என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவேடகம் ஏடகநாதர் கோவில் இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
மதுரையில் இருந்து தேனூர் வழியாக சோழவந்தான் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருவேடகம் என்ற ஊர். இங்குள்ள இறைவன் ‘ஏடகநாதர்’ என்றும், ‘மந்திரமூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தல இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வ மரம் ஆகும். இங்குள்ள தீர்த்தம், ‘பிரம்ம தீர்த்தம்.’ இந்த நீரையே இறைவனை அபிஷேகம் செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.

பழனி முருகன் கோவிலுக்கு குறமகள் வள்ளி பெருந்தகை பாசறையினர் சீர்வரிசை பொருட்களுடன் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள், வனவேங்கைகள் கட்சியினர் மற்றும் குறமகள் வள்ளி பெருந்தகை பாசறையினர் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சீர்வரிசை பொருட்களுடன் வந்தனர். முன்னதாக அவர்கள் பஸ்நிலைய பகுதியில் இருந்து தாம்பூல தட்டு, கூடைகளில் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், வெல்லம், தேன், பூக்கள், பானை, குடம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக பழனி கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தின் முன்பு சிறுவர்கள் வேடர் போன்று வேடமணிந்து வில்-அம்புகளுடன் சென்றனர். மேலும் பக்தர்கள் காவடி எடுத்தும், பெண்கள் கோலாட்டம் ஆடியபடியும் சென்றனர்.
பின்னர் அவர்கள் சீர்வரிசை பொருட்களுடன் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், தமிழர்களின் தாய்குடியான குறவர் இனத்தை சேர்ந்த வள்ளியை தமிழ்கடவுள் முருகன் திருமணம் செய்துள்ளார். எனவே எங்கள் சமூகம் சார்பில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்தோம். ஒவ்வொரு வருடமும் இதுபோல் சீர்வரிசை பொருட்களுடன் வந்து முருகனை தரிசனம் செய்ய உள்ளோம் என்றனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இந்த ஊர்வலம் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசி திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று ஐயப்பன் பூச்சொரிதல் கமிட்டி சார்பில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதற்கு கமிட்டி நிர்வாகி வி.சிவசக்தி நாகராஜ் தலைமை தாங்கினார்.
இதையொட்டி காலை 8.30 மணி அளவில் கோவில் சார்பில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகள் ஏந்தி கோவிலை 3 முறை வலம் வந்து அம்மனுக்கு காணிக்கை பூக்களை செலுத்தினர். கோட்டை மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க முருகன், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரின் முன்பு வாழை கற்பூர பூஜை செய்து திருஷ்டி கழிக்கப்பட்டது. பின்னர் பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு காணிக்கை பூக்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பூத்தேர் கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அம்மனின் கருவறையில் நிரப்பப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து காணிக்கை பூக்களை பிரசாதமாக பெற்று சென்றனர். இரவு கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.

அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும்.
சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனுக்கு, அனந்தமங்கலம் நிரந்தர வாசஸ்தலம். ஆதலால் இங்கு இவரை வழிபட கால நேரம் வரையறை இல்லை. எனினும் அவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினத்திலும், பிரதிமாதம் அமாவாசை தினத்திலும், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் கேட்டை நட்சத்திரத்திலும், மற்றும் ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி திதி ஆகிய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கிக் கொள்ளலாம்.
நாடெங்கும் அனுமனுக்கு பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமன் மீதான பக்தியாலும், அவரை வழிபடுவதற்காகவும் சிலை வடித்து மக்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இவை. ஆனால் அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும். ராமாயண வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆலயம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெற்றுள்ளது.
இலங்கையில் யுத்தம் செய்து, சீதையை மீட்ட பின்னர், புஷ்பக விமானம் ஏறி ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் முதலியோர் அயோத்திக்கு திரும்பினர். வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி அனைவரும் விருந்து உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமபிரானை வாழ்த்தினார். பின்னர் அவர் ராமபிரானிடம் ‘ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து, ரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணன் போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர். ஆதலால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.
ராமபிரான், ‘நாரதரே! தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்ற லுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம்’ என்றார்.
அனைவரும் இதை ஆமோதிக்க அனுமனும் பணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அட்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான அரக்கர்களை வெல்ல இது போதாது.
எனவே திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார்.
கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர் களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் ‘ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடவூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கடவூர் - தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது. சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகாமை ரெயில் நிலையங்கள் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.
பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் உள்ள மசபியேல் என்ற குகையில் பெர்னதெத் என்ற இளம்பெண்ணுக்கு 1858-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி ஏசுவின் தாய் மரியாள் காட்சி கொடுத்தார்.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புனித லூர்து அன்னை திருவிழாவாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது.
அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலய மைதானத்தில் தொடர் ஜெபமாலை நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு அழகப்பபுரத்தில் முக்கிய வீதிகள் வழியாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபமாலை ஜெபித்தபடி பவனியாக சென்றனர். தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.

