
அங்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் அபிஷேகமும், தொடர்ந்து சமுத்திரத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.