகன் கோவில்களுக்கு வேல் வைக்கப்பட்ட லாரியை கொண்டு சென்று வழிபாடு செய்யப்பட்டது. நமது நாட்டின் ராணுவம் மற்றும் போலீஸ்துறைக்கு முருகப்பெருமான் வல்லமை தர வேண்டி பிரமாண்ட வேலுடன் யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வழிபட உள்ளேன். முடிவில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றார்.
    கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது.
    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று. ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார். வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது.

    இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல் ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.
    திருப்பரங்குன்றம் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி முருகப்பெருமானின் கையில் உள்ள தங்கவேலுக்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 8-வது ஆண்டு வருடாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் யாகசாலையில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    இதையடுத்து கருவறையில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தையொட்டி கருவறையில் முருகப் பெருமானுக்கு புனுகு தைலம் சாத்தப்பட்டது.

    இதேபோல கருவறையில் வீற்றிருக்கும் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சாம்பிராணி தைலம் சாத்தப்பட்டது. முன்னதாக சமவேளையில் 5 சன்னதியிலும் மகா அபிஷேகம் நடைபெற்று, பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். 
    ×