பழனி மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதையடுத்து முகூர்த்தக்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாரியம்மன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியை காண கோவில் நுழைவு வாயில் பகுதியில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதையடுத்து முகூர்த்தக்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார் பாடி மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி வருகிற 16-ந்தேதி திருக்கம்பம் சாட்டுதலும், அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றமும், கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே 2, 3-ந்தேதிகளில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

திருவட்டார் அருகே கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து அருளுரை வழங்குகிறார்.
திருவட்டார் அருகே கடமலைக்குன்று சேகரம், கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபை புதிய ஆலய அர்ப்பண விழா, 200-வது ஆண்டு நிறைவு விழா, நினைவு தூண் அர்ப்பண விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, புதிய பணித்தள அடிக்கல் நாட்டு விழா, அருட்பணியாளர் அர்ப்பண விழா, கிராம ஊழிய தொடக்க விழா ஆகிய விழாக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. சேகர ஆயர் ஜார்ஜ் வேததாஸ் தலைமை தாங்குகிறார். திருச்சபை ஆயர் லிபின் ராஜ், உதவி திருப்பணியாளர் ஜெயக்குமார் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து அருளுரை வழங்குகிறார்.
விழாவில் முன்னாள் பேராயர்கள், போதகர்கள், பேராய தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவை முன்னிட்டு வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நற்செய்தி கூட்டம் நடக்கிறது. இதில் நெய்யூர் சேகர ஆயர் ஸ்டேன்லி ராஜ் தேவச்செய்தி அளிக்கிறார்.
17-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு ஆராதனையும், 18-ந் தேதி ஐசக் மற்றும் ஐாபி ஐசக் குழுவினரால் சிறப்பு கூடுகையும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை சபை செயலாளர் பால்ராஜ் தலைமையில் சபை குழுவினர் செய்துள்ளனர்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து, சாமிக்கு தீபாராதனை காட்டினார். மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) முதல், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து படி பூஜை நடைபெறும். இரவு 8.50 மணிக்கு நடை அடைக்கப்படும், இந்த பூஜை 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்கள், தரிசனத்திற்கு வரும் போது, 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். அல்லது ஆர்.டி. லேப் மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
மாத பூஜை காலங்களில் தினசரி 15 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை வைத்தது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும், சுகாதார துறையின் பரிந்துரையை ஏற்றும் தேவஸ்தானத்தின் கோரிக்கையினை அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

நாங்கூர் கிராமத்தில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சுற்றி, வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்கள் 108, பதினொரு கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. அதாவது நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள், வைகுண்ட நாத பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், மாதவபெருமாள், கோபாலன் ஆகிய கோவில்களாகும்.
இந்த 11 பெருமாள்களும், நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் ஒருசேர எழுந்தருளி, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்வதே கருடசேவை உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கருடசேவை உற்சவம் நேற்று நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் இருந்து பெருமாள்களை, பக்தர்களால் மேளதாளம் முழங்கிட ஊர்வலமாக நாராயண பெருமாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது கோவிலின் வாசலில், திருமங்கையாழ்வார் எழுந்தருளி அனைத்து பெருமாள்களையும் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைத்து பெருமாள்களுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து 11 பெருமாள்களும் கோவிலின் வாசலில் எழுந்தருளி திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடந்தது. இதையடுத்து ஒரு சேர அனைத்து பெருமாள்களுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாரதி எம்.எல்.ஏ., மயிலாடுதுறை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் நிர்வாக அதிகாரிகள் குணசேகரன், முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட அ.தி.மு.க. இளம்பெண்கள். இளைஞர் பாசறை செயலாளர் மாமல்லன், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரிக்காக நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரிக்காக நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை பல்லக்கில் புறப்பட்டு வீதியுலாவாக காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளினார்.
அங்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் அபிஷேகமும், தொடர்ந்து சமுத்திரத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நடைபெற்றது.
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் மதகடி பஜார் குடமுருட்டி ஆற்றில் எழுந்தருளினார்.
தொடர்ந்து உற்சவ மூர்த்தியுடன் ஏராளமான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், காவடிகள் எடுத்து குடமுருட்டி ஆற்றிலிருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை சந்தனக்காப்பு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர், சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூர் மற்றும் அரியமங்கை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மார்க்கப் பேருரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்கள். 22-ந்தேதி பீரப்பா பாடிய ரோசுமீசாக்கு மாலை நூலின் வெளியீடு நடைபெறுகிறது.
இதில் பலர் கலந்து கொண்டு மார்க்க பேருரையாற்ற உள்ளனர். வருகிற 26-ந்தேதி ஞானப்புகழ்ச்சி பாடல் பாடும் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது. 27-ந்்தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. மார்ச் 3-ந் தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் அப்துல்ஜப்பார் தலைமையில் துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் முகமது ரபீக் மற்றும் ஷாகிர்அலி தலைமையிலான விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.